இனத்தின்
உரிமைகளைப் பெறுவதற்காக உலகளவில் பல இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன.
அவற்றின் போராட்டங்கள் பல நூற்றாண்டுகள் நீடித்திருக்கின்றன. பல
தலைமுறையினர் தொடர்ந்து போராடிய பிறகே இலட்சியங்களை வென்றெடுக்க
முடிந்திருக்கிறது. தென்னிந்தியாவில் தோன்றிய இயக்கமான திராவிடர் இயக்கம்,
இந்திய அரசியல் வரலாற்றில் தனி இடத்தைப் பெற்றுள்ளது. அது தன்னுடைய
தொடக்கத்திலிலிருந்தே படிப்படியாக இலட்சியங்களை நிறைவேற்றி, அரைநூற்றாண்டு
காலத்தில் அரசியல்- ஆட்சிநிர்வாகத்தின் வாயிலாக சமுதாயத்தில் பெரும்
மாற்றத்தை ஏற்படுத்தி, தற்போது நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது
என்பதே திராவிடர் இயக்கத்தின் சிறப்பம்சம்.தேவை
கருதி உருவான இயக்கமே திராவிடர் யக்கம். வருணாசிரம தர்மத்தின்
அடிப்படையில் பிராமணர்கள் உயர்ந்தோர் என்றும் சூத்திரர்களும் பஞ்சமர்களும்
தாழ்வானவர்கள் என்றும் சமுதாயப்படிநிலை இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக நிலவிவந்தது.
இப்போதும் இது முழுமையாக மாறிவிடவில்லை. இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக ஆட்சிநிர்வாகம், கல்வி-வேலைவாய்ப்பு, சமுதாய அந்தஸ்து ஆகியவற்றில் பிராமணர்களே உயர்ந்தோர் என்றும் மற்ற வருணத்தார்களான சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோரும் எந்த வர்ணத்திலும் சேராதவரான பஞ்சமர்களும் தாழ்வானர்கள் என்றும் நிலை இருந்து வந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. வெள்ளையர்கள் தங்களுடைய பணிகளை எளிதாக செய்வதற்கு வசதியாக இந்தியர்களுக்கு ஆங்கிலக் கல்வி அளித்தனர். பன்னெடுங்காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்த சூத்திரர்களும் பஞ்சமர்களும்கூட ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது கல்விநிலையங்களில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், வேலைவாய்ப்பு என்பதும் உயர்கல்வி என்பதும் பெரும்பாலும் பிராமணர்களின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்தன. மக்கள்தொகையில் 100-க்கு 3 விழுக்காடு மட்டுமே உள்ள பிராமணர்கள் உயர்கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்களைப் பிடித்துக்கொள்ள, மக்கள் தொகையில் 100-க்கு 97 விழுக்காடு உள்ள மக்களுக்கு மிகக் குறைவான வாய்ப்புகளே இருப்பதை அறிந்து, இந்த ஏற்றத்தாழ்வைப் போக்கி சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக உருவான இயக்கமே திராவிடர் இயக்கமாகும்.
பிராமணர்கள் ஆரிய இனத்தின் வழி வந்தவர்கள் என்பதால், அவர்களால் புறக்கணிக்கப் பட்ட இந்த மண்ணின் மக்களான திராவிட இனத்தவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் என்பதால் இதற்கு திராவிடர் இயக்கம் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆங்கிலேய பாதிரியாரான ராபர்ட் கால்டுவெல் 1856-இல் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலிலில்தான் "திராவிட' என்ற சொல் முதன்முதலிலில் பயன்படுத்தப்பட்டது என்றும், இந்தியர்களைப் பிரித்தாளுவதற்காக ஆரியர் என்றும் திராவிடர் என்றும் ஆங்கிலேயர்கள் செய்த சதி இது என்றும் திராவிடர் இயக்கத்தை எதிர்ப்போர் கருத்துக் கூறுவது உண்டு.
தமிழிலிலிருந்து தென்னிந்தியாவின் பிற மொழிகளான தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகியவை தோன்றின என்பதும், இந்த மொழிக் குடும்பமே திராவிட மொழிக் குடும்பம் என்பதும் கால்டுவெல்லுடைய ஆய்வின் சுருக்கம். எனினும், திராவிடம் என்ற சொல் கால்டுவெல்லிலின் ஆய்வுக்கு நெடுங்காலம் முன்பே பயன்படுத்தப் பட்டுள்ளது. மனுதர்ம சாஸ்திரம் என்ற பழமையான சட்ட நூலிலில், அதன் 44-வது சுலோகத்தில், "பவுண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம்' என்று இவைகளை தேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அ.சிங்காரவேலு முதலிலியாரால் தொகுக்கப்பட்ட "அபிதான சிந்தாமணி' என்ற நூலில், 1079-ம் பக்கத்தில், குறிப்பிடப்பட்டுள்ள 56 தேசங்களில் ஒன்று, திராவிடம். திராவிடம் என்ற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சி சரித்திரத்திலும் திராவிடர்களை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
ஸ்மிருதியிலும் "பஞ்ச திராவிடம்' குறிக்க பட்டிருக்கிறது. மலையாளம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு ஐந்து திராவிடங்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளன. இதன் காரணமாகத்தான், பிராமணர் களுக்கு எதிரான இயக்கத்திற்கு திராவிடர் இயக்கம் என்ற பெயர் அமைந்தது.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்த சென்னை மாகாணத்தில் தமிழகத்துடன் இன்றைய ஆந்திராவின் அன்றைய ஹைதராபாத் சமஸ்தானம் நீங்கலான பெரும்பான்மையான பகுதியும், கர்நாடகத்தின் மைசூர் ராஜ்ஜியம் நீங்கலான மற்ற பகுதிகளும், கேரளத்தின் கொக்சி-திருவிதாங்கூர் சமஸ்தானம் தவிர்த்த பிற பகுதிகளும், ஒடிசா மாநிலத்தின் வடகோடி எல்லையான கஞ்சம் மாவட்டமும் இடம்பெற்றிருந்தன. இந் நிலப்பரப்பில் உள்ள பிராமணரல்லாத மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகளை நிலை நாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் என்பதால் திராவிடர் இயக்கம் என்ற பெயர் பொருத்தமானதாகவும் இருந்தது. திராவிட என்ற சொல்லைக்கொண்டு 19-ஆம் நூற்றாண்டிலேயே சில அமைப்புகள் உருவாகி யிருந்தாலும், உரிமை மீட்பு என்கிற நோக்கத்துடன் பரவலான முயற்சியுடன் ஓர் இயக்கம் உருவானது என்பது 1912-ஆம் ஆண்டில்தான்.
சென்னையில் உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் பிராமண மாணவர்களுக்கு மட்டுமே 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அனுமதி கிடைத்து வந்தது. அப்போது சென்னையில் பிரபல மருத்துவராக விளங்கிய டாக்டர் சி.நடேசனார் திருவல்லிலிக்கேணி அக்பர்சாகிப் தெருவில் பிராமணரல்லாத மாணவர்களுக்காக இலவச உணவு மற்றும் தங்கும் விடுதி ஒன்றை அமைத்து நடத்திவந்தார். இவரும் இன்னும் சிலரும் சேர்ந்து தி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற அமைப்பை 1912-ஆம் ஆண்டில் உருவாக்கினர். அரசு வேலை வாய்ப்பில் பிராமணரல்லாதவர் களுக்கு உரிய பங்கு வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இவ்வமைப்பின் முதலாம் ஆண்டு விழா 1913-இல் நடந்தபோது, அமைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அதன் பெயர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால், பிராமணரல்லாதார் இயக்கம் என்ற பெயர் சூட்டுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
ஆனால், அல்லாதார் என்ற சொல் எதிர்மறைச் சொல்லாக உள்ளது என்பதால் திராவிடர் சங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டது. திராவிடர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்ற தி மெட்ராஸ் யுனைடெட் லீக் தொடங்கப்பட்ட 1912-ஆம் ஆண்டே திராவிட இயக்கத்திற்கான கால்கோள் விழாவாகக் கொள்ளப்பட்டு, 2012-ஆம் ஆண்டு திராவிட இயக்க நூற்றாண்டு எனக் கணக்கிடப் பட்டுள்ளது. யுனைடெட் லீக்கின் பெயர் 1913-ஆம் ஆண்டில் திராவிடர் சங்கம் என மாற்றப்பட்டதால், 2013-ஆம் ஆண்டுவரை திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படவுள்ளது.
Ref: nakkeeran

கொண்டாடப்படுகிற அளவிற்குத் திராவிட இயக்கம்
செய்த சாதனைகள் என்ன என்பது இன்றைய தலைமுறையினரின் மனதில் எழக்கூடிய
கேள்வியாகும்.
திராவிடர் சங்கம் என்ற அமைப்பின் தொடர்ச்சியாக உருவான
இயக்கங்களும் அதன் மூலமாக தென்னிந்திய அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட
திருப்புமுனைகளும் சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கின.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த வர்ணாசிரமத்தின் அடிப்படையிலான
ஏற்றத்தாழ்வுகளைப் புரட்டிப் போட்டன. கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி,
பெண்ணுரிமை, தீண்டாமைக்கு எதிரான நடவடிக்கைகள், தனி மனித உரிமைகள்,
சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு என சமுதாயத்தினை மேன்மை யடையச் செய்யும்
பலவற்றை திராவிட இயக்கம் முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளது. Ref: nakkeeran
No comments:
Post a Comment