மாண்டேகு-செம்ஸ்போர்டு
சீர்திருத்தத்தின் அடிப்படையில் நடந்த முதல் தேர்தலிலில் (1920) சென்னை
மாகாணத்தில் அதிக இடங்களை வென்ற நீதிக்கட்சியே ஆட்சி அமைக்கும் தகுதியைப்
பெற்றிருந்தது. அதன் தலைவர் பிட்டி. தியாகராயரை ஆட்சி அமைக்க அழைத்து
கடிதம் எழுதினார் ஆளுநர் லார்டு வெலிலிங்டன். தனது தலைமையில் ஆட்சி அமைக்க
விருப்பமில்லை என்றும் தனது கட்சியில் உள்ள தன்னைவிட பெரியவர்கள் ஆட்சி
அமைக்க அவர்களை நெறிப்படுத்துவேன் என்றும் பதில் எழுதி, அமைச்சரவையில்
இடம்பெறுபவர்கள் யார் யார் என்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்
தியாகராயர்.
நீதிக்கட்சி அமைச்சரவையில் முதல் அமைச்சராக (ச்ண்ழ்ள்ற் ம்ண்ய்ண்ள்ற்ங்ழ்) கடலூர் எ.சுப்பராயலு ரெட்டியார் பொறுப்பேற்றார். இரண்டாவது அமைச்சராக பி.இராமராய நிங்கார் எனப்படும் பனகல் அரசரும், மூன்றாவது அமைச்சராக சர்.கே.வி.ரெட்டி நாயுடுவும் பொறுப்பேற்றனர். சென்னை மாகாணத்தில் 17.12.1920 முதல் இரட்டை ஆட்சி நடை முறைக்கு வந்தது. 1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள், முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றக் கூட்டத்தைக் தொடங்கிவைத்த கன்னாட் பிரபு தனது உரையில், ""நிர்வாகத் திறனும் நல்ல பாரம்பரியமும் கொண்ட இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்புவிப்பதில் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். இது ஜனநாயக வரலாற்றின் ஆரம்பக் கட்டம் என்றாலும் முக்கியத் திருப்பத்திற்கு வழிகோலும்'' என்றார்.
1921 மார்ச் மாதம் நீதிக்கட்சி ஆட்சியின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூலையில், சுப்பராயலுவுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதால் முதல் அமைச்சர் பொறுப்பிலிலிருந்து அவர் விலகினார். டிசம்பர் மாதம் சுப்பராயலு காலமானார். அவருக்குப் பின், பனகல் அரசர் முதல் அமைச்சரானார். இரண்டாவது அமைச்சராக கே.வி.ரெட்டி நாயுடுவும், மூன்றாவது அமைச்சராக ஏ.பி.பாத்ரோவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஏ.பி.பாத்ரோ இன்றைய ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்காம்பூரைச் சேர்ந்தவர். அப்போது அப்பகுதி, சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தது.
பனகல் அரசர் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபின், 1921-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் நாள், அனைத்துச் சமூகத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிப்பதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ""உத்தியோகத் துறையில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு உத்தியோகங்களை வழங்கவேண்டும்'' என்கிற அந்த மசோதா, பலத்த எதிர்ப் பையும் மீறி நிறைவேறியது. இதன் மூலம் சென்னை மாகாணத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப் பிக்கப்பட்டது. எனினும், அதிகாரிகள் இதனை நடைமுறைப் படுத்தாமல் கிடப்பிலேயே போட்டிருந்தனர்.
அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட- பிற்படுத்தப்பட்ட-பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு ஒதுக்கீடு அளிக்கவேண்டுமென்றால், அவர்களுக்கு கல்வியிலும் உரிய வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்பதை நீதிக்கட்சி யினர் உணர்ந்திருந்தனர். இதற்காக, ஒவ்வொரு கல்லூரி யிலும் குழுக்களை அமைத்து அதன் மூலமே மாணவர் களின் சேர்க்கை நடைபெறவேண்டும். கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம்போல் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என மூன்றாவது அமைச்சரான ஏ.பி.பாத்ரோ ஓர் ஆணையைப் பிறப்பித்தார். இந்த ஆணையின் மூலமாக கல்லூரிகளில் பிராமணரல்லாத மாணவர்கள் சேர்வதற்கு வாய்ப்பு உருவானது. அதற்கு முன் கல்லூரி நிர்வாகத்தில் இருந்த பிராமணர்களே தங்கள் விருப்பம் போல தங்களுடைய சமுதாயத்து மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து வந்தனர். இன்று அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மருத்துவப்படிப்பு, பொறியியல் படிப்பு, வேளாண் அறிவியல், தகவல் தொழில் நுட்பம், நுண்ணறிவியல் போன்ற பலதுறைகளிலும் பட்டம் பெற முடிகிறதென்றால் அதற்கான அடித்தளத்தை நீதிக் கட்சி ஆட்சியே அமைத்தது எனலாம்.
தாழ்த்தப்பட்ட-பழங்குடி சமுதாயத்து மக்களை பஞ்சமர், பள்ளர், பறையர் என இழிவாக அழைக்கும் வழக்கமும், அப்படியே பதிவேடுகளில் குறிப்பிடும் வழக்கமும் இருந்து வந்தது. இந்நிலையை மாற்ற வேண்டும் என நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி. நடேசனார் தனது திராவிடர் சங்கத்தின் சார்பில் அரசாங்கத்திற்கு ஒரு மனு அனுப்பினார். இதனையடுத்து, 1922 மார்ச் 25-ஆம் நாள், தாழ்த்தப்பட்ட- பழங்குடி மக்களை இனி பஞ்சமர் உள்ளிட்ட சொற்களால் இழிவுபடுத்தக்கூடாது என்றும், ஆதிதிராவிடர் என்ற சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்றும் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களுக்கான அனுமதியை உறுதி செய்யவும், அவர் களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கட்டணத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு கல்லூரிகளிலும் உயர்நிலைப்பள்ளிகளிலும் அரைச் சம்பளம் மட்டுமே என்ற சலுகை அளிக்கப்பட்டது. கல்வி- வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, தொழிலாளர் நலனுக்கான ஆணையங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் ஆகியவை 1920 முதல் 1923 வரை யிலான நீதிக்கட்சியின் முதலாவது அமைச்சரவையில் நிறைவேறியது.
நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை
1923 நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலிலிலும் நீதிக் கட்சியே அதிக இடங்களைப் பிடித்தது. எனினும், முதல் பொதுத் தேர்தலிலில் பெற்றது போன்ற பெரும் வெற்றியை நீதிக்கட்சியினால் பெறமுடியவில்லை. நீதிக்கட்சியின் இரண் டாவது அமைச்சரவையில் முதல் அமைச்சராக பனகல் அரசர் பொறுப்பேற்றார். இரண்டாவது அமைச்சராக சர் ஏ.பி.பாத்ரோவும், மூன்றாவது அமைச்சராக டி.என்.சிவஞானம் பிள்ளையும் பொறுப்பேற்றனர்.
நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிறைவேறின. அன்றைய கால கட்டத்தில் ஒரு மாணவன் மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) படிப்பது என்றால் அவனுக்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதனால், பிராமண மாணவர்களே டாக்டராக முடியும் என்ற நிலைமை இருந்தது. இந்த நிர்பந்தத்தை பனகல் அரசர் உடைத் தெறிந்தார். தனிச்சட்டம் மூலம் மருத்துவத்துறையில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அகற்றி, மருத்துவத் துறையில் இந்தியர்களைப் பங்கு பெறச் செய்தார். ""எதிர்ப்பு எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் அது இந்த நாட்டிற்கு நன்மையை விளைவித்தால், அதை வரவேற்கத் தயாராய் இருக்கிறேன். தீமை விளைவிக்குமானால் அதை எதிர்த்து முறியடிப்பேன்'' என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் பனகல் அரசர்.
கல்வித்துறைக்குப் பொறுப்பேற்றிருந்த அமைச்சர் ஏ.பி.பாத்ரோ, சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்த ஆந்திரப் பகுதிகளுக்காக ஆந்திரப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க முன்வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாணவர்களின் நலன் கருதி தனிப்பல்கலைக்கழகம் உருவாக்கப்படவேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் அமைப் பதற்கான பணி தொடங்கப்பட்டது. (இது தனியார் பல்கலைக்கழகமாகும்)
தமிழகத்தில் கோவில்கள் அதிகம். அதற்கான சொத்து களும் மிகுதி. இவை ஒழுங்காகவோ நேர்மையாகவோ பராமரிக்கப்படவில்லை. பொறுப்பாளர்கள் தங்கள் சொந்த நலன்கருதி கோவில் சொத்துகளைப் பயன்படுத்தி வந்தனர். இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக நீதிக்கட்சி ஆட்சியில் 1925-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறநிலையப் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது. இதுவே இன்றுள்ள இந்து அறநிலையத்துறைக்கு முன்னோடியாகும். இதன் மூலமாக கோவில் சொத்துகள் தனிநபர்களின் ஆதிக்கத்தி லிலிருந்து மீட்கப்பட்டு அரசு வசமானது.
நீதிக்கட்சியின் மூன்றாவது அமைச்சரவை
1926-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் மூன்றாவது பொதுத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலிலில் நீதிக்கட்சிக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மொத்த இடங்கள் 98-இல் சுய ராஜ்ஜியக் கட்சியினர் 36 இடங்களையும் சுயேச்சைகள் 36 இடங்களையும் நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் முடிவின்படி, அதன் துணைக்கட்சியான சுயராஜ்ஜியக்கட்சி அமைச்சரவை ஏற்க வில்லை. நீதிக்கட்சியை சேர்ந்த சுப்பராயன் கட்சியிலிலிருந்து விலகினார். சுயேச்சையாக அமைச்சரவை அமைத்தார். அவருடன் இணைந்து சுயராஜ்ஜியக் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சியமைத்தனர். 1928-இல் அவருடைய ஆட்சிக்கான ஆதரவை சுயராஜ்ஜியக் கட்சி விலக்கிக் கொண்டதால், நீதிக்கட்சி மற்றும் சுயேச்சைகளின் துணை யுடன் சுப்பராயன் அமைச்சரவை மாற்றம் பெற்றது.
இந்த அமைச்சரவையில் இரண்டாவது அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலிலியார், 1921-இல் நிறைவேற்றப் பட்ட வகுப்புவாரி உரிமை ஆணையை செயல்படுத்த முன்வந்தார். புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, அரசு அலுவலகங்களில் 12 இடங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டுமென்றால், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 5 பேர், பார்ப்பனர் 2 பேர், முஸ்லிலிம்கள் 2 பேர், அய்ரோப்பியர் மற்றும் ஆங்கிலோ இந்தியக் கிறித்துவர் 2 பேர், தாழ்த்தப்பட்டவர் ஒருவர் என்ற விகிதாச்சாரத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பதே இந்த ஆணை. இதுவே, சமூகநீதியின் அடித் தளமாக அமைந்தது. இன்று தமிழகத்தில், 69% இட ஒதுக்கீடு நிலவுவதற்கு முத்தையா முதலிலியார் கொண்டு வந்த வகுப்புவாரி இடஒதுக்கீடே அடிப்படையாகும்.
மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தின் அடிப் படையிலான தேர்தலிலில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. அவர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிப்பது பற்றி மாகாண அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்பதால், தமிழக சட்டமன்றத்தில் முதல் பெண் நியமன உறுப்பினராக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பொறுப்பேற்றார். இவரே முதல் பெண் மருத்துவரும் ஆவார். இவர் 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள், தேவதாசி ஒழிப்பு மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.
கோவில்களில், குறிப்பிட்ட சமுதாயத்துப் பெண்களை கடவுள் தொண்டு என்ற பெயரில் தேவதாசிகளாக நியமித்துவிடுவார்கள். கோவிலை நிர்வகிப்பவர்களின் விருப்பத்திற்கு ஆட்படவேண்டிய அவலம் இப்பெண்களுக்கு நேர்ந்தது. பாலிலின இழிவை வெளிப்படுத்தும் இத்தகையப் பழக்கம் ஒழிக்கப்படவேண்டும் என்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும். இதனை, சத்தியமூர்த்தி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். ""சமூகத்திற்குத் தாசிகள் தேவை. ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயல்'' என்றார் சத்தியமூர்த்தி. அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், ""ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்றவேண்டுமா? உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்களுக்கு ஏன் இந்தப் பொறுப்பைத் தரக்கூடாது?'' என்று சத்தியமூர்த்தியைப் பார்த்து சூடாகக் கேட்டார். மிகுந்த எதிர்ப்புக்கு நடுவே தேவதாசி ஒழிப்பு மசோதா நிறைவேறியது.
நீதிக்கட்சியின் நான்காவது அமைச்சரவை.
1930 செப்டம்பரில் நடந்த நான்காவது தேர்தலிலில் நீதிக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. 70% வாக்காளர்கள் நீதிக் கட்சிக்கு வாக்களித்தனர். பி.முனுசாமி நாயுடு முதல் அமைச்சரானார். பி.டி.ராஜனும் குமாரசாமி ரெட்டியாரும் மற்ற இரு அமைச்சர்களாவர். இந்த அமைச்சரவை இரண் டாண்டு காலம் மட்டுமே நீடித்தது. நீதிக்கட்சியின் தலை வராக பொப்பிலிலி அரசர் எனப்படும் ரவு ஸ்வெட சல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ் தேர்ந்தெடுக்கப்பட, அவரே 5.11.1932-இல் முதல் அமைச்சரானார்.
மூன்றாண்டுகளுக்கொரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஆனால், 1934-இல் சைமன் கமிஷனின் புதிய சீர்திருத்த சட்டங்கள் நடைமுறையாவதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னை மாகாணத்திற்குத் தேர்தல் நடை பெறவில்லை. அதனால் பொப்பிலிலி அரசரின் அமைச்சரவை 7 ஆண்டுகாலம் பதவியில் நீடித்தது. இனாம்தாரி சட்டம், வேளாண்மைத் துறையில் சீர்திருத்தங்கள், கூட்டுறவுத் துறையில் சீர்திருத்தங்கள், பொது தெருக்கள்- பொதுக் கிணறுகள்- பொது இடங்களை எந்த சாதியைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தும் உரிமை ஆகியவை பொப்பிலிலி அரசர் காலத்தின் முக்கிய சாதனைகளாகும்.
1920-இல் தொடங்கி 1937 வரை சுமார் 17 ஆண்டுகள் நடைபெற்ற நீதிக்கட்சியின் ஆட்சியில் சமூகநீதிக்கான ஆணைகள், சமஸ்கிருத ஆதிக்கத் தகர்ப்பு, பெண்களுக்கான உரிமைகள்- பிரதிநிதித்துவம், கல்வித்துறையில் சீர் திருத்தங்கள் உள்ளிட்ட சமுதாய மாற்றங்களுக்கானத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளும் இவைதான். ஆங்கிலேயரின் இரட்டையாட்சி முறையில் மிகக்குறைந்த சட்ட அதிகாரங்களை வைத்துக்கொண்டு நீதிக்கட்சி தனது திட்டங்களை நிறைவேற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Ref:Nakkeeran

No comments:
Post a Comment