Tuesday, December 18, 2012

இ-மெயில் தமிழன்!

மெயிலைக் கண்டுபிடித்தது யார்? இதுவரை தெரியவில்லை என்றால் விடுங்கள்... இனி, தலை நிமிர்ந்து சொல்லுங்கள்...
இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன் என்று.
தென் தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அந்தக் கறுப்புத் தமிழனின் பெயர் சிவா அய்யாதுரை. இந்த ராஜபாளையத்துக் காரர் இப்போது வசிப்பது அமெரிக்காவில்.
டைம்’ பத்திரிகை இவரை 'டாக்டர் இமெயில்’ என்று அழைக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, 'வாஷிங்டன் போஸ்ட்’, 'நியூயார்க் டைம்ஸ்’ எனப் பிரபல மீடியாக்கள் 'இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ எனக் கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, 'டாக்டர் சிவாதான் இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். உலகின் பிரசித்தி பெற்றதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (Smithsonian museum), ''மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இமெயிலையும் மதிப்பிட வேண்டும்!'' என்று வர்ணிக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் விஷ§வலைசேஷன் (Systems Visualization) மற்றும் கம்பேரடிவ் மீடியா ஸ்டடீஸ் (Comparative Media Studies) ஆகிய இரு துறைகளில் பேராசிரியராக இருக்கும் சிவா அய்யாதுரை, நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வுசெய்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்... அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை).
ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய மிக நீண்ட 'ஸ்கைப்’ உரையாடல் ஆச்சர்யங்களால் நிரம்பியது. ''ஹாய் பாரதி... வணக்கம்'' என்று அன்புத் தமிழுடன் வந்து அமர்கிற சிவா அய்யாதுரைக்கு 48 வயது.

''நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கு இருந்தீர்கள்?''
''ஹா... ஹா... என் அப்பா அய்யாதுரைக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர். அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பரமன்குறிச்சி. இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாகப் படித்தவர்கள். ஆறு வயதுக்குள்ளாகவே எனக்குப் படிப்பின் மீது மிகப் பெரிய ஆர்வம் உண்டாகியது. மும்பையில் வசித்த எங்கள் குடும்பம், என்னை மேற்கொண்டு நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதைப் போன்ற... ஒரு சம்மர் கிளாஸில் 'ஃபோர்ட்ரான் 4’ ­(FORTRAN IV) என்ற புரொகிராமிங் மொழியைக் கற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு பள்ளிப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்ததால், பள்ளியைவிட்டு நிற்கப்போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா 'யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரி’யில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்டாகப் பணிபுரிந்துகொண்டு இருந்தார். தன்னுடன் பணிபுரிந்த பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளைக் கணினி வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் முயற்சி யில்  இருந்தார். அவர் என்னைத் தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். சவால் நிறைந்த அந்தப் பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.
அப்போது அந்த மருத்துவ மனையில் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக 'மெமோரண்டம்’ எழுதுவார்கள். நோயாளிபற்றிய விவரம், மருத்துவர்பற்றிய விவரம், டூ, ஃப்ரம், சப்ஜெக்ட் எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோ ரண்டத்தை அங்கு இருக்கும் தபால் பெட்டி மூலம் மருத்துவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே மின்மயப்படுத்த வேண்டும். அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கணினியில் இருந் தும், மற்றொரு கணினிக்கு எலெக்ட்ரானிக் வடிவத் தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம்.
இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இமெயில் சிஸ்டம். 'ஃபோர்ட்ரான் 4’ மொழியில் 50 ஆயிரம் வரிகள்கொண்ட அந்த புரொகிராமை எழுதியபோது எனக்கு வயது 14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு இமெயில் (email) என்று பெயரிட்டேன். எலெக்ட்ரோ மெயில் என்பதன் சுருக்கம் அது.  'ஃபோர்ட்ரான் 4’ மொழியில் ஒரு புரொகிராமில் அதிகபட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன் படுத்த முடியும் என்பதாலும், இமெயில்  என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்தப் பெயரை வைத்தேன். அகராதியில் அதற்கு முன்பு இமெயில் என்ற வார்த்தையே கிடையாது!''

''ஆனால், டேவிட் க்ராக்கர், ரே டாமில்சன் ஆகியோர் பெயர்கள்தான் இமெயில் கண்டுபிடித்தவர்கள்பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றனவே?''
''அதெல்லாம் அப்போது. நான்தான் இ மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இமெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரொகிராமிங் கோடு, இப்போதும் ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடிச் சாட்சியாக இருக்கிறார்.
டேவிட் க்ராக்கர் கண்டுபிடித்தது 'டெக்ஸ்ட் மெசேஜ்’ அனுப்பும் தொழில்நுட்பத்தை. ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா? அதைப் போல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதைக் கண்டறிந்தார். அதை இமெயில் என்று சொல்ல முடியாது. அதோடு ஒப்பிடுவதானால், நாம் தந்தி அனுப்புவதைத்தான் இமெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். மாறாக, இமெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராஃப்ட்ஸ், டு, ஃப்ரம், சப்ஜெக்ட், டேட், பாடி,  சிசி, பிசிசி, கம்போஸ், அட்டாச்மென்ட்ஸ், க்ரூப்ஸ், உள்ளிட்ட 86 வகையான இ மெயில் புரொகிராம்களை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இமெயில் சிஸ்டம். ரே டாமில்சன் இமெயிலில் இன்று பயன்படுத்தும் '@’ குறியீட்டைக் கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை.''

''ஆனால், இமெயிலைக் கண்டறிந்தவர் நீங்கள்தான் என்பது ஏன் பெரிய அளவுக்கு வெளியே தெரியவில்லை?''
''அமெரிக்காவில் பலருக்குத் தெரியும். ஒருவேளை தமிழ்நாட்டுக்குத் தெரியாமல் இருக்கலாம். 1981-ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்ற இமெயிலுக்கான 'காப்பிரைட்ஸ்’ இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. இங்கு கண்டுபிடிப்பு என்பது வேலையின் ஒரு பகுதி. ஆனால், எனது கண்டுபிடிப்பை இவர்கள் ஒப்புக்கொள்ளாமல் சர்ச்சை ஏற்படுத்தக் காரணம், புலம் பெயர்ந்த; கறுப்பு நிறத் தோல் உடைய; 14 வயதுச் சிறுவன் ஒருவன்... இமெயிலைக் கண்டுபிடித்தான் என்பதை இவர்கள் நம்ப மறுப்பது தான். 50 ஆயிரம் வரிகளைக்கொண்ட ஒரிஜினல் புரொகிராமிங் கோட் வெள்ளைத் தோல் உடைய ஒருவரிடம் இருந்தால், இந்தச் சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை!''

''இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?''
''1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்டி. ஆய்வில் ஈடுபட்டு இருந்தபோது, கிளின்டன் அமெரிக்க அதிபர். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இமெயில்கள் வந்து குவியும். அதை நிர்வகிக்கும் வேலை சிக்கலானதாக இருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகைவாரியாகப் பகுத்துப் பிரிக்கும் தானியங்கித் தொழில்நுட்பத்தைக் கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை. 147 பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் நான் கண்டறிந்த 'எக்கோ மெயில்’ (Echo Mail) என்ற தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. பிறகு, இந்த 'எக்கோ மெயிலை’ ஒரு நிறுவனமாகத் தொடங்கினேன். இன்று 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனம், உலகின் மிக முக்கியமான நிறுவனங்களைத் தனது வாடிக்கையாளர்களாகக்கொண்டு இருக்கிறது. அதுபோக, வேறு சில நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்கத் தபால் துறையில் எனது புதிய இமெயிலிங் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தியபோது, அது லாபகரமாக மாறியது. அப்போது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைக் கொண்டாடின. ஆனால், எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். அதே சமயம், அங்கு எனக்குக் கிடைத்தவையோ கசப்பான அனுபவங்களே...'' 

''என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டீர்கள் என்று அறிகிறேன்...'' 
''ஆம், உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான சி.எஸ்.ஐ.ஆர். (கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) துறையில் என்னைக் கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன் சிங். சில காலம் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழலே அங்கு இல்லை. இதைப் பற்றி 'கண்டுபிடிப்புகளுக்குச் சுதந்திரம் வேண்டும்’ என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4,000 விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது பெரிய விவாதமானது. உடனே, இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி, திடீரென ஒரு நாள் என் வீடு முடக்கப்பட்டது. நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். 'சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறு’ என்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப் பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கு இருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது!''

''உங்கள் பேச்சை வைத்துக் கேட்கிறேன்... நீங்கள் சயின்டிஸ்ட்டா, கம்யூனிஸ்ட்டா?''
''எம்.ஐ.டி-யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். இலங்கையில் நம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்த சமயத்தில், அப்போது இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவை எதிர்த்து இங்கு போராடியது உட்பட. 'த ஸ்டூடன்ட்’ என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். அதனால், நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட். இன்று தொழில்நுட்பத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும் செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராகக் கைகோத்துக்கொள்கின்றன. சமீபத்தில், எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ். அனுப்புவதைத் தடைசெய்து ஒடுக்க முயன்றதே இதற்குச் சிறந்த உதாரணம்!''

''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?''
''எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும். அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும் இந்தியாவிலுமாக மாறி மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதைக் கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவத் துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு. இன்றைய கார்ப்பரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலை யும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோ ருக்கும் கைவராத கலை என்பதைப் போலச் சித்திரிக்கிறது. ஆனால், அப்படி அல்ல. உலகத்தில் ஆயிரமாயிரம் சாம்ஸ்கிகள், சிவாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும். நான் அடிக்கடி சொல்லும் வாசகத்தையே இங்கும் சொல்கிறேன்: புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் நிகழ்த்த முடியும்!''


Source: Vikatan

Thursday, December 6, 2012

அரசியலில் ஒரு மனிதன்!-இந்தர் குமார் குஜ்ரால்


http://www.vikatan.com/jv/2012/12/zmziyt/images/p35.jpg
ந்தர் குமார் குஜ்ரால் இறந்துபோனது, இன்றைய இந்தியாவுக்கு தலைப்புச் செய்தியாகக்கூட இடம்பெறவில்லை. இதுவரை இருந்த பிரதமர்களில் அவரும் ஒருவர் என்ற பட்டியலில் க்விஸ் கேள்விகளில் மட்டும்தான் இடம் பிடித்தார். ஆனால், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள எத்தகைய கீழான காரியத்தையும் செய்யலாம் என்பதே விதியாகிவிட்ட இன்றைய அரசியல் உலகத்துக்கு, இந்தர் குமார் குஜ்ரால் போன்ற ஒருவரின் மறைவு... மாபெரும் ஏக்கப் பெருமூச்சைக் கிளப்புகிறது.

குஜ்ரால் என்பது அவரது பெயர் அல்ல. அவர் பிறந்த கிராமத்தின் பெயர். அது இந்தியாவில் இல்லை. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கிறது. ஆனால் குஜ்ரால், அப்பழுக்கற்ற இந்தியனாகவே இருந்தார். அவரது பூர்வீகம், காங்கிரஸ் கட்சி அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்தவர். ஆனால், 35 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்காகவே வாழ்ந்தவர்.
நல்லவர், நாணயஸ்தர் என்பதற்காக, அவருக்குப் பதவிகளைக் கொடுத்தனர். அதைத் தக்க​வைத்துக் ​கொள்வதற்காக யாரோடும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை அவர். அப்படி செய்திருந்​தால், இந்திரா காந்திக்கு அடுத்த இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டு, காங்கிரஸிலேயே தொடர்ந்து இருக்கலாம். காங்கிரஸ் கட்சி ஒரு தலையாட்டிப் பிரதமரைத் தேடிக்கொண்டு இருந்த 1997-ல், குஜ்ரால் பதவியைப் பிடித்தார். ஆனால், அவர் தலையாட்டிப் பிரதமராக செயல்பட்டு இருந்தால், 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தவர் என்ற நிலை வந்திருக்காது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியின் பூசாரியாக இருக்கச் சம்மதிக்காமல், ராஜினாமா செய்தவர் குஜ்ரால். அவரது மரணம் இந்தக் குணாம்சத்தின் வெற்றிடத்தையே நினைவுபடுத்துகின்றன.
பிரதமர் இந்திராவுக்கு மிகப்பெரிய களங்கம் 1975-ம் ஆண்டு காலத்து அவசரநிலைப் பிரகடனம். இந்திராவுக்கு எதிராக யாரும் எதுவும் எழுதக் கூடாது என்று பத்திரிகைகள் அனைத்தும் மௌனிக்கச் செய்யப்பட்டன. இந்த நேரத்தில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் இந்தர் குமார் குஜ்ரால். மேலோட்டமாகப் பார்த்தால் இத்தனை காரியங்களையும் அவர்தான் செய்தார் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே, இந்திராவுக்குப் பக்கத்தில் இருந்தபடியே எமர்ஜென்சி நடவடிக்கை​களுக்கு எதிராகச் சண்டை போட்டவர் குஜ்ரால். அமைதியானவர், அதிர்ந்து பேசாதவர் என்று பெயர் எடுத்த குஜ்ரால், அன்றைய 'கிரேட் டிக்டேட்டர்’ சஞ்சய் காந்தியை எதிர்த்து சரிக்குச் சரி நின்றார். எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாள், குஜ்ராலை வீட்டுக்கு வரச்சொன்னார் சஞ்சய். 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததாகச் சொல்லி அவர் கோபப்பட, 'நீங்கள் என் மகன் வயது. நான் உங்கள் அம்மாவுடன் அரசியல் நடத்துபவன். உங்கள் அப்பாவின் நண்பராக இருந்தவன். மரியாதையாக நடத்துங்கள்’ என்று சொல்லி விட்டு வந்தார். அந்தக் காலகட்டத்தில் வெளியாகும் செய்தி புல்லட்டின்​களை சஞ்சய் காந்திக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு துறையின் அமைச்சர் சொன்ன​போது, மறுத்தார். அதன்பிறகு, பிரதமர் இந்திராவுடன் நேரடி மோதல் ஏற்பட்டது. அவர் சொன்னதை ஏற்க குஜ்ரால் மறுக்கவே, 'நீங்கள் விலகி விடுங்கள். எனக்கு வேண்டிய​வரை வைத்து இந்தத் துறையைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று இந்திரா இவரைத் திருப்பி அனுப்பினார். வேறு துறைக்குத்தான் அவரை மாற்ற முதலில் இந்திரா நினைத்தார். பிறகு ரஷ்யத் தூதராக... கிட்டத்தட்ட மாஸ்கோவுக்கு நாடு கடத்தினார்.
அன்று அமைதியாக இருந்திருந்தால், இன்று மன்மோகன் சிங் இடத்தை நிரப்பி இருக்கலாம். இந்தப் பஞ்சாபிக்கு பதிலாக அந்தப் பஞ்சாபி இருந்திருக்​க​லாம். ஆனால், குஜ்ராலுக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. எமர்ஜென்சியை எதிர்த்துக் கிளம்பிய ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார். 96-க்குப் பிறகு ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்றத்தில் குஜ்ராலும் 11 மாதங்கள் பிரதமர் ஆகும் பாக்கியம் கிடைத்தது.
ஒரு பக்கம் சீதாராம் கேசரி தலைமையிலான காங்கிரஸ், இன்னொரு பக்கம் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தலைமை​யிலான இடதுசாரிகள், முலாயம், லல்லுபோன்ற இந்தி மாநிலத் தலைவர்கள், கருணாநிதியும் மூப்பனாரும் சந்திரபாபு நாயுடுவுமான தென்னகத் தலைவர்கள்... என, ஏக இந்தியாவும் சேர்ந்து குஜ்ராலை பிரதமராக முன்மொழிந்தது. அந்த அளவுக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவராக இருந்தார். இதில் சிக்கலை உண்டாக்கியது ஜெயின் கமிஷன். ராஜீவ் கொலை வழக்கில் உள்ள சதிச் செயல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட இந்தக் கமிஷன், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, 'இந்தக் கொலையில் தி.மு.க-வுக்குத் தொடர்பு இருக்கிறது. விடுதலைப்புலிகளை தமிழர்கள் ஆதரித்ததால், அவர்களுக்கும் கொலையில் பங்கு இருக்​கிறது’ என்று பெரிய காமெடி நடத்தியது. சொந்த வாழ்க்கையில் எந்தச் சாதனையும் செய்ய முடியாத சீதாராம் கேசரிக்கு, இந்த அறிக்கை கிடைத்தது. 'தி.மு.க-வை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்’ என்று குஜ்ராலைக் கட்டாயப்படுத்தினார். 'இதைவிடப் பெரிய அபத்தம் எதுவும் இருக்க முடியாது’ என்றார் குஜ்ரால். 'அப்படியானால் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கும்’ என்றார் கேசரி. 'நீங்கள் என்ன வாபஸ் வாங்குவது... நானே ராஜினாமா செய்கிறேன்’ என்று கும்பிடு போட்டார் குஜ்ரால். தன் மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு நாற்காலி​யைத் தொட மாட்டேன் என்று வாழ்ந்த குஜ்ராலின் மறைவு, ஈடு செய்ய இயலாத இழப்பு.
பிரதமர்களின் வரிசையில் அல்ல... மகத்தான மனிதர்​களின் வரிசையில் இந்தர் குமார் குஜ்ரால் இடம் பிடித்து விட்டார்!

நன்றி : விகடன் 

Tuesday, November 6, 2012

கடவுள் துகள் கண்டுபிடிப்பு! ?????


  டவுளைக் கண்டதாக கூறும் ஆத்திக உலகில் கடவுள் துகளை கண்டதாக கூறும் CERN ஆய்வுக்கூட விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அறிவியலின் அடுத்த கட்டத்தை எட்டும் முயற்சி. இது உலகின் பிறப்பு ரகசியத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை மட்டுமின்றி துகள் இயற்பியலில் அடுத்த படிநிலையை எட்டும் என்ற நம்பிக்கையையும் விதைத்துள்ளது.

உலகம் பருப்பொருளால் ஆக்கப்பட்டவை. உலகில் காணும் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களும் பருப்பொருளால் ஆனவை. சிறிய நுண் துகள் முதல் மிகப்பெரிய கோள்கள் வரை அனைத்தின் மூலமும் பருப் பொருள்களே. பருப்பொருள்கள் எவ்வாறு தோன்றின என்பதை தெரிந்து கொள்வதன் மூலமே  உலகம் எப்படி உருவானது மற்றும் கோள்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், இயற்கை, மனிதன், விலங்குகள் போன்ற அனைத்தும் எப்படி தோன்றின என்பதன் ரகசியத்தை அறிய முடியும். சுருங்கக்கூறின், பருப்பொருள்களால் ஆன உலகின் பிறப்பு ரகசியம் அதன் மிகச்சிறிய அலகான அணுத் துகளில்  அடங்கியுள்ளது. அணுத் துகளின் மிகச்சிறிய கூறுகளை யும், அதன் பண்புகளையும், அக்கூறுகளை பிணைத்துக் கொண்டிருக்கும் பிணைப்பு விசைகளையும் ஆராய்வதன் மூலமே அவை எவ்வாறு தோன்றியிருக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள முடியும்.


பருப்பொருளின் மிகச்சிறிய அலகு அணு. ஓர் அணுவின் உட்கருவில் புரோட்டான் மற்றும் நியூட்ரான் அதனைச்சுற்றி எலக்ட்ரான் உள்ளதென்பது நாமறிந்த ஒன்றே. இம்மூன்று துகள்களும் குறிப்பிட்ட நிறையைக் கொண்டவை. மேலும் குறிப்பிட்ட மின்னூட்டத்தினைக் கொண்டவை. (நியூட்ரானைத் தவிர) அணுவின் உட் கருவினை மேலும் ஆராய்ந்ததில் புரோட்டானும் நியூட்ரானும் அடிப்படை துகள்கள் இல்லை. இவற்றிற்கும் அடிப்படையான துகள்களால் புரோட்டான்களும் நியூட்ரான்களும் ஆக்கப்பட்டிருக்கிறது என்று கண்டறிந்தனர். இந்த அடிப்படையான துகள்களை குவார்க்குகள் என்றழைத்தனர். மேலும் இந்த குவார்க்குகளின் முந்தைய நிலையானது நான்குவகை. அவை (புதிய, சௌந்தர்ய, கீழ் மற்றும் மேல் ஆகியவை குவார்க்குகளாக இருந்திருக்க வேண்டும் எனவும் எலக்ட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான் நியூட்ரினோக்களின் (லெப்டான்கள்) முந்திய நிலையில் நான்குவகை (மியூவான், மியூவான் நியூட்ரி னோ, டௌ, டௌ நியூட்ரினோ) லெப்டான்களாக இருந்திருக்க வேண்டும் எனவும் அணுமானித்துடன்  19- நூற்றாண்டின் பல்வேறு கால கட்டங்களில் அதனைக் கண்டறியவும் செய்தனர்.

இந்த நான்கு குவார்க்குகளும் நான்கு லெப்டான்களும் தான் பெரு வெடிப்பு நிகழ்ந்து முடிந்து உண்டான இரண்டாம் கட்ட துகள்களாக இருந்திருக்க வேண்டும்  என அறிவிலர்கள் கருதினர். ஆனால் இந்த பெருவெடிப்பு நிகழ்ந்த முடிந்த தருணத்தில் உருவான துகள்கள் 19-ஆம் நூற்றாண்டின் பல்வேறு கால கட்டங்களில் அறிவியலர்கள் முயற்சிகளின் விளைவாக கண்டறியப் பட்டன. போட்டான் (1900), குளுவான் (1979), Z போசான் (1983), W+ போசான் (1983). W- போசான் (1983) ஆனால் இவற்றில் ஆறாவதாக ஒரு துகளை கண்டறியப்பட இயலவில்லை. இந்த ஆறு துகளும் தான் பெருவெடிப்பில் உண்டானவை. அதில் இந்த ஆறாவது துகள் தான் பருப்பொருளின் நிறைக்கு காரணமான துகள். இந்த ஆறு துகள்களும் விசை தூக்கிகள் (Force Carriers) என்றழைக்கப்படுகின்றன. இதற்கு காரணம் உண்டு. இயற்கையிலேயே நான்கு வகையான அடிப்படை விசைகள் ஒவ்வொரு பருப் பொருளிலும் (அணு) உண்டு. வலுவான மற்றும் வலு வற்ற உட்கருவிசை, மின்காந்தவிசை மற்றும் ஈர்ப்புவிசை ஆகியன. இந்த விசைகள் பரவியிருக்கும் புலங்களை  (Field)  விசைப்புலங்கள் எனலாம். இவ்வகை விசை புலங்களை இந்த ஆறுவகையான துகள்கள் உருவாக்கு கின்றன. மின்காந்த விசை புலத்தை போட்டான்களும், வலுவான உட்கரு விசையை (குவார்க்குகளுக்கிடையே) குளுவான்களும், வலுவற்ற உட்கருவிசையை (நியூட்ரான் புரோட்டானாகவும், புரோட்டான் எலெக்ட்ரான்களாகவும் மாற்றம்  பெற காரணமான விசை) W மற்றும் Z போசான் களும் உருவாக்குகின்றன. ஆறாவது துகள் தனக்கென வலுவான அல்லது வலுவற்ற உட்கரு விசை புலங்களை உருவாக்கும். இந்த புலத்தினை ஹிக்ஸ் புலம் எனவும் இதனை உருவாக்கும் துகளுக்கு விரிக்ஸ் போசான் துகள் என்றும் பெயர். ஹிக்ஸ் கண்டுபிடித்த, போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியல் முறையில் இயங்கும் துகள்தான் ஹிக்ஸ்-போசான். இதனைத்தான் ""கடவுள் துகள்'' என்று அழைக்கின்றனர்.

1963-ஆம் ஆண்டு அமெரிக்க பௌதீகவியலர் ட.ர. ஆண்டர்சன் குறுக்கமடைந்த பொருள் இயற்பியலில் சில புதிய கருத்தாக்கங்களை முன்வைத்தார். உலோகங் களிலும், மீ கடத்திகளிலும் ஏற்படுவதைப் போன்று திண்மங்களிலும் சிலவகை ஆற்றல் கிளர்ச்சிகள் நிறையினைப் போன்ற பண்புகளுடன் ஏற்படுவதாக கூறினார். உண்மையில் அவர் முன்வைத்தது உயர் ஆற்றல்-பௌதீகவியலுக்கு இந்த சிந்தனையை பயன்படுத்தலாம் என்பதனைதான். அவர் கூறிய இந்த சிந்தனையை பீட்டர் ஹிக்ஸ் மற்றும் ஐந்து பௌதீகவியலர் களும் பின்பற்றி தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நியம மாதிரியின் சார்பியல் தொடர்ச்சி களை திசையிலி புலங்களைக் கொண்டு  (Scalar Field)  விளக்கியதுடன் தன்னிச்சை சமச்சீர் பிளவு (Spontaneous Symmetry Breaking) என்றொரு புதிய தொழில்நுட்பத்தினை (Mechanism)  அறிமுகப்படுத்தினார் ஹிக்ஸ்.


தன்னிச்சை சமச்சீர் பிளவினை மெக்சிகன் குல்லாய் மூலம் விளக்கலாம். ஹிக்ஸ்  தன்னுடைய   நிலை ஆற்றல் மிகுந்த புலத்தை மெக்சிகன் குல்லாய் (hat) வடிவில் கற்பனை செய்தார். அதன் உச்சியில் ஒரு பந்து வைக்கப்பட்டிருப்பின், அப்பந்து எந்த பக்கமும் விழாதவரை புலமானது செங்குத்து அச்சினைப்பற்றி சுழல் சமச்சீரினை கொண்டிருக்கும். அப்பந்து தான் ஹிக்ஸ் போசான் துகள். அப்பந்து எந்த பக்கமும் விழுவதற்கான வாய்ப்பினை கொண்டுள்ளது. பந்து நழுவி கீழ்மட்டத்திற்கு வருமாயின் அப்புலத்தின் சமச்சீர் உடைபடும் அல்லது மாறிவிடும். ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பொதுவான சீர் மாறாமையை  (gauge invariance)  கொண்ட கோட்பாட்டில் கோட்பாட்டின் சமச்சீர் நிலைநிறுத்தப்படும் என்பதுடன், நிறையற்ற துகள்கள் நிறையினைப் பெறும் என்பதுதான் (ஹிக்ஸ் பொறிநுட்பம்) குறிப்பாக குவார்க்குகளுக்கிடையேயான வலுவற்ற உட்கரு விசைகளை உருவாக்கும் W மற்றும் Z போசான்கள், நிறையினை பெறும். பீட்டர் ஹிக்ஸின் ஆராய்ச்சி கட்டுரைகள் முறையே உடைபட்ட சமச்சீர்கள் (Broken Symmetries) நிறையற்ற துகள்கள் மற்றும் கேஜ் புலங்கள்  (Fields) 1964-லும், உடைபட்ட சமச் சீர்கள் மற்றும் கேஜ் போசான்களின் நிறைகள் 1966- ஆண்டிலும் Physics Letters  இதழில் வெளிவந்தன.

முதலில் வெளியிட்ட கட்டுரை அப்படியே ஏற்று கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டாவது கட்டுரை பௌதீகத்திற்கு பொருத்தமானதாகவும் தெளிவானதாகவும் இல்லை என்று நிராகரிக்கப்பட்டது. ஹிக்ஸ்  அதனுடன் மற்றுமோர் பத்தியை (Paragraph) இணைத்து அதனை ஏற்றுக் கொள்ளச் செய்தார். துகள்களின் வலுவான செயல்பாடுகளுக்கு தன்னுடைய கோட் பாடுகளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை எடுத்து வைத்தார். மேலும் இது உண்மையில் நிகழ சாத்தியமற்றதாக இருந்தபோதும், தன் ஆராய்ச்சியின் வழியில் சமச்சீர்களை உடைத்து மிகப்பெரிய வெக்டர் மெசான்களை (Vector Mesons)  உற்பத்தி செய்ய இயலும் என்ற கருத்துதான் அது. இந்த பத்திதான் பெயரில் ஹிக்ஸ் போசான் துகள் என்று அழைக்க காரணமாயிற்று என பீட்டர் ஹிக்ஸ் வெளிப்படுத்தினார்.

 கடந்த 11 வருடங்களாக CERN ஆய்வுக்கூடம் ஹிக்ஸ் போசான் துகளை கண்டறிய முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. 2000-ஆம் ஆண்டில் CERN ஆய்வுக்கூடத்தில் பெரிய எலக்ட்ரான்-பாசிட்ரான் மோதற் களத்தின் (Large Electron - Positron Collider)  உதவியுடன் எலக்ட்ரான்களையும் பாசிட்ரானையும் மோத செய்தபோது 114.4 Gev  நிறையுடைய துகள்கள் தட்டுப் பட்டன. இது அறவியலர்களை உற்சாகப்படுத்தினாலும் தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் பெர்மிலாபில் உள்ள  அடுத்த தலைமுறை முடுக்கிகளில் ஆய்வு செய்யப் பட்டது. இது புரோட்டான்- எதிர் புரோட்டானை மோத விடும் டெவ்ரான் மோதற்களம். டெவ்ரானில் புரோட் டான்கள் அதிக ஆற்றல் நிலையில் மோதவிடப்பட்டது. புரோட்டான் மற்றும் எதிர்புரோட்டான்கள் 1 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் () ஆற்றலுடன் மோதவிடப்பட்டது. இதன் மோதல் ஆற்றல் 2 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட். அதே சமயம் CERN -ன் ஆய்வு கூடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மோதற்களத்தில் (LHC)  உயர் ஆற்றல் கொண்ட புரோட்டான் துகள்களை மோதவிட்டு அதன் தகவல்களை ஆராய்ந்தனர். உலகளவில் இணைக்கப்பட்ட, ஒரே நேரத்தில் 2,00,000 இயற்பியல் தரவுகளை அலசி ஆராயக்கூடிய கஐஈயின் கணினிகள் மூலம் ஆய்வு முடிவுகள் ஆராயப்பட்டன.  CERN ஆய்வுக்கூடத்தின்  ATLAS மற்றும்  CMS ஆய்வகங்களின் முக்கியப் பணி ஹிக்ஸ் போசன் துகளை தேடுவதே-LEPயை மாற்றிவிட்டு LHC உருவாக்கியதும் அதன் திறன் முன் எப்போதும் இல்லாதவிதம் கூடவே செய்தது. LHC-யின் முடுக்கிகளில் மோதற் புரோட்டான்களின் ஆற்றல் 3.5பங்ஸ் ஆகவே இருந்தது. (மோதல் ஆற்றல் 7Lev இவ்வருடம் ஏப்ரல் 5-ந்தேதி புரோட்டான்களின் ஆற்றல் 4Lev க்கு (மொத்த மோதல் ஆற்றல் 8Lev) உயர்த்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 500 டிரில்லியன் புரோட்டான்- புரோட்டான் மோதல்களின் தரவுகள் ஆராயப் பட்டன. 2011 ஆண்டில் 7Lev மோதல் ஆற்றலின்போது எடுக்கப்பட்ட தரவுகளுடன் 2012-ஆம் ஆண்டின் தரவுகளையும் சேர்த்து மொத்தம் 900 டிரில்லியன் மோதல்களை அலசி ஆராய்ந்தபோது ஹிக்ஸ் போசான் துகள்கள் உருவானதை கண்டதாக CERN விஞ்ஞானிகள் அறிவித்தனர். கிடைக்கப்பெற்ற ஹிக்ஸ் போசன் துகளின் நிறை CMS (Compact Muon Solenoid)  ஆய்வகத்தின் முடிவுகளில் 125.6GEV (0.6GEV பிழையுடன் ஆகவும் ATLAS (Atoroidal LHC Apparatus)  ஆய்வகத்தின் முடிவுகளில் 125.3 GEV  (0.6GEV பிழையுடன்) ஆகவும் இருந்தது. ஆக இரு முடிவுகளும் கிட்டத்தட்ட ஒரே அளவினை காட்டியது.

பரிசோதனைகளின் போது கிடைக்கும் ஹிக்ஸ் போசான் துகளின் ஆயுட்காலம் மிக மிக குறுகியது    (10-22) வினாடி. இவ்வளவு குறுகிய ஆயுளைக் கொண்ட ஹிக்ஸ் துகளை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. மேலும் ஹிக்ஸ் வெளிப்பட்டு 10லி22 வினாடி ஆனவுடன் அது சிதைவடைந்து இரண்டாம் நிலை துகள் களாக (போட்டான், லெப்டான், ர மற்றும் ழ போசான் களாக) மாறிவிடும். ஹிக்ஸ் துகள் 5 வழிகளில் சிதை வுறும். ஹிக்ஸ்  இரு  போட்டான்களாக,  ஹிக்ஸ்  4 லெப்டான்களாக (எலக்ட்ரான்/மியுவான்) ஹிக்ஸ்  ழ ழ போசான்களாக, ஹிக்ஸ்  ஜ்ஜ் போசான்களாக, ஹிக்ஸ்  டௌ, டௌ துகள்களாக என சிதைவடையும். CERN ஆய்வுக்கூடம் ஹிக்ஸ்போசான் துகள்களை மட்டுமல்ல அதன் சிதைவையும் ஆராய்ந்து வருகிறது. இதில் ஹிக்ஸ்  4 லெப்டான் சிதைவு முறையானது கோல்டன் சேனல் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு தெளிவான வழிமுறை. ஆபகஆந மேற்கூறப் பட்ட முதல் இரு வழிமுறைகளில் ஹிக்ஸ் துகளின் நிறையை கணக்கிட்டது. ஈஙந ஐந்து வழிமுறைகளிலும் ஹிக்ஸ் துகளை ஆராய்ந்தது. ஹிக்ஸ் துகள் சிதைவடைந்து இரண்டாம் நிலையை அடையும் குறுகிய காலத்தில் ஹிக்ஸ் துகளின் நிறை கணக்கிடப்பட்டது. தனித்தனியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட ATLAS  மற்றும் CMS ஆய்வகங்களின் முடிவுகள் ஒப்பிட்டு பார்க்கும்போது ஹிக்ஸ் துகளின் நிறை 125- 126 GEC அளவிலேயே இருந்தது.

இனி மீதமுள்ள மூன்று வழிமுறைகளிலும் ஹிக்ஸ் துகளை இரு ஆய்வகங்களும் ஆராய்ந்து ஆய்வு முடிவு களை உறுதிசெய்வதே CERN  ஆய்வு கூடத்தின் முக்கிய பணியாக இருக்கும். இரு வழிகளை மட்டுமே கையாண்டு ஹிக்ஸ் போசான்துகள் தட்டுப்பட்டாலோ என்னவோ கிட்டத்தட்ட ஹிக்ஸ் போசானை கண்டு பிடித்துவிட்டதாக CERN வெளிப்படுத்தியது.
பல அறிவியலர்கள் இதுவரை கண்டறியப்பட்ட துகள்களை மட்டும் வைத்துக்கொண்டு (ஹிக்ஸ் போசான் துகளை தவிர்த்துவிட்டு) பருப்பொருள் மாதிரியை விளக்க முனைந்தனர். ஆனால், எவராலும் ஒரு சரியான மாதிரியை முன்வைக்க முடியவில்லை. மட்டுமின்றி ஹிக்ஸ் போசான் துகளை கண்டறியும் போட்டியில் ஐரோப்பாவின் CERN ஆய்வுக்கூடமும் அமெரிக்காவின் பெர்மிலேப் ஆய்வுக்கூடமும் போட்டி போடுகின்றன. பெர்மிலேப் ஜூலை 2-ந்தேதி தன்னுடைய அரைகுறையான ஆராய்ச்சியின் முடிவாக ஹிக்ஸ் துகள் வெளிப்பட்டதாக சந்தேகத்துடன் கூற, CERN  ஆய்வுக் கூடம் ஹிக்ஸ் போசானை கண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அது ஹிக்ஸ் போசான் துகளின் ஒருவகையாக இருக்கலாம் என்று ஐயத்தினையும் எழுப்புகிறது.

ஹிக்ஸ் போசான் பெயருக்கு இந்திய சம்பந்தம் உண்டு. கொல்கத்தாவில் பிறந்த சத்யேந்திர நாத் போஸ் என்ற அறிவியலர் உருவாக்கிய ஒரு கணக்கு முறையை ஐன்ஸ்டீன் விரிவுபடுத்தி ஆராய்ச்சி இதழில் வெளியிட்டார். இதுபோல் - ஐன்ஸ்டீன் புள்ளியியல் என்றழைக்கப்பட்டது. இப்புள்ளியியல் அடிப்படையில் இயங்கும் பொருளுக்கு பால்டிராக் என்ற அறிவியலர் போசான் (சத்யேந்திரநாத்போஸ் பெயரின் கடைசி இரண்டு எழுத்தும் ஐன்ஸ்டீன் கடைசி எழுத்தும் இணைத்தது)என்று பெயரிட்டார். இது பின்னாளில் ஹிக்ஸ் துகளுக்கு பொருந்தி வரவே அதனை ஹிக்ஸ் போசான் துகள் என்றழைக்கப்படலாயிற்று.

இந்தியாவின் அணுசக்திக் கழகமும் (DAE) CERN ஆய்வகமும் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 1991லும் CERN ஆய்வுக் கூடத்தின் கட்டமைப்பு பணிகள் மற்றும் இயக்கக் கூட்டணிகள் மேற்கொள்ள 1996லும் (AEC)  கையெழுத்தானது. மட்டுமின்றி இந்தியாவின்  TIFR, SINPECIL போன்ற நிறுவனங்கள் PMPS ஜாக்குகள், மென்பொருள் கண்டுபிடிப்பான், LHC யின் மீ கடத்தி காந்தங்கள் போன்ற பல பகுதிகளை உருவாக்குவதில் பங்களித்தது. மேலும் CMS-ன் இந்திய பகுதியை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் இயக்கியது.

சமீபகால கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு இதுதான். பருப்பொருள் மாதிரியில் கண்டுபிடிக்கபடாமலிருந்த இறுதி துகள் ஹிக்ஸ் போசான். ஹிக்ஸ் போசான் துகளின் கண்டுபிடிப்பு மட்டுமே துகள் இயற்பியல் துறைக்கு இறுதியாகாது. மிகை சமச்சீர் கோட்பாடு (super symmetry theory) குறைந்தது 5 ஹிக்ஸ் துகள்கள் இருப்பதாக கூறுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டது இதில் ஏதேனும் ஒன்றானால் மீதி நான்கு துகளையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக உலக பிறப்பு மட்டுமல்ல கடவுள் துகள் பிறப்பும் (கடவுள்) அறியப்படும் என்பதில் ஐயமில்லை.    


Monday, November 5, 2012

திராவிட இயக்க ஆட்சி

 -கோவி. லெனின்
திராவிடர் கழகத் தலைவரான தந்தை பெரியாருக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் பெரியாரின் தளபதியாக விளங்கியவருமான அண்ணாவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. கழகத்தினர் அனைவரும் கருஞ்சட்டை அணியவேண்டும் என்ற பெரியாரின் கருத்தில் அண்ணாவுக்கு மாறுபாடு இருந்தது. கருஞ்சட்டை என்பது, பொதுமக்களிடமிருந்து கழகத்தினரை அன்னியப்படுத்திவிடும் என்றும், தொண்டர்களை நிர்பந்திப்பது ஜனநாயக முறையாகாது என்றும் அண்ணா கருதினார். அதுபோலவே, சுதந்திர நாளை துக்க நாளாக பெரியார் அறிவித்ததிலும் அண்ணா முரண்பட்டார்.

வெள்ளையர்கள்- பார்ப்பனர்கள் என்ற இரு எதிரி களில் ஓர் எதிரி இந்த நாட்டைவிட்டு வெளியேறும் நாள் என்பதால் அதனை நாம் இன்பநாளாகவே கருத வேண்டும் என்றும் இல்லையென்றால் திராவிடர் கழகத்தினர் வெள்ளைக்காரர்களின் தாசர்கள் என்ற காங்கிரசாரின் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும் என்றும் அண்ணா தனது திராவிடநாடு இதழில் எழுதினார். இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் நீடித்த நிலையில், தனக்கும் தனது உடைமைகளுக்கும் சட்டப் படியான வாரிசு தேவை என்ற அடிப்படையில் மணி யம்மையாரை வாரிசுரிமையாக ஆக்கிக் கொள்வதாகப் பெரியார் அறிவித்தார். பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இது ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாடு என்பதே இந்தத் திருமணம் பற்றிய பெரியாரின் விளக்கம்.
72 வயது பெரியார், 26 வயது மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்ட செயலும், கழகத்தில் உள்ள யாரையும் தன்னுடைய வாரிசாக நம்பமுடியவில்லை என்று பெரியார் சொன்னதும் அண்ணா உள்ளிட்ட கழக நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியாரோ இது தன் சொந்த விஷயம் என்று சொல்லிலிவிட்டார். இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டது.
1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே கொள்கையைக் கொண்டதுதான் என்றும் அதனை செயல்படுத்தும் வழிமுறைகள்தான் மாறுபட்டவை என்றும் அண்ணா சொன்னார். தி.மு.கவுக்குத் தலைவர் பதவியை அண்ணா உருவாக்கவில்லை. பெரியாரைத் தவிர வேறொரு தலைவரை அவர் ஏற்றுக்கொண்டதில்லை என்பதால், புதிய கழகத்தின் தலைமைப் பதவி      காலிலியாகவே இருக்கும் என்றும் அறிவித்தார் அண்ணா."திராவிடர் கழகம்' எனும்போது அது திராவிடர்களாகிய மக்களைக் குறிக்கும் சொல் ஆகிறது. "திராவிட முன்னேற்றக் கழகம்' எனும்போது திராவிட என்பது நிலத்தைக் குறிக்கும் சொல் ஆகிறது. திராவிடர் எனும் இனத்தைக் குறிக்கும்போது அதில் ஆரியராகிய பிராமணர்கள் எதிர் நிலையில் நிறுத்தப்படுகிறார்கள். திராவிட என்ற நிலத்தைக் குறிக்கும்போது, இந்த மண்ணில் வாழ்கின்ற அனைத்துத் தரப்பு மக்களும் உட்படுகிறார்கள். தி.மு.கவை ஒரு ஜனநாயக இயக்கமாக, அரசியல் களத்திற்குக் கொண்டு செல்லும் காலம் வரும் போது, அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும் வாக்கு களும் வேண்டும் என்ற அடிப்படையில் அண்ணா இந்தப் பெயரைத் தெரிவு செய்து வைத்தார்.

இனம்-மொழி-தமிழக நலன் காப்பதில் தி.க.வும் தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று அண்ணா சொன்னார். இரண்டுக்கும் ஒரே இலக்குதான் என்பது இதன் பொருள். அதற்கானக் களங்களும்  அடுத்தடுத்து அமைந்தன. 1950-இல் இந்தியா, குடியரசு நாடானது. இந்தியாவிற்கான அரசியலமைப்புக் சட்டம் அந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அப்போது, பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்த செண்பகம் துரைராசன் என்ற மாணவி, நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலிலிருந்து நடை முறைப்படுத்தப்படும் வகுப்புவாரி உரிமையினால் தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இது போலவே சி.ஆர்.சீனிவாசன் என்ற பிராமணர் சமுதாயத்து மாணவர் தனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என மனு செய்தார்.

ஜாதிபேதம் காட்டுகிற வகுப்புவாரி உரிமைக்கான உத்தரவானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதி மற்றும் 29(2)வது விதி ஆகியவற்றிற்கு முரணானது என்றும் தனிநபர் உரிமையைப் பாதிக்கும் வகுப்புவாரி உரிமையை ரத்து செய்யவேண்டும் என்றும் இவர்களின் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் துணைநின்றவரே, அந்த சட்டத்திற்கு சவால்விடும் வழக்கில் வாதாடினார். வகுப்புவாரி உரிமையை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போதுதான், மாணவி செண்பகம் துரைராசன், மருத்துவக்கல்லூரிக்கே விண்ணபிக்காமல் இப்படியொரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. எனினும், வகுப்புவாரி  உரிமை செல்லாது என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தது.

நீதிக்கட்சி ஆட்சியினால் பிராமணரல்லாத சமுதாயத்தினருக்கு கிடைத்து வந்த கல்வி- வேலை வாய்ப்பு உரிமைகள், நீதிமன்றங்களின் இந்த உத்தரவினால் பறிபோவதை உணர்ந்த திராவிட இயக்கங்கள் போராட்டக் களம் கண்டன. வகுப்புவாரி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் எனப் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், கண்டன ஊர்வலங்கள், பள்ளி-கல்லூரி மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்பு எனப் போராட்டங்கள் நடைபெற்றன. வடமாநிலங்களில் இருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த எழுச்சி, மத்தியிலும் மாகாணத்திலும் இருந்த காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், அதன் ஆட்சியில் கொண்டு வந்த வகுப்புவாரி உரிமை மறுக்கப்பட்டால், அதனை முன் வைத்து திராவிடக் கட்சிகள் வளர்ச்சி பெற்றுவிடும் என்று டெல்லிலித் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பெரியார்- அண்ணா ஆகியோர் நடத்தும் போராட்டங்களை எடுத்துச் சொல்லிலி, அரசியல் சட்டத்திருத்தத்தை மேற் கொள்ளுமாறு பிரதமர் நேருவிடம் பெருந்தலைவர் காமராஜர் வலிலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்திய நாடாளுமன்றத்தில் 2.6.1951 அன்று கொண்டு வரப்பட்ட இத்திருத்தம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதியின் 4-ஆம் உட்பிரிவாகச் சேர்க்கப்பட்டது. அதன்படி, இந்த 15-வது விதியில் உள்ள எதுவும்- அல்லது 29(2)-இல் கண்ட எதுவும் சமூகத்திலும் கல்வியிலும்  பின்தங்கிய மக்களுக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதி மக்களுக்கும் முன்னேற்றம் அளிக்கக்கருதி, மாகாண அரசாங்கம் தனிச்சலுகை வழங்குவதற்காகச் செய்யும் எந்த ஏற்பாட்டையும் தடை செய்யாது என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திருத்தத்திற்கு, 18.6.1951 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப் பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது.இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்ட திராவிடர் இயக்கங்களின் போராட்டக் குணம் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே திருத்தும் வலிலிமை கொண்ட தாக அமைந்ததை இந்திய அரசியல் வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது.

1952-இல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்  தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளே அதிக இடங்களைப் பிடித்திருந்தன. எனினும் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அமைத்து, முதலமைச்சரானார் ராஜாஜி. அவர், 1953-இல் குலக்கல்வித் திட்டம் எனும் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தார். இதன்படி பள்ளியில் பாதி நேரம் படிப்பு, மீதி நேரத்தில் மாணவர்கள் தங்கள் பெற்றோர் செய்யும் தொழிலை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் குயவர் மகன் குயவனாகவும், நாவிதர் மகன் நாவிதனாகவும் வேலை செய்யும் சூழல் ஏற்பட்டு, வர்ணாசிரமக் கொள்கை நிலைநாட்டப்படும் என்பதால் தி.க.வும் தி.மு.கவும் இந்தக் கல்வித்திட்டத்தை எதிர்த்து பெரும்கிளர்ச்சி செய்தன. பலத்த எதிர்ப்பு எழுந்ததைக் கண்டு, குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்தவிட்டு, உடல்நிலையைக் காரணம் காட்டி முதல்வர் பதவியிலிலிருந்து விலகினார் ராஜாஜி. தமிழகத்தின் புதிய முதல்வரானார் பெருந்தலைவர் காமராஜர்.

தி.கவும் தி.மு.கவும் தனித்தனியாகப் பல போராட்டங் களை நடத்திவந்தன. இரண்டு கட்சிகளுக்கும் கடும் வாக்குவாதங்கள்-தனி மனிதத்  தாக்குதல்கள் என்கிற அளவுக்கு விமர்சனங்கள் சூடாக இருந்தன. எனினும், இரண்டு இயக்கங்களும் இனம்-மொழி நலனுக்கானப் போராட்டங்களைத் தொடர்ந்தன. டால்மியாபுரம் என்ற வடநாட்டு முதலாளியின் பெயரை மாற்றி, கல்லக்குடி என்கிற பழைய தமிழ்ப்பெயரைச் சூட்டவேண்டும் என்று தி.மு.க அறிவித்த போராட்டத்தில், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் போராடி 6 மாதம் சிறைத் தண்டனை பெற்றார் தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி. அவரைத் தொடர்ந்து கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று சிறைப்பட்டனர்.
திராவிடநாடு எனும் தனிநாடு கோரிக்கையை வலிலியுறுத்தி தி.மு.க தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தது. பிரதமர் நேருவுக்குக் கறுப்புக்கொடி காட்டுவது உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியது. திராவிடர் கழகத்தின் சார்பில் சமுதாய மாற்றங்களுக்கானப் பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் கடும் எதிர்ப்பிற்கிடையே நடத்தி வந்தார் பெரியார். அதே நேரத்தில், பச்சைத்தமிழர் என்ற அடிப்படையில் காமராஜர் ஆட்சியைப் பெரியார் ஆதரித்தார்.

1956-இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சென்னை மாகாணத்துடன் இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் பகுதிகள் பிரிக்கப்பட்டு அந்தந்த  மொழி பேசும் மக்களின் பகுதிகளுடன் இணைந்த தனி மாநிலங் களாயின. அப்போது தமிழகத்தின் எல்லைகளை நிர்ணயிப்பதற்கானப் போராட்டங்கள் நடந்தன. சென்னையைப் பெற்றுக்கொண்டு, திருப்பதி-சித்தூர் உள்ளிட்ட பகுதிகளை இழந்தது தமிழகம். அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தைப் பெற்றுக்கொண்டு, தேவிகுளம்- பீர்மேடு- மூணாறு உள்ளிட்டப் பகுதிகளை இழந்தது. இந்த எல்லைப் பிரச்சினை தொடர்பாக தி.மு.கவின் நிலைப்பாடும் தி.கவின் நிலைப்பாடும் வேறுவேறாக இருந்தன. இருப்பதைப் பாதுகாக்கும் நிலையில் பெரியாரும், இழந்ததைப் பெறும் நிலையில் அண்ணாவும் இருந்தனர்.

இரண்டாவது பொதுத்தேர்தல் 1957-இல் நடை பெற்றது. அதில் தி.மு.க முதன்முறையாகப் போட்டியிட்டது. காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு பெரியார் தீவிரப் பிரச்சாரம் செய்தார். காங்கிரசே மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. எனினும் தி.மு.க சார்பில் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட 15 பேர்  சட்டமன்ற உறுப்பினர்களகாவும், ஈ.வெ.கி.சம்பத், தர்மலிலிங்கம் ஆகிய 2 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வெற்றி பெற்றனர். தேர்தல் களத்தில் தனது முதல் வெற்றியைத் தி.மு.க பதிவு செய்தது.

இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை அந்த மாநிலங்களில் ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்று பிரதமர் நேருவிடம் உறுதிமொழி பெற்றவர் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வெ.கி.சம்பத்.
1957-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள், சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார் பெரியார். இந்திய அரசியல் சட்டத்தில், ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவை நீக்கவேண்டும் என்பதை வலிலியுறுத்தியே இந்தப் போராட்டம். இதனைத் தடுப்பதற்காக காங்கிரஸ் அரசு ஒரு தனி சட்டத்தை இயற்றியது. தேசத்தலைவர்கன் படங்கள்- அரசியல் சட்டம் இவற்றை எரித்தால் மூன்றாண்டு சிறை தண்டனை என்ற அந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார் அண்ணா. ஆனால், பெரியாரின் ஆதரவில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அரசு அந்த சட்டத்தை நிறைவேற்றியது. சட்டத்தை மீறிப் போராடிய பெரியார் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட தி.கவினர் கைது செய்யப்பட்டனர். 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை பலவிதமான சிறைத் தண்டனைகள் அளிக்கப்பட்டன. சிறையிலேயே மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக் கோட்டை ராமசாமி உள்ளிட்ட 3 பேர் இறந்தனர். விடுதலையானபிறகும், சிறைக்கொடுமையின் தாக்கத்தால் 15 பேர் பலிலியாயினர். எனினும், தி.க.வின் கருஞ்சட்டைப்படை இந்தப் போராட்டத்தை வீரமுடன் நடத்தியது.
 
பெருமையும் பாரம்பரியமும் மிக்க சென்னை மாநகராட்சிக்கு 1959-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலில் தி.மு.க வெற்றி பெற்றது. மாநகராட்சியின் மேயராக தி.மு.கவைச் சேர்ந்த அ.பொ.அரசு பொறுப்பேற்றார். 1961-ஆம் ஆண்டில் திராவிடர் இயக்கத்தில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டது. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும் பெரியாரின் அண்ணன் மகனுமான ஈ.வெ.கி.சம்பத்தும் அவரது ஆதரவாளர்களான கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களும் தி.மு.கவிலிலிருந்து பிரிந்து, தமிழ்த்தேசியக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினர். உள்கட்சி மோதல்களே இந்தப் பிரிவுக்குக் காரணம். திராவிட நாடு சாத்தியமல்ல என்றும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னாட்சித் தமிழகம்தான் சரியான கோரிக்கை யாக இருக்க முடியும் என்று சம்பத் வலிலியுறுத்தினார். அண்ணாவோ, அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று முழங்கினார்.

மூன்றாவது  பொதுத்தேர்தல் 1962-இல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க சார்பில் 50 பேர் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். ஆனால், அண்ணா தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலிலில் காமராஜருக்காகத் தீவிரப்பிரச்சாரம் செய்தார் பெரியார். தி.மு.கவிலிலிருந்து பிரிந்த தமிழ்த் தேசியக் கட்சி பெருந்தோல்வியை சந்தித்தது. பின்னர் அது காங்கிரஸ் கட்சியில் இணைந்தது. சட்டமன்றத்தில் தி.மு.க பிரதான எதிர்க்கட்சியானது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார் அண்ணா. அங்கே திராவிட நாடு கோரிக்கையை வலிலியுறுத்தி வலுவான வாதங்களை வைத்தார். வடநாட்டுத்  தலைவர்கள் அவருடைய வாதத் திறமை கண்டு வியந்தனர்.

தனிநாடு கோரும் ஒரு இயக்கம் வளர்ந்து வருவதை காங்கிரஸ் கட்சி உன்னிப்பாகக் கவனித்தது. இதனைத் தொடர்ந்து 1963-இல் பிரிவினைத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. தனிநாடு கோரினால், கட்சி தடை செய்யப்படும் என்ற நிலையில், அந்தக் கோரிக்கையை தி.மு.க கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். பிரிவினையைக் கைவிட்டாலும், "பிரிவினைக்கானக் காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன' என்றார்.

நெசவாளர்களின் துயர் துடைப்பதற்காக கைத்தறித் துணி விற்பனை, சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து யுத்தநிதி திரட்டுதல், போன்ற செயல்களில் ஈடுபட்டதுடன், விலைவாசி உயர்வு எதிர்ப்பு உள்ளிட்ட மும்முனைப் போராட்டத்தை தி.மு.க நடத்தியது. எனினும், அதனுடைய முக்கிய கோரிக்கையான திராவிடநாடு கோரிக்கை கைவிடப்பட்டதால், அது வீழ்ச்சியையே காணும் என அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
நடந்ததோ வேறு. எந்தக் கொள்கையை தி.மு.க முன்னிறுத்தியதோ, அதனை அரசியல் சூழல் ஏற்படுத்திய நெருக்கடி காரணமாகக் கைவிட்டபிறகும் அதன் பலம் குறைவதற்குப்பதில் அதிகரிக்கவே செய்தது. தி.மு.கவை மாபெரும் ஜனநாயக அரசியல் இயக்கமாகக் கட்டி யமைப்பதில் அண்ணா கவனம் செலுத்தினார். அவருடைய தம்பிகளான கட்சி நிர்வாகிகள் துணை நின்றனர். மேடைப் பேச்சு, பிரச்சார நாடகம், பத்திரிகைகள், திரைப்படம் ஆகிய ஊடகங்களை ஆயுதமாகப் பயன் படுத்தினர். கட்சியின் சார்பில் பல படிப்பகங்களை அமைத்து, வாசகர்களும் பொதுமக்களும் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கினர். தேநீர் நிலையங்கள், முடி திருத்தும் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் புழங்கும் இடங் களில் திராவிட இயக்கத்தினரின் அரசியல் கருத்துகள் வலுப்பெற்றன. தி.மு.கவின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. அதன் எழுச்சியைக் காட்டும் விதத்தில் அமைந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

1963-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி ஆட்சி மொழி மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாகும். இந்தி மொழிக்குத் துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். மத்திய அரசின் ஆணைகள், சட்டங்கள் உள்ளிட்டவை இந்தி மொழியில் வெளியிடப்படும். மாநில அரசின் ஆணைகளும் சட்டங்களும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டால்தான் அது  அதிகாரப் பூர்வமானதாகும்.

இந்த மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் போராட்ட அலை வீசக் தொடங்கியது. இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தி.மு.கவும் மாணவர் அமைப்புகளும் போர்க்கோலம் பூண்டன. பல கட்சிகளும் ஆதரவளித்தன. அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை தி.மு.க நடத்தியது. அண்ணா உள்ளிட்டோர் கைதாகி, 6 மாத சிறைத்தண்டனை அடைந்தனர். 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி-குடியரசு தினத்தை துக்கநாளாகக் கொண்டாடுவது என தி.மு.க முடிவு செய்தது.  1964-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கீழப்பழுவூர் சின்னசாமி என்ற 21 வயது இளைஞர், இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து பொது இடத்தில் தீக்குளித்து உயிர் துறந்தார். 
அவர் பற்ற வைத்த தீ பல இடங்களுக்கும் பரவியது. கோடம்பாக்கம் சிவலிலிங்கம், விருகம்பாக்கம் அரங்க நாதன், அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்திய மங்கலம் முத்து, மயிலாடுதுறை மாணவர் சாரங்கபாணி உள்ளிட்ட பலர் தீக்குளித்து உயிர் துறந்தனர். உலகில் தங்கள் தாய் மொழியைக் காப்பதற்காக இளைஞர்களும் மாணவர்களும் தீக்குளித்து உயிர் துறந்த நிகழ்வு தமிழகத்தில்தான் முதலிலில் நடந்தது. இப்படி உயிர் துறப்பது சரியானதல்ல  என்றாலும், அவர்களுடைய உணர்ச்சியின் வேகம், போராட்டக்களத்தைத் தீவிரமாக்கியது.

அப்போது தமிழக முதல்வராக பக்தவத்சலம் பொறுப் பேற்றிருந்தார். கட்சிப்பணிக்காக காமராஜர் முதல்வர் பதவியிலிலிருந்து விலகியதையடுத்து, பக்தவத்சலம் முதல்வரானார். அவர், மாணவர் போராட்டத்தின் வலிலிமையை உணரவில்லை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய இந்தி ஆட்சிமொழி எதிர்ப்பு ஊர்வலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்ற மாணவர் குண்டடிபட்டு பலிலியானார். மாணவர்களின் போராட்ட எழுச்சி தமிழக மெங்கும் பரவியது. சட்டஎரிப்பு, ரயில் மறியல், அஞ்சலக முற்றுகை என அவர்கள் தீவிரமாயினர். பல இடங்களில் துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தப்பட்டு மாணவர்கள் பலர் பலிலியாயினர். மாணவர்களைத் தூண்டி விட்டதாக கலைஞர் மு.கருணாநிதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனையில் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். கி.ஆ.பெ.விசுவ நாதம், பேராசிரியர் இலக்குவனார் உள்ளிட்ட தமிழறிஞர் களும் போராட்டக் களம் கண்டு சிறைப்பட்டனர். இந்தி யுடன் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக இருக்கும் என மத்திய அரசு அறிவித்தபிறகே போராட்டத்தின் வேகம் தணிந்தது.

1967-ஆம் ஆண்டு நான்காவது பொதுதேர்தல் நடை பெற்றது. இந்தத் தேர்தலிலில் தி.மு.க புதிய கூட்டணி அமைத்தது. ராஜாஜியின் சுதந்திர கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிலிம் லீக், பிரஜாசோஷலிஸ்ட், தமிழரசு கழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த அணியில் இடம்பெற்றன. காங்கிரஸ் கட்சியை பெரியார் ஆதரித்தார். தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தின.

தி.மு.க 138 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி யமைக்கும் வலிலிமையை அடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைத்தன. காமராஜர், பக்த வத்சலம் உள்ளிட்ட பல தலைவர்களும் தோல்வியடைந்த னர். செல்வாக்குமிக்க நடிகர்களான எம்.ஜி.ஆர். எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தி.மு.க சார்பில் பெருவெற்றி பெற்றார்கள். தி.மு.க பொதுச்செயலாளரான அண்ணா, வெற்றிச்செய்தி கிடைத்ததும் திருச்சிக்கு சென்று பெரியாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 18ஆண்டுகால பிரிவுக்குப்பின் இரு கழகத்தினரும் ஒன்றிணைந்தது அப்போதுதான்.

1967 மார்ச் 6-ஆம் நாள், தமிழகத்தின் புதிய முதல்வராக அண்ணா பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் மு. கருணாநிதி, கே.ஏ.மதியழகன், சத்தியவாணிமுத்து, சாதிக்பாட்சா, செ. மாதவன், ஏ.கோவிந்தசாமி, முத்துசாமி ஆகியோர் அமைச்சர்களானார்கள். இந்த ஆட்சி பெரியாருக்குக் காணிக்கை என்று அறிவித்தார் அண்ணா. 1937-இல் நடந்த தேர்தலிலில் நீதிக்கட்சியைத் தோல்வியடையச் செய்து காங்கிரஸ் அரசை அமைத்தவர் ராஜாஜி. அவருடனேயே கூட்டணி அமைத்து 1967-இல் மீண்டும் திராவிட இயக்கத்தின் ஆட்சியைக் கொண்டுவந்தவர் அண்ணா.    

தமிழர் பண்பாட்டிலும் வரலாற்றிலும் தெரியாதவை

 
மக்குத் தெரியாதவை பற்றி அறிந்து கொள்ள முதலில் அதற்கான பின்னணியைத் தெரிந்துகொள்ளல் அவசியமாகும்.

இந்திய சரித்திரத்தை ஐரோப்பிய கருத்தியலுக்குத்தக்க ஒரு நெறிமுறையுடன் எழுதும் வழக்கு 18-ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. வின்சென்ட் ஸ்மித்தின் இந்திய வரலாற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுவர். இந்திய வரலாற்றினை ஆங்கிலேயர் தம் காலனித்துவ சிந்தனைகட்கு ஏற்ப வடிவமைத்தனர்.

19-ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிரான சுதேசிகள் போராட்டம் வலு வடைந்தது. ஆங்கிலம் கற்ற இந்திய சுதேசிகள்- அதிலும் முக்கியமாக வட இந்தியர் தேசியப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அரும்பிய சுதேசிய புத்திஜீவிகள் இந்தியாவின் தேசியப் பெருமைகளைக் கூறும் வகையில் இந்திய வரலாற்றை வடிவமைத்தனர். சந்திர குப்தமௌரியனும், அசோகனும், அக்பரும் வீரசிவாஜியும் இந்திய பெரும் அரசர்களாக அவ்வரலாறுகளில் இடம்பெற்றனர். எல்லோரா அஜந்தா குகைச் சிற்பங்களும் ஓவியங்களும், தாஜ்மஹாலும், வட இந்திய கோயில்களும் இந்திய உன்னத சின்னங் களாகக் காட்டப்பட்டன. இவையாவும் இந்திய சமூக அமைப்பின் மையத்தைச் சேர்ந்த வரலாறும் பண்பாடும்தான். இவ்வரலாறுகளில் தமிழ்நாடு பெரும் இடத்தைப் பிடித்திருக்க வில்லை. தமிழ்ப் பண்பாடு கூறப்பட்டிருக்க வில்லை. 18-ஆம், 19-ஆம் நூற்றாண்டுகளிலே பின்வரும் விஷயங்கள் தமிழ்நாட்டில் நடந்தேறின.

1. ஏட்டுச் சுவடியிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்கள்- முக்கியமாக சங்க இலக்கியங்கள்-பதிப்பிக்கப்பட்டன. அச்சில் வெளிவந்தன.

2. சிலப்பதிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது அது அச்சில் வெளிவந்தது.

3. கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், ஆரிய மொழிக் குடும்பத்திற்கு மாறாக திராவிட மொழிக் குடும்பம் ஒன்று உண்டு என நிறுவியது.

4. சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டது. அது ஆரியருக்கு முற்பட்டது என நிறுவப்பட்டதுடன் அது பண்டைய இந்தியாவில் வாழ்ந்த திராவிட கலாச்சாரம் எனவும் கூறப் பட்டது.

5. திராவிடர் தமிழர் எனவும், சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனவும் நிறுவும் முயற்சிகள் மேலெழும்பின.

இவற்றால் தமிழர் மத்தியில் கல்வி கற்று மேலெழுந்த மேட்டுக்குடியினர் இந்திய வரலாற்றில் தமக்குரிய தேசியப் பெருமைகள் தரப்படவில்லை என்ற எண்ணத்துடன் தமிழர் வரலாற்றை உருவாக்கினார்.

சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி போன்றோர் சோழர்கால கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்களை ஆராய்ந்து சோழர்கால ஆட்சி பற்றியும் அதன் உன்னதங்கள் பற்றியும் அதிகம் வெளிக் கொணர்ந்தனர். 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டு களில் ஏற்பட்ட தமிழ்த் தேசிய உணர்வு காரணமாக அசோகனைப்போல, அக்பரைப் போல, அஜந்தா போல, தாஜ்மஹால் போல தமிழிரிடமும் ராஜ இராஜசோழனும், குலோத்துங்க சோழனும் இருந்தார்கள் என்றும், தமிழரிடம் அஜந்தா எல்லோரா குகை போல மாமல்லபுரக் குகைக் கோயில் களும், தாஜ்மஹால் போல இராஜராஜேஸ்வரக் கோயிலும் இருந்தன என்றும் தமிழர் தேசிய பெருமை கூறும் வரலாறுகள் தமிழ்ப் அறிவுஜீவிகளினால் எழுதப்படலாயின.

நாவலாசிரியர்களான கல்கியும், (சிவகாமி யின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு) அகிலனும் (வேங்கையின் மைந்தன்) சாண்டியல்யனும் (கடற்புறா) விக்கிரமனும் (பாண்டியன் மனைவி) தமது சரித்திர நாவல்கள் மூலம் மகோன்னதமான தமிழ் அரசர்களை உருவாக்கினர். அவர்களது ஆட்சிச் சிறப்பினையும், அவர் தம் மதியூகங் களையும், மக்கள் மத்தியில் இச்சரித்திர நாவலாசிரியர் பரப்பினர். தமிழ்ப் பெரும் அரசர்கள் அனைவரும் இந்நாவல்களில் மகா புருஷர்களாக, அறிவும்-வீரமும்-அன்பும் நிறைந்த லட்சிய புருஷர்களாகச் சித்திரிக்கப் பட்டனர். ஒரு வகையில் காவியங்கள் கூறிய குறைகள் அற்ற காவிய நாயகர்களாகக் காட்டப்பட்டனர். இவர்கள் யாவரும் சமூக அமைப்பின் மையத்தில் வாழ்ந்தோர்கள் ஆவர்.

1. சேர சோழ பாண்டிய மன்னர் ஆண்ட காலம்

2. களப்பிரர் எனும் அந்நியர் ஆண்ட காலம் (இருண்ட காலம்)

3. பல்லவ மன்னர் ஆண்ட காலம்

4. சோழ மன்னர் ஆண்ட காலம்

5. நாயக்க மன்னர் ஆண்ட காலம்

6. ஐரோப்பியர் ஆண்ட காலம்

எனத் தமிழர் வரலாறு கட்டமைக்கப் பட்டது. ஐரோப்பியரையும், களப்பிரரையும் தவிர ஏனையவர்கள் யாவரும் தமிழ் மன்னர் களாகவும் தமிழ் மக்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெரும் சேவை புரிந்தவர் களாகவும் காட்டப்பட்டனர். இம்மன்னர்கள் வியக்கத்தக்க தமிழர் பெருமை கூறக்கூடிய பெரும் கோயில்களையும், கட்டிடங்களையும் கட்டியவர்களாகவும் கலை களையும் இலக்கியங்களையும் வளர்த்தவர் களாகவும் தமிழர் சரித்திரம் எழுதப்பட்டது. பாடசாலை களிலும் பல்கலைக்கழகங்களிலும் இவையே கற்பிக்கப்பட்டன.

தமிழ் மன்னர்களுள் உன்னதமானவர்களாக கரிகாற் பெருவளத்தானும் (காவேரி அணைக் கரை கட்டியவன்) ராஜராஜசோழனும் (தஞ்சைப் பெரும் கோயில் கட்டியவன்) ராஜேந்திர சோழனும் (இலங்கையும், கங்கை யையும் வெற்றி கொண்டவன்) குலோத்துங்க சோழனும் (கங்கம் வென்றவன்) மாறவர்மன் சுந்தரபாண்டியனும் (இலங்கை வென்றன்) கட்டபொம்மனும், ஊமைத்துரையும், சின்னமருதுவும் பெரிய மருதுவும் (ஆங்கிலேயரை எதிர்த்த வீரர்கள்) வரலாற்று நூல்களிலே காட்டப்பட்டனர். தமிழர் வரலாறாக நாம் இதனைத் தான் தெரிந்து வைத்துள்ளோம்.

தமிழ்ப் பண்பாடாக சங்க காலத்தில் ஐந்து விதமான நிலங்களிலும் தமிழர் வாழ்ந்த ஐந்து விதமான வாழ்க்கை, முக்கியமாக அவர்களது அகப் புற வாழ்க்கை, அவர்களிடம் ஏற்பட்ட அற ஒழுக்க சிந்தனைகள், தமிழர் பண்பாட்டில் திருக்குறள் தமிழ் வேதமாக எழுந்தமை, சமண பௌத்த மதங்களுக்கு எதிராக வைதீக மதம் மக்களை அரவணைத்து எழுந்தமை, அதனடி யாக எழுந்த பக்தி இலக்கியங்கள், காவியங்கள், தமிழ் மன்னர் எழுப்பிய இந்துக் கோயில்கள், இந்துக் கலைகள், பரதநாட்டியம், கர்நாடக இசை என தமிழரின் பண்பாடு காட்டப் பட்டது. நாம் தெரிந்து வைத்துள்ளவற்றில் மிகச் சிலவற்றையே நான் மேலே குறிப் பிட்டுள்ளேன். இவையாவும் மையத்தில் வாழ்ந்தோரின் வரலாறுகளும், பண்பாடுகளும் என்பதனை நாம் இலகுவாக இப்போது புரிந்து கொள்கிறோம்.

மையத்தில் வாழாமல் இடையிலும், விளிம்பிலும் வாழ்ந்த மிகப் பெரும்பான்மை யான மக்களிடையே சமூக வாழ்வு இல்லையா? அவர்களிடம் பண்பாட்டு வாழ்க்கை முறை இல்லையா? அவர்கள் மத்தியில் தலைவர்கள் உருவாகவில்லையா? அவர்கள் மையத்தில் வாழ்ந்த மக்கள் போல பிறநாட்டை வெற்றி கொண்டு வந்த பெரும் செல்வத்தைப் பகிர்ந்து உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ்ந்தார்களா? அகப்புறம் என்ற தமிழர் பண்பாட்டு வாழ்க்கையில் திளைத்து வாழ்ந்தார்களா? மையத்தில் வாழ்ந்தோர் போல கல்வி அறிவு பெற்று, ஆடை அணி புனைந்து பெரும் கோயிற் பண்பாட்டை உள்வாங்கி பிராமணர் துணையுடன் வாழ்ந்தார்களா? குதிரை, யானை வைத்திருந்தார்களா? என்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றன. இடையிலும், விளிம்பிலும் வாழ்ந்த பெரும்பான்மைத் தமிழ் மக்களின் வரலாறும் பண்பாடும் நமக்குத் தெரியாதவை.

ஆனால் கொலை குற்றவாளி தன்தை யறியாமல் தடயங்களை விட்டுச் செல்லுவது போல வரலாற்றில் மன்னர்களும் ஏனையவர்களும் எழுதி வைத்த கல்வெட்டுகள், சான்றுகள் என்பன இவ்விடைநிலை, விளிம்பு நிலை மக்கள் பற்றிய செய்திகளைத் தருகின்றன. அச்செய்திகளின்படி மையத்தில் வாழாத மக்கள் மையத்தில் வாழ்ந்தோர் போல மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வாழவில்லை. சமூகத்தின் முழுச் சுமையையும் ஏற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டே வாழ்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். முக்கியமாக விளிம்பு நிலை மக்கள் அடக்கப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக அடிமைகளாக வாழ்ந்திருக்கிறார்கள். கோயில்களுக்குள் புக இவர்களுக்கு அனுமதியில்லாதிருந்தது. சில பொருட்களைத் தொட மேட்டிமைகளின் வீட்டுக்குள் புகக் கூட இவர்களுக்கு உரிமை தரப்படவில்லை. சேரியிலும், ஊருக்குப் புறம்பான இடங்களிலும் இவ்வடிநிலை மக்கள் வாழ்ந்தனர்.

எனினும் இவர்கள் வாழ்க்கை நடத்தினர். தமக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி தம்மளவில் திருப்தியுடன் வாழ முயன்றனர். தமக்கென கலைகளையும் பண்பாட்டையும் உண்டாக்கிக் கொண்டனர். இவர்களும் தமிழரே, இவர்கள் வாழ்வும் தமிழ் வாழ்வே. இவர்கள் பண்பாடும் தமிழ்ப் பண்பாடே. இவர்களின் வரலாறும் பண்பாடும் எமக்குத் தெரியவில்லை. தெரிவதில்லை. தமிழர் பண்பாட்டிலும் வரலாற்றிலும் நமக்குத் தெரியாதவை யாவை? என அடுத்து நோக்குவோம்

தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் மையத்தில் வாழ்ந்தோரின் வரலாறாகவும், பண்பாடாகவும், கட்டமைத்தவர்களுக்குப் (நான் முன்னனே குறிப்பிட்ட ஆரம்ப கால வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளருக்கும்) பின்னால் 1960-களில் புதிய ஆய்வாளர் குழு தமிழ் ஆராய்ச்சி உலகுக்குள் உருவாகிறது. இவர்கள் மாக்ஸிய நெறியில் வர்க்கப் போரே வரலாறு என்ற சித்தாந்தத்தால் கவரப் பட்டவர்கள். இந்திய வரலாற்றையும், பண்பாட்டையும் மாக்ஸிய நெறியில் அணுகிய டாங்கே, கோஸாம்பி, கே.ஆர் சர்மா, சர்தேசாய், ரொமிலா தாப்பர் வழியில் தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்தவர்கள். நா.வானமாலை, கைலாசபதி, சிவத்தம்பி, ஆ.சிவசுப்பிரமணியம், சிதம்பரரகுநாதன், வே.கிருஷ்ணமூர்த்தி, தொ. பரமசிவன் போன்றவர்கள்.

இவர்கட்குப் பின்னர் வரலாற்றையும் பண்பாட்டையும் மக்கள் வரலாறாகவும் பண் பாடாகவும் புரிந்துக் கொண்ட சிறந்த வரலாற்றுப் பண்பாட்டாய்வாளர்கள் ஆராய்ச்சி உலகில் தோன்றுகிறார்கள். இவர் களுள் வெளிநாட்டவர்கள் குறிப்பிடத்தக்க வர்கள். பேர்ட்டன்ஸ்ரைன், நொபுறுகறோ சிமா, ஹெய்ல்ட் ஒம்வெல்ட், செண்பகலஷ்மி, சுப்பராயலு, கதலின்கௌ, கமில் சுவலபில் போன்றோரும் அ.மாக்ஸ், வேலுச்சாமி, ராஜ் கௌதமன், குணா போன்றோரும் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் பலர் அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், நியூ மாக்ஸியம், பின்காலனித் துவம், முதலான சித்தாந்தாங்களால் கவரப் பட்டவர்கள். புதிய சிந்தனைகளுக்கு பரிச்சய மானவர்கள். இவர்கள் எழுத்துக்களும் ஆய்வும் தமிழர், வரலாறு, பண்பாடு பற்றி தெரியாத பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. இவர்களுள் சிலர் கிடைத்த ஆதாரங்களுக்குப் புதிய விளக்கங்களுமளித்த னர். இதனால் மையத்தில் வாழ்ந்த தமிழர் வரலாறு, பண்பாடு மட்டுமன்றி இடையிலும் விளிம்பிலும் வாழ்ந்த மக்கள் பற்றிய செய்தி களும் வெளிவரலாயின.

இவர்களுள் நான் குறிப்பிட்ட இரண்டா வது தலைமுறையினர் அதாவது மாக்ஸிய நெறிமுறை நின்று அணுகியோர் வரலாற்றையும், பண்பாட்டையும் பரிணாச் சுழலேணி முறையிலும், தமிழ்நாட்டில் பண்பாட்டு வரலாற்றை வர்க்கப்போரின் பின்னணியிலும் விளக்கினர். அதன் பின் வந்தோர் மையம்/ விளிம்பு என பிரித்து விளக்கினர்.

பரிணாம வளர்ச்சியில் தமிழர் வரலாறும் பண்பாடும்

புதிய ஆராய்ச்சிப் பரம்பரையினர், தமிழர் பண்டைய காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களில் தனித்தனிப் பண்பாட்டுடனும், பெருமிதத் துடனும், அகப்/புற கோட்பாடுகளுடன் வாழ்ந்தனர் என்ற மரபுக்கருத்துக்கு மாறாக இவர்கள் இந்த 5 நிலக்கோட்பாட்டை சமூக பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் விளக்கி னர். குறிஞ்சியில் வேட்டையாடிய தமிழ் இனம், முல்லையில் வேட்டையில் பிடித்த மிருகங்களை கொல்லாது வளர்த்து கால்நடை மேய்க்கும் இனமாக பரிணாமமுற்று, அதன் வளர்ச்சியாக, நதிக்கரைகளில் நிரந்தரமாக இருந்து வேளாண்மை செய்து, பொருள் பெருக்கி அப்பொருட்களை காக்க கோட்டை, கொத்தளம் படை என அமைத்து அரசு உருவாக்கி மருத நாகரிகம் வளர்த்து பின்னர் பெருகிய செல்வத்தை பிற நாட்டுடன் பகிர்ந்தும், பெற்றும் வாழ கடல் கடந்து வாணிபம் செய்து நெய்தல் நில நாகரிகம் கண்டு, பேரரசுகள் அமைத்து வாழத் தொடங்கினர் என பண்டைய தமிழர் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் இவர்கள் புதிய விளக்கமளித்தனர். சுருங்கச் சொன்னால்

(புணர்ச்சி) / வேட்டையாடுதல் / (குறிஞ்சி)

(இருத்தல்) / மந்தை மேய்த்தல் / (முல்லை)

(ஊடல்) / விவசாயம் செய்தல் / (மருதம்)

(பிரிதல்) கடல் கடந்த வாணிபம் செய்தல் / (நெய்தல்) என்று குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று திணைக்கோட்பாட்டுக்கு, வேட்டையாடுதலில் இருந்து கடல் கடந்து வெளிநாட்டு வியாபாரம் செய்தது வரையான பரிணாம வளர்ச்சி என்று புதிய விளக்கத்தை இவர்கள் அளித்தனர். இந்த வளர்ச்சி வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டு கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை நடைபெற்றதென்றும் இந்த வளர்ச்சியினூடே சிறு சிறு குழுக்களாக வாழ்ந்த இனங்கள் தமக்குள் மோதிக்கொண்டன என்றும் இம்மோதலில் வெற்றிப்பெற்ற பெரும் இனக் குழுக்களான சேர, சோழ, பாண்டிய இனக்குழுக்கள் முறையே தமிழ்நாட்டின் வடக்கிலும் (தஞ்சாவூர்) தெற்கிலும் (மதுரை) மேற்கிலும் (கேரளா) மூவரசுகளை தோற்றுவித்தன என்றும் இந்த ஓயாத போரையும் போரில் அடித்த கொள்ளையையும் போருக்கு மன்னனை ஊக்குவித்த புலவர்களின் மனப் பாங்கையும், போரைக் கடிந்த புலவர்களின் மனப்பாங்கையுமே சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன என்றும் இவர்கள் சங்க இலக்கியங்களுக்குப் புது விளக்கமளித்தனர்.

சங்க இலக்கியங்கள் யாவும் பெரும்பாலும் மன்னர்களின் வேண்டுகோளின்படி புலவர் களால் மன்னர்களையும் மன்னர் சார்ந்து வாழ்ந்த உயர் குடியினரையும் மையப்படுத்தி தொகுக்கப்பட்ட நூல்களாகும். திட்டமிட்டு தொகுக்கப்பட்ட அத்தொகுப்புகள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்தே இவ்வாசிரியர்கள் அன்றைய சமூகத்தினை மீள்கட்டுடைத்தனர். மன்னர் புகழ் பாடிய அவர்களைப் போருக்கு ஊக்குவித்த அக்கால கட்டத்திலேதான் மன்னனை எதிர்த்துப் பாடிய பாடல்களும், போர் களையும் குழுச்சண்டைகளையும் எதிர்த்துப் பாடிய பாடல்களும் தோன்றியுள்ளன. தொகுக்கப்பட்டுள்ளன. அப்பாடல்களின் மூலம் போரின் மறுபக்கமும், காதல் வாழ்க்கை யின் மறுபக்கமும் தெரியவரலாயிற்று.

சங்க இலக்கியத்தில் வரும் தலைவனும், தலைவியும் மையத்தில் இருந்த மக்களே. அக்கால வாழ்வே உயர்ந்த அகத்திணை (தூய அகம்) என்று கூறப்பட்டது. விளிம்பில் வாழ்ந்தோரின் காதல் கைக்கிளை, பெருந் திணை என அகத்திணைக்குப் புறம்பாக (அகப்புறம்) வைக்கப்பட்டது.

தொல்காப்பியர் அடியோர், வினைவலர் (அடிமைகள், தொழிலாளிகள்) காதலை அகத்திணைக்கு புறம்பாக வைத்ததை இவர்கள் கூட்டிக்காட்டினர். இவ்வண்ணம் பண்டைய தமிழ் வரலாறும், பண்பாடும் நாம் தெரிந்தது போல் அல்லாது முரண்பாடுகளும் வேற்றுமை களும் கொண்டதாக அமைந்தது என்று இவர்கள் கூறியவற்றை அண்மையில் செய்யப் பட்ட அகழ்வாராய்வுகளும், கிடைத்த புதை பொருட் சின்னங்களும் உறுதி செய்வனவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் வரலாறும் பண்பாட்டு வரலாறும் தமிழர்களுக்கு இடையே தோன்றிய வர்க்கங்களின் போராகும்

வேட்டையாடி வாழ்ந்த குறிஞ்சி நில மக்களிடையே பேதங்கள் இருக்கவில்லை. கிடைத்ததை சமமாக பகிர்ந்து பேதா பேத மின்றி சமத்துவமாக தமிழர் வாழ்ந்தனர். மந்தை மேய்த்து, விவசாயம் செய்து, வாணிபம் செய்து, அரசமைத்து வளர்ந்த போது சொத்துப் பெருகியது. அதிகாரம் பெருகியது. விவசாயம் செய்தோர் வேளாளராயினர். அரசமைத்த அரசர்கள் இவ்வேளாள நிலக் குடியிலிருந்து எழுந்த நிலவுடைமையாளர் களாவர். வெளியில் இருந்து தமிழ்நாடு புகுந்து அரசர்களுக்கு ஆலோசகர்களாக மாறிய பிராமணர்களுக்கும் நிலங்களை மன்னர் கொடுக்க அவர்களும் நிலவுடைமையாளர் களாயினர். இவ்வண்ணம் நிலவுடைமை வர்க்கம் மையத்தில் தம் ஆட்சியையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டது.

கடல் கடந்து வியாபாரம் செய்த வணிகர் பெரும் செல்வமீட்டினர். அரசர்களுக்கு நிகர வாழ்ந்தனர். அரசர்களுக்கு கடனும் கொடுத்தனர். இதனால் வணிக வர்க்கம் என்ற பெருவர்க்கம் ஒன்றும் எழுந்தது. மையத்தில் வாழ்ந்த மக்களுக்கு நிகர வணிகர் வாழ்ந்த னர். மைய நிலவுடைமை வர்க்கமும், வணிக வர்க்கமும் மைய அதிகாரத்திற்குப் போரிட்ட வர்க்கப் போரே மையத்திலிருந்து கட்டப்பட்ட வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் அடித்தளம் என இவ்வாய்வாளர் நிறுவனர்.

பேராசிரியர் கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை ஆகியோரின் ஆய்வுகள் இவற்றில் முக்கியம் பெறுகின்றன. பல்லவர் காலத்தில் நடைபெற்ற சமயப்போரையும் பக்தி இலக்கியத்தையும் வரலாற்றுச் சான்று கொண்டும் இலக்கியச் சான்று கொண்டும் அது நிலவுடைமையாளரான சைவருக்கும் வணிகரான சமணருக்கும் நடந்த போர் என இவர்கள் நிறுவினர். இப்பெரும்போரில் மையத்தில் வாழ்ந்த நிலவுடைமையாளர் தமக்குச் சார்பாக அடிநிலை மக்களான திருநாளைப்போவார் (பறையர்) கண்ணப்பர் (வேடர்) திருக்குறிப்புத் தொண்ட நாயனார் (வண்ணார்) திருநீலகண்ட யாழ்ப்பாணர் (பாணர்) முதலிய அடிநிலைச் சாதியினரையும் சேர்த்துக் கொண்டனர். ஆனால் சமணருக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற்று சைவம் தன்னை நிலைநிறுத்தி, பிராமணர் ஆதரவுடன் பெரும் கோயில்கள் கட்டி சைவசித்தாந்தம் கண்டு பெரும் நிறுவனமாக உருவாகிய பின் சேர்ந்து போராடிய இவ்வடிநிலை மக்களுக்குக் கோயிலுக்குள் புக உரிமை மறுக்கப்பட்டது என்ற கொடுமைகளை இவர்கள் சுட்டிக் காட்டினர்.

சமணர்களுக்கு எதிரான போரில் அனைவரையும் இணைத்த பக்தி இயக்கம் தன் அலுவல் முடிந்ததும் அடிநிலை மக்களை கைவிட்ட கதையை இவர்கள் வெளிக் கொணர்ந்தனர். திருநாளைப்போவாரான பறையரான நந்தனார், தில்லைவெளியில் சிவனுடன் ஒளியில் கலக்கவில்லை. அந்தணர்கள் திட்டமிட்டு அப்பாவியான அவரை எரித்து ஒளிமயமாக்கி, ஒளிமயமான இறைவனுடன் கலந்து விட்டார் என்று இவர் களும் ஒரு புது வரலாறு கட்டினர். (இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை நாடகம்) சோழ காலத்தில் உருவான பேரரசும், பெரும் சித்தாந்தமான சைவசித்தாந்தமும் நில உடமையாளரதும், பிராமணரதும் வர்க்க நலன்களுக்கு அமையும் விதத்தில் செயல்பட்ட முறைமையை பேரா.கைலாசபதியின் "பேரரசும் பெரும் தத்துவமும்&ஹல்ர்ள்; என்ற கட்டுரையும் பேரா. சிவதம்பியின் "சைவ சித்தாந்தம் ஒரு சமூக வரலாற்று நோக்கு&ஹல்ர்ள்; என்ற கட்டுரையும் விளக்கின.

தமிழர்களின் பொற்காலம் என்பது முழுத் தமிழர்களினதும் பொற்காலமன்று, மையத்தில் வாழ்ந்த நிலவுடைமயாளரான தமிழரதும் வைதீகர்களினதும் பொற்காலமேயாகும்.

ஏற்கனவே இருந்த தகவல்களின்படி சங்க காலமும் சோழர் காலமுமே தமிழ் மக்களின் பொற்காலம் என்று கட்டமைக்கப்பட்டது. இதனோடு பல்லவ காலத்தையும் இணைக்கும் வழக்கமுண்டு. இவை ஏன் பொற்காலமென்று கட்டமைக்கப்பட்டதெனில் இக்கால கட்டத்திலேதான் மையத்தில் வாழ்ந்த நில வுடைமையாளரும் அவருக்கு துணையாக நின்ற வைதீக மதங்களும் மேலோங்கி நின்ற காலங்களாகும். ஏனைய காலங்களில் களப்பிரர் காலத்தை "இருண்ட காலம்&ஹல்ர்ள்; எனவும் சோழருக்குப் பின்னர் தமிழ்நாட்டை இஸ்லாமியரும் தெலுங்கரும் மராத்தியரும் கிறித்தவர்களான மேற்கு நாட்டவர்களும் ஆண்ட காலத்தை பொற்காலம் அல்லாத காலம் எனவும் முன்னோர் கட்டமைத்தனர். சமணர் பௌத்தரின் தமிழ்நாட்டு வருகை நிலவுடைûயாளருடன் போராடிக் கொண்டிருந்த வணிக சமுதாயத்தினருக்குச் சார்பாயிற்று. சமணரின் வைதீகமத எதிர்ப்பு மையத்தின் பண்பாட்டு விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்தின.

அனைவருக்கும் கல்வி (கல்வித் தானம்)

அனைவருக்கும் மருத்துவம் (ஔடத தானம்)

அனைவருக்கும் அடைக்கலம் (அபய தானம்)

அனைவருக்கும் உணவு (அன்னதானம்)

என்பன சமணரின் கோட்பாடு. சமண மதமும் பௌத்த மதமும் மையத்தைத் தாண்டி இடைநிலையை ஊடறுத்து விளிம்புநிலை மக்களிடையே வேரூன்றின. அடிநிலை மக்கள் சமூகக் கொடுமைகளிலிருந்தும் அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை வேண்டினர். தம்மை மனிதர்களாக மதிக்கும் சமண பௌத்தத்தில் அதிகளவு சேர்ந்தனர். கி.பி. 2-ஆம் நூற்றாண்டு தொடக்கம் 6-ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சிக்காலத்தில் சமணமும் பௌத்தமுமே தமிழகத்தில் பிரதான மதங்களாக இருந்தன.

சமூகத்தில் ஒதுக்கப்பட்ட தாசிகுல மகளான மாதவியும் மணிமேகலையும் அங்கீகரிக்கப்பட்டனர். மணிமேகலை பௌத்த துறவியானாள். அவள் துறவியானதும் அவளைக் குறைத்துப் பார்த்த மக்களே அவளது காலில் விழுகின்றனர். தம்மை வருத்திய சமூகக் கொடுமைகளினின்று விடுதலை பெறவிரும்பிய அடிநிலை மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய மதங்களின் பின் செல்லுதல் வியப்பில்லை அல்லவா?

இவ்வண்ணமே இஸ்லாமியர் வருகையும் அடிநிலை மக்களுக்குச் சார்பாக அமைந்தது. சாதிபேதம் காட்டாத இஸ்லாமில் பெருந் தொகை அடிநிலை மக்கள் இணைந்தனர். இஸ்லாமிய அரசர்களின் படைகளில் இவர் களில் இணைக்கப்பட்டனர். ஐரோப்பியர் ஆட்சியிலும் இதுவே நிலவியது. கிறிஸ்துவ பாதிரிமாரினால் கட்டப்பட்ட பாடசாலை களும் அறநிலையங்களும் அடிநிலை மக்களின் கல்வி நிலையையும் வாழ்க்கை முறைகளையும் உயர்த்தின. பல அடிநிலை மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். சமண, இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்கள் பெரு வளர்ச்சியுற்ற காலம் ஒரு வகையில் அடிநிலை மக்களின் பொற் காலமாக இருந்தது. அடிநிலை மக்களின் பொற்காலம் மையத்தில் வாழ்ந்த உயர்நிலை மக்களுடைய பொற்காலம் ஆகாதுதானே. இவ்வண்ணம் தமிழரின் பொற்காலம் என்று கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புகள் ஆராய்ச்சியாளர்களினால் கேள்விக்குட் படுத்தப்பட்டன.
சமணம், பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற சமயங்களும் தமிழையும் பண்பாட்டையும் பெரிதும் வளர்த்தன.

வரலாற்றுப் போக்கில் தமிழர்கள் வாழ்வில் பல்வேறு மதங்கள் கலந்திருக்கின்றன. அவை அம்மக்களின் வாழ்க்கை முறைகளும் சிந்தனைகளும் வளர உதவி புரிந்துள்ளன. திருக்குறள், நாலடியார், அற ஒழுக்கக் கருத்துக்களும் நீதிநூல்களும், தொல்காப்பியம், நன்னூல் முதலான இலக்கணங்களும் சூளாமணி, சீவக சிந்தாமணி முதலான இலக்கியங்களும் சமணர் தமிழுக்கு அளித்த கொடைகளாகும். ஏக வணக்கக் கருத்துக்களும் சமத்துவ சிந்தனைகளும் சீறாப்புராணம், இராஜநாயகம் முதலான காவியங்களும் இஸ்லாம் தமிழர்க்களித்த செல்வங்களாகும். தாராண்மை வாதக்கருத்துக்களும், முற்போக்கு சிந்தனைகளும் தேம்பாவணி, சதுரகராதி, ஒப்பிலக்கணம் முதலான இலக்கண இலக்கியங்களும் கிறிஸ்தவர் தமிழர்க்களித்த செல்வங்களாகும்.

சமத்துவ சிந்தனைகளையும் அறநெறிச் சிந்தனைகளையும் மணிமேகலை, வீர சோழியம், குண்டலகேசி முதலான இலக்கிய இலக்கணங்களும் பௌத்தர் தமிழர்க்களித்த செல்வங்களாகும். இந்நான்கு மதங்களினதும் வருகை தமிழர் சிந்தனைகளையும் தமிழ் இலக்கியத்தையும் வளர்த்துள்ளன என்ற கருத்துக்களை மயிலை வேங்கடசாமி, சக்கரவர்த்தி நயினார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் வெளிக் கொணர்ந்தனர். சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், இஸ்லாமும் தமிழும், கிறிஸ்தவமும் தமிழும் என்ற கருத்துருவங்கள் தோன்றின. வைதிகச் சிமிழுக்குள்ளும் சைவ வேலிக்குள்ளும் இருந்தும் தமிழை மீட்டு அது அனைத்து மதங்களுக்கும் உரியது என்ற புதிய கருத்துக்கள் கட்டமைக்கப்பட்டன.

சோழர்கால கோயில் அமைப்பு சுரண்டல் தன்மை கொண்டது.

சோழர்கால மன்னர்கள் கோயில்களைப் பெருமளவு கட்டினார்கள். இராஜராஜசோழன் கட்டிய தஞ்சை இராஜராஜேஸ்வரம், அவன் மகன் இராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் என்பன தமிழர் கலை களின் கொடுமுடிச்சின்னங்களாகக் கொள்ளப் பட்டுள்ளன. "கோயில் இல்லா ஊறில் குடியிருக்க வேண்டாம்&ஹல்ர்ள்; என்ற பழமொழியும் உருவானது.

ஆரம்ப காலத்தில் கோயில்கள் பெரும் பொருளாதார நலன்கள் அற்றவையாகவும் மக்கள் அனைவரும் கூடி வழிபடும் இடங் களாகவும் அமைந்திருந்தன. கல்லால் கோயில் கட்டப்பட்ட பல்லவர் காலத்தில் அவை சில கட்டுப்பாடுகளுடனும் சித்தாந்தங்களுடனும் வழிபடும் இடங்களாயின. சோழர் காலத்திலோ கோயில் ஒரு பெரும் நிறுவனமாகிவிட்டது.

கோயிலுக்கு மூன்று வகைகளில் நிலங்கள் கிடைத்தன.

1. ஏற்கனவே கோயிலுக்கு இருந்த நிலங்கள்.

2. அரசர்களாலும் குடும்பத்தினராலும் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலங்கள்.

3. சிறிய நிலப்பரப்பு வைத்திருந்த விவசாயி களுக்கு கடன் கொடுத்து அக்கடனை விளைச்சலின்மையால் கட்டத்தவறிய விவசாயிகளிடமிருந்து பறித்தெடுத்த நிலங்கள்.

(இத்தகைய விவசாயிகளை கோயில் அடிமைகளாக்கி சூலக் குறிசுட்டு கோயில் அடிமைகளாக வைத்துக் கொண்டதுடன் கோயில் தனது நிலங்களில் வேலை செய்யவும் வைத்தது.)

இவ்வண்ணம் கோயிலில் உள்ள இறைவனின் பெயரால் நிலங்களையும் அடிமை களையும் மேலும் மேலும் சேர்த்துக் கோயில் பெரும் நிலவுடமை நிறுவனமாகியது.

கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் "தேவ தானம்&ஹல்ர்ள்; என்று அழைக்கப்பட்டன. அவற்றை நிர்வகிக்கும் உரிமை கோயிற் சபையாரிடம் இருந்தது. இவர்கள் பெரும்பாலும் தமக்கென நிலமுடைய நிலவுடமையாளர்களே. அதாவது மையத்தில் வாழ்ந்தவர்களே.

இவ்வகையில் சோழர் ஆட்சியில் கோயிலில் ஒரு பெரு நிறுவனமாகிவிட்டது. பெரும் நிலப் பரப்புகள் கொண்ட நிலவுடமை நிறுவனமாக, மக்களுக்கு கடன் கொடுக்கும் வங்கியாக, சோழர்கால நிலவுடமைப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நிலவுடமை அமைப்பாக தன்னகத்தே பெரும் பொற்குகைகளைக் கொண்ட தங்க பொன் சுரங்கமாக நடனம், சங்கீதம், சிற்பம், ஓவியம் சார்ந்த நளின கலை களை வளர்க்கும் கலைக்கூடமாக சுருங்கச் சொன்னால் சர்வ வல்லமை உள்ள அதிகாரம் கொண்ட நிறுவனமாக விளங்கியது. இக் கலைஞர்கள் யாவும் மையத்தில் வாழ்ந்த அரசர்களையும் நிலப்பிரபுக்களையுமே மகிழ்ச்சியுற செய்தன. கோயிலுக்கு வெளியே நின்ற அடிமட்ட மக்களுக்கு இம்மகிழ்ச்சி கிடைக்கவில்லை.

இத்தகைய கோயில்கள் அதிகாரம் மிகுந்த அரசனைக்கூட கட்டுப்படுத்தும் சக்திமிக்க நிலையங்களாக இருந்துள்ளன. இவ்வாறு இவை அரசியல் மையங்களாக உருப்பெற்றன.

கோயிலின் சுரண்டலுக்கு எதிராக எழுந்த சுரண்டப்பட்ட மக்களின் போராட்டங்கள்

இச்சுரண்டல் முறைகளை மக்கள் எப்போதும் சகித்துக் கொண்டிருந்தார்கள் என்று கூற முடியாது. வாழ்க்கை துயரங்கள் அவர்களை ஒன்றுபடுத்தின. கொடுமை அளவு மீறும்போது அவர்கள் போராடினர். சில அபூர்வ கல்வெட்டுகள் இப்போராட்டம் பற்றி கூறுகின்றன.

தஞ்சாவூரில் புஞ்சைக் கிராம கல்வெட்டு ஒன்றில், தங்களுக்கு ஜீவிதமான நிலத்தை கோயில் சபையார் கைப்பற்றிய அநீதியை அக்கோயிலின் பணியாட்கள் முறையிட்டும் நீதிகிடைக்காத போது அவர்கள் அக்கோயிலின் முன் தீ வளர்த்து தீயிலிறங்கி உயிர்தியாகம் செய்தமை கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தங்கள் உரிமையை நிலை நாட்ட உழைக்கும் மக்கள் வீரமாக உயிர்நீத்த செய்திகள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. மக்கள் ஆதரவைத் திரட்டவும் மன்னன் கவனத்தை ஈர்க்கவும் கோயிற் சபையாரின் அநீதியை அம்பலப்படுத்தவும் ஊர்க்கோபுரத்தின் மேல் ஏறி கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகள் சில கோயில் சாசனங் களில் இருந்து தெரியவருகின்றன.

கோயில்களிலே ஆடல் பாடல் நிகழ்ந்த தேவரடியாள்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டு வகை தேவரடியார்கள் கோயிலுக்கு இருந்தன.

ஒருவகையினர், அரசக்குடும்பத்தை சேர்ந்த வர்களும் வணிக குடும்பத்தை சேர்ந்தவர்களும் தம்மிடமுள்ள பெரும் செல்வத்தை கோயிலுக்கு கொடுத்து தேவரடியாள்கள் ஆகிய செல்வாக்கு மிக்க பணக்கார தேவரடியாள்கள்.

மற்றவகையினர் பஞ்சம், வெள்ளம் காலத்தில் நிலம் இல்லாதவர்கள் தங்களுடைய பெண்களைக் கோயிலுக்கு விற்றுவிடுவார்கள். அவ்வண்ணம் வரும் ஏழைத்தேவரடியாள்கள். அப்பெண்களுக்குக் கோயில் நிர்வாகம் சிறிது நிலம் கொடுக்கும். அந்நிலத்தை வைத்து அப்பெண்ணின் குடும்பம் வாழும். ஆனால் குடும்பம் அதிகரிக்க அந்நிலத்திற்கு வட்டி கட்ட முடியாத நிலை வர அந்நிலத்தை கோயில் பறித்துக்கொள்ளும். இவ்வண்ணம் அக்குடும்பம் பெண்ணையும் நிலத்தையும் இழக்கும். இது ஒரு மறைமுக சுரண்டல் ஆகும்.

இரண்டாம் நிலை தேவரடியாள்கள் ஒன்று திரண்டு தமது நிலப் பறிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர். சதுரி மாணிக்கம் என்ற தேவரடியாள் இவ்வண்ணம் அடிமையாக வந்த இரண்டாம் நிலைத் தேவரடியாள். இவள் தமது உரிமையை நிலை நாட்ட கோபுரத்தின் மேல் ஏறி விழுந்து உயிர் விட்டாள் என்ற கல்வெட்டு உண்டு. (இதனால் அக்கட்டளையை மாற்ற அரசன் விடுத்த கல்வெட்டில் இதிலுள்ளது.)

சில சமயங்களில் ஆட்சியின் அநீதியையும் நிலவுடமையின் கொடுமையையும் தாங்க முடியாத மக்கள் ஆயுதம் தாங்கி போராடியும் இருக்கிறார்கள். நிலங்களை இப்படித்தான் பங்கிட வேண்டும், கோயிலுக்கு இன்ன இன்ன உரிமைகள் இருக்கின்றன என்று கோயிற் சுவர்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களை இடித்து அழித்திருக்கிறார்கள்.

காலங்களால் இத்தகைய கல்வெட்டுக்கள் அழிந்துவிட்டதை குறிப்பிட்டுப் புதிய பத்திரங்களையும் கல்வெட்டுக்களையும் உண்டாக்கும்படி அரசன் பொறித்த சாசனங்கள் மூலம் இதனை உணர்கிறோம்.

இவ்வண்ணம் தம்மை அடக்கிய, தம்மை சுரண்டிய மைய நிறுவனமாக கோயிற் கொடுமைகளுக்கு எதிராக மையத்திலும் இடையிலும் வாழ்ந்த சிறு நிலம் வைத்திருந்த ஏழைகளும் அடக்கப்பட்டோரும் போராடி உள்ளனர்.

அரசின் தன்மைகள்

தமிழ் நாட்டு அரசர்கள் சர்வ வல்லமை கொண்டவர்களாகவும், தெய்வீக உரிமை பெற்றவர்களுமாகவே நமக்கு தெரிந்திருந்த னர். குலோத்துங்க சோழனை திருமாலின் அவதாரமாகவே ஜெயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறுகிறார். கடவுளின் பிரதிநிதியாகவே அரசன் ஆள்கிறான் என்பதனைக் காட்டும் வகையில் இராஜ ராஜசோழனுக்கு சிவபெருமான் முடிசூட்டும் சிற்பம் ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடவுள் பிரதிநிதியான அரசனின் மறுபக்கம் நமக்குத் தெரியாத ஒன்று.

இராஜராஜசோழனும், ராஜேந்திர சோழர் களும் கடல் கடந்து படை எடுத்தனர். பிறநாட்டுச் செல்வங்களைத் தம் நாட்டுக்கு கொண்டு வந்தனர். தோற்றவர்களையும் அவர்கள் நாட்டுப் பெண்களையும் தம் நாட்டுக்கு அடிமைகளாகக் கொணர்ந்தனர். போரிலே பிறநாட்டவரைக் கொலை செய்த னர். எதிரிகள் நாட்டை கொள்ளையிட்டனர். ஆவும், பார்ப்பனரும், அறவோரும் பெண் களும் சென்று விடுங்கள் என்று அறமுரைத்துப் போர் தொடங்கினாலும் போரிலே அற விதிகள் மீறப்பட்டன.

பிறநாட்டுப் படை எடுப்புக்களால் கவர்ந்த பணம், உள்நாட்டு வரிகளால் பெற்ற பணம், பாரம்பரியச் செல்வம் பிற மன்னர்களின் திறை, உள்ளூர்ப் பணக்காரர்களின் அன்பளிப்பு என மன்னனுக்குப் பல வழி களாலும் பெரும் செல்வம் கிடைத்தது. மிகப் பெரும் நிலவுடமையாளனாகவும், செல்வ னாகவும் மன்னன் இருந்தான். நாட்டைக் காப்பதற்காகவே வரி என்ற பெயரில் மக்கள் மன்னனால் சுரண்டப்பட்டனர்.

நாலு வர்ணப் பாகுபாடு சமூக அமைப்பின் நீதியாக இருந்தது. மனுதர்மம் அதுவே எனக் கூறப்பட்டது. பிராமணர் மிக உயர்ந்தோர், அரசர் (ஷத்திரியர்) இரண்டாமவர், வணிகர் (வைசியர்) மூன்றாமவர், சூத்திரர் (உழைப் பாளிகள்) நான்காம் நிலையினர் என தர்மம் வகுப்பட்டது.

சட்டத்திலும் தண்டனை முறைகள் சாதிக்குச் சாதி வேறுபட்டன. பிராமணருக்கு மரண தண்டனையில்லை என்ற சட்டமே இருந்தது. சாதி முறைமைகள் மீறுவோர் மிகவும் தண்டிக்கப்பட்டனர்.

பிராமணரும் சத்திரியரும், வைசியரும் சூத்திரரும் மையத்திலும் இடையிலும் வாழ்ந்தனர். மையத்தில் வாழ்ந்த சூத்திரர் எனப்படுவோர் உழைப்பாளி உயர் வகுப்பினராவர்.

இவர்களுள் அடங்காத பஞ்சமர் (அடி நிலை மக்கள்) ஊருக்கு வெளியே வைக்கப் பட்டனர். நால்வகை வருணத்துக்குள்ளும் இவர்கள் அடங்கவில்லை. (பத்து அவதாரங்கள் எடுத்த, பன்றி அவதாரம் கூட எடுத்த கிருஷ்ணன் ஒரு பஞ்சம அவதாரம் எடுக்கவில்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டியது.) இதுவே சமூக நீதியாக அன்று உரைக்கப்பட்டது. இச்சமூக நீதியை நிலை நிறுத்துவனவாக அரசன் இருந்தான். இவ்வரசர்கள் யுக புருஷர்கள், அவதாரங்கள் என்று வேறு அழைக்கப்பட்டனர்.

ராஜராஜசோழன் தமிழ் வளர்த்ததைவிட சமஸ்கிருதத்தையே அதிகம் வளர்த்திருக் கிறான் போலத் தெரிகிறது. பிரமதேயம் என்ற பெயரில் பிராமணர்கட்கு நிலங்கள் கொடுக்கப் பட்டன. அவை சதுர் வேதிமங்கலம் என்றழைக்கப்பட்டன. வேதப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. சமஸ்கிருதம் அரச மொழி யாக அமைந்தது. இவ்வகையில் தமிழை விட சமஸ்கிருதத்தையே அம்மன்னன் அதிகம் வளர்த்தான்.

மிக அதிகமாக மன்னர்கள் கோயில் கட்டி னார்கள். பெரும் கோயில்களை மன்னர்கள் கட்டியமைக்கு இரண்டு காரணங்கள் கூறப் படுகின்றன.

ஒன்று சமூக அமைப்பைக் கட்டிக் காக்கும் நிறுவனமாக, ஒரு படையின் வேலையை கலாசாரம் என்ற போர்வையில் கோயில் செய்தது. அது ஒரு வகைப் பண்பாட்டு அடக்குமுறை. படையின் வேலையின் ஒரு பகுதியைக் கோயில் செய்தமையினால் படைக்கு ஒதுக்கும் பெரும் பணத்தின் ஒரு பகுதியைக் கோயில் கட்ட ஒதுக்குதல் அரசனுக்கு அவசியமாக இருந்தது.

மற்றது படை எடுப்பில் செய்த படுகொலைக்குப் பிராயசித்தம் கோயில் கட்டி இறைவனைக் குடியிருத்தி அவர் தொண்டுகள் செய்தலேயாகும். இவ்வண்ணம் செய்தால் மக்களைக் கொலை செய்த பிரமஹத்தி மன்னனுக்கு வராது என பிராமணர் செய்த போதனைகளை கேட்டு பெரும் கோயில்களை மன்னன் கட்டினான்.

சோழர் காலப் பொருளாதார அமைப்பின் சுரண்டல்முறை

சோழர் காலத்தில் நிலமே பிரதான உற்பத்தி கருவியாக இருந்தது. சோழர் காலத்தில் நிலவுடமை முறையில் நான்கு வகையான நிலவுடமை முறைகள் இருந்தன.

1. வெள்ளான் வகை - இது சொந்த நிலம், உழுவித்து உண்ணும் நிலக்கிழாருக்குரியது.

2. தேவதானம் - இவை கோயில்களுக்கு உடைமையாக இருந்தன. சபையார் இதற்குப் பொறுப்பு.
3. பிரமதேயம் - பிராமணருக்கு உடை மையான நிலங்கள்.

4. ஜீவிதம்- கோயில் பணி செய்வாருக்கு உரித்தான நிலங்கள்.

இந்த நிலங்கள் ஏதும் இல்லாமல் வசதியற்ற மையத்திற்குத் தூரமான இடங்களில் வாழ்ந்த தீண்டத்தகாத மக்கள் வாழ்ந்த இடங்களும் இருந்தன. அவை எந்தவித பயனுமற்ற விளைச்சல் அற்ற நிலங்களாகும்.

சோழர் காலத்தில் நிலவுடமை முறைகளில் பல மாற்றங்கள் செய்தனர். வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமைகளைப் பறித்து கோயில் தேவதானமாக மாற்றினர்.

சிலவற்றை பிராமணருக்குரிய பிரமதேய மாக்கினார்கள். இவ்வண்ணம் கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கத்திற்கே நில உரிமை மாற்றப்பட்டது. இதனால் உழுவித்து உண்போர் சுகமாக வாழ உழுதுண்டோர் நிலை மேலும் மேலும் தாழ்ந்தது.

அடிமை முறைகள் தமிழர் மத்தியில் இருந்தனர்

தமிழர் மத்தியில் சங்க காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை அடிமை முறைகள் இருந்துள்ளன. இவ்வடிமைகளைப் பின் வருமாறு பிரிக்கலாம்.

1. போரினால் கொண்டுவரப்பட்ட போர் அடிமைகள்

2. வீட்டடிமைகள்

3. கோயில் அடிமைகள்

4. மட அடிமைகள்
அந்தணர்களும் அரசர்களும் வேளாளர் களும், அரச அதிகாரிகளும் கோயில்களுக்கும், மடங் களுக்கும் அடிமைகளாகத் தாமாகவோ விலைக்கோ கொடுத்த செய்திகளைக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட தேவைக்கு மேல் அடிமைகள் தேவையில்லை என்ற நிலையில் இதனைச் செய்திருக்கலாம்.

இவ்வடிமைகளுக்கு கைகளில் பாதங்களில் இலச்சினை பொறிக்கப்பட்டன. (ஆடு மாடுகளுக்கு குறியிடுவதுபோல) வழியடிமை, என்ற சொற்றொடர் பரம்பரையாக அடிமை களை வைக்கும் வழக்கத்தைக் காட்டுகிறது.

இவ்வடிமைகள் அனைவரும் தமிழர்களே. இங்கு தமிழரே தமிழரை அடிமைகளாக வைத்திருந்த ஒரு பண்பாட்டினை நாம் அறிந்துகொள்கிறோம்.

மையத்திற்குள்ளும் முரண்பாடு

மையத்திற்குள் அதிகாரத்திலும் சமூக மேலடுக்கிலும் இருந்த வர்க்கங்களுக்கிடையே போராட்டங்களும், மோதல்களும் நடை பெற்றுள்ளன. எனினும் அடி நிலைமக்களைச் சுரண்டுவதில் மைய வர்க்கங்கள் தமக்குள் சமரசமும் செய்து கொண்டன. மையத்தில் வாழ்ந்த அரசருக்கும் வணிகருக்கும் நடை பெற்ற முரண்பாட்டையே சிலப்பதிகாரம் காட்டுகிறது. அரச வணிக முரணில் அங்கு வணிகர் வெல்கின்றனர். பல்லவர் காலத்தில் நடைபெற்ற நிலவுடமையாளரான சைவர், சமணரான வணிகர் முரண்பாட்டில் வணிகர் அழித்தொழிக்கப் படுகின்றனர். (18000 சமணர் கழுவேற்றப்பட்டதாக வரலாறு) சைவ மதத்திற்கும் வைணவத்திற்கும் நடைபெற்ற முரண்பாடுகூட மையத்தில் வாழ்ந்த இரண்டு வித நிலவுடமை வர்க்கங்கிடையே நடந்த போரே என்று பலர் விளக்கியுள்ளனர். (சமூக அமைப்பை இறுக்கமாகப் பேணியது, சைவம், சமூக அமைப்பைச் சற்று நெகிழ்ந்துப் பார்த்தது வைணவம்)

இவ்வாறு நமக்குத் தெரியாத தகவல்கள் பல வரலாற்றிலும் பண்பாட்டிலும் உள்ளன. இவை யாவும் மையம் சார்ந்தவைதாம்.

எனினும் மையத்தை விட்டு இடையிலும் வெகுதூரம் விளிம்பிலும் தமிழர் வாழ்ந்தனர். இடையில் வாழ்ந்தவர்கள் மையத்தோடு தொடர்புடைய ஆனால் மையத்தை விட்டுத் தள்ளி வைக்கப்பட்ட கைவினைஞர்கள், சிறு நிலவுடமையாளர் இடைப்பட்ட சாதிகள் ஆவர். விளிம்பில் வாழ்ந்தோர் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவர். பாணன், பறையன், துடியன், கடம்பன் என நான்கு பெரும் குடிகளாகப் பெருமையுடன் சங்ககாலத்தில் வாழ்ந்த இந்நான்கு குடிகளும் காலப்போக்கில் விளிம்பு நிலை மக்களாக்கப்பட்டுவிட்டனர். அவர் களைப் பற்றி நமக்கு அடியோடு தெரிவதில்லை.
மையத்துக்கு வெளியே காணப்பட்ட தமிழ்ப் பண்பாடு

மையத்துக்கு வெளியே இடையிலும் விளிம்பிலும் தமிழ் மக்கள் மிகப் பெரும் பான்மையினர் வாழ்ந்தனர். அவர்கள் தமக்கென தனிப்பண்பாடுகளுடன் வாழ்ந்த னர். அவர்களின் மத அனுஷ்டானங்கள், வழி பாட்டு முறைகள், இலக்கியங்கள், மொழி, வாழ்க்கை முறைகள் என்பன மையத்தைவிட வேறாக இருந்தன.

மைத்திலிருந்தோர் சிவன், திருமால், முருகன், பிள்ளையார், சக்தி என்று ஆகம மயப்பட்ட பிராமணர் பூசை புரியும் பெரும் தெய்வங்களை வணங்க, இவ்விடை நிலை மக்களோ பெரும் தெய்வங்களுடன் காளி, மாரியம்மன் திரௌபதி முதலாம் பல்வேறு வகையான பெண் தெய்வங்களையும், வைரவர், மதுரை வீரன் முதலாம் ஆகம முறைசாராத பூசாரிமார் பூசை புரியும் சிறு தெய்வங்களை வணங்கினர். வருடம் தோறும் இத்தெய்வ விழாக்கள் மையத்தில் வாழ்ந்த கோயில் திருவிழாக்கள் போல அல்லாமல் தீப்பாய்தல், பள்ளயம் கொடுத்தல், பலி கொடுத்தல், கும்பம் சொரிதல், மடை என்ற வித்தியாசமான வழிபாட்டு முறைகளைக் கொண்டதாயிருந்தன.

இத்தெய்வங்களை வழிபட அவர்கள் தேவாரம் அல்லாத அம்மன் அகவல், சிறு காவியம், தாலாட்டு, சிந்து என்ற பாடல்களைப் பாடினர். பாடல்களுக்கும் ஆடல்களுக்கும் இசைவாக உடுக்கு, பறை என்பன அடித்தனர்.

உடுக்கு அடித்து, சிலம்பொலித்து பறைதட்டி மாரி, காளி, முதலாம் தெய்வங்களை மனிதரில் வரவழைத்து அத்தெய்வங்களுடன் தரகர்களின்றித் தாமே பேசி தம் தெய்வ வழி பாடுகளை இவர்கள் நிகழ்த்தினர். சாமி யாடுதல், தெய்வமாடுதல், கலையாடுதல், பேயாடுதல் என்று இவை அழைக்கப்பட்டன.
தெருக்கூத்து, ஒயிலாட்டம்

தமிழ்நாட்டில் வட ஆர்க்காட்டில் பல கிராமங்களில் வருடம்தோறும் 18 நாட்கள் நடைபெறும் பிராமணர் இடம்பெறாத திரௌபதை அம்மன் கோயிற் சடங்குகளையும் அங்கு நடைபெறும் பாரதப்படிப்பு, சடங்கு சார் நாடகங்கள் சடங்குகளில் நாடகங்கள் சடங்குகளில் மக்கள் பங்கு கொள்ளும் தன்மைகள் யாவற்றையும் அல்பஹில்பைற்றல் தனது ஈன்ப்ற் ர்ச் பட்ண்ழ்ஹன்ல்ஹற்ட்ண் (திரௌபதி வழிபாடு பாகம் ஒ,ஒஒ) எனும் நூல்களில் விபரமாகக் கூறி யுள்ளார். இதுபோன்ற வழிபாடுகள் இடை நிலை மக்களிடையே தமிழ்நாட்டின் பல பாகங்களிலுமுண்டு. ஊருக்கு ஊர் தெய்வம் வேறுபடும்.

இடைநிலையில் வாழ்ந்த இப்பெரும் பான்மைத் தமிழ் மக்களின் உடை, வீடு, வாழ்க்கைமுறை, விளையாட்டுக்கள், பொழுது போக்குகள், நம்பிக்கைகள், எழுதப்பட்ட இலக்கியங்கள் (இதனை நாம் வாய்மொழிக்கும் செந்நெறி இலக்கியங்களுக்கும் இடைப்பட்ட இலக்கியங்கள் எனலாம். புகழேந்திப் புலவர் பாடிய அல்லியரசாணிமாலை, நல்லதங்காள் கதை என்பனவும் மாரி அம்மன் தாலாட்டு, மாரி அம்மன் காவியம் என்பன இதற்குள் அடங்கும். இதனை ஆங்கிலத்தில் ர்ழ்ஹற்ன்ழ்ங் என்பர். ர்ழ்ஹற்ன்ழ்ங் என்பது ர்ழ்ஹப் என்ற வாய் மொழிப் பண்பும் ப்ண்ற்ங்ழ்ஹற்ன்ழ்ங் என்ற எழுத்துப் பண்பும் கொண்ட இலக்கியங்களாகும். இதனையே நாம் வாய்மொழி இலக்கியம் என்கிறோம், என்பவற்றுடன் அவர்களிடம் கூத்தும் பாட்டும் இருந்தன. தெருக்கூத்து, தேவராட்டம், ஒயிலாட்டம், கும்மி, கோலாட்டம் என அவை விரியும்.

இவர்கள் பேசியது பேச்சுமொழி. அது கொடுந்தமிழ் என அழைக்கப்பட்டது. மைய மக்களைவிட வேறானது. இவர்களின் பண்பாடு மைய மக்களைவிட வேறானதாக இருந்தன. இதனை நாம் தமிழர் பண்பாட்டின் மறுபகுதி என்று குறிப்பிடலாம்.

மையத்துக்கு வெளியே காணப்பட்ட அடிநிலைத் தமிழ்ப் பண்பாடு

இடைநிலைக்கு அப்பால் விளிம்பு நிலை யில் வாழ்ந்த அடித்தள மக்களிடமும் இடை நிலை மக்களிடமும் காணப்பட்ட மாரியம்மன், காளியம்மன் வழிபாடு இருப்பினும் இவர்கள் தம் குலத்தலைவர்களையும், முன்னோர் வழிபட்ட தெய்வங்களையும், ஆவிகளையும் வணங்கினர். (இது பண்டைய தமிழர் வணக்க முறையின் எச்ச சொச்சம்)

இவர்களிடம் இடைநிலை மக்களிடம் காணப்பட்ட எழுதப்பட்ட () இருக்கவில்லை. எழுத்து அவர்களிடம் இன்மையால் வாய் மொழியாக மாத்திரமே அவற்றை வைத் திருந்தனர். வாய்மொழியாகவே அவர்கள் தம் தலைமுறைக்கு அதனைக் கடத்தினர்.

அவர்களது வாழ்க்கைமுறை, பொழுது போக்கு, விளையாட்டுகள், நம்பிக்கைகள் வீடு கட்டும்முறை என்பன இன்னும் வேறாக இருந்தன. அவர்களும் தம்மளவில் தனித்தவ மான பண்பாடுகளைக் கொண்டிருந்தனர். இவர்களது பண்பாட்டின் ஊற்றுக் கண்களை ஆரியப் பண்பாடும், பிராமணியப் பண்பாடும் சற்றும் கலக்காத மிகப் புராதன தமிழர் பண்பாட்டுடன் இன்றைய மானிடவியலார் இனம் காணுகின்றனர். இம்மக்கள் தம்மை இன்று தலித்துகள் என்ற மாத்திரமல்ல ஆதிதிராவிடர் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்களாக இடைநிலை, விளிம்புநிலைத் தமிழரின் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் பிரதான வட்டத்துக்குள் கொண்டு வரப்படுவதில்லை.

இப்பண்பாடுகள் நமக்குப் பெரிதாகத் தெரியப்படுத்தப்படுவதில்லை. இவற்றுள் சில பண்பாட்டு அம்சங்கள் நமக்கு அடியோடு தெரியாதவை.

அடியோடு தெரியாத பெரும்பான்மைத் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண் பாட்டையும் அறிந்துகொள்ள இன்று புதிய ஆய்வு முறைகளும் அறிவு முறைகளும் தோன்றியுள்ளன. இப்புதிய சிந்தனைகள் நமக்குத் தெரியாதவற்றை மேலும் மேலும் தெரிந்துகொள்ள புதிய வழிகளை தந்துள்ளன.

கட்டுரையாளர் பேராசிரியர். மௌனகுரு இலங்கையின் மிகச்சிறந்த நாடகவியலர்; ஆய்வாளர். தமிழரின் நுண்கலை மற்றும் வரலாற்றை பற்றி பல நூல்களை எழுதியவர்   

Monday, October 22, 2012

NAZI TIME MACHINE

One of the world’s leading experts on Nazi Germany says Hitler mastered time itself, sending “time warriors” centuries into the future to conquer a world that is yet to be!
Dr. Kurt Fischer told a symposium in Mysen, Norway, that evidence accumulated over the past 64 years has convinced him that the Nazis developed a crude but working time machine before the fall of Germany in 1945.
He says parts of the machine and tattered blueprints were recovered from a bombed-out bunker in Berlin by Allied forces. And he suspects that Hitler, long obsessed with paranormal science, might have used the device to propel himself into the future and back on numerous occasions.
“Volumes have been written about the Nazis’ heavy water experiments and Hitler’s obsession with perfecting the atom bomb,” said Dr. Fischer. “But the cutting edge of Nazi technology was concerned with nothing less than the mastery of time and space itself.
“There is evidence to suggest that they did, in fact, open a portal. It couldn’t help them alter the course of World War II. But there is a very real possibility that it gave them a chance to win an even greater victory – the control and domination of our future.”
Fischer provided ample documentation for his broader theories during his presentation in Norway.
In a dramatic videotaped interview, secret Nazi physicist Erich Kreiner – now deceased – confirmed that he was one of 28 scientists who conducted the time-travel experiments.
He refused to name his colleagues and appeared to be addled or intentionally evasive when asked to discuss specifics. But he did say the Nazi goal was to send 5,000 elite troops to Germany in the year 2145, which was then 200 years into the future.

Sources:http://weeklyworldnews.com/headlines/11482/nazi-time-machine/

Monday, August 13, 2012

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்?

ஆங்கில அரசு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாக சட்டம் இயற்றியது. நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர். 
ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர். ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.  

 வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாஞ்சாலங்குறிச்சி ஊமைத் துரைதான் உலகிலேயே மிகவும் அபூர்வமான புரட்சிக்காரராகும். அவருக்கு காதும் கேளாது. வாயும் பேச வராது. தமது சமிக்ஞைகளினாலேயே மக்கள் மனதில் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய சக்தியை அவர் பெற்றிருந்தார். போலிகார் என்ற சிறு பிரிவின் தலைவராக விளங்கிய அவர் 1801-ம் ஆண்டில் வெள்ளையர்களை எதிர்த்து நடத்திய கிளர்ச்சி இன்றும் உலக வரலாற்று ஆசிரியர்களை வியக்க வைக்கிறது. தனது சமிக்ஞைகளினாலேயே மக்களை எழுச்சி கொள்ளச் செய்த முதல் வீரன் நம் ஊமைத்துரைதான்.  அடக்குபவர்கள் சுதந்திரத்தை  தாமாகவே முன்வந்து  தருவதில்லை;  ஒடுக்கப்பட்டவர்கள்  போராடிப் பெறுவதே  சுதந்திரம்.
Ref: Dinamani

Monday, June 25, 2012

இந்தியாவின் ஜனாதிபதி

'இந்தியாவின் ஜனாதிபதி, இங்கிலாந்தின் முடிமன்னருக்கு இணையானவர். அவர் நாட்டின் தலைவரே அன்றி, நிர்வாகத் தலைவர் இல்லை. தேசத்தின் புறவுருவாய் தோற்றம் தரும் அவர், ஆட்சி செய்வது இல்லை. நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்கும் அவருடைய பெயரால் நிர்வாக முடிவுகள் மேற்கொள்ளப்படுவது வெறும் வினைமுறை ஏற்பாடு’ (ceremonial device) என்று அண்ணல் அம்பேத்கர் நவம்பர் 4, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் தெளிவுபடுத்தினார்!
அமெரிக்க ஜனாதிபதியோ, நிர்வாகத் தலைவர். அமைச்சரவை அவருக்குக் கட்டுப்பட்டது. ஆனால், இந்தியக் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர்; அமைச்சரவையின் அறிவுரைப்படி நடக்க வேண்டியவர். அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி ஓர் அலங்கார பொம்மை என்ற கருத்தேற்றத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத் அங்கீகரிக்க​வில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 74(1) உறுப்பு 'அமைச்சரவை, ஜனாதிபதிக்கு உதவவும், அறிவுரை வழங்கவும் உள்ளது என்று​தான் உரைக்கிறது. அதன் அறிவுரைப்படியே அவர் எப்போதும் செயற்படவேண்டும் என்று குறிப்பிடப்​படவில்லை’ என்பது ராஜன் பாபுவின் அபிப்ராயம் ஆகும்.
நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமராக விளங்கிய ஜவகர்லால் நேருவுக்கு செப்டம்பர், 1952-இல் எழுதிய கடிதத்தில், 'சில தருணங்களில் ஜனாதிபதி சுயேச்சையாக முடிவெடுக்க வாய்ப்பு உண்டு’ என்று குறிப்பிட்டார். இந்தக்குறிப்பை நேருவால் ரசிக்க இயலவில்லை. ஆனாலும், தன் கருத்து வேற்றுமையை வெளிப்படுத்த நேரு தயங்கினார். காரணம், இருவரும் காந்தியப் படையின் தளகர்த்தர்களாக இருந்தவர்கள். ராஜன் பாபு, மூன்று முறை காந்தியால் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டவர். சட்டப் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற பிரசாத், அரசமைப்புச் சட்டத்துக்கு வடிவம் வழங்கிய அரசியல் நிர்ணய சபையின் தலைமை நாற்காலியை அலங்கரித்தவர்.
ராஜன் பாபுவுடன் மோதலைத் தவிர்க்க விரும்பிய நேரு, அவர் எழுதிய கடிதத்தின் நகலை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி ஐயருக்கும், அன்றைய அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகித்த எம்.சி. செதல்வாடுக்கும் அனுப்பி வைத்து அவர்​களுடைய கருத்தை வழங்கும்படி வேண்டினார். 'நம் அரசமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் அமைப்பு முறையை முன்மாதிரியாகக் கொண்டு இருப்பதால், குடியரசுத் தலைவர் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டியர் ஆவார்’ என்று இருவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். ராஜன் பாபுவுக்கு இது மனநிறைவைத் தராவிடினும் நாட்டு நலனை முன்னிறுத்திப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆயினும், தான் ஓர் அலங்கார பொம்மை என்பதை இறுதிவரை அவர் ஏற்கவில்லை.
உச்ச நீதிமன்றம் 'சம்ஷேர் சிங் - இந்திய யூனியன்’ வழக்​கில், 'குடியரசுத் தலைவர், அமைச்சரவையின் முடிவு​களுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் 'ஜனாதிபதியின் மனநிறைவு’ என்பது அவரது தனிப்பட்ட மனநிறைவு அன்று; அமைச்சரவையின் மனநிறைவே’ என்றும் தெளிவுபடுத்தியது. ஆனாலும், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பவர் எந்த நேரத்​திலும் ஏதாவது ஒரு வழியில் அமைச்சரவைக்கு நெருக்கடியைத் தரக்கூடும் என்ற அச்சம் ஒவ்வொரு பிரதமருக்கும் அந்தரங்கமாக இருந்தது. இந்த அச்சம்தான் 'ரப்பர் ஸ்டாம்ப்’ மனிதர்களைத் தேர்ந்தெடுக்க அடித்தளமிட்டது.
ராஜன்பாபு, மத்திய அமைச்சரவையின் முடிவுகளுக்கு மறுப்பேதும் குறிப்பிடாத மௌனப் பார்வையாளராக வீற்றிருக்க விரும்​பவில்லை. அவருக்​கும் நேருவுக்கும் இடையில் அந்தரங்​கமான மோதல்கள் அடிக்கடி அரங்கேறின. கஜனி முகம்மதுவால் பாழாக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பணியில் நேருவின் விருப்பத்தை மீறி வெளிப்படையாகப் பங்​கேற்றார் பிரசாத். காசியில் சாமியார்கள் கால்களில் ஜனாதிபதி விழுந்து எழுந்ததை நேருவால் ஜீரணிக்க முடியவில்லை. ராணுவத்தளபதி திம்மையாவின் ராஜினாமா விவகாரம், திபெத் பிரச்னையில் நேருவின் அணுகுமுறை, கேரளாவில் 1959-ல் நம்பூதிரிபாட் தலைமையில் இயங்கிய கேரள அரசைக் கவிழ்த்தது போன்றவற்றில் அமைச்சரவை முடிவுகளை மனநிறைவுடன் ராஜன்பாபு ஏற்கவில்லை.
தன் விருப்பங்களுக்குத் தலை அசைக்காத அவரை, இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க நேரு விரும்பவில்லை. ஆனால், மௌலானா அபுல்கலாம் ஆசாத் வற்புறுத்தியதால் ராஜன்பாபு மீண்டும் ஜனாதிபதியாய் நீடிக்க  விருப்பம் இல்லாமல் பணிந்து கொடுத்தார் நேரு. மூன்றாவது முறையும் பிரசாத் பதவியில் தொடர விரும்பிய போது, நேரு பச்சைக்கொடி காட்டவில்லை. தொடர்ந்து 12 ஆண்டுகள் (1950-62) ஜனாதிபதி பதவியில் பவனி வந்தவர் பாபு ராஜேந்திர பிரசாத் ஒருவர் மட்டுமே.

தத்துவ மேதை ராதாகிருஷ்ணன் ஜனாதி​பதியானால் தனக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நேரு நம்பினார். ஆனால், சீன ஆக்கிரமிப்பில் இந்தியாவின் கௌரவம் களங்​கமுற்றபோது ராதாகிருஷ்ணன், நேருவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன் பதவி விலக வேண்டும் என்று பிரதமருக்கு அழுத்தம் கொடுத்தார். நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூவரும் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமர்களாகப் பதவி வகித்தனர். இந்திரா காந்தியின் அரசியலும் ஆட்சி நிர்வாகமும், உயர்ந்த லட்சியங்களில் பிடிப்புள்ள ராதாகிருஷ்ணனுக்கு ஏற்புடையதாக இல்லை. பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன்பு தன்னுடைய இறுதிக் குடியரசு நாள் உரையில் 'நிர்வாகத் திறமையற்ற அரசு’ என்று வெளிப்படையாகவே விமர்சித்தார் அந்தத் தத்துவ ஞானி.

ராஜன் பாபுவுக்குப் பின், துணை ஜனாதிபதி யாக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி யானார். அவருக்குப் பின், துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் ஜனாதிபதியானார். பிரசாத், சட்ட நிபுணர். ராதாகிருஷ்ணனும், ஜாகீர் உசேனும் உன்னதமான கல்வியாளர்கள். அரசியல் சூழ்ச்சி​களுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவர் பதவியை அலங்​கரித்த முதல் மூவரும் அந்தப் பதவிக்குரிய கௌரவத்தைக் காப்பாற்றியவர்கள்; நாட்டு நலனைப் பெரிதாக நினைத்​தவர்கள்; பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரதமரின் கைப்பொம்மையாக இருக்க விரும்பாதவர்கள்.
இந்திரா காந்தியின் ஆட்சிப்படலம் ஆரம்​பமானது. குடியரசுத் தலைவர் கொலு பொம்மை ஆக்கப்பட்டார்.
நேரு, ராஜேந்திர பிரசாத் இணக்கமாக இல்லாத​ போதும் 12 ஆண்டுகள் பொறுமை காத்தார். அவருடைய மகள் இந்திரா காந்தியால் ராதாகிருஷ்ணனை ஓர் ஆண்டுகூட ஏற்க முடியவில்லை. பதவி நாற்காலிக்குப் பெருமை தேடித் தந்த தத்துவ ஞானியை இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க இந்திரா விரும்பவில்லை. அவருடைய மருமகள் சோனியா காந்தி, இளைஞர்களால் ஆராதிக்கப்படும் அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க இசையவில்லை. நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் ஜனாதிபதி தேர்வும் அரசியலாக்​கப்பட்டது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய மூவருமே ரப்பர் ஸ்டாம்பாக ஜனாதிபதியை மாற்றிய பெருமைக்கு உரியவர்கள்(!)

காங்கிரஸை 1969-ல் இரண்​டாகப் பிளந்து, கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடிக்க, வி.வி.கிரியைத் தேர்தலில் நிறுத்தி, மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி காங்கிரஸ்காரர்களைத் தூண்டிவிட்டு, தான் ஆடிய அரசியல் சதுரங்கத்தில் ஜனாதிபதி பதவியைப் பகடைக்காயாக மாற்றியவர் இந்திரா காந்தி. அன்றுதான் வி.வி.கிரி வடிவத்தில் ஜனாதிபதி, ரப்பர் ஸ்டாம்ப் ஆனார்
இந்திரா காந்தியால் ஜனாதிபதியான வி.வி.கிரி நன்றிக் கடனாற்றுவதற்காக, விரும்பியே ரப்பர் ஸ்டாம்பாக மாறினார். ஆனால், அவராலும் ரயில்வே வேலை நிறுத்தத்தை இந்திரா காந்தி கையாண்ட விதத்தை வரவேற்க முடியவில்லை. குஜராத் மாநில அரசுக் கவிழ்ப்பில் கிரியின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது. 'ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றத் தவறி விட்டது’ என்று அவர் செய்த விமர்சனம் இந்திரா காந்தியின் கசப்பைத் தேடிக்கொண்டது. கிரியைவிட அழுத்தமான ரப்பர் ஸ்டாம்பை அடுத்து இந்திரா தேடியபோது பொருத்தமாகக் கண்டெடுக்கப்பட்டவர்தான் பக்ருதீன் அலி அகமது. இந்திரா காந்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்து நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்த முனைந்தபோது, மறுப்பின்றிக் கையப்பமிட்ட மகாவிசுவாசி அவர். அவரை விடவும் விசுவாசி தேவைப்​பட்டபோது இந்திராவின் கண்களில் தட்டுப்​பட்டவர்தான் கியானி ஜெயில்சிங். 'இந்திரா காந்தி விரும்பினால் அவருடைய அறையில் துடைப்பம் பிடித்துப் பெருக்கவும் தயங்க மாட்டேன்’ என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்த ஜெயில் சிங்குக்கு இணையாக யாரே இருக்க வல்லார்! அன்று இந்திரா காந்தியின் கண்டுபிடிப்பு ஜெயில்சிங், நேற்று சோனியாவின் கண்டுபிடிப்பு 'உலகம் சுற்றிய’ பிரதீபா பாட்டீல். இந்திய அரசியலில் இந்திரா குடும்பத்துப் பங்களிப்பை நினைத்தாலே நெஞ்சு 'இனிக்கிறது’!
இன்று, சோனியா விரும்பி அறிவித்த மனிதர் அல்லர் பிரணாப் முகர்ஜி. அவருடைய ஆசை அமைதியின் வடிவம் ஹமீது அன்சாரியை ஜனாதிபதி​யாக்குவதுதான். முலாயம் சிங்கும் மம்தாவும் அவருடைய ஆசையை நிராசையாக்கி விட்டனர். பிர​ணாபின் திறமையை விட அன்சாரியின் அடக்கம்தான் சோனியாவுக்குத் தேவை. ஏன் பிரணாபிடம் சோனியா அஞ்ச வேண்டும்? ரப்பர் ஸ்டாம்ப் பதவி, அலங்கார பொம்மைப் பதவி என்றாலும் ஜனாதிபதி பதவி ஓரளவு கூர் தாங்கிய கத்தி. அதைக்கொண்டு கொஞ்சமாவது பயமுறுத்த முடியும். அனுபவத்தில் சோனியா காந்தி அதை அறிவார்.
இந்திரா காந்தியால் தோற்கடிக்கப்பட்ட சஞ்சீவ ரெட்டி, ஜனதா ஆட்சியின் கருணையால் குடியரசுத் தலைவரானார். கட்சிக்குள் நேர்ந்த குழப்பத்தால் மொரார்ஜி தேசாய் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியதும், ஜகஜீவன்ராம் ஆட்சியமைக்க ஆதரவு எம்.பி-க்கள் பட்டியலுடன் ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர், சஞ்சீவ ரெட்டியைச் சந்தித்தபோது அவர் ஏற்க மறுத்தார். கோபத்துடன் வெளியேறிய சந்திரசேகர், ஜனாதிபதி மாளிகையின் வெளியே பத்திரிகையாளர்களிடம், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பொங்கினார். தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்தது சஞ்சீவ ரெட்டி கத்தி.
இந்திரா காந்தியின் தீவிர விசுவாசி ஜெயில்சிங், ராஜீவ் காந்தியின் ஆட்சியைக் கவிழ்க்க ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தப் பார்த்தார். ராஜீவ், ஜெயில் சிங்கை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பிரதமர் நாட்டு நடப்புகளை, நிர்வாக முடிவுகளை அவ்வப்போது ஜனாதிபதியைச் சந்தித்துப் பரிமாறிக் கொள்ளும் நடைமுறையை ராஜீவ் புறக்கணித்தார். 'மரபை உடைக்கலாமா?’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது, 'நான் பல மரபுகளை உடைத்தவன்’ என்றார் ராஜீவ். ஜெயில்சிங் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை அவர் தடுத்தார். நேரம் பார்த்துக் காத்திருந்த ஜெயில் சிங்குக்கு, போஃபர்ஸ் ஊழல் கைகொடுத்தது. 'ஊழல் மலிந்த நிர்வாகம்’ என்று குற்றம் சாட்டி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜீவ் அரசை 'டிஸ்மிஸ்’ செய்யவும், வெங்கட்ராமனைப் பிரதமராக்கவும் முடிவெடுத்தார். இதை அறிந்த ராஜீவ் காந்தி அதிர்ந்து போனார். நாடாளுமன்றத்தின் அதிகாரத்​தை ஜனாதிபதி பயன்படுத்த முடியாது என்று கிடைத்த அறிவுரையால், ஜெயில் சிங்கின் பழிவாங்கும் புத்தி தெளிந்தது. இந்தச் சதி குறித்து அவருக்குப் பின் பொறுப்பேற்ற ஆர்.வெங்கட்ராமன் ‘My Presidential years’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கும் ஆட்சியாளரை அச்சுறுத்தும் அதிகாரம் உண்டு. மென்மையான தண்ணீரில் பாறையைத் தகர்க்கும் வன்மை மறைந்திருக்கிறது என்கிறார் சீனஞானி லயோட்சு. அதைப் போல!
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்வில் காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போகலாம். தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம். அந்த நேரத்தில் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரின் ஒத்துழைப்பு முக்கியம். அதற்கு ஒரு பூரண விசுவாசி அந்த நாற்காலியில் அமர்வது நல்லது. பிரணாப் முகர்ஜி தன் மேதைமையை மூட்டை கட்டி மூலையில் வைத்துவிட்டு 'முதல்தர விசுவாசி’ முகமூடியை அணிந்துகொள்ளத் துணிந்து விட்டார். அவர் ஜனாதிபதியாவது நிச்சயம். சோனியா காந்தி கம்பெனியில் தயாரான அக்மார்க் முத்திரையுடன் கூடிய அடுத்த ரப்பர் ஸ்டாம்பை ஜனாதிபதி மாளிகையில் அமரச்செய்து அழகு பார்க்க நாடு தயாராகி விட்டது. இன்னொரு சஞ்சீவ ரெட்டியும், ஜெயில் சிங்கும் மீண்டும் உயிர்த்தெழுவார்களா?

காலம்தான் விடை சொல்ல வேண்டும்!

Source:Vikatan