
பதினான்கு
வங்கிகளை தேசிய உடமையாக்கியுள்ள நடவடிக்கையானது கண்டிப்பான பொருளாதார
ரீதியில் பார்த்தாலும் சரி, கோடிக்கணக்கான நம் மக்களின் நம்பிக்கைகளும்
ஆதர்சங்களும் பலியாகிவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக நாம் கொண்டுள்ள பரந்த
லட்சியங்களை, நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வரப்போகும் லட்சியங்களைக்
கொண்டு கவனித்தாலும் சரி, முற்றிலும் நியாயமானதே ஆகும். 1964-லேயே சோஷலிச
பாணி சமுதாயத்தை ஏற்படுத்தும் லட்சியம் பார்லிமெண்டில்
அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுத் தரப்புத் தொழில்களில் வரவர
அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டது. அதனால், தொழில்கள் மேலும் விருத்தி
அடைவதற்கு வேண்டிய அடிப்படையான ஆதார அமைப்புகள் உருவாயின. தனியார்
தரப்பு, சர்க்கார் தரப்பு முயற்சிகளின் தராதர மதிப்புகள் பற்றி
விவாதிப்பது ஒரு கற்பனை ரீதியிலான விவாதமென்று நான் கருதுகிறேன். அவை
இரண்டுக்கும் நம் பொருளாதாரத்தில் முக்கியமான பங்குண்டு. தனியார் தரப்பு
சகல சிறப்புகளுக்கும் உறைவிடம் என்று கருதிவிட வேண்டாம். உண்மையில் அதன்
சாதனைகளைப் பார்த்தால் உற்சாகமோ ஊக்கமோ ஏற்படுவதற்குக் காரணமில்லை.
நாட்டில் உள்ள வர்த்தக பங்குகளில் பெரும்பாலானவை செயல்பட்டு வந்த தன்மையைப்
பரிசீலிக்கும் தோறும், நாம் இப்போது விவாதிக்கிற இந்த மசோதா கண்டிப்பாய்
செய்தே ஆகவேண்டிய, தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடு என்ற அபிப்பிராயத்திற்கே
வருவோம்.வங்கி தொழிலுக்கும்
மற்றத் தொழில்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. வங்கிகள்
விஷயத்தில் பங்குதாரர்களுக்குள்ள நிதி ஈடுபாடு வெகு சொற்பம். இந்த வங்கிகள்
விஷயத்தில் 1968 டிசம்பர் 31-ந்தேதி மொத்தம் 2, 750 கோடி ரூபாய் டெபாசிட்
இருந்ததற்கு மாறாக, வங்கிகளின் செலுத்தப்பட்ட மூலதனம் 28. 5 கோடி
ரூபாயாகத்தானிருந்தது; அதாவது ஒரு சதவீதத்துக்குச் சற்று கூடுதலாகத்
தானிருந்தது. எனவே, வங்கி நிர்வாகஸ்தர்கள் பெரும்பாலும் பிறத்தியார் பணத்தை
வைத்துதான் லோவாதேவி செய்து வந்திருக்கிறார்கள்.வங்கி
நடவடிக்கைகளிலுள்ள இந்த அம்சம் சோஷலிசத்தை மேற்கொள்ளாத நாடுகளில் கூட
எப்போதும் கவலைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. உண்மையில்,
பிரதானமாய் முதலாளித்துவ பொருளாதார அமைப்பே உள்ள சில நாடுகள் கூட
வங்கிகளைத் தேசிய உடமையாக்கி விட்டிருக்கின்றன; அல்லது வங்கிகள் மீது வெகு
கண்டிப்பான கண்காணிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரான்ஸ் அதன் பிரதான
வங்கிகளில் நான்கைத் தேசிய உடமையாக்குவது அவசியமென்று கருதி அவ்வாறு
செய்திருக்கிறது. எஞ்சி விட்டுவைக்கப்பட்ட இரு வங்கிகளிலும் சேர்த்து
கூட்டாக அந்நாட்டின் மொத்த வங்கி ஆஸ்திகளில் 1/20 பங்குதான் இருந்தது.
இதேபோல், இத்தாலியிலும் பிரதான ஐந்து வங்கிகளில் நான்கு அரசுத்தரப்பிலேயே
இருக்கின்றன. ஸ்வீடன் தேசத்தில், இரு வங்கிகளின் மூலதனத்தை சர்க்கார்
மேற்கொண்டுவிட்டார்கள்; அந்த வங்கிகள் 1950-ல் ஒன்று சேர்க்கப்பட்டன.
சமூகக் கட்டுப்பாட்டின் சில பலவீனங்கள்வங்கிகள்
மீதுள்ள சமூகக் கட்டுப்பாடு பற்றிப் பலர் கேள்விகள் எழுப்புகிறார்கள். இதை
ஏன் இன்னும் சற்று அதிக காலத்துக்கு பரீட்சித்துப் பார்க்கக் கூடாது என்று
கேட்கிறார்கள். சமூகக் கட்டுப்பாடு விஷயத்தில் பல பயனுள்ள அம்சங்கள்
இருக்கின்றன. உதாரணமாக, தொழில் ரீதியான நிபுணர்கள் நிர்வாகம் அதில்
வற்புறுத்தப்பட்டிருக்கிறது; இது இனியும் பொருத்தமான அம்சமாகவே இருந்து
வரும். விவசாயம், ஏற்றுமதி, சிறுதொழில்கள் ஆகியவைகளுக்கு இன்னும் உயர்தர
முதன்மைக் கிரமம் அளிக்கப்படவேண்டும் என்று அதில் வரையறுக்கப்பட்டிருந்தது.
ஆனால், சமூகக் கட்டுப்பாட்டில் சில பலவீனங்கள் இருந்தன. பல வங்கிகள்
விஷயத்தில் அவைகளின் கொள்கைகளைத் தங்கள் அதிகாரத்துக்குள்
வைத்திருந்தவர்களே பிறகும் ஏதாவதொரு வழியில் தொடர்ந்து தங்கள் செல்வாக்கைப்
பிரயோகித்து வந்தார்கள்; சில சமயங்களில் முன்பிருந்த போர்டு தலைவரோ உப
தலைவரோ போர்டில் பதவி வகிப்பதன் மூலம் இவ்வாறு செய்யப்பட்டு வந்தது.
அவர்கள் இட்ட கட்டளைகளையும், உத்தரவுகளையும் வங்கிகள் அனுசரித்து
நடக்கலாம்; சில வங்கிகள் அப்படி நடந்து மிருக்கின்றன. ஒரு கொள்கையை மனமார
உற்சாகத்தோடு நடத்தி வைக்கிறவர்களுக்கும், ஏதோ சில கட்டளை களுக்காக
மாத்திரமே அவ்வாறு செய்கிறவர்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இந்தச்
சட்டங்களைக் கூட சில வங்கிகள் ஏற்று நடக்கவில்லை. உரிமை குறைந்த மக்கள்
தங்கள் காலில் நிற்பதற்கு உதவி புரிய நாம் செய்யும் முயற்சிகளை அவர்கள்
ஆத்திரத்தோடும் ஏமாற்றத்தோடும் கவனித்து வருகிறார்கள் என்பதை இனியும் நாம்
தொடர்ந்து புறக்கணிப்பதற்கில்லை.சிறிய
வங்கிகள் இச்சட்டத்தில் சேர்க்கப்படாதது பற்றிக் கூறப்படுவது மற்றொரு
குறை. வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டதன் நோக்கம், விவசாயம், சிறு
தொழில்கள், ஏற்றுமதிகள் ஆகியவை விஷயத்தில் துரித வளர்ச்சி ஏற்படும்படி
செய்வதற்கும், புதிதாகத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும்,
பின்னடைந்த நிலையில் உள்ள எல்லாப் பகுதிகளையும் விருத்தி செய்வதற்கும் வழி
செய்வதுதான். 50 கோடி அல்லது அதற்குமேல் டெபாசிட் உள்ள வங்கிகளுக்குப் பல
மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இதற்கு மாறாக, சிறிய வங்கிகள் குறிப்பிட்ட சில
பகுதிகளில் மாத்திரமே உள்ளன; இப்போது சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 14
வங்கிகள் விரிவான ரீதியில் தொழில் செய்கிற அனுகூலத்தால், சர்க்காரின்
லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு அவை சிறிய வங்கிகளைவிட நல்ல நிலையில் உள்ளன.
சிறிய வங்கிகள் ஏற்கெனவே பிரதானமாய் சொற்பக் கடன் வாங்குபவர்களுக்கே சேவை
செய்து வருகின்றன. அவை வழங்குகிற கடன்களின் சராசரித் தொகை குறைவாக இருப்பதி
லிருந்து இது புலனாகும். சிறிய வங்கிகள் அவை சேவை செய்து வருகிற
சமூகத்தோடு ஒட்டிய ஓர் அம்சமாகவே இருந்து வருகின்றன. சிறிய
வியாபாரிகளுக்கும், சிறிய தொழில் துறையாளர்களுக்கும் அவைகளின் நடவடிக்கைகள்
மீது ஓரளவு செல்வாக்கு இருந்து வருகிறது.
இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வங்கிகளை
நடத்துவதற்காக ஒரே முழு பிண்டமான மத்திய ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தும்
உத்தேசம் நமக்கில்லை. மத்திய ஸ்தானத்தில் உள்ள ஸ்தாபனத்தை வலுப்படுத்த
வேண்டியது அவசியம்தான்; ஆனால் ஒவ்வொரு வங்கிகளுக்கும் சுயேச்சை அதிகாரம்
இருக்கும்; அவைகளின் போர்டுகளுக்கு நன்கு வரையறை செய்யப் பட்ட அதிகாரங்கள்
இருக்கும். இப்படி இப்படிச் செய்ய வேண்டுமென்று கட்டளைகள் இடத்தான்
செய்வோம்; ஆனால், அவை கொள்கை ரீதியாகவும் பொதுப் பிரச்சினைகள்
பற்றியவையாகவுமே இருக்கும். குறிப்பிட்ட தரப்பாருக்குக் கொடுக்கப்படும்
தனித் தனிக் கடன்கள் பற்றியவையாக இருக்காது. அளவுக்கதிகமான குறுக்கீடு
களால் ஆபத்து ஏற்படாமல் வெகு ஜாக்கிரதையாகக் கண்காணித்து வருவோம். அத்தகைய
குறிக்கீடுகள் அரசியல் காரணங்களால் ஏற்படுபவையாயிருப்பினும் சரி, மற்றக்
காரணங்களால் ஏற்படுபவை யாயிருப்பினும் சரி நம் கண்காணிப்பு இருக்கும்.
அதிகார
வர்க்கக் கட்டுக்கோப்பு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்
என்பதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த வங்கிகளின் சுய முயற்சி
ஊக்கத்தையும், ஆர்வ ஊக்கத்தையும் தனித் தன்மையையும் நாம் பாதுகாக்க
வேண்டியதுதான். நல்ல முறையில் போட்டா போட்டியும், சுய முயற்சி ஊக்கமும்
மறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறபடி நாம் இதைச் செய்வோம்.
நியாயமான நஷ்ட ஈடு
நாம்
ஏற்பாடு செய்துள்ள நஷ்ட ஈடு நியாயமானதும் நேர்மையானதும்தான் என்று
பங்குதாரர்களுக்கு இச்சந்தர்பத்தில் நான் கூற விரும்புகிறேன். வாஸ்தவமாய்
பங்கு வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் நஷ்ட ஈடு கிடைக்கச் செய்ய
முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்படி செய்ய முயன்று வருகிறோம்.
சர்க்கார் பத்திரங்கள் ரூபத்தில் நஷ்ட ஈட்டுத்தொகையைக் கொடுப்பதால்,
பங்குதாரர்களுக்குக் கஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதை நான் பலமாக
மறுக்கிறேன். சமீபத்தில்தான் இந்திய சர்க்கார் சதவீத வட்டியுடன் 7
வருஷத்தில் திருப்பித் தருகிற ஒரு கடனை எழுப்பி னார்கள். அந்தப்
பத்திரங்கள் இப்போது மார்க்கெட்டில் சற்று அதிகமான விலைக்கே
விற்கப்படுகிறது. சதவிகித வட்டியுள்ள 30 வருஷக் கடனுக்கும் சற்று அதிக
விலைதான் இருந்து வருகிறது. நிதியாக வழங்கப்படும் பத்திரங்கள் காரணமாய்
பங்குதாரர்களுக்கு மூலதனம் நஷ்டமாகிவிடும் என்று கூறுவது மிகவும் அபாயகரமான
பொறுப்பற்ற பேச்சாகும்.
சற்று
ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பிரிவினரின் ஆஸ்திகளின் உண்மையான பெறுமதியைப்
பற்றி சந்தேகங்களைக் கிளப்பிவிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் உடமைகளை
அவைகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விலையைவிடக் குறைந்த மதிப்பிற்கு
விற்றுவிடும்படி செய்யப்படுகிறது. அவ்வாறு அவர்கள் ஏய்க்கப்படுவதற்கு வழி
செய்யக்கூடிய எதையும் யாரும் சொல்லமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
இப்போது கொடுக்கப்படுகிற பத்திரங்கள் கைமாற்றக் கூடிய பத்திரங்கள். அவைகளை
விற்கலாம்; எவ்வித நஷ்டமும் ஏற்பட அவசியமில்லாதபடி நல்ல விலை அவைகளுக்குக்
கிடைக்கும்.
வாக்குறுதிகள்
வங்கி
நிர்வாகிகள், சிப்பந்திகள் ஆகியோரின் நியாயமான நலன்களை நாங்கள் நன்கு
கவனித்துக் கொள்வோம் என்ற உறுதியை நான் அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
இனி நாட்டின் நலத்தையோ அல்லது வங்கி தொழிலின் நன்மையையோ புறக் கணிக்கிற
எந்தவிதமான கிளர்ச்சி மனப்பான்மையும் இருக்கக்கூடாது. தொழில்
சிப்பந்திகளும், நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும்
பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்வார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
தொழில்
துறைக்கோ வர்த்தகத்திற்கோ அல்லது விவசாயத்திற்கோ உண்மையாக வேண்டுகிற கடன்
வசதிகள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும். வங்கிகளிடம்
டிபாசிட்டர்கள் ஒப்படைத்துள்ள நிதிகளை வங்கிகள் புனிதமான தர்மப் பொறுப்பாக
பாவிக்கும். இந்தியப் பொது மக்களுக்கு ஏற்கனவே சர்க்கார் தரப்பு
வங்கிகளிடம் லேவாதேவி செய்து பழக்கம் உண்டு. ஸ்டேட் வங்கியும் அதன் துணை
ஸ்தாபனங்களும் ஏற்கனவே மொத்த டிபாஸிட்டுகளில் மூன்றில் ஒரு பங்கின் மீது
கட்டுப்பாடு உள்ளவையாக இருக்கின்றன. இதனால் டிபாஸிட்டர்களின்
நலன் எந்தவிதத்திலாவது ஆபத்திற்குள்ளாகி இருப்பதாக யாரும் கூறியதில்லை.
ஸ்டேட் வங்கி பரிபூரணமாய் செவ்வையானது என்று நான் கூறவில்லை. ஆனால்
சமூகத்திற்கு சேவை செய்வதில் ஒப்பிட்டுப் பார்த்தால், திறமையிலாயினும் சரி
கடன் வழங்குவதிலாயினும் சரி எந்தத் தனியார் வங்கிக்கும் அது பின்
வாங்கவில்லை. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகள் எட்டாத் தொலைவிலுள்ள
கிராமங்களில் கூட மக்களிடையே வங்கி லேவாதேவிப் பழக்கத்தைப் பரப்புவதில்
முக்கிய பங்கு எடுத்து வந்துள்ளன. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகளிடம் 1967
இறுதியில் ஒன்றரை கோடி பேர் டிபாசிட் கணக்கு வைத்திருந்தனர். 700 கோடி
ரூபாய்க்கு மேல் டிபாசிட் தொகை இருந்தது. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகளின்
பணம் போட்டவர்கள் எந்த சந்தர்ப்பத்திலாயினும் சரி தங்கள் நலன்களுக்கு
ஆபத்து ஏற்பட்டதென்று பயந்ததாக, சர்க்காரைப் படுமோசமாகக் குறை கூறுபவர்கள்
கூடச் சொல்லமாட்டார்கள்.
பொது
மக்களுக்கு இன்னும் சீரான விரிந்த அளவு சேவை கிடைக்கும் என்று நாங்கள்
உறுதி கூறுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலோ வங்கி வசதிகள் விஷயத்தில்
ஏற்பட்டு வந்துள்ள அபிவிருத்தி எங்கும் ஒரே சமசீராக இருக்கவில்லை. வங்கி
வசதிகள் குறைந்துள்ள மாநிலப் பகுதிகளில் வங்கி வசதிகளை
விஸ்தரிப்பது அவசியம். அபிவிருத்தி ஏற்பட்டுள்ள மாநிலங்களில் கூட வங்கி
வசதிகள் நகர்ப்புறங்களில் மட்டும்தான் இருக்கின்றன; முக்கியமாய் பெரிய
பட்டணங்களில்தான் இருக்கின்றன. ஓரளவு நகரமாய் இருக்கிற பகுதிகளும் கிராம
கேந்திரங்களும் சற்று அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன என்றே
கூறலாம். மாநிலங்களில் கடனுக்கும் டிபாசிட்டுத் தொகைகளுக்கும் உள்ள
விகிதாசாரக் கணக்கைக் கவனித்தால் பல ராஜ்யங்களில் அது மிகக் குறைவாகவே
இருக்கிறது. உதாரணமாக, அஸ்ஸாம், பீஹார், ராஜஸ்தான், ஒரிஸ்ஸா,
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகியவைகளைக்
கூறலாம். இது காரணமாய் புகார்களும் வந்துள்ளன. அதாவது வங்கிகள் சில
பகுதிகளில் டிபாசிட் மூலம் நிதி வசதியைத் திரட்டிக் கொண்டு வேறு இடங்களில்
அவைகளைக் கடனாக வழங்கிப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று குறை
கூறப்படுகிறது. இதனாலும் பிரதேச ரீதியில் சம வளர்ச்சி ஏற்படுத்துவதற்கு
மேலும் குந்தகம் உண்டாகிறது என்கிறார்கள். வங்கிகள் பொதுத் தரப்புக்
கட்டுப்பாட்டில் இருந்தால் இந்தப் போக்குகளைத் திருத்தலாம். அடிக்கடி
வற்புறுத்தப்படுகிற சம ரீதியான பிரதேச வளர்ச்சிக்கு வழி செய்யும் கொள்கையை
நிறைவேற்றலாம்.
மக்கள் ஆதரவு
இந்தச்
சட்டத்தை நிறைவேற்றும்போது சர்க்கார் தங்களுக்கு இந்த நடவடிக்கைக்காக
தெரிவிக்கப்பட்டுள்ள விரிவான மனமார்ந்த ஆதரவுகளுக்கு அருகதை உள்ளவர்களாக
நடந்து கொள்வார்கள். இந்த ஏற்பாட்டை அமுல் செய்வதில், கடன் வசதிகளை
விஸ்தரிப்பது மாத்திரம் கருத்தல்ல; அந்தக் கடன் வசதி குறிப்பிட்ட
காரியத்துக்குப் பயன்படும்படி விஸ்தரிக்க விரும்புகிறோம். சுதந்திரம்
ஏற்பட்டதிலிருந்து தேசத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கும் பல்வேறு பகுதி
இடங் களுக்கும் இருந்து வருகிற ஆழ்ந்த அதி முக்கியமான பிரச்சினைகளைத்
தீர்த்து வைப்பதே அந்தக் காரியம்.
இது
சரித்திர முக்கியத்துவம் உள்ள நடவடிக்கை அல்ல; ஆனால் சரியான திசையில்
செல்லும் நடவடிக்கையாகும். அதை வெற்றிகரமாக நடத்திவைக்க வேண்டும் என்பதில்
அக்கறை உள்ள எல்லாரும் தங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் தெரிவித்து
எங்களுக்கு உதவி புரியும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். அவைகளை நாங்கள்
நிச்சயமாய் பரிசீலிப்போம். அவர்களுக்கோ நாட்டு மக்களுக்கோ ஏமாற்றம் ஏற்படாத
வகையில் அதை நடத்தி வைப்பதற்காக அவர்களின் யோசனைகளை நாங்கள் நன்கு
கவனிப்போம்.
படம்
அசையுமா என்பதே மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின்
இறுதியில், சலனப்படங்கள் எனும் மவுனப்படங்களை லூமியர் சகோதரர்கள் மூலம்
உலகம் கண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை ஆகிய
நகரங்களில் வாழ்ந்த மக்களுக்கும் இத்தகைய படங்களைக் காணும் வாய்ப்பு
கிடைத்தது. 1897-ல் சென்னை விக்டோரியா டவுன்ஹாலிலில் முதன்முதலாக மவுனத்
திரைப்படம் திரையிடப்பப்பட்டபோது அது மாபெரும் பண்பாட்டு மாற்றத்தை
ஏற்படுத்தப்போகிறது என்பதை யாரும் உணரவில்லை. ஏதோ ஒன்று புதிதாக
வந்திருக்கிறது என்று ஆச்சரியத்துடன் அசையும் படங்களைப் பார்த்தார்கள்.இது
ஒரு புதிய கலை என்பதைக் கண்டுணர்ந்த முதன்மையாளர்களில் தமிழகத்தைச்
சேர்ந்த ரயில்வே தொழிலாளியான சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர்
முக்கியமானவர். பிரான்ஸ் நாட்டிலிலிருந்து இந்தியாவுக்கு வந்து படம்
காட்டிய டூபாண்ட் என்பவரிடமிருந்து படச் சுருள்களையும் படம் காட்டும்
கருவியையும் வாங்கிய சாமிக்கண்ணு வின்சென்ட் அதை சென்னையில் தொடங்கி பல
நகரங்களிலும் வாழ்ந்த மக்களுக்குக் காட்டினார். இதற்காக அவர் ஆங்காங்கே
தற்காலிலிகக் கொட்டகைகளை அமைத்தார். அத்தகைய கொட்டகைகள் பிற்காலத்தில்
நிரந்தரமாகி, "டெண்ட் கொட்டாய்' என பேச்சுவழக்கில் அழைக்கப்பட்டன. கோவையில்
சாமிக் கண்ணு வின்சென்ட் படத்தயாரிப்பாளராக மாறியதுடன், வெரைட்டி ஹால்
என்ற திரையரங்கத்தையும் அமைத்தார். இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மவுனத் திரைப்படங்கள் மீதான கவனம்
அதிகரித்தது. 1910-ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தாதாசாகேப்
பால்கே என்பவர் மும்பையில் திரையிடப்பட்ட கண்ச்ங் ர்ச் ஈட்ழ்ண்ள்ற் (இயேசு
கிறிஸ்துவின் வாழ்க்கை) என்ற வெளிநாட்டு மவுனப்படத்தைப் பார்த்தார்.
வெண்திரையில் ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது
அவரது மனத்திரையில் புதிய காட்சிகள் ஓடின. இயேசுவுக்குப் பதில் ராமரும்
கிருஷ்ணரும் தெரிந்தனர். ஜெருசலத்திற்கும் பெத்லேஹமிற்கும் பதில் கோகுலமும்
அயோத்தியும் தோன்றின. நம்மிடமும் சொல்வதற்கு நிறைய கதை இருக்கின்றனவே
அவற்றை ஏன் மவுனத் திரைப்படங்களாக சொல்லக்கூடாது என நினைத்தார் பால்கே.
அதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். ஏராளமான கஷ்டங்கள், அலைச்சல்கள், கடும்
உழைப்பு இவற்றின் பயனாய் 1912-ல் இந்தியாவின் முதல் திரைப்படமான "ராஜா
அரிச்சந்திரா' என்ற மவுனப் படத்தைப் பால்கே திரையிட்டார். அது மக்களைக்
கவர்ந்தது. இந்தியாவில் புராணக்கதைகளுக்கா பஞ்சம்? அவையெல்லாம்
மவுனப்படங்களாக வெளிவரத் தொடங்கின. திரையில் படம் ஓடும், அருகில் ஒருவர்
நின்று கதையை விளக்கிக்கொண்டிருப்பார். மக்கள் ரசித்துப்
பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

தமிழகத்திலும்
படம் எடுக்கும் முயற்சிகள் தொடங்கின. மோட்டார் உதிரி பாகங்கள்
வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரான ஆர்.நடராஜ முதலிலியார் என்பவர் 1916-ல்
எடுத்து வெளியிட்ட "கீசகவதம்' என்ற திரைப் படமே தமிழின் முதல் மவுனப்படம்.
தென்னிந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களுக்கும்கூட இதுவே முதல்படம்.
கேரளாவின் முதல் மவுனப்படம் 1928-ல் வெளியானது. ஜே.சி.டேனியல் என்பவர்
தயாரித்த "விகதகுமாரன்' என்ற அப்படம் புராணக்கதையைப் பேசவில்லை. மலையாள
சமூகத்தைப் பிரதிபலிலித்தது. அதில் உயர்குலத்துப் பெண் வேடத்தில்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நடித்ததைப் பொறுத்துக்கொள்ள
முடியாமல் அப்படம் திரையிடப்பட்ட அரங்குகளில் கேரளாவின் உயர்சாதியினர்
வன்முறை செய்தனர். படம் நிறுத்தப்பட்டது. அதன்பின் "மார்த்தாண்டவர்மா' என்ற
படம் 1931-ல் தமிழிலும் மலையாளத்திலும் வெளியானது. தென்னிந்திய மொழிகளில்
எடுக்கப்பட்ட மவுனப்படங்களில் தற்போது முழுமையாக பாதுகாக்கப்பட்டிருப்பது
இந்த ஒரு படம் மட்டும்தான். அசையும்
மவுனப் படங்களையே மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த
காலத்தில், படம் பேசுவதை எப்படிப் பார்த்திருப்பார்கள்? "கலிலி முத்திப்
போயிடிச்சி. அதனால்தான் படம்கூட பேசுகிறது' என்று மிரண்டு போய்
திரையரங்கத்தை விட்டு வெளியே வந்தவர்களும் உண்டு. ஆனால், பேசும் படங்கள்
பெரும்பாலான மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி, பெரும் வரவேற்பைப்
பெற்றது. 1931-ஆம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி சனிக்கிழமையன்று வெளியானது
இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா'. அதே ஆண்டில்தான் தமிழின் முதல்
பேசும்படமான "காளிதாஸ்' வெளியானது. 1931 அக்டோபர் 31 சனிக்கிழமையன்று
வெளியான இப்படம் தமிழும் தெலுங்கும் கலந்த பேசிய படம். எனவே,
தெலுங்கிற்கும் இதுவே முதல் பேசும்படம். பெருமளவில்
புராணக்கதைகளும் ஓரளவு சமூகக் கதைகளும் திரைப்படங்கள் மூலம் மக்களிடம்
சென்று சேர்ந்தன. நாடகங்களிலும் தெருக்கூத்துகளிலும் பொம்மலாட்டங்களிலும்
கதாகாலட்சேபங்களிலும் பார்த்து ரசித்த கதைகளை கருப்பு-வெள்ளையில் வெளிவந்த
இப்படங்கள் காட்டியதால் மக்களுக்கு இது புதுமையான கலைவடிவமாக இருந்தது.
திரைப்படங்கள் இந்திய மக்களின் வாழ்க்கையோடு கலக்கத் தொடங்கின. சுதந்திரப்
போராட்டத்தை காந்தியடிகளும் காங்கிரஸ் இயக்கமும் தீவிரமாக முன்னெடுத்த
காலம் என்பதால் திரைப்படங்களின் வாயிலாகவும் விடுதலைக் குரல்கள் ஒலிலித்தன.
காளிதாஸ் படம் புராணக்கதையின் அடிப் படையில் அமைந்தது என்றாலும் அதில்
காந்தியடிகளைப் புகழும் பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தி, வங்காளம்
உள்ளிட்ட பிறமொழிகளில் 1930-களிலும் 1940-களிலும் வெளியான படங்களில்
விடுதலை உணர்வை ஊட்டக்கூடிய காட்சிகள் இடம்பெற்றன. வி.சாந்தாராம்,
கே.ஏ.அப்பாஸ், ராஜ்கபூர் போன்ற இயக்குநர்கள் இந்தியில் நல்ல படங்களைத்
தந்தனர். தமிழில் எல்லீஸ் ஆர்.டங்கன் என்ற அமெரிக்கரும், கே.சுப்ரமணியம்,
கே.ராம்நாத் போன்ற இயக்குநர்களும் பல படங்களைத் தந்தனர். பிரபல எழுத்தாளர்
கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி கே.சுப்ரமணியம் இயக்கிய "தியாக பூமி' என்ற
படம் விடுதலைப் போராட்டத்தைத் தூண்டுவதாகக் கூறி அப்படத்திற்கு ஆங்கில
அரசாங்கம் தடை விதித்தது. பாடலும்
இசையும் இந்தியப் படங்களில் முக்கிய இடம் பிடித்தன. தமிழில்
எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள்,
எம்.எல்.சுப்புலட்சுமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்
போன்றவர்கள் சொந்தக்குரலிலில் பாடி நடித்தனர். அவர்களின் பாடலுக்காகவே
ரசிகர்கள் பல முறை படங்களைப் பார்த்தனர். திரைப்படங்களில் நடித்த
நடிகர்-நடிகையர் நட்சத்திரங்கள் போல ரசிகர்களின் இதய வானில் மின்னினர்.
தியாகராஜபாகவதர் நடித்த "ஹரிதாஸ்' என்ற திரைப்படம் மூன்று தீபாவளிகளைக்
கண்ட பெரும் வெற்றிப்படமானது. இந்திய
சுதந்திரத்திற்குப் பிறகு திரைப்படங்களில் ஜமீன்தார் ஆதிக்கம், உயர்சாதி
ஆதிக்கம் கொண்ட குடும்பக் கதைகளும் காதல் காட்சிகளும் அதிகரித்தன.
நேரடியாகப் பாடும் நடிகர்-நடிகையரின் செல்வாக்கு குறைந்து, புதுமுகங்கள்
அறிமுகமாகி வித்தியாசமான நடிப்பு, நடனம், சண்டைக்காட்சிகள் மூலம் புகழ்
பெற்றனர். இந்தியில் குருதத், திலீப்குமார், நர்கீஸ், மதுபாலா, தேவ்ஆனந்த்,
மீனாகுமாரி, வகீதா ரகுமான் போன்றோர் புகழ்பெற்றனர். மதர் இந்தியா போன்ற
இந்திப் படங்கள் சராசரி மக்களின் வாழ்க்கையைக் காட்டின. மராட்டிய மொழித்
திரைப்படங்களும் வங்க மொழிப் படங்களும் சமுதாயத்தைப் பிரதிபலிலிக்கும்
வகையில் அமைந்தன. புகழ்மிக்க இயக்குநர் சத்யஜித்ரே 1955-ஆம் ஆண்டு இயக்கிய
பதேர் பாஞ்சாலிலி திரைப்படம் கதையமைப்பிலும் உருவாக்கத்திலும் மாறுபட்டதாக
அமைந்தது. 1950-களில்தான்
மலையாளத் திரையுலகமும் தன் முத்திரையைப் பதிக்கத் தொடங்கியது. மலையாள
மொழியின் முதல் பேசும்படம் 1938-ல் எஸ்.நொட்டானி இயக்கத்தில் சேலம் மாடர்ன்
தியேட்டர்ஸ் சுந்தரம் தயாரிப்பில் வெளியான "பாலன்'. மற்ற மொழிகளைவிட
மலையாளம் சற்று தாமதமாகத்தான் திரைப்படத்தில் அடியெடுத்து வைத்தது
என்றாலும் மவுனப் படக்காலத்திலிருந்தே அது புராண- இதிகாசங்களைவிட தன்
மண்ணின் தன்மையை வெளிப்படுத்தும் கதையமைப் பிலேயே கவனம் செலுத்தியது.
நிலவுடைமை, சாதி ஆதிக்கம் இவற்றின் பிடியில் உள்ள சமுதாயத்தை அது தன்
படங்களில் காட்டியது. 1954-ல் வெளியான நீலக்குயில் அத்தகைய படங்களில்
ஒன்று. மலையாள எழுத்தாளர்களின் பங்களிப்புடன் அம்மொழித் திரைப்படங்கள்
வெளியாயின.தமிழ்த்
திரையுலகம், இந்திய விடுதலைக்குப்பிறகு பல மாற்றங்களைக் கண்டது. திராவிடர்
இயக்கத்தின் வளர்ச்சியும் தாய்மொழியுணர்வும் பகுத்தறிவு கருத்துகளும்
தமிழ்த் திரைப்படங்களின் திசையை மாற்றின. அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி,
ஓர் இரவு, கலைஞர் மு.கருணாநிதியின் மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா போன்ற
படங்கள் கதையமைப்பிலும் வசனத்திலும் புதுமையையும் புரட்சியையும்
ஏற்படுத்தின. சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பழக்கவழக்கங் களை
சுட்டெரிக்கும் வகையில் காட்சியமைப்புகள் அமைந்தன. எம்.ஜி.ராமச்சந்திரன்
(எம்.ஜி.ஆர்), சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற திராவிட
இயக்கத்திலிலிருந்து வந்த நடிகர்கள் தங்கள் இயக்கக் கொள்கைகளைத்
திரைப்படங்கள் மூலம் பரப்பினர். சிவாஜி கணேசனின் அபார நடிப்பாற்றல்
திரையுலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கதாநாயகர்களின்
காலமாகவும் காதல் காவியங்களின் யுகமாகவும் 1960 மாறியது. இந்தியில்
வெளியான மொகலே ஆஜம் என்ற பிரம்மாண்ட திரைப்படம் சலீம்- அனார்கலிலி காதல்
கதையை புதிய கோணத்தில் சொன்னது. தமிழில் மக்கள்திலகமாக எம்.ஜி.ஆரும்,
நடிகர் திலகமாக சிவாஜிகணேசனும் ரசிகர்கள் மனதில் உயர்ந்து நின்றனர்.
அவர்களுக்கென ரசிகர் மன்றங்கள் உருவாகி பலமிக்க அமைப்புகளாக மாறின. அரசியல்
தொடர்புகள் கொண்டவர்களாக இருபெரும் நட்சத்திரங் களும் இருந்ததால் அவை
அவர்களின் படங்களிலும் வெளிப்பட்டன. ஏழைகளுக்கு உதவும் நாயகனாக எம்.ஜி.ஆர்
தொடர்ந்து நடித்தார். குடும்பப்பொறுப்புள்ள பாத்திரங்களிலும்
வீரபாண்டியகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வரலாற்று நாயகர்களாகவும்
சிவாஜி நடித்தார். தெலுங்குத் திரையுலகிலும் இதே கால கட்டத்தில்
என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகியோர் ரசிகர்களின்
ஆராதனைக்குரியவர்களாயினர். ராமர், கிருஷ்ணர் போன்ற புராணக் கடவுள்
வேடங்களில் ராமராவ் தொடர்ந்து நடித்து, மக்கள் மனதில் நிலை பெற்றார்.
தேவதாஸ் போன்ற காதல் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றார்
நாகேஸ்வரராவ். கன்னட பட உலகில் ராஜ்குமார், அம்மாநில மக்களின் அபிமானம்
பெற்ற நடிகரானார். மலையாளத்
திரைப்பட உலகம் வழக்கம்போல தனது மண்ணையும் அதனையொட்டிய வாழ்வையும் பதிவு
செய்துவந்தது. ராமுகாரியத் இயக்கத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய
செம்மீன் நாவல் அதே பெயரில் 1965-ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்றது.
மலையாளத்தின் பக்கம் இந்தியத் திரையுலகின் பார்வை திரும்பிய அவ்வேளையில்
மராட்டியம், அசாம், வங்கமொழிப் படங்களும் மண் மணக்கும் படங்களாக வெளிவரத்
தொடங்கின. எனினும், வடமாநிலங்களில் இந்தி மொழிப் படங்களே ஆதிக்கம்
செலுத்தின.சினிமாவின்
தாக்கம் அரசியலிலிலும் எதிரொலிலிக்கத் தொடங்கியது. தமிழ்த் திரையுலகில்
இலட்சிய நடிகர் எனப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற
தேர்தலிலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1967-ஆம் ஆண்டு
நடைபெற்ற தேர்தலிலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள்
திலகம் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அவர்
சார்ந்திருந்த தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. 1971-ஆம் ஆண்டு தேர்தலிலில்
எம்.ஜி.ஆர் சட்டமன்றத்திற்கும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடாளுமன்றத்திற்கும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1972-ல் தி.மு.கவிலிலிருந்து நீக்கப்பட்ட
எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கினார். அவர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் 1977-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது.
தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று 1987வரை முதல்வராக இருந்து காலமானார்
எம்.ஜி.ஆர். அதுபோல தெலுங்கு பட நாயகரான என்.டி.ராமராவ் ஆந்திராவில்
தெலுங்குதேசம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி 1981-ல் அம் மாநிலத்தின்
முதல்வரானார். தனிப்பட்ட
செல்வாக்கை அரசியல்மயமாக்கிக் கொண்ட நடிகர்கள் தென்மாநிலங்களில்
வலுப்பெற்றிருந்த நிலையில் இந்திப் படங்களில் ராஜேஷ்கண்ணா, தர்மேந்திரா,
ரிஷிகபூர் போன்ற நடிகர்கள் காதல் படங்களிலும் சண்டைப்படங்களிலும் நடித்து
ரசிகர்களைக் கவர்ந்து வந்தனர். 1970-களின் பிற்பகுதியில் இந்த நிலை மெல்ல
மெல்ல மாறியது. இந்தியாவில் மாறிவந்த அரசியல் சூழ்நிலை, வேலைவாய்ப்பின்மை,
நக்சலைட்டுகள் எழுச்சி இவற்றின் காரணமாக கோபக்கார இளைஞர் களாக நாயகர்கள்
உருவாகினர். இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படும்
அமிதாப்பச்சன் அத்தகைய கதாபாத்திரம் கொண்ட பல படங்களில் நடித்தார்.
1980-களின் இறுதி வரையில் அத்தகைய படங்கள் வெளிவந்தன. தமிழில் கமலஹாசன்,
ரஜினிகாந்த் என இருபெரும் நட்சத்திரங்கள் ரசிகர்களின் நெஞ்சில் குடியேறி,
வெற்றிகரமான பல படங்களை அளித்தனர். தமிழ்த்திரையுலகில்
1960-களில் முக்கோணக் காதல் கதைகளைச் சொன்ன இயக்குநர் ஸ்ரீதர், 1970-களில்
ஆண்-பெண் மன உணர்வுகளை குடும்பச் சிக்கல்களுடன் இணைத்துச்சொன்ன இயக்குநர்
கே.பாலசந்தர் இவர்களைத் தொடர்ந்து தமிழ்த்திரையுலகின் போக்கை மாற்றும்
வகையில் இயக்குநர்கள் மகேந்திரன், பாரதி ராஜா ஆகியோர் தங்கள் படங்களைத்
தந்தனர். ஸ்டுடியோவுக்குள் இருந்த திரைப்படங்களை கிராமங்களை நோக்கித்
திருப்பியவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே, மண்வாசனை, முதல்மரியாதை
உள்ளிட்ட படங்களில் தென்மாவட்டத் தமிழர்களின் வாழ்க்கை முறையைத் தன்
படங்களில் உயிரோட்டமாக அவர் பதிவு செய்தார். திரைப்படம் என்பது காட்சி
ஊடகம் என்பதையும் பேச்சை விட அழுத்தமான காட்சிகளே முக்கியம் என்பதை
இயக்குநர் மகேந்திரன் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் உள்ளிட்ட தனது
படங்களில் காட்டினார். அசோக்குமார், பாலுமகேந்திரா போன்ற ஒளிப்பதிவாளர்கள்
வசனங் களற்ற திரைமொழியை உருவாக்கினர். தமிழ்ப்படத்தின் தரத்தை
மேம்படுத்தியவர்களில் மணிரத்னம் குறிப்பிடத்தக்கவர். பேசும்படம்
உருவான காலத்திலிலிருந்தே இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இசையும்
பாடலும் முக்கியத்துவம் பெற்றன. இந்தியில் சங்கர்-ஜெய்கிஷனில் தொடங்கி
நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், லட்சுமிகாந்த்- பியாரேலால், ஆர்.டி.பர்மன் எனப் பல
இசையமைப்பாளர்கள் இந்தியத்தன்மையுடன் கூடிய இசையைக் கொடுக்க குல்சார்,
ஜாவேத் அக்தர் போன்றவர்கள் செழுமைமிக்க உருதும் இந்தியும் கலந்த பாடல்களைத்
தந்தனர். முகமது ரஃபி, கிஷோர்குமார், லதாமங்கேஷ்கர், ஆஷாபோன்ஸ்லே போன்ற
பாடகர்கள் அவற்றிற்கு தங்கள் குரலால் உயிரூட்டினர். வங்கம், மராட்டியம்,
தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பாடலும் இசையும் அந்தந்த
மண்ணின் மகத்துவத்தை எடுத்துச்சொல்லிலின.தமிழில்
ஜி.ராமநாதனில் தொடங்கி விஸ்வநாதன்- ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் என
வளர்ந்த திரையிசை இளையராஜா என்ற இசைக்கலைஞர் மூலம் தனித்துவம் பெற்றது.
தமிழ் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புற இசையைத் திரைக்கேற்ற வகையில்
மிகச்சிறப்பாகக் கொடுத்தவர் இளையராஜா. அவரைத் தொடர்ந்து வந்த ஏ.ஆர்.ரகுமான்
திரைக்குத் தேவையான மேற்கத்திய இசையை மற்ற இந்திய இசை வகைகளுடன் கலந்து
தந்து, உலக அளவில் புகழ்பெற்று ஆஸ்கர் விருது வென்றார். பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம், கண்ண தாசன், வைரமுத்து எனத் தமிழில் காலந்தோறும்
இலக்கியத்தை திரை மூலம் வடிக்கும் கவிஞர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா,
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன், வாணிஜெயராம், யேசுதாஸ், சித்ரா எனப்
பாடகர்கள் தமிழ்த் திரை யிசைக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். ரசிகர்களுக்குப்
பொழுதுபோக்காகவும், திரைத் துறையினருக்குத் தொழிலாகவும் அமைந்துள்ள
சினிமா என்பது விஞ்ஞானம் தந்த அற்புதமான கலை வடிவம். பலரும் இதை
வியாபாரமாகக் கையாண்டாலும், இந்தக் கலையின் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்தவும், வாழ்க்கையின் பன்முகத்தன்மையை எடுத்துச் சொல்லவும்
முடியும். அத்தகையப் பணியை மேற்கொள்ளும் படைப்பாளிகளும் நடிகர்களும்
எல்லாக் காலத்திலும் குறைவான அளவிலேயே இருந்தாலும் அவர்கள் தங்கள்
பணிகளைத் திறம்படவே செய்திருக் கிறார்கள். பெண்கள் இத்துறையில் நீண்டகாலம்
கவர்ச்சிப் பதுமைகளாகவே பயன்படுத்துப்பட்டு வந்தனர். நர்கீஸ்,
ஸ்மிதாபாட்டீல், ஷபனா ஆஸ்மி, பானுமதி, மீராநாயர் உள்ளிட்டவர்கள்
திரைத்துறையில் பெண்களின் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்தனர். எனினும்,
இத்துறையில் பெண்கள் இன்றளவும் போராட வேண்டியிருக்கிறது.உலகமயமும்
புதிய பொருளாதாரக் கொள்கையும் தன் கால்களை அழுந்தப் பதித்த
1990-களிலிலிருந்து இந்த 2013-வரை இந்தியத் திரையுலகின் போக்கு பரந்து பட்ட
வியாபாரத்தன்மை கொண்டதாகவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு
ஏற்றதாகவும் மாறியுள்ளது. வழக்கமான காதல், நகைச்சுவைக் கதைகளிலிலிருந்து
தீவிரவாதிகள், மதவெறியர்கள், நிழலுலக தாதாக்கள், அரசியல் கொள்ளையர்கள்,
சமூக ஒழுங்கீனங்கள் வரை பலவற்றையும் படமாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இன்றைய கல்விமுறையை கேள்விக்குட்படுத்தி புதியமுறையை உணர்த்திய அமீர்கானின்
"தாரே ஜமீன் பர்', மொபைல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இளைஞர்களைத் திசை
திருப்புவதைக் காட்டும் பாலாஜி சக்திவேலிலின் "வழக்கு எண் 18/9' போன்ற
படங்கள் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களின் அடையாளமாக விளங்கு கின்றன. மலையாளத்தில் வெளியான
"செல்லுலாய்டு', தமிழில் வந்த "பரதேசி' போன்ற படங்களின் மூலம்
மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளும் தொடர்கின்றன.புதிய
புதிய தொழில்நுட்பங்களால் திரைப்படம் என்பது பல கட்டங்களை எட்டியுள்ளது.
விளம்பரப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள்
என கலையார்வத்துடன் இத்துறையில் கால்பதிப்பதற்கேற்ற வகையில் அகலமான வாசல்
திறக்கப்பட்டுள்ளது. புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கும் காலமாகத்
திரையுலகம் மாறியுள்ளது. இந்த மாற்றத்தை நூற்றாண்டு காணும் இந்திய சினிமா
சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
Source:நக்கீரன்