Sunday, November 17, 2013

இந்திய சினிமா 100

டம் அசையுமா என்பதே மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், சலனப்படங்கள் எனும் மவுனப்படங்களை லூமியர் சகோதரர்கள் மூலம் உலகம் கண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களான  மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் வாழ்ந்த மக்களுக்கும் இத்தகைய படங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. 1897-ல் சென்னை விக்டோரியா டவுன்ஹாலிலில் முதன்முதலாக மவுனத் திரைப்படம் திரையிடப்பப்பட்டபோது அது மாபெரும் பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை யாரும் உணரவில்லை. ஏதோ ஒன்று புதிதாக வந்திருக்கிறது என்று ஆச்சரியத்துடன் அசையும் படங்களைப் பார்த்தார்கள்.

இது ஒரு புதிய கலை என்பதைக் கண்டுணர்ந்த முதன்மையாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளியான சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் முக்கியமானவர். பிரான்ஸ் நாட்டிலிலிருந்து இந்தியாவுக்கு வந்து படம் காட்டிய டூபாண்ட் என்பவரிடமிருந்து படச் சுருள்களையும் படம் காட்டும் கருவியையும் வாங்கிய சாமிக்கண்ணு வின்சென்ட் அதை சென்னையில் தொடங்கி பல நகரங்களிலும் வாழ்ந்த மக்களுக்குக் காட்டினார். இதற்காக அவர் ஆங்காங்கே தற்காலிலிகக் கொட்டகைகளை அமைத்தார். அத்தகைய கொட்டகைகள் பிற்காலத்தில்  நிரந்தரமாகி, "டெண்ட் கொட்டாய்' என பேச்சுவழக்கில் அழைக்கப்பட்டன. கோவையில் சாமிக் கண்ணு வின்சென்ட் படத்தயாரிப்பாளராக மாறியதுடன், வெரைட்டி ஹால் என்ற திரையரங்கத்தையும் அமைத்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மவுனத் திரைப்படங்கள் மீதான கவனம் அதிகரித்தது. 1910-ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தாதாசாகேப் பால்கே என்பவர் மும்பையில் திரையிடப்பட்ட கண்ச்ங் ர்ச் ஈட்ழ்ண்ள்ற் (இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை) என்ற வெளிநாட்டு மவுனப்படத்தைப் பார்த்தார். வெண்திரையில் ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவரது மனத்திரையில் புதிய காட்சிகள் ஓடின. இயேசுவுக்குப் பதில் ராமரும் கிருஷ்ணரும் தெரிந்தனர். ஜெருசலத்திற்கும் பெத்லேஹமிற்கும் பதில் கோகுலமும் அயோத்தியும் தோன்றின. நம்மிடமும் சொல்வதற்கு நிறைய கதை இருக்கின்றனவே அவற்றை ஏன் மவுனத் திரைப்படங்களாக சொல்லக்கூடாது என   நினைத்தார் பால்கே. அதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். ஏராளமான கஷ்டங்கள், அலைச்சல்கள், கடும் உழைப்பு இவற்றின் பயனாய் 1912-ல் இந்தியாவின் முதல் திரைப்படமான "ராஜா அரிச்சந்திரா' என்ற மவுனப் படத்தைப் பால்கே திரையிட்டார். அது  மக்களைக் கவர்ந்தது. இந்தியாவில் புராணக்கதைகளுக்கா பஞ்சம்? அவையெல்லாம் மவுனப்படங்களாக வெளிவரத் தொடங்கின. திரையில் படம் ஓடும், அருகில் ஒருவர் நின்று கதையை விளக்கிக்கொண்டிருப்பார். மக்கள் ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.


தமிழகத்திலும் படம் எடுக்கும் முயற்சிகள் தொடங்கின. மோட்டார் உதிரி பாகங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரான ஆர்.நடராஜ முதலிலியார் என்பவர் 1916-ல் எடுத்து வெளியிட்ட "கீசகவதம்' என்ற திரைப் படமே தமிழின் முதல் மவுனப்படம். தென்னிந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களுக்கும்கூட இதுவே முதல்படம். கேரளாவின் முதல் மவுனப்படம் 1928-ல் வெளியானது. ஜே.சி.டேனியல் என்பவர் தயாரித்த "விகதகுமாரன்' என்ற அப்படம் புராணக்கதையைப் பேசவில்லை. மலையாள சமூகத்தைப் பிரதிபலிலித்தது. அதில் உயர்குலத்துப் பெண் வேடத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்  சேர்ந்த ஒருவர் நடித்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அப்படம் திரையிடப்பட்ட அரங்குகளில் கேரளாவின் உயர்சாதியினர் வன்முறை செய்தனர். படம் நிறுத்தப்பட்டது. அதன்பின் "மார்த்தாண்டவர்மா' என்ற படம் 1931-ல் தமிழிலும் மலையாளத்திலும் வெளியானது. தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட மவுனப்படங்களில் தற்போது முழுமையாக பாதுகாக்கப்பட்டிருப்பது இந்த ஒரு படம் மட்டும்தான்.

அசையும் மவுனப் படங்களையே மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், படம் பேசுவதை எப்படிப்  பார்த்திருப்பார்கள்? "கலிலி முத்திப் போயிடிச்சி. அதனால்தான் படம்கூட பேசுகிறது' என்று மிரண்டு போய் திரையரங்கத்தை விட்டு வெளியே வந்தவர்களும் உண்டு. ஆனால், பேசும் படங்கள் பெரும்பாலான மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 1931-ஆம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி சனிக்கிழமையன்று வெளியானது இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா'. அதே ஆண்டில்தான் தமிழின் முதல் பேசும்படமான "காளிதாஸ்' வெளியானது. 1931 அக்டோபர் 31 சனிக்கிழமையன்று வெளியான  இப்படம் தமிழும் தெலுங்கும் கலந்த பேசிய படம். எனவே, தெலுங்கிற்கும் இதுவே முதல் பேசும்படம்.

பெருமளவில் புராணக்கதைகளும் ஓரளவு சமூகக் கதைகளும் திரைப்படங்கள் மூலம் மக்களிடம் சென்று சேர்ந்தன. நாடகங்களிலும் தெருக்கூத்துகளிலும் பொம்மலாட்டங்களிலும் கதாகாலட்சேபங்களிலும் பார்த்து ரசித்த கதைகளை கருப்பு-வெள்ளையில் வெளிவந்த இப்படங்கள் காட்டியதால் மக்களுக்கு இது புதுமையான  கலைவடிவமாக இருந்தது. திரைப்படங்கள் இந்திய மக்களின் வாழ்க்கையோடு கலக்கத் தொடங்கின.

சுதந்திரப் போராட்டத்தை காந்தியடிகளும் காங்கிரஸ் இயக்கமும் தீவிரமாக  முன்னெடுத்த காலம் என்பதால் திரைப்படங்களின் வாயிலாகவும் விடுதலைக் குரல்கள் ஒலிலித்தன. காளிதாஸ் படம் புராணக்கதையின் அடிப் படையில் அமைந்தது என்றாலும் அதில் காந்தியடிகளைப் புகழும் பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தி, வங்காளம் உள்ளிட்ட பிறமொழிகளில் 1930-களிலும் 1940-களிலும் வெளியான படங்களில் விடுதலை உணர்வை ஊட்டக்கூடிய காட்சிகள் இடம்பெற்றன. வி.சாந்தாராம், கே.ஏ.அப்பாஸ், ராஜ்கபூர் போன்ற இயக்குநர்கள் இந்தியில் நல்ல படங்களைத் தந்தனர். தமிழில் எல்லீஸ் ஆர்.டங்கன் என்ற அமெரிக்கரும், கே.சுப்ரமணியம், கே.ராம்நாத் போன்ற இயக்குநர்களும் பல படங்களைத் தந்தனர். பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி கே.சுப்ரமணியம் இயக்கிய "தியாக பூமி' என்ற படம் விடுதலைப் போராட்டத்தைத் தூண்டுவதாகக் கூறி அப்படத்திற்கு ஆங்கில அரசாங்கம் தடை விதித்தது.

பாடலும் இசையும் இந்தியப் படங்களில் முக்கிய இடம் பிடித்தன. தமிழில் எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.எல்.சுப்புலட்சுமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் போன்றவர்கள் சொந்தக்குரலிலில் பாடி நடித்தனர். அவர்களின் பாடலுக்காகவே ரசிகர்கள் பல முறை படங்களைப்  பார்த்தனர். திரைப்படங்களில் நடித்த நடிகர்-நடிகையர் நட்சத்திரங்கள் போல ரசிகர்களின் இதய வானில் மின்னினர். தியாகராஜபாகவதர் நடித்த "ஹரிதாஸ்' என்ற திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்ட பெரும் வெற்றிப்படமானது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு திரைப்படங்களில் ஜமீன்தார் ஆதிக்கம், உயர்சாதி ஆதிக்கம்  கொண்ட குடும்பக் கதைகளும் காதல் காட்சிகளும் அதிகரித்தன. நேரடியாகப் பாடும் நடிகர்-நடிகையரின் செல்வாக்கு குறைந்து, புதுமுகங்கள் அறிமுகமாகி வித்தியாசமான நடிப்பு, நடனம், சண்டைக்காட்சிகள் மூலம் புகழ் பெற்றனர். இந்தியில் குருதத், திலீப்குமார், நர்கீஸ், மதுபாலா, தேவ்ஆனந்த், மீனாகுமாரி, வகீதா ரகுமான் போன்றோர் புகழ்பெற்றனர். மதர் இந்தியா போன்ற இந்திப் படங்கள் சராசரி மக்களின் வாழ்க்கையைக் காட்டின. மராட்டிய மொழித் திரைப்படங்களும் வங்க மொழிப் படங்களும் சமுதாயத்தைப் பிரதிபலிலிக்கும் வகையில் அமைந்தன. புகழ்மிக்க  இயக்குநர் சத்யஜித்ரே 1955-ஆம் ஆண்டு இயக்கிய பதேர் பாஞ்சாலிலி திரைப்படம் கதையமைப்பிலும் உருவாக்கத்திலும் மாறுபட்டதாக அமைந்தது.

1950-களில்தான் மலையாளத் திரையுலகமும் தன் முத்திரையைப் பதிக்கத் தொடங்கியது. மலையாள மொழியின் முதல் பேசும்படம் 1938-ல் எஸ்.நொட்டானி இயக்கத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் தயாரிப்பில் வெளியான "பாலன்'. மற்ற மொழிகளைவிட மலையாளம் சற்று தாமதமாகத்தான் திரைப்படத்தில் அடியெடுத்து வைத்தது என்றாலும் மவுனப் படக்காலத்திலிருந்தே அது புராண- இதிகாசங்களைவிட தன் மண்ணின் தன்மையை வெளிப்படுத்தும் கதையமைப் பிலேயே கவனம் செலுத்தியது. நிலவுடைமை, சாதி ஆதிக்கம் இவற்றின் பிடியில் உள்ள சமுதாயத்தை அது தன் படங்களில் காட்டியது. 1954-ல் வெளியான நீலக்குயில் அத்தகைய படங்களில் ஒன்று. மலையாள எழுத்தாளர்களின் பங்களிப்புடன் அம்மொழித் திரைப்படங்கள் வெளியாயின.

தமிழ்த் திரையுலகம், இந்திய விடுதலைக்குப்பிறகு பல மாற்றங்களைக் கண்டது. திராவிடர்  இயக்கத்தின் வளர்ச்சியும் தாய்மொழியுணர்வும் பகுத்தறிவு கருத்துகளும் தமிழ்த் திரைப்படங்களின் திசையை மாற்றின. அறிஞர்  அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு, கலைஞர் மு.கருணாநிதியின் மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் கதையமைப்பிலும் வசனத்திலும் புதுமையையும்  புரட்சியையும் ஏற்படுத்தின. சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பழக்கவழக்கங் களை சுட்டெரிக்கும் வகையில் காட்சியமைப்புகள் அமைந்தன. எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்), சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற திராவிட இயக்கத்திலிலிருந்து  வந்த நடிகர்கள் தங்கள் இயக்கக் கொள்கைகளைத் திரைப்படங்கள் மூலம் பரப்பினர். சிவாஜி கணேசனின் அபார நடிப்பாற்றல் திரையுலகில் ஒரு  திருப்புமுனையாக  அமைந்தது.

கதாநாயகர்களின் காலமாகவும் காதல் காவியங்களின் யுகமாகவும் 1960 மாறியது. இந்தியில் வெளியான மொகலே ஆஜம் என்ற பிரம்மாண்ட திரைப்படம் சலீம்- அனார்கலிலி காதல் கதையை புதிய கோணத்தில் சொன்னது. தமிழில் மக்கள்திலகமாக எம்.ஜி.ஆரும், நடிகர் திலகமாக சிவாஜிகணேசனும் ரசிகர்கள் மனதில் உயர்ந்து நின்றனர். அவர்களுக்கென ரசிகர் மன்றங்கள் உருவாகி பலமிக்க அமைப்புகளாக மாறின. அரசியல் தொடர்புகள் கொண்டவர்களாக இருபெரும் நட்சத்திரங் களும் இருந்ததால் அவை அவர்களின் படங்களிலும் வெளிப்பட்டன. ஏழைகளுக்கு உதவும் நாயகனாக எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தார். குடும்பப்பொறுப்புள்ள பாத்திரங்களிலும் வீரபாண்டியகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வரலாற்று நாயகர்களாகவும் சிவாஜி நடித்தார். தெலுங்குத் திரையுலகிலும் இதே கால கட்டத்தில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகியோர் ரசிகர்களின் ஆராதனைக்குரியவர்களாயினர். ராமர், கிருஷ்ணர் போன்ற புராணக் கடவுள் வேடங்களில் ராமராவ் தொடர்ந்து நடித்து, மக்கள் மனதில் நிலை பெற்றார். தேவதாஸ் போன்ற காதல் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றார் நாகேஸ்வரராவ். கன்னட பட உலகில் ராஜ்குமார், அம்மாநில மக்களின் அபிமானம் பெற்ற நடிகரானார்.

மலையாளத் திரைப்பட உலகம் வழக்கம்போல தனது மண்ணையும் அதனையொட்டிய வாழ்வையும் பதிவு செய்துவந்தது. ராமுகாரியத் இயக்கத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய செம்மீன் நாவல் அதே பெயரில் 1965-ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்றது. மலையாளத்தின் பக்கம் இந்தியத் திரையுலகின் பார்வை திரும்பிய அவ்வேளையில் மராட்டியம், அசாம், வங்கமொழிப் படங்களும் மண் மணக்கும் படங்களாக வெளிவரத் தொடங்கின. எனினும், வடமாநிலங்களில் இந்தி மொழிப் படங்களே ஆதிக்கம் செலுத்தின.

சினிமாவின் தாக்கம் அரசியலிலிலும் எதிரொலிலிக்கத் தொடங்கியது. தமிழ்த் திரையுலகில் இலட்சிய நடிகர்  எனப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அவர் சார்ந்திருந்த தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. 1971-ஆம் ஆண்டு தேர்தலிலில் எம்.ஜி.ஆர் சட்டமன்றத்திற்கும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1972-ல் தி.மு.கவிலிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கினார். அவர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1977-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று 1987வரை முதல்வராக இருந்து காலமானார் எம்.ஜி.ஆர். அதுபோல தெலுங்கு பட நாயகரான என்.டி.ராமராவ் ஆந்திராவில் தெலுங்குதேசம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி 1981-ல் அம் மாநிலத்தின் முதல்வரானார்.

தனிப்பட்ட செல்வாக்கை அரசியல்மயமாக்கிக் கொண்ட நடிகர்கள்  தென்மாநிலங்களில் வலுப்பெற்றிருந்த நிலையில் இந்திப் படங்களில் ராஜேஷ்கண்ணா, தர்மேந்திரா, ரிஷிகபூர் போன்ற நடிகர்கள் காதல் படங்களிலும் சண்டைப்படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வந்தனர். 1970-களின் பிற்பகுதியில் இந்த நிலை மெல்ல மெல்ல மாறியது. இந்தியாவில் மாறிவந்த அரசியல் சூழ்நிலை, வேலைவாய்ப்பின்மை, நக்சலைட்டுகள் எழுச்சி இவற்றின் காரணமாக கோபக்கார இளைஞர் களாக நாயகர்கள் உருவாகினர். இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படும் அமிதாப்பச்சன் அத்தகைய கதாபாத்திரம் கொண்ட பல படங்களில் நடித்தார். 1980-களின் இறுதி வரையில் அத்தகைய படங்கள் வெளிவந்தன. தமிழில் கமலஹாசன், ரஜினிகாந்த் என இருபெரும் நட்சத்திரங்கள் ரசிகர்களின் நெஞ்சில் குடியேறி, வெற்றிகரமான பல படங்களை அளித்தனர்.

தமிழ்த்திரையுலகில் 1960-களில் முக்கோணக் காதல் கதைகளைச் சொன்ன இயக்குநர் ஸ்ரீதர், 1970-களில் ஆண்-பெண் மன உணர்வுகளை குடும்பச் சிக்கல்களுடன் இணைத்துச்சொன்ன இயக்குநர் கே.பாலசந்தர் இவர்களைத் தொடர்ந்து  தமிழ்த்திரையுலகின் போக்கை மாற்றும் வகையில் இயக்குநர்கள் மகேந்திரன், பாரதி ராஜா ஆகியோர் தங்கள் படங்களைத் தந்தனர். ஸ்டுடியோவுக்குள் இருந்த திரைப்படங்களை கிராமங்களை நோக்கித் திருப்பியவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே, மண்வாசனை, முதல்மரியாதை உள்ளிட்ட படங்களில் தென்மாவட்டத் தமிழர்களின் வாழ்க்கை முறையைத் தன் படங்களில் உயிரோட்டமாக அவர் பதிவு செய்தார். திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்பதையும் பேச்சை விட அழுத்தமான காட்சிகளே முக்கியம் என்பதை இயக்குநர் மகேந்திரன் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் உள்ளிட்ட தனது படங்களில் காட்டினார். அசோக்குமார், பாலுமகேந்திரா போன்ற ஒளிப்பதிவாளர்கள் வசனங் களற்ற திரைமொழியை உருவாக்கினர். தமிழ்ப்படத்தின் தரத்தை மேம்படுத்தியவர்களில் மணிரத்னம் குறிப்பிடத்தக்கவர். 

பேசும்படம் உருவான காலத்திலிலிருந்தே இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இசையும் பாடலும்  முக்கியத்துவம் பெற்றன. இந்தியில் சங்கர்-ஜெய்கிஷனில் தொடங்கி நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், லட்சுமிகாந்த்- பியாரேலால், ஆர்.டி.பர்மன் எனப் பல இசையமைப்பாளர்கள் இந்தியத்தன்மையுடன் கூடிய இசையைக் கொடுக்க குல்சார், ஜாவேத் அக்தர் போன்றவர்கள் செழுமைமிக்க உருதும் இந்தியும் கலந்த பாடல்களைத் தந்தனர். முகமது ரஃபி, கிஷோர்குமார், லதாமங்கேஷ்கர், ஆஷாபோன்ஸ்லே போன்ற பாடகர்கள் அவற்றிற்கு தங்கள் குரலால் உயிரூட்டினர். வங்கம், மராட்டியம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பாடலும் இசையும் அந்தந்த மண்ணின் மகத்துவத்தை  எடுத்துச்சொல்லிலின.

தமிழில் ஜி.ராமநாதனில் தொடங்கி விஸ்வநாதன்- ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் என வளர்ந்த திரையிசை இளையராஜா என்ற இசைக்கலைஞர் மூலம் தனித்துவம் பெற்றது. தமிழ் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புற இசையைத் திரைக்கேற்ற வகையில் மிகச்சிறப்பாகக் கொடுத்தவர் இளையராஜா. அவரைத் தொடர்ந்து வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைக்குத் தேவையான மேற்கத்திய இசையை மற்ற இந்திய இசை வகைகளுடன் கலந்து தந்து, உலக அளவில் புகழ்பெற்று ஆஸ்கர் விருது வென்றார். பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம், கண்ண தாசன், வைரமுத்து எனத் தமிழில் காலந்தோறும் இலக்கியத்தை திரை மூலம் வடிக்கும் கவிஞர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன், வாணிஜெயராம், யேசுதாஸ், சித்ரா எனப் பாடகர்கள் தமிழ்த்  திரை யிசைக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.

ரசிகர்களுக்குப் பொழுதுபோக்காகவும், திரைத் துறையினருக்குத் தொழிலாகவும் அமைந்துள்ள சினிமா  என்பது விஞ்ஞானம் தந்த அற்புதமான கலை வடிவம். பலரும் இதை வியாபாரமாகக் கையாண்டாலும், இந்தக் கலையின் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாழ்க்கையின் பன்முகத்தன்மையை எடுத்துச் சொல்லவும் முடியும். அத்தகையப் பணியை மேற்கொள்ளும் படைப்பாளிகளும் நடிகர்களும் எல்லாக் காலத்திலும் குறைவான அளவிலேயே  இருந்தாலும்  அவர்கள் தங்கள் பணிகளைத் திறம்படவே  செய்திருக் கிறார்கள். பெண்கள் இத்துறையில் நீண்டகாலம் கவர்ச்சிப் பதுமைகளாகவே பயன்படுத்துப்பட்டு வந்தனர். நர்கீஸ், ஸ்மிதாபாட்டீல், ஷபனா ஆஸ்மி, பானுமதி, மீராநாயர் உள்ளிட்டவர்கள் திரைத்துறையில் பெண்களின் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்தனர். எனினும், இத்துறையில் பெண்கள் இன்றளவும் போராட வேண்டியிருக்கிறது.

உலகமயமும் புதிய பொருளாதாரக் கொள்கையும் தன் கால்களை அழுந்தப் பதித்த 1990-களிலிலிருந்து இந்த 2013-வரை இந்தியத் திரையுலகின் போக்கு பரந்து பட்ட வியாபாரத்தன்மை கொண்டதாகவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றதாகவும் மாறியுள்ளது. வழக்கமான காதல், நகைச்சுவைக் கதைகளிலிலிருந்து தீவிரவாதிகள், மதவெறியர்கள், நிழலுலக தாதாக்கள், அரசியல் கொள்ளையர்கள், சமூக ஒழுங்கீனங்கள் வரை பலவற்றையும் படமாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இன்றைய கல்விமுறையை கேள்விக்குட்படுத்தி புதியமுறையை உணர்த்திய அமீர்கானின் "தாரே ஜமீன் பர்', மொபைல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இளைஞர்களைத் திசை திருப்புவதைக் காட்டும் பாலாஜி சக்திவேலிலின் "வழக்கு எண் 18/9' போன்ற படங்கள் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடையாளமாக விளங்கு கின்றன. மலையாளத்தில் வெளியான "செல்லுலாய்டு', தமிழில் வந்த  "பரதேசி' போன்ற படங்களின் மூலம் மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளும் தொடர்கின்றன.

புதிய புதிய தொழில்நுட்பங்களால் திரைப்படம் என்பது பல கட்டங்களை எட்டியுள்ளது. விளம்பரப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் என கலையார்வத்துடன் இத்துறையில் கால்பதிப்பதற்கேற்ற வகையில் அகலமான வாசல் திறக்கப்பட்டுள்ளது. புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கும் காலமாகத் திரையுலகம் மாறியுள்ளது. இந்த  மாற்றத்தை நூற்றாண்டு காணும் இந்திய சினிமா சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். 

Source:நக்கீரன்

No comments:

Post a Comment