Sunday, May 11, 2014

மருது சகோதரர்கள்
ருதிருவர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் பரம்பரை ஆட்சியுரிமை பெற்ற பாளையக்காரர்கள் அல்லர். அவர்கள் திறமையாலும்,  உழைப்பாலும், போராட்டத்தாலும், மக்களின் அன்பினாலும் உருவெடுத்த உண்மையான மக்கள் தலைவர்கள். இராமநாதபுரம், நரிக்குடிக்கு அருகே  முக்குளம் எனும் கிராமத்தில் மொக்கபழனியப்பன் சேர்வை எனும் சாதாரணப் படைவீரனுக்கும் பொன்னாத்தாள் எனும் எளிய பெண்மணிக்கும் பிறந்த மருது சகோதரர்களை அவர்களுடைய தந்தை சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆரம்பத்தில் மன்னரது  குதிரைகளையும், வேட்டை நாய்களையும் பராமரிக்கும் எளியவேலைகளை மருதிருவர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கட்டாய வரி வசூல் கொள்ளை நடத்தி வந்த ஆடம்பர சுகபோகியான ஆற்காட்டு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன்  பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களது இராணுவத்தைப் பயன்படுத்துகிறான். கொள்ளையில் தங்கள் பங்கை அதிகரிப்பதற்காக  கிழக்கிந்தியக் கம்பெனிக்கான வரி பல இடங்களில் 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

இப்படித்தான் ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772-இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றுகிறது. அடுத்து சிவகங்கை. ஆங்கிலேயன்  தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் கொல்லப்படுகிறார். சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றில் முதல்  களப்பலிலியாகிறார். அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதிருவரும் விருப்பாட்சிக்குத்  தப்பிச் செல்கின்றனர்.

விருப்பாட்சியை உள்ளடக்கிய திண்டுக்கல் பகுதி அப்போது ஹைதரலியின் ஆட்சியில் இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் சிவகங்கையை மீட்பதற்கு ஹைதரலியிடம் உதவிகோருகிறார். சிவகங்கை மட்டுமல்ல ஏனைய பாளையங்களையும் விடுதலை செய்வதாக ஹைதர் அலியும் உறுதியளிக்கிறார். இதனிடையில் அமைச்சர் மரணமடைய பாளையத்தை மீட்கும் பொறுப்பு மருது சகோதரர்களிடம் வருகின்றது. இந்தப் போராட்டத்தினூடாகத்தான் இவர்கள் காலனியாதிக்க எதிர்ப்பில் உறுதியடைகின்றனர். நவாப்பின் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்ய சிவகங்கை மக்களைத் திரட்டுகிறார் சின்ன  மருது.


இராமநாதபுரம், சிவகங்கை மக்கள் கிளர்ச்சி செய்கின்றனர். மருதிருவரின் தலைமை போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது. இதேகால கட்டத்தில்,  1780-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மீது படையெடுக்கிறார் ஹைதர் அலி. ஹைதர் அலி திண்டுக்கல் படைத்தளபதி சையத் சாகிபு அளித்த சிறு படையின் உதவியுடன் மருதிருவரும் சிவகங்கையை மீட்க போர் தொடுக்கின்றனர். சிவகங்கை மீட்கப்படுகிறது. வெள்ளச்சி அரசியாகவும், பெரியமருது தளபதியாகவும், சின்ன மருது அமைச்சராகவும் பதவியேற்கின்றனர். மருதிருவரின் வீரம் மக்களிடையே புகழாகவும் செல்வாக்காகவும் பரவத் தொடங்குகிறது.

ஆத்திரம் கொண்ட நவாப் கம்பெனியின் உதவியுடன் சிவகங்கை மீது படையெடுக்கிறார். 1783-இல் கர்னல் புல்லர்டன் தலைமையிலும், 1789-இல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் தலைமையிலும் கம்பெனிப் படைகள் சிவகங்கையை ஆக்கிரமிக்க முயன்றன. இத்தாக்குதல்களின் போது தற்காலிலிகமாகப் பின்வாங்கிய மருதிருவர் கம்பெனிப் படைகள் அகன்றதும் தமது பாளையத்தை மீண்டும் கைப்பற்றுகின்றனர். இறந்துபோன மன்னர் முத்துவடுகநாதன்  மகள் வெள்ளச்சியை, அவளது தந்தை வழி உறவினரான வெங்கம் பெரிய உடையத் தேவருக்கு மணம் செய்து கொடுத்து, அவரையே சிவகங்கையின் அரசராகவும் ஆக்குகின்றனர்.

இக்காலகட்டத்தில் மாவீரன் திப்புசுல்தானைஒழிப்பதற்குக் கவனம் செலுத்தி வந்த கம்பெனி சிவகங்கையோடு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மருதிருவரிடம் ஒத்துப் போகுமாறு நவாபையும் அறிவுறுத்தியது.

இப்படி வெள்ளையர்கள் மற்றும் ஆற்காட்டு நவாபின் சூழ்ச்சிகள், படையெடுப்புக்களை முறியடித்து சிவகங்கையைக் காப்பாற்றிய மருதிருவர் 1790  முதல் அமைதியாக ஆட்சிப் புரிந்தனர்.

""சின்னமருது எளியவர். செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர். அனைவரிடமும் வேறுபாடின்றிப் பழகும் இயல்பினர். அவரது  தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர். தனக்கென ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக்  கொள்ளாத அவரை 1795-இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்குக் கடவுளின் அருள் கிட்டவேண்டும் என மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன். மருதிருவர் நினைத்திருந்தால்  எங்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர் களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை, எதனால் அவர்கள் எங்கள் மீது  சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்க வில்லை'' என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலிலில் குறிப்பிட்டார்.

1790-களில் வெள்ளையர்களோடு சிவகங்கைப் பாளையத்துக்குத் தீவிரமான முரண்பாடுகள் இல்லையென்ற போதிலும், வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு நாடெங்கும் அதிகரித்து வருவதை மருதிருவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. கட்டபொம்மனைப் போராடத் தூண்டுகிறார் சின்ன மருது. 500  வீரர்களை அனுப்பி உதவுகிறார். தென் தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கப் பாடு படுகிறார். இராமநாதபுரம் கூட்டிணைவிற்குத் தலைமையேற்றதோடு, கட்டபொம்மனைத் திருநெல்வேலிக் கூட்டிணைவுக்குத் தலைமை தாங்கவும் வைக்கிறார்கள் மருது சகோதரர்கள்.


1801 திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட காலம். தீபகற்பக் கூட்டிணைவு பெரிதும் தளர்ந்து இருந்த  நேரத்தில் மருதிருவர் கிளர்ச்சிக்குத் தலைமை யேற்கின்றனர். இராமநாதபுரத்தில் வெள்ளையர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து சிறையில் அடைக்கப் பட்டிருந்த மைலப்பன் அங்கிருந்து தப்பி மருதிருவரிடம் தஞ்சமடைகிறார். அதே போல பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மே28 அன்று ஊமைத்துரையும் சிவத்தையாவும் தம் வீரர்களுடன் சிவகங்கைக்கு வருகின்றனர்.

சிவகங்கையை மையமாகக் கொண்டு, தென் தமிழகமெங்கும் ஆங்கிலேயருக்கெதிரான போராட்டத் தீ பரவத்தொடங்குகிறது. அஞ்சி நடுங்கிய துரோகி  தொண்டைமான் கவர்னருக்குக் இவ்வாறு கடிதம் எழுதுகிறார். "சின்ன மருது இப்போது சிவத்தையா வுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கலகத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். திருமாவலூர், நத்தம், மேலூர் முதலிலிய கோட்டை களைக் கைப்பற்றியுள்ளான். ஆங்கில அரசுக்கு உரிமையான  இராணுவக் கிடங்குகளைத் தாக்கித் தளவாடங்களைக் கொள்ளையடித்துள்ளான். மேலும் ஒரு கிளர்ச்சிப் படையை இராமநாதபுரத்துக்கு அனுப்பியுள்ளான். எங்கு நோக்கினும் கலகம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.'

தொண்டைமான் இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருந்த போதே சின்ன மருதுவின் மகன் சிவத்ததம்பி தலைமையிலான படை அறந்தாங்கியைக் கைப்பற்றுகிறது. புதுக்கோட்டையும் பறிபோய்விடுமோ என்ற  பீதியில் அலறுகிறான் தொண்டைமான்.

ஆனால் "துரோகிகளேயானாலும் நம் நாட்டவர்கள்' என்று புதுக்கோட்டையை விட்டு விட்டு, கம்பெனியின் நேரடி ஆட்சிப் பகுதிகளை மட்டும்  தாக்குகிறது கிளர்ச்சிப்படை. தஞ்சை மாவட்டத்தில் நுழைந்து நாகூர் வரை செல்கிறது.

வடக்கே சத்தியமங்கலம் முதல் தெற்கே நெல்லை மாவட்டம் களக்காடு வரை, இப்போர் நடைபெற்றது. ஊமைத்துரை, சிவத்தையா தலைமையிலான  படை மதுரை திண்டுக்கல் பகுதியிலும், மைலப்பன், மருதிருவரின் தலைமையிலான படைகள் இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியிலும் போர்  புரிந்தனர். ஆங்கிலேயர்களிடமிருந்து பல பகுதிகள், கோட்டைகள் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப் பட்டன. கிளர்ச்சியாளர்களின் கொரில்லாப் போர்  முறையினால் ஆங்கிலேயர்களின் படைவரிசை பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. "திப்புவையே வென்று விட்டோம்' என்ற ஆணவத்துடன் வந்த  கம்பெனிப் படை பல தளபதிகளை இழந்து மூக்கறுபட்டது.

இறுதியில் இராமநாதபுரம் வந்து சேர்கிறது கம்பெனிப் படை. சிவகங்கைப் பாளையத்திலிலிருந்து ஒருவரின் ஆதரவைக்கூடப் பெறமுடியாது என்பதைப் புரிந்து கொண்ட கர்னல் அக்னியூ, தங்களுக்கான சேவகரை கண்டுபிடிக்க ஒரு அறிக்கை விடுகிறார். ""சின்ன மருது பரம்பரைப் பாளையக்காரன் அல்ல; சிவகங்கை மன்னனிடம் அடிமையாக வேலைக்குச் சேர்ந்தவன்... எனவே, சிவகங்கைப் பட்டத்துக்கு உரிமை உண்டு என்று நினைப்பவர்கள் எவரும் என்னைச் சந்தித்தால், இந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு அரியணை  வழங்கப்படும்... மாறாக, மருதுவை யாரேனும் ஆதரித்தால் பாஞ்சாலங்குறிச்சி, விருப்பாட்சி போன்ற இடங்களில் மக்களுக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்'' என்று மிரட்டுகிறான்.


""உண்மையிலேயே அரியணைக்கு பாத்தியதை இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, அரியணைக்கு ஆசைப்படுகிறவன் யாராயிருந்தாலும்  வா, பதவி தருகிறேன்'' என்கிறார் அக்னியூ. இப்படி ஆசைகாட்டி ஆள்பிடிக்க வேண்டிய அளவுக்கு மருதிருவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததை அக்னியூவின் அறிவிப்பு நிரூபிக்கிறது.

ஒரு பாளையத்தின் அரசுரிமைக்கு ஆசை காட்டுகிறார் அக்னியூ. மருதுவோ, தென்னிந்திய மக்கள் (ஜம்பு தீபகற்பம்), மற்றும் இந்துஸ்தானத்து மக்கள் (ஜம்புத் தீவு) அனைவரின் விடுதலைக்கு அறைகூவல் விடுகிறார். மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார் அக்னியூ. "ஆயிரம் ஆண்டு  வாழ்ந்தாலும் சாவு நிச்சயம், போராட வா' என்று மக்களைத் தட்டி எழுப்புகிறார் மருது.

இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலைப் போர்கள், தங்களது  அரசுரிமையைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தியே இருந்திருக்கிறது. முதன்முறையாக மருதுவின் அறிக்கை "நாட்டு விடுதலை'  என்பதை மக்கள் நலனுடன் இணைத்துப் பேசுகிறது. சாதி,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களனைவரையும் காலனியாதிக்க எதிர்ப்புக்காக ஒன்றிணையக் கோரும் முதல் பிரகடனமும் இதுதான்.

மருது வெளியிட்ட தென்னிந்திய மக்களுக்கான பிரகடனம் அரசியல் மையமான திருச்சிக் கோட்டையிலுள்ள நவாப் அரண்மனையின் வாயிலிலும்,  இந்தியா முழுவதற்குமான பிரகடனம், நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்லும் சிறீரங்கம் கோயிலிலின் மதிற்சுவரிலும் ஒட்டப்படுகின்றன.  உண்மையில் இந்தப் பிரகடனம் தீபகற்பக் கூட்டிணைவு விடுத்த செயலுக்கான அறைகூவல். "தீபகற்பக் கூட்டிணைவு ஆங்கிலேயப் பேரரசின் அமைதியையும் பாதுகாப்பையும் அழிக்கும் தன்மையுடையது; பேராபத்தினை விளைவிக்கக் கூடியது'' என்று குறிப்பிடுகிறது லண்டன் தலைமையகத்துக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் இராணுவத்தின் ஆவணம்.

போரிட்டு வெல்லமுடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியில் இறங்கினார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் போதே வேலுநாச்சியாரின் உறவினரான கௌரி வல்லப  உடையத்தேவன் சிவகங்கையின் புதிய அரசராக வெள்ளையர்களால் அறிவிக்கப் படுகின்றான். உணவையும், சாலை போடுவதற்கான  பணியாட்களையும், ஏராளமான வீரர்களையும் அனுப்பி உதவுகிறான் தொண்டைமான். மருதிருவரின் போர்த் திட்டங்களை ஒற்றறிந்து துரோகிகள்  வெள்ளையர்களுக்குச் சொல்கின்றனர். தொண்டித் துறைமுகம் வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு உணவும், வெடிமருந்தும் கிடைத்து வந்ததை அறிந்த  ஆங்கிலேயர்கள் அதனைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
இப்படி துரோகத்தாலும், சதியாலும் பலமடைந்த ஆங்கிலேயர்கள் இறுதியில் தென்னிந்தியா முழுவதுமிருந்து தம் படைகளை ஒன்று குவித்து  காளையார் கோவிலை மூன்று திசைகளிலிலிருந்து முற்றுகையிடுகின்றனர். சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த முற்றுகைக்குப் பின் மருதிருவர்  மற்றும் சிவகங்கை மக்களின் வீரஞ்செறிந்த போர் முடிவுக்கு வருகிறது. சோழபுரம் காட்டில் சின்னமருதுவும், மதகு பட்டிக் காட்டில் பெரியமருதுவும்,  வத்தலக்குண்டில் ஊமைத் துரையும் சிவத்தையாவும் கைது செய்யப்பட்டனர்.

துரோகி கௌரி வல்லப உடையத்தேவன் மருதிருவரிடம் சமாதானம் பேசி வெள்ளையர் களிடம் மன்னிப்பு கேட்குமாறு கோருகிறான். உற்றார், சுற்றம் அனைவரையும் இழப்போமென்று தெரிந்த நிலையிலும் அந்தச் சிவகங்கைச் சிங்கங்கள் மண்டியிட மறுக்கின்றனர். இறுதியில் மருதிருவர் மற்றும் அவர்களது வாரிசுகள்,  உறவினர், ஏனைய கிளர்ச்சி யாளர்கள் உட்பட சுமார் 500 வீரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 1801-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் நாள் தூக்கிலிடப்படுகின்றனர்.  அவர்களில் மருதிருவரின் மகன்கள், பேரன்கள் உள்ளிட்டு ஒருவரையும் ஆங்கிலேயர்கள் விட்டு வைக்கவில்லை.  சின்ன மருதுவின் தலையை வெட்டி எடுத்து காளையார் கோவிலிலில் நட்டுவைத்தனர் வெள்ளையர்கள். ஊமைத்துரையும், சிவத்தையாவும்  பாஞ்சாலங்குறிச்சி கொண்டு செல்லப்பட்டு அங்கே நவம்பர் மாதம் 16-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

சின்னமருதுவின் 15 வயது மகன் துரைச்சாமி, சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையத்தேவர், பாஞ்சாலங்குறிச்சி தளபதி குமாரசாமி நாயக்கர்  உள்ளிட்ட 73 கிளர்ச்சியாளர்கள் மலேசியாவில் இருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு 11.2.1802 அன்று நாடு கடத்தப்பட்டு, அங்கேயே இறந்தும்  போயினர். மருதிருவருடைய வீரத்தின் சுவடுகூட மிச்சமிருக்கக் கூடாது என்று கருதிய வெள்ளையர்கள் அவர்களுடைய குடிவழியையே  இல்லா தொழித்தனர்.

தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.

""இருவரில் மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலிலி வேட்டையில் முதலிலில் நின்று புலிலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.

தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப் பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

""தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு- கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை'' என்கிறார் வெல்ஷின்.

உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.

கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (ஈஹப்ஞ்ஹஸ்ரீன்ள்/ஏஹப்ஞ்ஹஸ்ரீன்ள்) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.

கோர்லே தனது நூலில்,

""பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர் களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, கால தாமதமின்றி நிறைவேற்றப்பட்டன. மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.''

""1801-ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப் பட்டு உடனே தூக்கிலிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார்'' என்று கோர்லே தெரிவிக்கிறார்.

இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள்- தூக்கிலிலிடப்பட்டனர்.

மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ""நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?'' மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிலிடம் முறையிட்டதைப் போலத்தான்!

சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்டமளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.தமிழ்மகன் “இராபர்ட் கால்டுவெல்”-

இன்று (07.5.2014) தமிழ்த்தாயின் தலைமகன் “கால்டுவெல்” அவர்களின் 200-வது பிறந்தநாள்.அவரை பற்றிய சிறப்புக்கட்டுரை:

’’இந்த நாட்டை ஆண்டுவந்த ஆங்கிலேயர்களின் மூலமாகத்தான் நம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளது. அந்த வகையில், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் நம்மைப்போல பலகோடி மக்கள்   இருந்தாலும் தமிழின் பெருமையை நிலைநாட்டிய பெருமை “இராபர்ட் கால்டுவெல்” என்ற ஆங்கிலேயர் ஒருவருக்குத்தான் சேரும்.

காலங்காலமாக தமிழறிந்த புலவர்கள் எல்லோரும், மன்னர்களையும், பணக்காரர்களையும் புகழ்ந்து பாடியும், கோவில், திருவிழாவில் புராணக்கதைகளை சொல்லியும் தங்களின் வயிற்று பிழைப்புக்கு மட்டுமே தமிழை பயன்படுத்தி வந்தனர்.

தமிழ் மொழிக்கு உள்ள வரலாற்று, பழமை, தொன்மை, தனித்து நிற்கும் சொல்வளம் போன்ற பல சிறப்புதன்மைகள் நமக்கெல்லாம் முழுமையாக தெரியவில்லை. தெரிந்த சிலர் சொன்னதை உலகம் ஏற்கவில்லை, அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையின் நம்மவர்களால் சொல்ல முடியவில்லை. தெரியாமலிருந்த அல்லது மறைக்கப்பட்ட தமிழ்மொழியின் பெருமைகளையெல்லாம் எல்லாம் உலகுக்கு எடுத்துக்காட்டியவர் “இராபர்ட் கால்டுவெல்”

1834-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் "கிளாடி' ஆற்றங்கரையிலுள்ள “பெல்பாஸ்ட்” என்ற சிற்றூரில் பிறந்தவர் “இராபர்ட் கால்டுவெல்” இவருக்கு தரமான கல்வியை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில், கால்டுவெல்லை பள்ளியில் சேர்க்கும் வயதில், அவரது பெற்றோர்கள் தங்களின் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் கூட்டிக்கொண்டு போய் "கிளாஸ்கோ' நகரில் குடியேறினர்.


பள்ளியில் சேர்ந்து படித்த “கால்டுவெல்” தனது 16-வயதுக்குள், ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங் களைக் கற்றுத் தேர்ந்தார். அதன்பின் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சிறந்த ஓவியக்கலைஞரானார். தம் இருபதாம் வயதில், கிறித்துவ சமையப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் (Propagation of the Gospel Mission) சேர்ந்தார்.

அச்சங்கத்தின் சார்பாகக் “கிளாஸ்கோ” பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பியாவில் உள்ள பல மொழிநூல்களையும் சமய நூல்களையும் கற்று வந்தபோது, இவருக்கு  கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் “டேனியல் ஸ்டான் போர்ட்” என்பவர் கிரேக்க மொழியின் பெருமையை கால்டுவெல் நன்றாக புரிந்து கொள்ளும்படியும், ஏன் கிரேக்க மொழி செம்மொழியாக திகழ்கிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார். பின்னாளில், தமிழ் மொழியும் செம்மொழிதான் என்பதை ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்த “கால்டுவெல்” அவர்களின் ஆய்வுக்கு பெரும்துனையாகவும், வழிகாட்டி யாகவும் இருந்தவர் அப் பேராசிரியராவார்.

லண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப்பணிக்கென 1838-ல் "அன்னைமேரி' என்னும் கப்பலின் மூலமாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட கால்டுவெல், கப்பலில் வரும்போதே சி.பி.பிரெளன், என்னும் ICS அதிகாரியுடன் நட்புகொண்டார். அவர் முன்பே இந்தியாவில்  பணியாற்றிய அனுபவமுள்ளவர் என்பதால் அவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். கப்பலில் வரும்போதே பிரெளன் மூலமாக தமிழ் தெலுங்கு மொழிகளைக் கொஞ்சம் கற்றுக்கொண்டார் கால்டுவெல்.

சென்னை வந்த அந்த பெருமகனார் தமிழ் மீது கொண்ட காதலால், சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கி தமிழ்மொழியை கற்றுள்ளார். பின்னர், சமையப்பணியை தொடர முடிவு செய்த கால்டுவெல் நெல்லை அருகிலுள்ள இடையன்குடிக்கு சென்று பணியாற்ற அங்கு கிளம்பினார்.

பல்வேறு வட்டார வழக்குகளை கொண்டுள்ள தமிழ்மொழியின் பேச்சு வழக்கை தெரிந்துகொள்ளவும், தமிழ்மொழியின் மூலத்தை ஆய்வு செய்யவும் விரும்பிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார்.

நடந்து செல்லும்போது, அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், பேச்சு, மொழி ஆளுமை, பிற மொழி கலப்பு   முதலானவற்றை அறியலாம் என நினைத்தவர். முதலில், சிதம்பரம் சென்றார், அங்கிருந்து மயிலாடுதுறை வழியாக தரங்கம்பாடிக்கு போய் அங்கே சில நாள் தங்கினார். “டேனிஷ்” கோட்டையில் நடைபெற்றுவந்த கிறித்துவ மிஷினரியினரின் பணிகளை பார்த்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்று, பெருவுடையார் கோவிலையும், மராட்டிய மன்னர் சரபோஜியால் தோற்றுவிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தையும் பார்வையிட்டார். அங்கிருந்த மக்களோடு சிலநாட்கள் தங்கியவர் தமிழில் முதல் நாவல் எழுதிய அறிஞரான மாயாவரம் வேதநாயம் பிள்ளை அவர்களையும் கண்டு உரையாடியுள்ளார்.

பின்னர், திருச்சிராப்பள்ளி வழியாக நீலகிரி மலைக்கு சென்றவர். அங்கு “ஸ்பென்சர்” எனும் கிறித்துவ மத பெரியாரை கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி, படுகர், தோடர் இனமக்களின் மொழியான பழங்கன்னடம் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர், கோவை, மதுரை வழியே நெல்லை மாவட்டம் இடையன்குடிக்கு சென்று அங்கு தங்கி சமையப் பணியாற்றினார். அன்றைய காலத்தில் இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கூரைவீடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். உயர்ந்து வளர்ந்த பனைமரங்களும், கள்ளிச்செடிகளும், சுள்ளிச்செடிகளும் நிறைந்த இந்தப்பகுதியில் தங்கிய கால்டுவெல் பெருமகனார் அங்கே நாகரிகமான குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். தேவாலயம், வீடுகள், தெருக்கள், சாலைச் சந்திப்புகள், கிணறுகள் என அந்தக் கிராமத்தை திட்டமிட்டு அவரே வடிவமைத்தார். கிணறுகளை தோண்டி தண்ணீர் எடுத்தார். தெருக்களிலும், நிலங்களிலும் மரங்களை நட்டு அழகுபடுத்தினார். அவர் தன் வாழ்வின் இறுதிவரை மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டினார்.

மன்னர்கள் ஆட்சியின் போது எழுதவும், படிக்கவும் உரிமையில்லாமல் கிடந்த அந்தப்பகுதி மக்களுக்குக் தாய்மொழியை கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மையின நாடார் இன மக்களைக் கல்வியறிவுப் பெற்றவராக மாற்றினார். 1847-ல் அங்கு கிறித்துவ தேவாலயப்பணியைத் தொடங்கி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் கோவிலை கட்டி முடித்தார்.

சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடிக்கு வந்து ஒருவாரம் அங்கே  தங்கினார் என தெரிகிறது. மேலும், ஆலயதிருப் பணிக்கு 500-ரூபாய் நன்கொடை வழங்கியதாகவும் தெரிகிறது.

இடையன்குடியில் சமையப்பணியை தொடர்ந்தபடியே தமிழ், தெலுங்கு, கண்டம், மலையாளம், துளு, கூர்க், துதம், கோதம், கோந்த், ஓரியன், பிராகி மற்றும் வடமொழியாகிய சமற்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்து. இந்த மொழிகளிலிருந்து வேறுபட்டு தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்புகளை ஆய்வு செய்தார்.

மற்ற மொழிகளில் இல்லாத பல சிறப்பு தமிழில் இருப்பதை உணர்ந்த கால்டுவெல் அவர்களின் கவனம் தமிழ் இலக்கியங்களின் பக்கம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களிலும் அவர் பணியாற்றிய காலத்தில், அந்த பகுதியின் வரலாறு பற்றியும் ஆய்வு செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், உள் நாட்டு வெளிநாட்டு நாணயங்கள் முதலானவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.

மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவில் கிடைத்த தகவல்களை கொண்டு "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely)'' என்னும் நூலை எழுதினார். இது 1881-ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. "தொடக்க காலம் முதல் கி.பி. 1881 வரையிலான திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறுகளை கொண்ட இந்நூலில், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவோ, நிகழ்வுகளை ஆவணப்பூர்வமாக பதிந்துவைக்கும் அவசியமோ தெரியவில்லை என்ற பொதுவான  குற்றச்சாட்டுடன் தொடங்கும் கால்டுவெல், ஒன்பது பகுதிகளாக நூலை எழுதியிருக்கிறார். முதல் இயலில் மாலிக்காபூர் படையெடுப்பு, காயல் துறைமுகத்தில் நடந்த முத்துக்குளிப்பு என ஒவ்வொரு இயலையும் வரலாற்றுப் பூர்வமாக உருவாக்கியிருக்கிறார். கட்டபொம்மன் தூக்கிலிடப்படும் நிகழ்வு, ஊமைத்துரை, மருது சகோதரர்களை ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள், முகமது யூசுப்கானிடமிருந்து மதுரையை ஆங்கிலேயர் கைப்பற்றிய வரலாறு போன்றவை தெளிவாக இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந் நூலில், பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும்,அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் குறிப்பிட்டுள்ள கால்டுவெல், பழந்தமிழரின் வாணிப நகரமாக இருந்த கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, துறைமுகத்தின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பை வெளிக்கொண்டுவந்தார்.

மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று தந்து ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என எழுதினார்.
இந்த காலகட்டங்களில், சிங்கள வரலாற்று இலக்கிய நூலான மகாவம்சம் நூலின் துணைகொண்டு ஈழ-தமிழக உறவுகளையும் கால்டுவெல் ஆய்வு செய்தார், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் எழுதிய பலகட்டுரைகளை ஆய்வு செய்தார். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனக்கண்டார்.

ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்து தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் தான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழகமெங்கும் தாம் மேற்கொண்ட பயணத்தின் வழியாக மொழிகளில் தனக்கு கிடைத்த தரவுகளை ஓன்று திரட்டிய “கால்டுவெல்” ஆய்வுக்கட்டுரைகளை எழுதினர். பின்னர் அவற்றையெல்லாம் தொகுத்து 1856-ல், “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

அதில்,  மலையாளம், தெலுங்கு, கன்னடம்,துளு ஆகிய மொழிகளில் உள்ள சமற்கிருத மொழியின் கலப்பு குறித்த தனது ஆய்வில், இந்த மொழிக்கலப்பு உண்மையான தேவை குறித்து மேற்கொள்ளாது, காலக் கோளாறு விரும்பும் வெளிப்பாட்டுக் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டது” என்று கூறினார். மேலும், தெலுங்கு, கண்டம், மலையாளம் ஆகிய மொழிகள் தத்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாது என்ற அளவு சமற்கிருத சொற்களை அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளன. ஆதலின், சமற்கிருத கலவைகளை கைவிடுவது தெலுங்கு மொழிக்கு அரிதாம் என்பது உண்மை. கன்னடத்திற்கு அதனிலும் அரிதாம். மலையாளத்திற்கு அவை எல்லாவற்றை காட்டிலும் அரிதாம் என்றவர்.

ஆனால், திராவிட மொழிகளில் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் “தமிழ்” தண்ணிடையே இடம் பெற்றிருக்கும் சமற்கிருத சொற்களை அறவே ஒழித்துவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல், வளம் பெற்று வளர்வதும் இயலும், அவ்வாறு கைவிடுவது ஒன்றினாலேயே, தமிழ் மொழி முன்னைய நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக பெரு நிலையை பெற்றுவிடும் என்று கூறினார்.

“கால்டுவெல்” பெருமகனாரின் இந்த ஆய்வு நூல், தேவ பாஷையான சமற்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, மற்றதெல்லாம் நீஷ மொழிகள் என்று எளனம் செய்துகொண்டிருந்த வடமொழி ஆசிரியர்கள் எல்லோரையும் அடித்து தள்ளியது.

உலக அரங்கில் இருந்த அனைத்து மொழி அறிஞர்களும் “கால்டுவெல்” அவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றனர். கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்பட்டது. கால்டுவெல் பெருமகனாரின் ஆய்வுப்பணிகளைக் கண்ட “கிளாஸ்கோ” பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அதன் பிறகுதான், தமிழ் மொழியும் செம்மொழி தான் என்று உலகமே ஒத்துக் கொண்டது.

கால்டுவெல் அவர்கள் பல மொழிகளை கற்றவர், இந்தியாவுக்கு வந்தபின்னர் 15,மொழிகளைக் கற்றுக்கொண்டார். தமிழகம் முழுவதும் சுற்றிபயணம் செய்தவர். பல்வேறு இடங்களில் தமிழ் மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு போன்றவற்றையும், அவர்களின் வாழ்க்கை முறையை பற்றியும் நிரம்ப அறிந்தவர். கிறித்துவம் தவிர பல்வேறு சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி பல மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்.

இப்போதுள்ள நூல்களின் வரிசையில் திராவிடம் என்ற சொல் முதன்முதலில் கால்டுவெல் அவர்களால் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மண்ணில் காலம் காலமாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்(தமிழர்கள்) அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதை சரியான ஆய்வுகளின் படி உலகிற்கு காட்டியவர்.

தன்னுடைய குடும்ப வாழ்க்கையில், கால்டுவெல் தமது 29-வது வயதில், நாகர்கோவிலில் வாழ்ந்த “மால்ட்” என்பவரது மகளான எலிசா (வயது-21) என்ற ஆங்கிலேய பெண்ணை மணமுடித்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர். இடையன்குடியில் பெண்கள் கல்விகற்பதற்கும், மக்கள் சுகாதாரத்துடன் வாழவும், குடும்ப மேலாண்மையில் பெண்கள் முன்னேற்றம் காணவும் எலிசா பாடுபட்டார்..

தமிழகம் மட்டுமல்ல, கேரளம், கர்நாடகம், துளு, கூர்க் மொழியை பேசும் தென் கர்நாடகம், தெலுங்கு, ஒரிய, கோண்டு மொழியை பேசும் மக்கள் வாழும் வட ஆந்திரப்பகுதி என பல இடங்களுக்கும் சென்று தமிழ்மொழி ஆய்வு நடத்திய கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது. பெரும்பாலான இடங்களுக்கு நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் செல்லும் ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார்.

கால்டுவெல் தமிழகத்திற்கு வந்து தங்கிய பிறகு மூன்றுமுறை மட்டுமே தன்னுடைய தாய்நாட்டுக்கு சென்று வந்துள்ளார். தன்னுடைய வாழ்நாளை தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காவுமே ஒப்படைத்து பணியாற்றியுள்ளார்.  கி.பி. 1877-இல், திருநெல்வேலி மறை ஆயராக பொறுப்பேற்றுக் கொண்ட கால்டுவெல், 1891-சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்று கொடைக்கானல் சென்று தங்க முடிவு செய்தார்.

அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லாத நிலையில், அம்மைநாயக் கனூரில் இருந்து கடும் மலைப்பாதை வழியாக நடந்தே சென்றார். அங்கே தங்கியிருந்த போது கடும் குளிரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கால்டுவெல் அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். பின்னர், அவரது உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் அமைத்த கோயிலிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

கல்வி, சுகாதாரம், பொருளாதார வசதிகளில் நம்மைகாட்டிலும் பல மடங்கு உயர்ந்த நிலையிலிருந்த இங்கிலாந்தில் படித்து பட்டம் பெற்ற ஒருவர் அங்கிருந்த எந்த வசதியுமில்லாத தமிழகத்தின் கிராமங்களில் கால்நடையாக சென்று மதம், கடவுள், பேய், பிசாசு என்ற மூடநம்பிக்கைகளிலும் சாதிய ஏற்றத்தாழ்வுகளில் சிக்கிக்கிடந்த இந்த மண்ணில் வாழ்ந்துவந்த மக்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அதை உலகின் பார்வைக்கு கொண்டு சென்று தமிழ் மொழிதான் உலகின் முதல்மொழி என்று அடையாளம் காட்டியவர்.

இன்று (07.5.2014) தமிழ்த்தாயின் தலைமகன் “கால்டுவெல்” அவர்களின் 200-வது பிறந்தநாள்.
“செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
செய்யகுரிய செயகலா தார்”
என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கேற்ப கால்டுவெல் பெருமகனார் தமிழுக்கு பணியாற்றிய பல சான்றோர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தமிழர்கள் “கால்டுவெல்” என்ற அந்த பெருமகனை மறக்க மாட்டார்கள்.

ஆம், அவர் இடையன்குடியிலே இருந்து தமிழர்களோடு, தமிழர்கள் உள்ளவரை வாழ்வார்.


-சிவசுப்பிரமணியன்


கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலிலிருந்து சில பக்கங்கள்...

செந்தமிழ் என்றும் தனித்தமிழ் என்றும் சிறப்பிக்கப்  பெறுவதும், பெரும்பாலும் அம்மொழி இலக்கியங்கள் அனைத்தையும் எழுதப் பயன்படுவதுமாகிய பழந்தமிழ் அல்லது இயல் தமிழ், மிக மிகக் குறைந்த சமஸ்கிருதத் தொடர்பையே பெற்றுள்ளது. சமஸ்கிருதச்  சொற்களையும் எழுத்துக்களையும் மேற்கொள்வதை வெறுத்து ஒதுக்கிவிட்டு பழந்திராவிட தனிச்சிறப்பு வாய்ந்த மூலங்கள்,  சொல்லுருவங்கள், ஒலிலிமுறைகளை மட்டும் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் விழிப்புணர்ச்சி யையும் விடாமல்  மேற்கொண்டிருப்பதினாலேயே அச் செந்தமிழ் தன் மொழியின் உரைநடை, பேச்சு நடைகளோடு சிறப்பாக வேறுபடுகிறது. ஒரு தமிழ்ச்  செய்யுள் இலக்கியச் சுவை மலிலிந்து இலக்கியம் என்ற தகுதிக்குரியதாயுள்ளது என்பது பிறமொழி இலக்கியங் களில் உள்ளது போல்  அச்செய்யுள் ஆண்டிருக்கும் சமஸ்கிருத சொற்களின் எண்ணிக்கை அளவைப் பொறுத்திராமல் அச்சமஸ்கிருத ஆட்சியிலிலிருந்து எந்த அளவு விடுதலை பெற்றிருக்கிறது. அந்த அளவு சமஸ்கிருத சொல்லாட்சியை வெறுத்துள்ளது என்பதையே பொறுத்திருக்கிறது என்று மதிக்குமளவு சுற்று வல்ல தமிழ்ப் பெரியார்கள் உள்ளத்தில் அச்சமஸ்கிருத வெறுப்புணர்ச்சி ஆழப்பதித்துள்ளது.

நகரத் தொடர்பற்ற  நாட்டுப்புறங்களில் வாழும் கல்லா மக்கள் வழங்கும் கொச்சைத் தமிழ், சமஸ்கிருத ஆட்சியைக் கைவிடுவதில், செந்தமிழ் நடையோடு பெருமளவு ஒத்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டு மொழியின் இலக்கிய நடையிலும் உழவர் போலும் கல்லா மக்கள் வழங்கும் பேச்சு நடையிலுமே அம்மொழியின் தொன்மை நிலையைக் காணமுடியும். ஆராய்ந்து எழுதப்பட்ட தமிழ் உரைநடைகளிலும் பார்ப்பனர்கள்,  படித்துப் பட்டம் பெற்ற தமிழ் பெரியார்கள் இவர்களின் பேச்சிலுமே சமஸ்கிருதக் கலவை பெருமளவு இடம் பெற்றுள்ளது. சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கி இருக்கும் சொற்கள் பெரும்பாலும் சமய உண்மைகள், உடல் இயல்பு, உயிர் இயல்பு, மேலும் அறிவியல் பொருள்கள், ஆடல், பாடல், சிற்பம், ஓவியம் போலும் நுண்கலைகள் ஆகியவற்றின் பொருட்களை வெளியிடத் துணைபுரிவனவே ஆகும். பிற துறை இலக்கியங்களைக் காட்டிலும் சமஸ்கிருதச் சொற்களை மிக அதிகமாக, மேற்கொள்ளும் சமயக் கருத்துக்களை வெளியிடும் உரைநடைகளிலும் தமிழ்மொழி மேற்கொண்டிருக்கும் அளவினும் சமஸ்கிருத அளவு அத்துறை உரைநடைகளில் ஆங்கில மொழி, இலத்தீன் மொழிச் சொற்களை மேற்கொண்டிருக்கும், அதிகம் அன்று.

புராண சார்பான சமயங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றோடு, இவையும் பார்ப்பனர்களால் தமிழரிடையே புகுத்தப்பெற்றன. பார்ப்பனச்  சமயங்களின் அளவிறந்த செல்வாக்கின் பயனாய் இன்றைய தமிழ் உரைநடையில் ஆட்சியில் இருக்கும் சமயக் கருத்துகளை வெளியிடவல்ல சொற்களில் பெரும்பாலான, சமஸ்கிருத மூலச் சொற்களாகவே உள்ளன. அச்சமஸ்கிருதச் சொற் களுக்கு இணையான ஏன் அவற்றைக் காட்டிலும் சிறப்பாக, அக்கருத்துக்களை வெளியிட வல்ல தூய திராவிடச் சொற்களும் உள்ளன. என்றாலும், உரைநடை களில், அவற்றின் ஆட்சி கடும் தமிழ்நடை வாய்ந்து காது வெறுக்கும் கடின ஒலிலி உடையதாகக் கருதும் அளவு  அச்சொற்கள் மெல்லமெல்ல  வழக்கிறந்து போய்விட்டன. தமிழ் மொழியின் சமய இலக்கியங்களில் சமஸ்கிருதச் சொற்கள் ஆட்சி பெறுவதன் உண்மைக் காரணம் இது  ஒன்றே.

மற்ற திராவிட மொழிகளில்  கூறப்பெறும் பொருளியல்பு யாதேயாயினும் கூறும் முறை யாதே யாயினும், அவற்றில் இடம்பெறும்  சமஸ்கிருதச் சொற்கள் தமிழ் இடம் பெறுவதைக் காட்டிலும் அதிகமாம். அது மட்டுமன்று  அவற்றின் ஆட்சி இன்றியமையா  நிலைமையையும் அடைந்துவிட்டது. இந்நிலைமை அம்மொழிகளின் இலக்கியங்கள், சிறப்பாகப் பார்ப்பனர்களாளேயே இயற்றப்பட்டதன் விளைவாகும். தெலுங்கிலும் அதன் தலைசிறந்த இலக்கண ஆசிரியர்களும், புகழ்மிக்க புலவர்களும் பார்ப்பனர்களே. அவ்வுயர்  சாதிக்காரர்களால் ஆக்கப்படாத இலக்கியம் அம்மொழியில் ஒன்றேயொன்று உள்ளது. தெலுங்கரில் மிகப் பலராக விளங்கும் பழங்குடித் தெலுங்கர்கள், தம்மொழி இலக்கிய வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சிகளோடு தம்மொழிப் பண்பாட்டு வளர்ச்சியையும் பார்ப்பனர்களிடம் அறவே பறி கொடுத்துவிட்டனர் போலும்.


தமிழ் இலக்கிய ஆசிரிய வரிசையில் பார்ப்பனர்கள் எய்தியதெல்லாம் உரையாசிரியர் என்ற நிலைக்கு  மேற்பட்டதில்லை. திருவள்ளுவரால் (தாழ்ந்த வகுப்பினரான பறையர்) எழுதப்பட்ட திருக்குறளுக்கு பார்ப்பனரான பரிமேலழகர் வகுத்துள்ள  உரையே மிகவும் சிறந்ததென்றாகப் பாராட்டப்படுகிறது.

பேராசிரியர் வில்சன் அவர்கள் தென்னிந்திய மொழிகள், சமஸ்கிருத மொழிகளைப் பார்த்துப் பின்பற்றி வளர்க்கப் பெறுகின்றன. ஆனால்  ஒரு பால், தனியுரிமை அல்லது தனித்தன்மை வாய்ந்த இலக்கிய வளர்ச்சி,  பெறவும் விரும்புகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம்,  மலையாளம் ஆகிய இம்மொழிகளில் உள்ள தலையாய இலக்கியச் செல்வங்கள் அனைத்தும், ஒன்று வடமொழி மூல இலக்கியங்களின் மொழிபெயர்ப்பாகும் அல்லது, அவற்றின் பொழிப்புரைகளாகும். அவை, அம்மூல இலக்கியங்களின் சொற்றொடர் அமைப்பு முறைகளையும் அவ்வாறே கடன் வாங்கியுள்ளன என்று கூறியுள்ளார். தமிழைப் பொறுத்தவரையில் அவர் கூற்று முழுவதும் பொருந்துவதன்று. தமிழ் மொழியின் தலையாய இலக்கியங்களாம் என்று, எல்லோராலும் ஒரு சேர ஒப்புக் கொள்ளப்பட்ட திருக்குறளும், சிந்தாமணியும் அமைப்பிலும் ஆக்கிய முறையிலும், அறவே சமஸ்கிருதத் தொடர்பற்றனவாம். முழுக்க முழுக்க முதல் நூல் தன்மை வாய்ந்தனவாம். தமிழெழுத்தாளர், இராமாயண பாரதங்களை உள்ளது உள்ளவாறே மொழிபெயர்க்கவில்லை எனினும், வடமொழியாளர் போக்கைப் பின்பற்றியே இயற்றியுள்ளனர் என்பது உண்மையே. என்றாலும்,   அவர்கள் தங்கள் கம்பன் ஆக்கிய தமிழ் இராமாயணம், வால்மீகி இயற்றிய  மூல இராமாயணத்தைக் காட்டிலும் நனிமிகச் சிறந்ததாம் என்று பெருமை பாராட்டிக் கொள்வதிலும் தவறுதில்லை.

ஆதாரம்: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்- டாக்டர். ஆர்.கால்டுவெல், பக்கம் 31 - 34. வெளியிட்டோர்: ஹார்ஸன், 59, பால் மால், லண்டன்,  1856.

Thursday, March 27, 2014

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து.... செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு

""திராவிட நாகரிகம் மனிதனுக்கு மனிதன் பிறப்பினால் பேதமுண்டு என்பதை ஒப்புக் கொள்வதில்லை. திராவிடச் சிந்தனையின் தலைவர்களான திருவள்ளுவர், அவ்வை, கம்பர் போன்றோர் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்ததாகப் பறைசாற்றிக் கொள்ளவில்லை... பிறப்பினால் பேதமுண்டு என்பதைப் பரப்பியவர்களும், பல்வேறு கொடுமைகளுக்குக்  காரணமான வர்ணாஸ்ரம தர்மம் என்னும் முறைப்படி அதை விரிவுபடுத்தியவர்களும் அவர்கள்தான்!''.

""நாம் சேர, சோழ,* பாண்டிய மன்னர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஆங்கிலேயர் இங்கு அடியெடுத்து வைப்பதற்கு முன்வரை சக்கரவர்த்திக ளாக இருந்த அசோகனுக்கெதிராக, சந்திர குப்தனுக்குக் கெதிராக, அக்பருக்கெதிராக, அவுரங்க சீப்புக்கெதிராகத் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்!''. - இவை இருவர் பேசிய பேச்சுக்களின் பகுதிகளாகும்!.

இவ்விதம் பேசியவர் யார்? தந்தை பெரியாரா? அறிஞர் அண்ணாவா? கலைஞரா? பேராசிரியரா?

அப்பேச்சுக்களின் ""பாணி'' அவர்களுடையது போல் தானே இருக்கிறது? நிச்சயம் அவர்களில் இருவரது பேச்சுக்களாகத்தான் இருக்க வேண்டும்! - இவ்விதம் தோன்றுவதுதான் இயற்கை!

ஆனால், அப்பேச்சுக்களை அவர்கள் யாரும் பேசவில்லை. அவை பேசபட்டபோது கலைஞரும், பேராசிரியரும் பிறக்கவேயில்லை. அறிஞர் அண்ணா 7 அல்லது 8 வயதுச் சிறுவனாக இருந்தார். தந்தை பெரியாருக்கோ அப்போது 38 அல்லது 39 வயது இருக்கலாம் - தமிழகம் தெரிந்த புள்ளியாக அல்ல: ஈரோட்டுப் பிரமுகராக, தாலுக்கா போர்டு துணைத் தலைவராக, கௌவர மாஜிஸ்திரேட்டாக இருந்தார்! - அப்படியானால் அப்பேச்சுக்களுக்கு உரியவர்கள் யார்?

1917-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் முதல் மாநாட்டில் வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பேசியதுதான் முதலில் தரப்பட்டிருக்கிற பகுதியாகும்!. இரண்டாவது பகுதி, 1918-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மதுரை மாவட்ட பிராமணரல்லாதார் மாநாட்டிற்குத் தலைமை வகித்த (திருச்சி பாரிஸ்டர்) டி.சி. தங்கவேல் (பிள்ளை) பேசியதாகும். ஆம்: இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அன்று அமைப்பு ரீதியாகத் தூவப்பட்ட விதைதான் இன்று திராவிட இயக்கமும், அதன்  கொள்கைகளும் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேர்விட்டு, யாராலும் அழிக்க முடியாக விதத்தில் வளர்ந்திருக்கிறது!.

மண்ணைப் பக்குவப்படுத்தாமல் விதையைத் தூவி னால் என்ன பயன் விளையக் கூடும்? வித்தூன்றிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தாரைப் போலவே மண்ணைப் பக்குவப்படுத்தியவர்களும் முக்கியமானவர்களே. இந்தியாவின் வரலாற்றையும், கலாச்சாரப் பெருமையையும் கண்டறிய எவ்விதம் ஐரோப்பியர் உதவி னரோ, அது போலவே திராவிட கலாச்சார மேம்பாட்டை எடுத்துவைக்கவும் அவர்களே பெரிதும் உதவினர். குறிப்பாக கிறித்துவப் பாதிரியார்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்தபோது, அவரவர்கள் தாய்மொழியில் மதத்தைப் போதிக்க வேண்டும் - என்கிற குறிக்கோள் காரணமாகத் தமிழ் மொழியிலும், கலாச்சாரத்திலும் காட்டிய ஆர்வம் கலாச்சார மறுமலர்ச்சிக்கு ஏற்றதொரு ஆதார சூழ்நிலையை உருவாக்கிற்று.

தமிழில் அதிகம் ஈடுபாடு காட்டிய முதல் கிறித்துவப் பாதிரியார் இராபர்ட்-டி-நோபிலி (Robert Di Nobli, 1577-1656) ஆவார். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரைப் பகுதியில் வாழ்ந்த இவர், கிறித்துவ மதப் பிரச்சாரத்துக்காகத் தமிழில் உரைநடை நூல்களை இயற்றினார். தமிழையும், வடமொழியையும் கற்ற முதல் ஐரோப்பியர் இவரே! அடுத்து குறிப்பிட்டுக் கூறவேண்டியவர், வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட; மதப்பணியோடு, தமிழ்ப் பணியும் ஆற்றிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி (Constantius Beschi, 1680-1743) ஆவார்.

1711-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் மதுரையை வந்தடைந்த இவர், பழனி சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழிலக்கண இலக்கியம் கற்றார். நோபிலி போல் அல்லாது, தான் இயற்றிய நூல்களில் வடமொழியை இவர் அதிகம் கலக்கவில்லை. அக்காலத்தில் எ-ஏ, கெ-கே, கொ-கோ-என்று எழுதும் வழக்கமில்லை. எ, ஓ - என்னும் உயிர் எழுத்துக்களையும், இவ்வுயில்ô எழுத்துக்கள் ஏறிய மெய்யெழுத்துக்களையும் எழுதி, அவற்றின் மேல் புள்ளி வைத்தால் குறிலாகவும், புள்ளி வைக்காவிட்டால் நெடிலாகவும் கொள்வது வழக்கமாக இருந்தது. இவர்தான் அதை மாற்றி, எ-ஏ, கெ-கே, கொ-கோ- என்று எழுதும் மரபைப் புகுத்தி, ""தண்டமிழ் மொழிக்கு அதுவரைக்கும் யாரும் செய்யாத பெருந்தொண்டு செய்து அழியாப் புகழ் பெற்றார்''.

அதுமட்டுமின்றி, தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முதல் நூலாக விளங்கும் ""சதுரகராதி'' இயற்றித் தமிழகராதியின் தந்தை என்ற புகழையும் பெற்றார். திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீனில் மொழிபெயர்த்து மேலைநாட்டுக்கு வழங்கினார். ஐந்திலக்கணங்களையும் கூறும் "தொன்னூல்', தமிழ்ப்பேச்சு மொழியைப் பற்றிய "கொடுந்தமிழ் இலக்கணம்' - ஆகியவை இவர் இயற்றிய இலக்கண நூல்கள். அன்று அவர் உருவாக்கிய அடிப்படைதான் பிற்காலத்தில் சான்றோர் பலர் தமிழ் மொழியிலும் கலாச்சாரத்திலும் தொடர்ந்து ஆய்வு நடத்திடப் பேருதவியாக இருந்தது. அது போலவே - அயர்லாந்தில் பிறந்த இராபர்ட் கால்டுவெல் (தர்க்ஷங்ழ்ற் ஈஹப்க்ஜ்ங்ப்ப். 1819லி1891) வேறு எந்த ஐரோப்பியரையும் விட திராவிட மறுமலர்ச்சிக்கு ஆதார சுருதியைத் தனது ஆய்வின் மூலம் உருவாக்கிக் கொடுத்தார்.

1838-இல் சென்னை வந்திறங்கி, தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் நடத்தி, தமிழ்மொழியில் மூழ்கி, நமது மொழியிலும், வரலாற்றிலும் நிபுணர் என்கிற  பெயரைப் பத்தாண்டுகளில் பெற்றார். அவர் 1856-இல் வெளியிட்ட "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) எனும் அவரது ஒப்பற்ற ஆய்வு நூல் மொழியியலுக்குத் தரப்பட்ட உயர்ந்த காணிக்கை மட்டுமல்ல; திராவிட மொழிகளுக்குப் புத்துயிரூட்டிய மாமருந்து மட்டுமல்லத் தூங்கிக் கிடந்த திராவிட மக்களுக்கு அளிக்கப்பட்ட கண் திறப்புச் சிகிச்சையுமாகும்! அது வெறும் மொழி இயல் ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல! தமிழ்-திராவிட இன வரலாறும் அதில் கூறப்பட்டிருந்தது!

திராவிட மொழிகளின் தொன்மை


  ""திராவிட மொழிகளின் தொன்மை, ஆரியர் வருகைக்குப் (அதாவது கி.மு. 1600-க்கு) பல நூற்றாண்டுகட்கு முன்னென்று தெளியலாம்'' - என்று அவர் தனது ஆராய்ச்சி முடிவினைக் கூறினார்.

- இதற்கென பல மேற்கோள்களைக் காட்டியிருக்கிறார். உதாரணமாக, கரூர் என்ற சேரன் தலைநகர் அப்படியே கரூர் என்று கிரேக்க வழக்கிலும் காண்பதால் இதிலுள்ள தமிழ் ஒலிகள் கடந்த மூவாயிரம் ஆண்டுகளிலும் இன்று ஒலிக்கப்படுவதைப் போன்றே ஒலிக்கப்பட்டன - என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார்.

தமிழின் தனித்தியங்கும் ஆற்றல்


  திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்துதான்            பிறந்தன என்கிற சமஸ்கிருதம் பண்டிதர்களின் கொள்கை யையும், அதை அப்படியே ஏற்றுக்கொண்ட ஏ.எச். வில்சன் போன்ற மேலை நாட்டு அறிஞர் பெருமக்களின் கொள்கையையும் ""குருட்டுக் கொள்கையே என்பதில் ஐயமில்லை'' - என்று கூறினார். இத்தகைய "குருட்டுக் கொள்கை' தோன்றிடக் காரணம் என்ன?

""தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொன்றும் பார்ப்பனர் களிடமிருந்து பெறப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமென்று வடமொழியில் பண்டிதர்கள் இயல்பாகவே நம்பி வந்தார்கள். அதனையொட்டியே அவர்கள், திராவிட மொழிகள், வடஇந்திய மொழி மரபுகளிலிருந்து எத்துணையோ மாறுபட்டிருப்பினும், வடமொழியினத்திலிருந்து பெறப்பட்டவைகளே என்று சாதித்து வந்தனர். இதனைப் பண்டைய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் எளிதில் நம்பி வந்தனர். அவர்கள் ஆராய்ந்த திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் ஓரளவிற்கு வடமொழிச் சொற்கள் தத்பவமாகவும், தற்சமமாகவும் கலந்திருக்கக் கண்டனர். ஆனால் அம்மொழிகளில் வடமொழிக் கலப்பில்லாத சொற்களும், மரபு மொழிகளும் பல இருந்தன என்பதையும், அவையே அம்மொழியில் சிறப்பியல்புகள் என்பதையும், அவற்றிலேதான் அவ்வம்மொழி களின் தனிப்பட்ட உயிர்நிலை அமைந்து கிடந்தது என்பதையும் அவர்கள் கண்டறிந்து கொள்ளவில்லை''.

- இவ்வாறு தன் ஆய்வினை மேற்கொண்ட கால்டுவெல் தமிழ் சமஸ்கிருத மொழியின் தயவின்றியே தனித்தியங்கும் தன்மை பெற்றது என்பதையும் துணிவுடன் எடுத்துக்காட்டினார்.

செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு

பண்டைய இலக்கியங்கள் இயற்றப்பட்ட தூய தமிழ் மொழியாம் செந்தமிழ் இன்றைய பேச்சுத் தமிழோடும், உரைநடைத் தமிழோடும் மாறுபட்டுக் காணப்படக் காரணமென்ன?

இதோ, கால்டுவெல் காரணம் கூறுகிறார்-

""எதனால் அவ்வாவெனிலோ, கண்ணும் கருத்துமாய் இருந்து வடசொற்களையும், வடமொழியெழுத்துக்களையும் விலக்கி, தூய தமிழ்ச் சொற்கள், மரபு மொழிகள்,   அமைப்புகள் ஆகியவற்றையே கையாண்டு வந்துள்ளமையினாலேதான் தமிழ் மக்களிடையே இச்செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு எவ்வளவுக்குப் பரவியிருந்ததென்பது, எழுதப்பட்ட ஒரு தமிழ் நூலில் எவ்வளவுக்கெவ்வளவு வட சொற்கள் அருகிக் காணப்படுகின்றனவோ  அவ்வளவுக்கு அவ்வளவு அது சிறந்ததொரு நூலென்றும், எவ்வளவுக்கெவ்வளவு வடசொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அது தாழ்ந்ததொரு நூலலென்றும் கருதி மதிப்பிடும் பழக்கம் பண்டுதொட்டுப் பயின்று வருகின்றமையினாலேயே இனிது தெளியப்படும். பிறமொழி நூல்கள் சிலவற்றில் எவ்வளவுக்கெவ்வளவு வடமொழிச் சொற்கள் பயின்று வருகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அந்நூல்கள் அவ்வம்மொழியினராற் சிறப்புடன் போற்றப்படும். தமிழிலோ, எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் நூல்கள் வடமொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்குகின்றனவோ  அவ்வளவுக்கவ்வளவு சிறப்புடன் போற்றப்படும்''.

இன்றும் கிராமப்புறங்களில் வாழ்வோரும், நகர்ப்புறத்தில் வாழும் பாமர மக்களும் வடமொழிச் சொற்களைக் கையாளாமல் ஒதுக்குவதையும்: அப்படியே அவசியம் கருதிக் கையாள நேரிட்டாலும் "ஜிலேபி' என்பதை "சிலேப்பி' என்றும், "ஸ்டேஷன்' என்பதை "டேசன்' என்றும் உச்சரிப்பதையும் காணலாம். இயல்பு காரணமாக தமிழ் மக்களுக்கு வடமொழி உச்சரிப்பு வாயில் நுழையாமலிருப்பதை வைத்துக் கால்டுவெல் மேற்கொண்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

""...சிற்றூர்களிலும் நாட்டுப்புறங்களிலும் வாழ்ந்து வரும் தாழ்ந்த மக்களிடையே வடமொழிச் சொற்களைப் பேச்சுவழக்கிலும் கையாளாமல் ஒதுக்கும் தூய பழக்கம் காணப்படுகிறது. ஒரு மொழியின் தொன்மைச் சிறப்பு நிலை அம்மொழியிலும், செய்யுள்களிலும், தாழ்ந்த குடிமக்களின் பேச்சுக்களிலுமிருந்ததே ஆராய்ந்து காணப்படும் என்பது ஒரு பொது உண்மையாகும். பிற்காலத்தில் மிகவும் வலிந்து முயன்று எழுதப்பட்ட தமிழ் உரைநடை நூல்களிலும், பார்ப்பனர்கள் பேசும் தமிழிலும், மிகவும் கற்றவர்களாகக் கருதப்படும் தமிழர்களின் பேச்சிலுமே வடமொழி மிகைப்படப் பரவி வழங்குகின்றது. அதுவும், சமய உண்மை, அறிவியல், தத்துவம், ஏனைய கலைகளிலுள்ள மரபுச் சொற்கள் ஆகியவற்றை விளக்குமிடங்களில் மட்டுமே இவ்வாறு வடசொற்கள் பெரும்பான்மையும் கையாளப்படுகின்றன. ஆனால், இவ்வாறு காணப்படும் வடசொற்களின் தொகை, ஆங்கில நூல்களில் கையாளப்பட்டுக் காணப்படும் இலத்தீன் மொழிச் சொற்களின் தொகையைவிட மிகுதியானதொன்றன்று''

தமிழ் தவிர்த்த ஏனைய திராவிட மொழிகளில் வடமொழிக் கலப்பு மிகுந்து காணப்படுகிறதென்றால், " "அவை புதுமை கருதி எடுத்தாளப்பட்டனவல்ல. கிட்டத்தட்ட இன்றியமையாதனவாகவே கருதிக் கையாளப்பட்டன'' - என்று கூறும் கால்டுவெல், ""இந்த நிலைமை வந்ததற்குக் காரணம் அம்மொழிகளின் இலக்கிய வளர்ச்சி முதன்மையாகப் பார்ப்பனர்கள் கையிலேயே ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளமையேயாம்'' - என்றும் கூறியிருக்கிறார்.
""தமிழ் இலக்கிய ஆசிரிய வரிசையில் பார்ப்பனர்கள் எய்தியதெல்லாம் உரையாசிரியர் என்ற நிலைக்கு மேற்பட்டதில்லை. தாழ்ந்த வகுப்பினரான திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுக்கு பார்ப்பனரான  பரிமேலழகர் என்பார் வகுத்துள்ள உரையே மிகவுஞ் சிறந்ததொன்றாகப் பாராட்டப்படுகிறது''. - இவ்வாறு கால்டுவெல் கூறியுள்ளார்.

அவர் ஆரியருக்கு முற்பட்ட திராவிட நாகரிக மேன்மை குறித்தும் விளக்கியுள்ளார். "திராவிட மதத்'தின் தனித்தன்மை குறித்தும் அவர் தவறவில்லை.

""திராவிடர் இந்துக்களானது போரில் தோல்வியடைந்ததாலன்று... நமக்குக் கிடைத்துள்ள மரபுரைகள் அனைத்தும் ஆரியரைக் குறிக்க இந்நாட்டில் எழுந்த பார்ப்பார் (அதாவது சமய மேற்பார்வையாளர்) ஐயர் (தலைவர்) என்ற பெயர்களும் அவர்களது வெற்றி, உடல்வலியால் ஏற்பட்டதன்று: அறிவாலும், ஆட்சித் திறனாலுமே ஏற்பட்டது என்தைக் காட்டும்''.

உயர்ந்தவை அனைத்தும் பிறந்தது அவர்களாலேதான் என்பதற்கு உண்டான கட்டுக்கதைகளையும் கால்டுவெல் வெளிப்படுத்தத் தவறவில்லை. "கலைகளும், இலக்கியமும் திராவிட மக்களுக்கு வகுத்தளித்த தமிழ்முனி' என்று கொண்டாடப்படும் அகஸ்தியர் யார்?

""(அகஸ்தியர் என்று ஒருவர் இருந்தாரென்பது உண்மையானால்) அவர் ஆரிய வந்தேறிகளின் தலைவர் என்று கூறுவதைவிட, அக்குடியேற்றக் கட்டுக்கதைக்குத் தலைவரே என்று கூறலாம்''. - இவ்வாறு கால்டுவெல் கூறினார் என்பதைவிட, அதை 1856-இல் கூறினார் என்பதுதான் முக்கியமானது.

அடுத்து தமிழ்க் கலாச்சார மேன்மையையும், பழமையையும் மேலைநாட்டு அறிஞர்களிடையே பரப்பியவர் ஜி.யு. போப் (G.U. Pope, 1820-1907) ஆவார். சைவ சிந்தாந்தப் பெருமை கூறும் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்தது அவரது அரிய படைப்புகளில் ஒன்றாகும்.         


ஆதார நூல்கள்: "திராவிட இயக்க வரலாறு' முரசொலி மாறன் (பக்கம் 169- 179)

"கால்டுவெல் ஒப்பிலக்கணம்', மொழி பெயர்த்தியற்றியவர்கள் காழி. சிவகண்ணுசாமிப்பிள்ளை, கா. அப்பாதுரையார் (பக்கம் (54- 142)

Saturday, January 25, 2014

இன்னும் விலகாத மர்மம்- நேதாஜி

 
இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான் அதிபர் டோஜோ.
இதையடுத்து 18.08.1945 அதிகாலையில், தன்னுடைய உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் சிங்கப்பூரை விட்டுப் பறக்கிறார் நேதாஜி. எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் (இப்போது தாய்வான்) மஞ்சூரியா என்ற இடத்தில் அந்த விமானம் தரையிறக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இதுவரை புரியாத மர்மம்!
வானொலியில் வந்த மரணச் செய்தி
“நேதாஜி பயணம் செய்த விமானம் மதியம் 12.45 மணிக்கு மஞ்சூரியாவை விட்டுப் புறப்படும்போது, எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானதில் நேதாஜி உள்ளிட்டவர்கள் இறந்துவிட்டார்கள். அவரது உதவியாளர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் காயங்களுடன் உயிர்தப்பினார்கள்” என்று 1945 ஆகஸ்ட் 22-ல் ஜப்பான் வானொலி சேதி சொன்னது. நேதாஜி அபிமானிகள் இந்தச் செய்தியை நம்பவில்லை. காரணம், அதற்கு முன்பும் பலமுறை அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டிருக்கின்றன.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும் நேதாஜிக்கும் நெருக்கம் உண்டு. நேதாஜி இறந்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, தேவர் அரசியல் கைதியாக ஆந்திர மாநிலம் அமராவதி சிறையில் இருந்தார். அங்கிருந்தபடியே, “விமான விபத்து ஏதும் நடக்கவில்லை. இது திட்டமிட்ட நாடகம்” என்று அறிக்கை கொடுத்தார். ஆனால், விடுதலையான பிறகு, இரண்டு ஆண்டுகள் நேதாஜியைப் பற்றி எதுவும் பேசவில்லை தேவர். 1949 ஜனவரி 23-ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நேதாஜி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய தேவர், “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது” என்று உறுதிபட அறிவித்தார். இந்த நிலையில், 1950-ல் தேவரும் தலைமறைவானார். அவர் எங்கே போனார் என்ற விவரம் யாருக்குமே தெரியாமல் இருந்த நிலையில், ஓராண்டு கழித்து, மீசையை மழித்துக்கொண்டு பாகவதர் கிராப்பில் வித்தியாசமான தோற்றத்துடன் மீண்டும் வெளியுலகுக்கு வருகிறார்.
சுஜ்ஜோ எல்லையில் நேதாஜி முகாம்
1951-ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில், “நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை நான் சந்தித்துவிட்டு வந்தேன்” என்று மீண்டும் அறிவித்தார் தேவர். நான்கு ஆண்டுகள் கழித்து, பர்மா சென்று திரும்பும் வழியில் கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேவர், “நம்முடைய நேதாஜி இறக்கவில்லை. இந்தியா, சீனா, பர்மா ஆகிய மூன்று நாட்டு எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் சுஜ்ஜோ என்ற ரயில் நிலையம் இருக்கிறது. அதற்கு அருகில் முகாம் அமைத்துத் தங்கியிருக்கிறார் நேதாஜி. அங்கே ‘ஆசிய சுதந்திர சேனா’அமைத்து, போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் அவர் இந்தியாவில் ராணுவ ரீதியிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். இவை அனைத்தும் பிரதமர் நேருவுக்கும் அவரது சகோதரியும் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதருமான விஜயலட்சுமி பண்டிட்டுக்கும் தெரியும். தங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் மௌனம் காக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு நல்லெண்ணம் இருக்குமானால், நேதாஜி மர்மம்குறித்து விசாரணை ஆணையம் அமைக்கட்டும்” என்று பேட்டி கொடுத்தார். இதை அடுத்துதான் 1956-ல், ஐ.என்.ஏ-யில் லெஃப்டினென்டாக இருந்த ஷாநவாஸ் கான் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார் நேரு.
மத்திய அரசு அமைத்த மூன்று ஆணையங்கள்
ஓராண்டுக்குள் விசாரணையை முடித்த ஷாநவாஸ் கான், நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாக 1957-ல் அறிக்கை சமர்ப்பித்தார். இதை இரண்டு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தது காங்கிரஸ் அரசு. “விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் மஞ்சூரியாவுக்கே போகாமல், அறைக்குள் உட்கார்ந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஏற்க முடியாது” என ஃபார்வர்டு பிளாக் மட்டுமல்லாமல், காங்கிரஸில் இருந்த நேதாஜி அபிமானிகளுமே கேலிசெய்தார்கள். அத்தோடு அடங்கிப்போனது அந்த அறிக்கை பிரளயம். இதன் பிறகு, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட கோஸ்வாமி ஆணையமும் நேதாஜி இறப்பை உறுதிசெய்தது. 1999-ல் பா.ஜ.க. ஆட்சியில் மீண்டும் எம்.கே. முகர்ஜி என்பவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார்கள்.
விமான விபத்தே நடக்கவில்லை - தாய்வான்
விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் தாய்வான் நாட்டு அரசிடம், 1945 பிப்ரவரியிலிருந்து டிசம்பர் மாதம் வரை நடந்த விமான விபத்துகள்பற்றிய விவரங்களைக் கேட்டது முகர்ஜி ஆணையம். அதற்கு, ‘அந்தக் காலகட்டத்தில் எந்த விமான விபத்தும் தங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை’ என அங்கிருந்து வந்த அறிக்கையால் மேலும் சர்ச்சையானது. ஆனால், ஆட்சி மாற்றத்தால் நாடாளுமன்றம் வராமலேயே அறிக்கை படுத்துக்கொண்டது. இதற்கிடையில், 1964-ல் நேரு இறந்தபோது, அவருக்கு நேதாஜி அஞ்சலி செலுத்த வந்ததாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகும், நேதாஜி ரஷ்யாவில் இருக்கிறார், மத்தியப் பிரதேசம் சவுல்மாரி ஆசிரமத்தில் கும்னாமி பாபாவாக இருந்த துறவிதான் நேதாஜி என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டே இருந்தன.
அந்த 33 கோப்புகளில் இருப்பது என்ன?
இவை எதுவுமே நம்பும்படியாக இல்லை என்று சொல்லும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர்கள், ‘‘இந்திய சுதந்திர ஒப்பந்தத்தின்போது நேதாஜி சர்வதேசப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதன் பிறகு ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்ட நேதாஜி, அங்கேயே சிறைவைக்கப்பட்டார். அவர் மீதிருந்த நல்லெண்ணத்தால்கூட அவரை ஸ்டாலின் பிரிட்டிஷ் காரர்களிடம் ஒப்படைக்காமல் இருந்திருக்கலாம். இது சம்பந்தமான 33 கோப்புகளை ரஷ்ய அரசாங்கம் இந்திய அரசிடம் ஒப்படைத்திருக்கிறது. அதில் உள்ள விவரங்களை வெளியிட மறுக்கிறது மத்திய அரசு’’ என்கிறார்கள்.
போராடும் நேதாஜியின் உறவுகள்
நேதாஜி பற்றிய ரகசியக் கோப்புகளை வெளியிட உதவுமாறு நேதாஜியின் அண்ணன் சரத் சந்திர போஸின் பேரன் சந்திரகுமார் போஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் ஒரு ஆண்டுக்கு முன்பே கோரிக்கை மனு கொடுத்தார். ‘‘தாத்தா நேதாஜி போஸ் தொடர்பாக ரஷ்யா தங்களிடம் அளித்த 33 கோப்புகள் பத்திரமாக இருப்பதாக, தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட ஒரு நபருக்குப் பதில் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. அதை வெளியிட்டு, தாத்தாபற்றிய ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் மம்தாவின் உதவியை நாடினோம். ஆனாலும், இதுவரை எங்களது கோரிக்கை எடுபடவில்லை. இனியாவது, தாத்தா சம்பந்தமாக மத்திய அரசும் உளவு அமைப்புகளும் தங்கள் வசம் உள்ள ரகசிய விவரங்களை உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கம் நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்’’ என்கிறார் சந்திரகுமார் போஸ்.
நகைகள் யாருக்கு?
இதற்கிடையே, “ஐ.என்.ஏ-வுக்காகப் பொதுமக்கள் நன்கொடையாகக் கொடுத்த தங்க நகைகள் 40 பெட்டிகளில் இருந்தன. இவை அனைத்தும் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ‘நேதாஜி பவன்’ என்ற அமைப்பை உருவாக்கி, நேதாஜி விட்டுச்சென்ற பணியைத் தொடரப்போகிறோம். அதற்காக, இந்திய அரசு வைத்திருக்கும் அந்த நகைப்பெட்டிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கோரிக்கை எழுப்பிக் கொண்டிருக்கிறது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி.
இத்தனைக்கும் மத்தியில், இன்னமும் நேதாஜி உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள் அவரது அதிதீவிர அபிமானிகள்.
- குள.சண்முகசுந்தரம்

Wednesday, January 22, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 8 (இந்திய பிரதமர்கள் )

சஞ்சய் காந்தியை காங்கிரஸ் கட்சியின் எதிரிகள் மட்டுமல்ல, இந்திராவுக்கு அருகில் இருந்தவர்களே எரிச்சலோடுதான் பார்த்தார்கள். இவர் இருப்பதால், இவரது பேச்சைத்தான் இந்திரா அதிகமாகக் கேட்கிறார் என்ற விரக்தி கலந்த கோபம் ஒரு பக்கம் இருந் தாலும், இந்திராவைத் தவறாக வழிநடத்துவதன் மூலமாக காங்கிரஸ் கட்சியை விரைவில் சஞ்சய் காந்தி அதள பாதாளத்துக்குத் தள்ளிவிடுவார் என்றும் அவர்கள் பயந்தார்கள்.
 சஞ்சய் காந்தியின் போக்கு கட்சிக்கும் நல்லதல்ல; இந்திராவுக் கும் நல்லதல்ல என்று முதலில் சொன்னவர் பி.என்.ஹக்ஸர். இவர் வேறு யாருமல்ல, பிரதமர் இந்திராவின் செயலாளர். ஆனால் அவர் சொன்னது, சஞ்சய் மற்றும் இந்திராவின் விசுவாசிகளால் தவறான எண்ணத்துடன் பார்க்கப் பட்டது.
''சஞ்சய் காந்தி கார் கம்பெனி ஆரம்பிப்பது நல்லதல்ல. அவரால் நினைத்த அளவுக்குத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய முடியாது. கொடுத்த வாக்குறுதிப்படி 50 ஆயிரம் கார்கள் தர முடியாது. இந்த நிறுவனம் தொடங்குவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் பலாத்காரத்தின் அடிப்படையில் பறிக்கப்பட்டிருப்பதால் அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும்'' என்று இந்திராவிடமே நேரில் சொன்னார் பி.என்.ஹக்ஸர்.
''கார் நிறுவனத்துக்கு அருகில் பி.என்.ஹக்ஸருக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. சஞ்சய், தன்னுடைய நிலத்தையும் பறித்துவிடுவார் என்று ஹக்ஸர் பயப்படுகிறார். அதனால்தான் சஞ்சய்க்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்'' என்று இந்திராவிடம் போட்டுக்கொடுத்தார்கள். இதனை இந்திராவும் நம்பினார்.
அந்தக் காலகட்டத்தில் இந்திராவின் குடும்ப நண்பராக இருந்த முஹம்மது யூனுஸை சந்தித்த பி.என்.ஹக்ஸர், ''அந்தப் பிள்ளையை இந்தப் பைத்தியக்காரத்தனமான திட்டத்தை கைவிடச் சொல்லுங்கள்'' என்று சொன்னார். ஆனால், ஹக்ஸர் தன்னுடைய சுயநலனுக்காக இப்படிச் சொல்வதாக யூனுஸும் நினைத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் சஞ்சய் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை வைக்க ஆரம்பித்தன. இவர்கள் வெறும் அரசியல் தாக்குதல்களாக இல்லாமல், பல்வேறு ஆதாரங்களுடன் பேசினார்கள். அரசுக்கும், மத்திய தொழில் துறைக்கும், சஞ்சய் காந்திக்கும் மட்டுமே தெரிந்த ஆவணங்களை இவர்கள் வெளியிட்டார்கள். இது இந்திராவுக்கும் சஞ்சய்க்கும் சந்தேகம் கிளப்பியது.
பி.என்.ஹக்ஸர் தான் இந்த செய்திகளை வெளியில் விடுகிறார்... தன்னுடைய இடதுசாரி நண்பர்களுக்குத் தகவல்களைக் கொடுத்து பரப்புகிறார்... அவர்தான் தூண்டிவிடுகிறார்... என்று இந்திராவும் சஞ்சயும் நம்பினார்கள். இந்த நிலையில் பி.என்.ஹக்ஸர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். ஹக்ஸருக்கு இந்த நிலைமை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு செல்வாக்கான இடத்தில் இருந்தவர் அவர்.
சஞ்சய் காந்தியின் செல்வாக்கை காங்கிரஸ் பிரமுகர்களும் மற்றவர்களும் இதில் இருந்துதான் உணர்ந்து கொண்டனர். சஞ்சயை விமர்சித்தால் காங்கிரஸிலும் இருக்க முடியாது என்ற யதார்த்தம் வெளிப்பட்டது. சஞ்சய் காந்தியை காக்கா பிடித்தால்தான் காங்கிரஸில் காலம் தள்ள முடியும் என்ற நிலையே உருவானது.
அந்தக் காட்சிகளை முஹம்மது யூனுஸ் வர்ணிக்கிறார்...
''பல முதல்வர்கள் அடிக்கடி எனக்கு டெலிபோன் செய்து, 'யூனுஸ் சாகிப், சஞ்சய் பஞ்சாப், ஹரியானாவுக்கு மட்டும் போகிறாரே... நாங்கள் இருப்பது ஞாபகம் இல்லையா? எங்கள் மாநிலத்துக்கு அவரை அனுப்பி வையுங்கள்’ என்று ஒப்பாரி வைத்தார்கள். ஆந்திராவில் இருந்து வெங்காலராவ், தமிழக ஆளுநர், மகாராஷ்டிராவில் இருந்து எஸ்.பி.சவான் இப்படி எல்லோரும் சஞ்சயை வரவேற்றனர். எஸ்.பி.சவான் எல்லை மீறிப் புகழ்ந்தார். 'அவர் இளைஞர்கள் தலைவர் மட்டுமல்ல... தேசத்தின் தலைவரும்’ என்று பேசினார். அந்தக் காலத்தில் அதைப் புகழ்ச்சி என்றுகூடக் கூற முடியாது. அது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தெரிந்தது. இது காங்கிரஸின் அன்றைய நிலைமையை வைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. காங்கிரஸார் தங்கள் லட்சியங்களை இழந்து போயினர். அநேகர் குறுக்கு வழியில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். மற்றவர் புகழில் மறைந்து கொள்வதைக் காட்டிலும் சுலபமானது எதுவும் இல்லை. தனயனைப் புகழ்ந்து தாயாரை உச்சி குளிர வைத்து தங்களை நிலைநிறுத்திக்கொள்வதே அவர்களின் நோக்கமாகும்'' என்று எழுதி இருக்கிறார். இந்திரா குடும்பத்தின் முக்கியமான தலையாட்டி பொம்மைகளில் ஒருவரான முஹம்மது யூனுஸே இப்படி எழுதி இருக்கிறார் என்றால், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கவனியுங்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் பி.என்.ஹக்ஸர் மட்டும்தான், ''பிரதமருடன் ஒரே வீட்டில் வசிக்கும் வரை, எந்தவிதமான வர்த்தகரீதியான செயல்பாடுகளிலும் சஞ்சய் காந்தி ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று துணிச்சலாகச் சொன்னார். இதனாலேயே ஓரங்கட்டப்பட்டார்.
இதேபோன்ற எண்ணம் இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி புபுல் ஜெயகருக்கும் இருந்தது. சஞ்சய் பற்றி வெளிப்படையாகச் சொன்னால் இந்திராவுக்குப் பிடிக்காது என்று புபுல் ஜெயகருக்குத் தெரியும். 'சஞ்சய் இதே மாதிரியான தொழில் எல்லாம் செய்ய வேண்டுமா? அரசியல் எதிரிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்வார்களே?’ என்று வருத்தப்பட்டு கேட்பதுபோல இந்திராவுக்குச் சொல்லிப் பார்த்தார். அதற்கு இந்திரா சொன்ன பதில், புபுல் ஜெயகரை பதில் யோசிக்கவிடாமலே தடுப்பது மாதிரி இருந்தது.
''பிரதமரின் மகன் என்பதற்காக சஞ்சய்க்கு ஆர்வமான தொழிலைச் செய்து சாதனை படைப்பதற்கு தடை போட முடியாது'' என்று சொன்ன இந்திரா,
''அது ஒரு கார் கம்பெனியைப் போலவே இல்லை என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஒருநாள் நான், கான்ஸன்டைன் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரைச் சந்தித்தேன். அவருக்கு விமானம் செய்வதில் அதீத ஆர்வம் இருந்தது. இரண்டே இரண்டு அறைகள் கொண்டது அவரது கம்பெனி. அதில் அவர் ஒரு சிறிய விமானத்தை உருவாக்கி இருந்தார். அதில் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றி வருவார். ஒரு பாதிரியாரால் ஒரு விமானத்தை உருவாக்க முடியும்போது, சஞ்சயால் ஒரு காரைத் தயாரிக்க முடியாதா?'' என்று கேட்டாராம்.
ஒரு அறைக்குள் பறப்பதை விமானம் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், சஞ்சய் தயாரித்ததையும் கார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திரா இப்படிச் சொன்னார் என்பதை அவர் இறந்ததற்குப் பல ஆண்டுகள் கழித்துத்தான் புபுல் ஜெயகருக்கே வெளியில் சொல்லத் தைரியம் வந்தது.
அந்தளவுக்கு யாராலும் இந்திராவால்கூட தட்டிக் கேட்க முடியாதவராக சஞ்சய் வலம் வந்தார். ஒரு உதாரணம் சொன்னால் புரியும்!
பாரத ஸ்டேட் வங்கியின் நாடாளுமன்ற வீதி கிளையின் தலைமைக் கணக்காளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு ஒரு போன் வந்தது. ''நான் பிரதமரின் செயலாளர் ஹக்ஸர் பேசுகிறேன். பிரதமருக்கு அவசரமாக 60 லட்சம் பணம் தேவைப்படுகிறது'' என்று அந்தக் குரல் சொன்னது. அந்தக் குரல், போனை இன்னொருவரிடம் கொடுத்தது. அடுத்துப் பேசுபவர் பெண். ''பணத்தை நீங்கள் எடுத்து வந்து கொடுங்கள்'' என்றது. இது பிரதமர் இந்திராவின் குரல்தான் என்று அந்தக் கணக்காளர் பின்னர் நடந்த விசாரணையில் சொன்னார்.
60 லட்சம் ரூபாயை எடுத்தார் மல்ஹோத்ரா. காரில் வைத்தார். சொன்ன இடத்துக்குப் போனார். நின்ற நபரிடம் கொடுத்தார். பணத்தை வாங்கியவர் பெயர்தான் நகர்வாலா.
60 லட்சம் ரூபாய் என்பது இன்றைய ஊழல்களோடு ஒப்பிடும்போது குறைவாகத் தெரியலாம். 1971-ல் 60 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் எனப் பாருங்கள்!
60 லட்சம் ரூபாய் பணத்தை யாரிடமும் தான் கொடுக்கச் சொல்லவில்லை என்று ஹக்ஸர் கையை விரித்துவிட்டார், அப்படி யாருக்கும் நான் போன் செய்யவில்லை என்று சொல்லிவிட்டார். எதிர்கட்சிகள் இதனை நாடாளுமன்றத்தில் எழுப்பி இந்திராவை வளைத்தது. இந்திரா இதற்கு பதிலே பேசவில்லை. ''அந்த அதிகாரி சொல்வது நம்பும்படியாக இல்லை'' என்று சொல்லி, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நகர்வாலா கைது செய்யப்பட்டார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சில மாதங்களிலேயே நகர்வாலா சிறையில் இறந்தார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி டி.கே.காஷ்யப், ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.
நகர்வாலா சாதாரண ஆள் அல்ல. இந்தியப் புலனாய்வுத் துறையில் வேலை பார்த்தவர். ஒரு வங்கி அதிகாரியையும், புலனாய்வு அதிகாரியையும் யார் பயன்படுத்த முடியும் என்பது தெரியாதது அல்ல. இது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று தெரிந்ததும், நகர்வாலாவை உடனடியாக கைது செய்கிறார்கள். அவரிடம் இருந்து பணம் அப்படியே கைப்பற்றப்படுகிறது. மிகப்பெரிய கிரிமினலாக இருந்திருந்தால் நகர்வாலா, உடனடியாக எங்காவது தப்பி இருக்கக் கூடும். அதைச் செய்யாமல் தானே சிக்கிக்கொண்டு, பணத்தையும் திருப்பி ஒப்படைத்தார்.
ஆனால் கடைசி வரை, போனில் பேசியது யாருடைய குரல் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்திரா அமைத்த விசாரணையில் மட்டும் அல்ல... அவரது ஆட்சிக்குப் பிறகு அமைந்த ஜனதா அரசு அமைத்த விசாரணையிலும் இதனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 'விசாரணைக்குப் பிறகும் சந்தேகம் அதிகரிக்கவே செய்கிறது’ என்று நீதிபதி சொன்னார். ஆனால் உண்மைகள், விசாரணை கமிஷன்கள் வைத்து தேட வேண்டியதாக எப்போதும் இருக்காது.
60 லட்ச ரூபாய்  பணத்தை எடுத்துக் கொடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட மல்ஹோத்ராவுக்கு, தன்னுடைய கார் கம்பெனியில் சஞ்சய் காந்தி வேலை போட்டுக் கொடுத்திருந்ததன் மூலமாக உண்மை உணரத்தக்கது!
டுபாக்கூர் கம்பெனிகளை 'மன்னார் அண்ட் கம்பெனி’ என்று கிண்டல் செய்வார்கள். அம்மா இந்திராவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகன் சஞ்சய் அந்தக் காலத்தில் ஆரம்பித்த கார் கம்பெனிக்கும் இந்த மன்னார் அண்ட் கம்பெனிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடுவது என்பார்களே... அப்படித்தான் சஞ்சய் அந்தத் தொழிலை நடத்தினார். கார் உற்பத்தி செய்யப்போவதாக எண்ணிக்கையைக் காட்டி, ஒரு நிறுவனத்தின் பெயரில் அனுமதியைப் பெற்று, பல்வேறு முறைகளில் பணத்தைத் திரட்டிய முறைகேடு சஞ்சய் மூலமாகத் தொடங்கியது. போஃபர்ஸ் முதல் ஸ்பெக்ட்ரம் வரை அனைத்து முறைகேடுகளுக்கும் அரிச்சுவடி போட்டுக்கொடுத்தது சஞ்சய் காந்தியின் செயல்.
 ராஜீவ் காந்தியைப்போல அமைதியானவர் அல்ல சஞ்சய். இளம் வயதிலேயே துடுக்கும் மிடுக்கும் நிறைந்தவராக வளர்ந்தார். ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்றால் எப்படித் துள்ளும்! அதைவிட அதிகமாகவே துள்ளினார். பெரும் குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கும் டூன் பள்ளியில் படித்தாலும், அவருக்கு அந்தக் கல்வி மீது ஆர்வம் இல்லை. அவரது எண்ணம் எப்போதும் கார், கார், கார்.
காரை வெகுவேகமாக ஓட்டுவதும், எந்த காராக இருந்தாலும் பிரித்து மேய்வதும் அவரது ஆசையும் வாடிக்கையாகவும் இருந்தன.
எந்த கார் கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு பறப்பார். அது பரவாயில்லை. யாருடைய காராக இருந்தாலும் எடுத்துச் செல்ல முடியுமா? அதையும் சஞ்சய் செய்தார். அதுதான் சிக்கல். அவரைப்போலவே கார் ஆசை கொண்ட இளைஞர்கள் படை ஒன்றை உருவாக்கிக்கொண்டார். கார்களில் இரவு பகலாக டெல்லியைச் சுற்றுவதே இவர்களின் ஒரே பொழுதுபோக்கு. இந்த நிலையில் ராணுவ அதிகாரி ஒருவரின் கார் காணாமல் போனது. மறுநாள், டெல்லி பாலம் விமான நிலையம் அருகில் அது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மயங்கிய நிலையில் ஒரு இளைஞன் இருந்தார். அவர், சஞ்சய் காந்தியின் நெருக்கமான நண்பரான அடில் ஷர்யார். இந்த கார் திருட்டை அன்றைய 'கரன்ட்’ பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஆனால், எந்தப் பயனும் இல்லை.
இதன் மூலமாக மகனுக்கு, மிக மோசமான இளைஞர்களின் சகவாசம் இருக்கிறது என்று இந்திரா உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், கார்களின் மீது மகனுக்கு ஆர்வம் இருப்பதை மட்டும்(!) இந்திரா உணர்ந்துகொண்டார். இங்கிலாந்தில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப அறிவு பெற அனுப்பிவைக்கப்பட்டார் சஞ்சய். மூன்றாண்டு படிப்பை முழுமையாக முடிக்காமல், இரண்டாவது ஆண்டே இந்தியா திரும்பினார் சஞ்சய். இந்திராவே அவரைக் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு வயதாலும் அனுபவத்தாலும் வளர்ந்திருந்தார். கார் மோகம் அவருக்கு இன்னும் அதிகமாகி இருந்தது. தனது நண்பர்களோடு கார் மெக்கானிக் வேலைகளில் மும்முரம் ஆனார்.
இந்தக் காலம் மாதிரி அப்போதெல்லாம் விதவிதமான கார்கள் கிடையாது. அதுவும் சிறிய கார்களும் இல்லை. இந்தியாவில் சிறிய கார்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனை மத்திய அரசுக்கும் இந்த தொழிலில் இருந்த நிறுவனங்களுக்குமே இருந்தது. மிகமிகக் குறைந்த விலையில், அதாவது அன்றைய (1968) மதிப்பில் சுமார் 6,000 ரூபாய்க்கு கார் உற்பத்தி செய்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தது. அவர்கள் திட்டமிட்டதில், அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால் அதனைச் செயல்படுத்தும்போதுதான் அதிகாரம் உள்ளே நுழைந்தது.
சிறிய கார் உற்பத்தியில் இறங்க அனுமதி கேட்டு 14 விண்ணப்பங்கள் வந்தன. அதில் ஒன்று சஞ்சய் காந்தியின் விண்ணப்பம். ரெனால்ட், சிட்ரன், டொயோட்டா, மஸ்டா போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப் போட்டியில் இருந்தன. ஆனால் அவை, சஞ்சய் காந்தியைப்போல பிரதமரின் மகன் என்ற தகுதியைப் பெற்றதா என்ன?
சஞ்சய் காந்தி, இந்திய மக்களுக்கு புதிய கார் ஒன்றை தயாரித்துத் தரப்போகிறார் என்று அன்றைய மத்திய தொழில் துறை இணை அமைச்சர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். '6,000 ரூபாய் மதிப்பில் சிறிய கார் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அது லிட்டர் ஒன்றுக்கு 90 கி.மீ. ஓடும். அதனுடைய வேகம் மணிக்கு 85 கி.மீட்டர்’ என்றும் அவர் தெரிவித்தார். அதுதான் சஞ்சய் காந்தியின் கற்பனையில் உருவான 'மாருதி’ நிறுவனம். எல்லா லட்சியங்களுமே கனவுகளால் உருவாவதுதான். ஆனால், லட்சங்களைப் பெற்ற பிறகும் கனவிலேயே படம் காட்ட முடியுமா? காட்டும் திறமை சஞ்சய்க்கு இருந்தது.
50 ஆயிரம் கார்களைத் தயாரிப்பதற்கான அனுமதி, பிரதமர் இந்திரா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதற்கான கடிதத்தை சஞ்சய் காந்தியிடம் கொடுத்தவர், அன்றைய மத்திய தொழில் துறை அமைச்சர் தினேஷ் சிங்.
பிரதமர் மகன் தொடங்கும் கம்பெனி என்றால் அதிகார வர்க்கம், காலால் இட்ட வேலையை தலையால் செய்யும் அல்லவா? இங்கே வாருங்கள், அங்கே வாருங்கள்... என்று பலரும் அழைக்க, இறுதியில் அரியானா மாநிலத்தில் இந்த நிறுவனத்துக்கான இடம் தரப்பட்டது. கொடுத்தவர் பன்சிலால். டெல்லிக்கு சற்றே அருகில் உள்ள இடம் இது. ஆனால், அவை விவசாய நிலங்கள். அவை பலாத்காரமாகப் பறிக்கப்பட்டதாக முதல் புகார் எழுந்தது. விலை அதிகம் உள்ள இடத்தை குறைவான விலைக்கு வாங்குவதாக அடுத்தப் புகார் எழுந்தது. இவை எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எந்தத் தாமதமும் இல்லாமல் 1971-ல் நிறுவனம் தொடங்கப்பட்டது. கார் உற்பத்தி செய்வதற்கான அடிப்படை வேலைகள், உள்கட்டமைப்புகள் செய்யப்படுவதற்கு முன்பே... காரை விற்பனை செய்யும் டீலர்களை நியமித்தார் சஞ்சய். நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட 75 டீலர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் முன்பணம் வாங்கப்பட்டது. முதல் லாபம் இது. ஆனாலும் நிறுவனத்தைத் தொடங்க முடியவில்லை. இந்தப் பணம் போதாது என்று நினைத்தார் சஞ்சய். தன்னுடைய கவலையை காங்கிரஸ் பிரமுகர்களிடம் சொன்னார். அவர்களுக்கு தெரிந்த, வசதியான ரூட்டைக் காட்டினார்கள்... வங்கிகள் நமக்கு தாராளமாக பணம் கொடுக்குமே என்று.  இரண்டு வங்கிகளிடம் கடன் கேட்டார்கள். ஏதாவது ஒன்று தந்தால் போதும் என்று நினைத்தார்கள். சஞ்சய் காந்தியின் அதிர்ஷ்டம், இரண்டு வங்கிகளுமே கடன் கொடுத்தன. 'வங்கிகளிடம் போய் ஏன் நிற்க வேண்டும்? எங்களிடம் கேட்டால் தரமாட்டோமா?’ என்று பல காங்கிரஸ் பிரமுகர்கள் முன்வந்தார்கள். பிரதமர் மகனின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நமக்கு வேறு வசதிகள், லாபங்கள் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து பல தொழிலதிபர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் முதலீடு செய்தார்கள். சஞ்சய் கையில் கோடிகளில் பணம் புரளத் தொடங்கியது. ஆனால், அந்தப் பணத்தை வைத்து நிறுவனம் பெரியதாக அமைக்கப்படவில்லை. அன்றைய இந்திராவின் எதிரிகள், 'கார் மெக்கானிக்கல் ஷெட்டை, கார் கம்பெனி என்று சஞ்சய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்’ என்று கிண்டல் அடித்தனர். பின்னர் 1977-ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்திலும் இப்படித்தான் சொன்னார்கள்.
இந்த நிலையில், 1972 நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த ஆசிய வர்த்தக கண்காட்சியில் தனது கனவு காரின் மாடலை கொண்டுவந்து நிறுத்தினார் சஞ்சய். இதனை சோதனை செய்துபார்க்க அப்போது சிலர் முயன்றதாகவும், அதற்கு அனுமதி தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், விரைவில் கார் ஓடும் என்று சஞ்சய் நம்பிக்கையுடன் சொன்னார்.
சில மாதங்கள் கழிந்தன...
இந்திய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் கார் தரவேண்டும் என்ற முதல் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் இந்த அனுமதி. அதற்கே முதலில் வேட்டு வைத்தார் சஞ்சய்.
''6,000 ரூபாயில் கார் உற்பத்தி செய்ய முடியாது. புதிய காரின் விலை 11 ஆயிரத்து 300 ரூபாய்'' என்று சொன்னார். 6,000 ரூபாய்க்குத்தான் கார் தரவேண்டும் என்று மத்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு விலையை இரண்டு மடங்கு கூட்டியதைப்போல வேறு யாராவது செய்திருந்தால் அரசாங்கம் அனுமதிக்குமா? செய்தது சஞ்சய் என்பதால், யாராலும் தடைபோட முடியவில்லை.  
இந்த காரில் என்ன மாதிரியான இன்ஜின் பொருத்துவது என்ற குழப்பம் கடைசிவரை சஞ்சய்க்கு ஏற்பட்டது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று சொன்னார் அவரது நண்பர். சஞ்சய்யும் சரி என்று சொல்லிவிட்டார். வரவழைத்து பொருத்திவிட்டார்கள். ஆனால், இதுவும் அப்பட்டமான விதிமுறை மீறல்தான். அரசின் ஒப்பந்தப்படி, தயாராகும் காரில் பொருத்தப்படும் உதிரிப் பாகங்கள் அனைத்தும் இந்தியத் தயாரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
ஒப்பந்தத்தின் முதல் ஷரத்து, காரின் விலை குறைவாக இருக்க வேண்டும். அதனை மீறி இரண்டு மடங்கு விலை அதிகமாக ஆக்கப்பட்டது. இரண்டாவது ஷரத்து, இந்திய உதிரிப் பாகங்கள்தான் பொருத்த வேண்டும். அதற்கு மாறாக ஜெர்மன் பாகங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், பிரதமர் மகன் நிறுவனத்தில் யாராவது கேட்க முடியுமா?
சரி, விதிமுறைகள்தான் மீறப்பட்டன. காராவது தயாரிக்கப்பட்டதா என்றால், அதுவும் இல்லை!
இப்போது வரப்போகிறது, அப்போது ஓடப்போகிறது என்ற செய்திதான் பரப்பப்பட்டதே தவிர, காரையே காணவில்லை. ஆனால், புதிய துணை நிறுவனங்களைத் தொடங்கி, கம்பெனி வளர்ந்துகொண்டு வருவதாகக் காட்டிக்கொண்டார். ரோடு ரோலர்கள் தயாரிப்பில் குதித்து, அதற்கான டெண்டர்களை கைப்பற்றத் தொடங்கினார் சஞ்சய். துணை நிறுவனங்கள் தொடங்கியதும்தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதனைக் கேள்வியாய் போட்டு மடக்கியது. பிரதமர் இந்திரா, ''என்னுடைய மகன் என்பதற்காக, துடிப்பும் ஆர்வமும் உள்ள இளைஞரை ஊக்கப்படுத்தாமல் இருக்க முடியாது'' என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னாரே தவிர, விதிமீறல்களுக்கு விளக்கம் சொல்ல அவரால் முடியவில்லை.
ஆனால் சஞ்சய் காந்தியை, அளவுக்கு அதிகமாக இந்திரா ஊக்கப்படுத்தியதால் இந்தியா அடைந்த அவஸ்தைகள்தான் அதிகம்!

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 7 (இந்திய பிரதமர்கள் )

குடியரசுத் தலைவர்  தேர்தல் குஸ்தி!
காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளரை, காங்கிரஸ் கட்சியால் பிரதமர் ஆக்கப்பட்ட இந்திரா வீழ்த்திய விபரீதம் நடந்த ஆண்டு 1969. அந்த ஆண்டு மே மாதம் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் மரணம் அடைந்தார். புதிய தலைவர் யார் என்ற கேள்வி காங்கிரஸ் தலைவர்கள் முன் எழுந்தது. யாரையும் ஆலோசனை செய்யாமல் ஜெகஜீவன் ராம் பெயரை பிரதமர் இந்திரா முன்மொழிந்தார். இது காங்கிரஸ் பார்லிமென்ட் போர்டு உறுப்பினர்களுக்கு உடன்பாடானதாக இல்லை.
இந்தக் குழுவில் எட்டு தலைவர்கள் இருந்தார்கள். இவர்களில் காங்கிரஸ் தலைவரான எஸ்.நிஜலிங்கப்பா, காமராஜர், மொரார்ஜி தேசாய், ஒய்.பி.சவான், எஸ்.கே.பாட்டீல் ஆகிய ஐந்து பேரும் சஞ்சீவி ரெட்டிதான் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று சொன்னார்கள். ஜெகஜீவன் ராமை, பக்ருதீன் அலி அகமது மட்டுமே ஆதரித்தார். ''மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா நெருங்கி வருகிறது. அவர் அரிஜன முன்னேற்றத்தைப் பெரிதும் விரும்பினார். அதனால், ஜெகஜீவன் ராம் குடியரசுத் தலைவர் ஆவதே பொருத்தமானது'' என்று இந்திரா சொன்னார். என்றாலும், உண்மையான காரணம் காங்கிரஸ் தலைவர்களால் புகுத்தப்படும் குடியரசுத் தலைவரை ஏற்கக் கூடாது என்பதுதான்!
இதே காலகட்டத்தில் ஆட்சியில் எடுக்கப்பட வேண்டிய பொருளாதாரக் கூறுகள் தொடர்பாக பிரதமர் இந்திராவுக்கும், காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவுக்கும் கருத்து வேற்றுமை தலைதூக்கி இருந்தது. வங்கிகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்ற இந்திராவின் எண்ணத்தை இடதுசாரிச் சிந்தனை என்று இவர்கள் எதிர்த்தார்கள். ஆனால், இவர்களை மீறி 14 வங்கிகளை தேசியமயமாக்கினார் இந்திரா. இது அவரது செல்வாக்கை அதிகப்படுத்தவும் பயன்பட்டது. ''வங்கிகளை முதலில் சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் தேசியமயமாக்குவதுதான் சரியானது. அதற்கு முன் உடனடியாக
முடிவுசெய்தால் நான் பொறுப்பேற்க முடியாது'' என்று துணை பிரதமரும் நிதி அமைச்சருமான மொரார்ஜி தேசாய் சொன்னார். இதனை இந்திரா முற்றிலுமாக நிராகரித்தார். உடனே தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக மொரார்ஜி பதவியை விட்டு விலகினார்.
'பார்லிமென்டரி போர்டில் நீங்கள் விரும்பியதைச் செயல்படுத்த உங்களுக்கு உரிமை இருப்பதைப்போல, அரசாங்கத்தில் நான் விரும்பியதைச் செய்ய பிரதமர் என்ற முறையில் எனக்கு உரிமை இருக்கிறது அல்லவா?'' என்று பிரதமர் இந்திரா மடக்கினார். இதற்கு நிஜலிங்கப்பா போன்றவர்களால் பதிலளிக்க முடியவில்லை. பிரதமர் என்ற அடிப்படையில் இந்திரா எடுத்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. இதை அறிந்து மகிழ்ந்த இந்திரா, தன்னுடைய நன்றியின் அடையாளமாக... காங்கிரஸ் பார்லிமென்டரி போர்டால் அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான நீலம் சஞ்சீவி ரெட்டியை தான் ஆதரிக்கத் தயார் என்று சொன்னார். அதற்கான விண்ணப்பத்திலும் இந்திரா கையெழுத்துப் போட்டு அனுப்பினார். சமாதானக் கொடி பறப்பதாகத்தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இந்திராவின் செயல்பாடுகளில் ஏதோ சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். அவரும் அப்படித்தான் நடந்துகொண்டார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சீவி ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். ஜனசங்கம், சுதந்திரா கட்சி ஆதரவுடன் சி.டி.தேஷ்முக் நிற்கிறார். அப்போது உதவி குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியும் போட்டியில் இருந்தார். இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க., முஸ்லிம் லீக், அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஆதரித்தன.
மத்தியிலும் காங்கிரஸுக்கு பெரிய பெரும்பான்மை இல்லை, பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டன. எனவே, காங்கிரஸ் ஓட்டுக்கள் முழுக்கவே சிந்தாமல் சிதறாமல் விழுந்தால்தான் காங்கிரஸ் வேட்பாளரான  சஞ்சீவி ரெட்டி வெற்றிபெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். 'சஞ்சீவி ரெட்டிக்குத்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்'' என்று பிரதமர் இந்திராவுக்கு காங்கிரஸ் பார்லிமென்ட் போர்டு கோரிக்கை வைத்தது. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் அந்த உத்தரவுப்படிதான் நடந்துகொள்ள வேண்டும். மீறினால், அவர்கள் பதவியே பறிக்கப்படலாம். எனவேதான், கறாராக இந்த உத்தரவு வேண்டும் என்று பார்லிமென்ட் போர்டு நினைத்தது.
அதே நேரத்தில் இன்னொரு காரியத்தையும் இந்தத் தலைவர்கள் பார்த்தார்கள். அதுதான் இந்திராவை ஆத்திரம் கொள்ள வைத்தது.
காங்கிரஸ் தலைவரான நிஜலிங்கப்பா, சுதந்திரா கட்சி மற்றும் ஜனசங்கத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களது இரண்டாவது வாக்கை சஞ்சீவி ரெட்டிக்கு தருமாறு கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சந்தித்திருப்பது, தன்னுடைய பதவிக்கு வைக்கப்படும் வேட்டு என்று நினைத்து பதறிப்போனார் இந்திரா. தன்னை விலக்கிவிட்டு, சுதந்திரா மற்றும் ஜனசங்க கட்சிகளின் ஆதரவுடன் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூட முடியும் அல்லவா என்று இந்திரா யோசித்தார்.
''என்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு வகுப்புவாத மற்றும் பிற்போக்கு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள்'' என்று இந்திரா குற்றம் சாட்டினார். எனவே, அவர் தனது அஸ்திரத்தை எடுத்தார்.
''சஞ்சீவி ரெட்டிக்குத்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு போட முடியாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம்'' என்று இந்திரா அறிவித்து அகில இந்தியாவையும் பதறவைத்தார். ஒருவர் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என்றால், யாருக்கு வேண்டுமானாலும் தனது வாக்கைப் பயன்படுத்தலாம். காங்கிரஸ் உறுப்பினர்கள் காங்கிரஸ் வேட்பாளரான சஞ்சீவி ரெட்டிக்கும் வாக்களிக்கலாம். ஜனசங்கம் வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். அனைத்து எம்.பி-க்களையும் இப்படி அவிழ்த்துவிட்டால் எப்படி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற முடியும்?
இந்திராவின் சந்தேகத்தில் நியாயம் இல்லை என்று நிஜலிங்கப்பா சொல்லிப் பார்த்தார். அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என்றும், 1972 வரை பிரதமராக இந்திரா நீடிக்கலாம் என்றும் நிஜலிங்கப்பா வாக்குறுதி கொடுத்தார். ஆனாலும், இதனை இந்திரா நம்பவில்லை. நிஜலிங்கப்பாவின் கோரிக்கையை ஏற்று கொறடா உத்தரவு பிறப்பிக்கவும் அவர் சம்மதிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி உடையாமலேயே இரண்டாக பிரிந்து நிற்கத் தொடங்கியது. இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் 16.8.1969 அன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளரான சஞ்சீவி ரெட்டி தோற்றுப்போனார். இடதுசாரிகள், முஸ்லிம் லீக், அகாலிதளம், தி.மு.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளரான வி.வி.கிரி வெற்றிபெற்றார். அதாவது, இந்திரா அவரை வெற்றிபெற வைத்தார். வி.வி.கிரியின் வெற்றி இந்திராவின் வெற்றியாகவும், சஞ்சீவி ரெட்டியின் தோல்வி நிஜலிங்கப்பாவின் தோல்வியாகவும் வரலாற்றில் பதிவானது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு வாக்களிக்காதது மட்டுமல்ல, எதிராக நின்றவரை வெற்றிபெறவும் வைத்தது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று நிஜலிங்கப்பா போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்திரா உள்பட அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ''காங்கிரஸ் கட்சி உடைவதையோ, சிலர் வெளியேற்றப்படுவதையோ, நான் விரும்பவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலோடு தொடர்புபடுத்தி ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தால், கட்சியின் அழிவுக்கு வழிவகுத்துவிடும்'' என்று இந்திரா பயமுறுத்தத் தொடங்கினார். சிறு அசைவு ஏற்பட்டாலும் கட்சி உடைந்துவிடும் என்பதே நிலைமை.
இரண்டு தரப்பையுமே சமாதானம் செய்ய சிலர் முயற்சித்தார்கள். இதன் அடிப்படையில் 'ஒற்றுமைத் தீர்மானம்’ ஒன்றை நிறைவேற்றி இரண்டு தரப்பையும் அமைதிப்படுத்த விரும்பினார்கள். ஆனால், இந்திராவின் ஆதரவாளர்கள் நிஜலிங்கப்பாவுக்கு எதிரான அஸ்திரங்களை ஏவத் தொடங்கினார்கள். கட்சியின் மேல்மட்டத்தில் நிஜலிங்கப்பா போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு செல்வாக்கு இருந்தாலும், பிரதமர் என்ற அடிப்படையில் ஆட்சியில் இந்திராவின் செல்வாக்கு அபரிமிதமாக இருந்தது. அவரால் பதவியை பெற்றவர்கள், அனுபவித்து வருபவர்கள் சேர்ந்து, 'அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நிஜலிங்கப்பாவை நீக்கிவிட்டு, புதிய தலைவரைத் தேர்வுசெய்ய வேண்டும்’ என்று கையெழுத்து இயக்கம் நடத்த ஆரம்பித்தார்கள்.
இதைப் பார்த்து கோபமான நிஜலிங்கப்பா, காங்கிரஸ் காரிய கமிட்டியை அவரே கூட்டினார். இதற்கு இந்திரா வரவில்லை. அவர் தனது வீட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, காரியக் கமிட்டியை தான் கூட்டப்போவதற்கான தேதியை அறிவித்தார். இது விதிமுறைக்கு புறம்பானது என்று நிஜலிங்கப்பா சொல்ல... நீங்கள் செல்வது எதுவுமே விதிமுறைப்படியானது அல்ல என்று இந்திரா சொல்ல... நேரடி மோதல் எழுந்தது. இருவருமே நேரில் சந்தித்தால் பிரச்னை தீரும் என்று மைசூர் முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் நினைத்தார். அதன் அடிப்படையில் இந்திராவும் நிஜலிங்கப்பாவும் டெல்லியில் சந்தித்துப் பேசினார்கள். இதுவும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
இந்திராவைக் கட்சியை விட்டு நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். 1969 நவம்பர் 12-ம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்தது. மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் வந்திருந்தார்கள். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய இந்திராவை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவது என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. புதிய பிரதமரை தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டது. இதனை இந்திரா ஆதரவாளர்கள் ஏற்கவில்லை.
மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களில் 220 பேர் இந்திராவை ஆதரித்தார்கள். சிண்டிகேட் காங்கிரஸ் தலைவர்களுக்கு 68 உறுப்பினர் ஆதரவே இருந்தது. எனவே, இந்திராவின் பிரதமர் பதவிக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மொத்த உறுப்பினர்கள் 705 பேர் இதில் 446 உறுப்பினர்கள் இந்திராவை ஆதரித்தார்கள். இவர்கள் சேர்ந்து நிஜலிங்கப்பாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜெகஜீவன் ராமை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். (இவர்தான் இன்று மக்களவை சபாநாயகராக இருக்கும் மீரா குமாரின் அப்பா).
நிஜலிங்கப்பா தலைமையிலானது காங்கிரஸ் (ஓ) என்றும் இந்திரா தலைமையிலானது காங்கிரஸ் (ஆர்) என்றும் அழைக்கப்பட்டது. முன்னதை ஸ்தாபன காங்கிரஸ் என்றும், பின்னது இந்திரா காங்கிரஸ் என்றும் அழைத்தார்கள். பெருந்தலைகள் வேறு கட்சியாக ஆகிப்போனது இந்திராவுக்கு வசதியாகப் போனது. தனது சர்வ வல்லமையை காங்கிரஸுக்குள் பயன்படுத்தத் தொடங்கினார். இனி அவரைக் கேள்வி கேட்க யாரும் இல்லை கட்சிக்குள். இடதுசாரிகள் நிறுத்திய வி.வி.கிரியை ஆதரித்து வாக்களித்ததால், இந்திரா ஆட்சியைக் காப்பாற்ற இடதுசாரிகளும் ஆதரவாக இருந்தார்கள்.
கட்சியும் ஆட்சியும் அவரது குடும்பச் சொத்தாக மாறத் தொடங்கியதன் அடையாளமாக சஞ்சய் காந்தி வந்தார்

கூட்டணி ஃபார்முலா உருவானது!  
நேருவை அறிந்தவர்கள், நேரு வயதை எட்டியவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுடன் பழகியவர்கள் என ஒரு பெருங்கூட்டம் கட்சியைவிட்டு விலகிப்போனதை வருத்தமாகப் பார்க்கவில்லை இந்திரா. தனக்கு வசதியாகிப் போனதாகவே உணர்ந்தார். அதிகாரக் குவிமையமாக தானும் காங்கிரஸ் தலைமையும் மாறுவது ஒன்றே லட்சியம் என்பதுபோலச் செயல்பட்டார். இந்த நோக்கத்துடன் இந்தியாவையே ஒற்றை ஆட்சி நாடாக ஆக்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்.
இந்தியா பரந்து விரிந்துபட்ட ஒரு தேசம். இதில் பல மொழிகளைப் பேசும் தேசிய இனங்கள் இருக்கின்றன. வேறு வேறு கடவுள்களை வணங்கும் மதங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்தப் பரப்பில் வர்த்தகம் செய்த கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தொழில்பரப்பை மொத்தமாக பிரிட்டிஷாருக்குத் தாரை வார்த்தபோது பல்வேறு சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள், பாளையப்பட்டுகள் அனைத்தையும் சேர்த்து அளித்தனர். இதில் பலருடனும் சண்டையிட்டும் சமாதானமாகவும் மொத்த இடத்தையும் பிரிட்டிஷ் ஆட்சி வளைத்து, அதற்கு ஒன்றுபட்ட ஒரு வரைபடத்தை உருவாக்கியது. ஒற்றை ஆட்சிகொண்ட நிர்வாக முறை அமலானது.
ஒரு நாடு முழுவதும் ஒரே ஆட்சியால் ஆளப்பட்டால், அந்த முறைக்கு ஒற்றை ஆட்சி முறை என்று பெயர். ஒரு அரசாங்கத்தின் அனைத்து விதமான அதிகாரங்களும் ஒரு குறிப்பிட்ட மையத்தில், அதாவது மத்திய அரசாங்கத்திடம் இருந்து செயல்படுத்தப்படும் ஒற்றை ஆட்சியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செயல்படுத்தினார்கள்.

பல்வேறு மொழி, இன, மத, சாதி, பண்பாடு கொண்ட நாட்டை ஒற்றை ஆட்சி முறை எப்படி பிரதிபலிக்க முடியும்? எனவேதான், 'கூட்டாச்சி தத்துவம் மலர வேண்டும்’ என்று நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்கள் குரல் கொடுத்தனர். கூட்டாட்சி என்பது பல்வேறு மாநிலங்கள் இருக்கும், அந்த மாநிலங்களை இணைக்கும் மத்தியக் கூட்டமைப்பு அரசு ஒன்று இருக்கும். ஒரே நாட்டுக்குள் ஒரு மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் இருக்கும். இந்தக் கூட்டாட்சி முறையைத்தான் காங்கிரஸ் கட்சியும் சுதந்திரப் போராட்ட காலத்தில் வலியுறுத்தியது.
'எதிர்கால இந்திய அரசமைப்பு, கூட்டாட்சி அமைப்பாகத்தான் இருக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் கூறியது. ஆனால், சுதந்திரம் அடையும் காலகட்டம் நெருங்கிவரும் சூழ்நிலையில், 'அநேகமாக விடுதலை பெற்ற இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட இந்தியாவாகத்தான் இருக்கும். ஆனால், மிக அதிகமான ஒற்றை ஆட்சி முறைகளும் கட்டுப்பாடுகளும் ஏதோ ஒரு வகையில் அந்தக் கூட்டாட்சி அமைப்பில் இடம்பெற வேண்டும்’ என்று நேரு சொல்ல ஆரம்பித்தார். மாநிலத்தில் அரசுகள் இருந்தாலும் மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் அமைய வேண்டும் என்று நேரு நினைத்தார். காங்கிரஸ் கட்சியையும் ஒரு மத்திய மயமாக்கப்பட்ட ஒரு கட்சியாக உருவாக்கினார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இருந்தாலும், அனைத்துக்கும் அதிகாரம் பொருந்திய அமைப்பு... அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. காங்கிரஸ் ஒர்க்கிங் கமிட்டி என்று இதைச் சொல்வார்கள். நடைமுறையில் காங்கிரஸ் காரிய கமிட்டி என்று அழைப்பது இதைத்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பொருந்தியது இந்தக் காரிய கமிட்டி. இது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரின் கண்ணசைவைப் பார்த்து மட்டுமே இயங்கக் கூடியது. இந்தத் தலைவரைத்தான் காங்கிரஸ் மேலிடம் என்றும் கட்சியின் ஹை கமாண்ட் என்றும் அழைக்கிறோம். மாநில காங்கிரஸ் தலைவர்களாக இருந்தாலும் மாநில அரசின் காங்கிரஸ் முதல்வர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவருமே இந்த ஹை கமாண்டுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் நினைத்தால் பதவியில் தொடரலாம். மனம் மாறினால் பதவியை இழக்கலாம். மாநிலத் தலைமைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கட்சி மட்டத்தில் முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி, மாநில அரசுகளுக்கே பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை என்ற சூழ்நிலையைப் படிப்படியாக உருவாக்கவும் செய்தது.
இன்னொன்று... அரசாங்கத்துக்கும் அரசாங்கத்தை ஆளும் கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற சூழ்நிலையையும் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
ஒரு அரசாங்கத்தை, ஒரு அரசியல் கட்சி ஆளலாம். அதற்காக அந்த அரசியல் கட்சியே அரசாங்கமாக ஆக முடியுமா? ஆனால், காங்கிரஸ் அப்படி வித்தியாசம் காண முடியாத அளவுக்கு ஒரு அரசாங்கத்தை ஆளும் அரசாங்க கட்சியாகவே செயல்படத் தொடங்கியது.
இந்தியாவின் நிர்வாக நெறிமுறைகளை ஆய்வுசெய்த வரலாற்று ஆசிரியர்கள் இந்த நுணுக்கமான குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மீது வைக்கிறார்கள். ''காங்கிரஸின் ஆட்சி முறை, ஒரு அரசியல் கட்சிக்கும் அரசுக்கும் இருக்க வேண்டிய எல்லைக் கோட்டை முழுவதும் மங்கச் செய்துவிட்டது'' என்று பேராசிரியர் கே.எம்.பாம்வெல் எழுதி இருக்கிறார். அதாவது, மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது, மத்திய ஆட்சிக்கும் அதை ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் பார்த்துக்கொள்வது - என்ற சூழ்நிலையை நேரு காலத்தில் லேசாக ஆரம்பித்து இந்திரா காலத்தில் அதைக் கெட்டிப்படுத்தினார்கள். 1947-1967 வரை இதில் அசைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் எழுந்தன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு இறங்கி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததுபோல, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.
மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் ஏகபோகம் - 1967-ல் தகர்ந்தது என்றே சொல்லலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டுமானால், 'ஒரே வழி எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்; எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் சேரலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பது ஒன்றே கொள்கை; மற்றவற்றை, ஓரமாக ஒதுக்கி வைத்துவிட வேண்டும்’ என்ற கூட்டணி ஃபார்முலா அப்போதுதான் உருவானது. உன்னதமான சோஷலிஸ்ட்கள் என்று கொண்டாடப்பட்ட ராம் மனோகர் லோஹியா, வகுப்புவாத ஜனசங்கத்துடனும் வலதுசாரி சுதந்திரா கட்சியுடனும் சேர்ந்தார். 'திராவிட இனவாதம்’ பேசிய அண்ணாவும் 'தமிழ்த் தேசியவாதம்’ பாடிய ம.பொ.சி-யும் மதச் சிந்தனைகள் கொண்ட முஸ்லிம் லீக்கும், வலதுசாரி எண்ணம் கொண்ட ராஜாஜியையும் கம்யூனிச சிந்தனையாளர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்துக்கொண்டு காங்கிரஸை வீழ்த்தப் புறப்பட்ட காலம் அது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்தது. பஞ்சாபில் அகாலிதளம் தலைமையிலான அரசை, ஜனசங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து ஆதரித்தார்கள். பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்த எதிர்க்கட்சி அரசாங்கங்களில் சுதந்திரா கட்சியும் ஜனசங்கமும் சோஷலிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றன. அரசாங்கத்தில் சேராமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது.
இன்றைக்கு மதச்சார்பின்மைக்கு எதிராக மார்தட்டிக் கிளம்பி இருப்பவர்கள், கடந்த காலத்தில் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மதவாத சக்திகளுடனும் வலதுசாரிகளுடனும் எந்தக் கூச்சமும் இல்லாமல் கூட்டணி வைத்துக்கொண்டவர்கள்தான் என்பதே வரலாற்றுப் புரிதல்.
இந்திராவுக்கு எதிராக தமிழகம் நீங்கலாக பிற மாநிலங்களில் அமைக்கப்பட்ட கூட்டணி அரசுகள், உள் முரண்பாடுகளால் உதிர ஆரம்பித்தன. 1967 முதல் 1970 வரை பீகாரில் ஏழு அரசுகள், உ.பி-யில் நான்கு அரசுகள், ஹரியானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளத்தில் தலா மூன்று அரசுகள் அமைந்தன. இந்த உள்குழப்பம் காரணமாக ஏழு மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. இந்த இடைப்பட்ட மூன்று ஆண்டு காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 800 எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியதாகவும் அதில் 150 பேர் அமைச்சர்கள் ஆனதாகவும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஸ்திரமற்ற தன்மையை மேலே உட்கார்ந்து இந்திரா ரசித்தார். மாநிலங்களில் அவரது செல்வாக்கு குறைந்தாலும், மத்தியில் அவரது அதிகாரம் பலமாக இருந்தது. 1971 தேர்தலில் 'இந்திராவை ஒழிப்போம்’ என்று ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா, ஜனசங்கம், எஸ்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.
நன்றாகக் கவனியுங்கள். 1940-களில் இருந்து எந்த ராஜாஜியும் காமராஜரும் தனித்தனி தீவுகளாக இருந்து மோதினார்களோ... அந்த இருவரும் 1971 தேர்தலில் ஒன்றாகச் சேர்ந்தார்கள். இந்தக் கூட்டணியில் ஜனசங்கமும் இருந்தது. சோஷலிசம் பேசிய காமராஜரும், வலதுசாரி கொள்கை கொண்ட ராஜாஜியும் மதவாதிகளான ஜனசங்கமும் சேர்ந்து கூட்டணி அமைத்து சந்தித்த தேர்தல் அது. இந்த ஜனசங்கம்தான், இன்றைய பாரதிய ஜனதாவின் தாய். இந்தத் தேர்தலில் இந்திராவுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸை வீழ்த்த மெகா கூட்டணி அமைத்த கட்சி அது.
காமராஜரும் ராஜாஜியும் ஜனசங்கமும் சேர்ந்துவிட்டதால், அந்த அணியே வெற்றிபெறும் என்று செய்திகள் பரவியது. சென்னை கடற்கரையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில் மைக் முன் பேசப் போன காமராஜரை அழைத்து, தன் ஜிப்பாவில் வைத்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து விபூதியை எடுத்து நெற்றியில் இட்டார் ராஜாஜி. அன்று பேசிய ராஜாஜி, ''ஞானோதயம் வந்த பிறகுதான் யார் நல்லவர் என்று புரிகிறது'' என்றார். ''நான் சொல்வதற்கு கொஞ்சம் கூச்சப்படுகிறேன். திருமணத்துக்குப் பிறகு மகனும் மருமகளும் ஒன்றுபடுவதுபோல நானும் காமராஜரும் ஒரே குடும்பமாகிவிட்டோம்'' என்று ராஜாஜி சொன்னபோது, ஸ்தாபன காங்கிரஸ் வென்று இந்திரா தோல்வியடைந்ததுபோல எல்லோரும் கைதட்டினர்.
அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து நடத்தப்பட்ட இந்தப் பொதுத்தேர்தலில் இந்திராவுக்கும் காங்கிரஸுக்கும் சாதகமான நிலை (1971-ல்) ஏற்பட்டது. பெரும்பான்மை மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை பலத்தை இந்திரா பெற்றார். ஒற்றை ஆட்சி தன்மைகொண்ட ஒரு மத்திய அரசை, மாநிலங்களை அடிமையாக மட்டுமே வைத்திருக்கும் மத்திய அரசை உருவாக்க நினைத்தார். ''மத்திய அரசின் கீதத்துக்கு ஏற்ப மாநில அரசுகள் தாளம் போட வேண்டும் என்பது மிகமிகத் தேவையானது'' என்று திருப்பதியில் பேசும்போது பிரதமர் இந்திரா வெளிப்படையாகச் சொன்னார். தான் நினைத்ததே கட்சியிலும், தான் நினைத்ததே ஆட்சியிலும், தான் நினைத்ததே மாநில ஆட்சிகளிலும் என்று இந்திரா செயல்பட 1971 தேர்தல் வழி அமைத்துக் கொடுத்தது.
இதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; 'இந்திரா நாயகம்’ என்று புதிய பெயரையே சூட்டினார் இரா.செழியன். இந்த யுகத்தின் நாயகனாக 'மாருதி’ காரில் வந்தார் இந்திராவின் இளைய மகன் சஞ்சய்.