Wednesday, February 27, 2013

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை என்பது என்ன ?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை என்பது என்ன ?
“தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 வருடமாகிவிட்டது. இந்த அணை பலவீனமாகிவிட்டது. எனவே உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து. புதிய அணை கட்ட வேண்டும். இப்போதுள்ளதை உடைக்க வேண்டும்” என்பது கேரள அரசின் நிலை. “அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. புதிய அணை தேவையில்லை. இருக்கும் அணையை அழித்து புது அணை கட்டுவதில் இறங்கினால், தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவ்ட்டங்களின் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரிலும் விவசாயம் பாதிக்கப்படும்” என்பது தமிழக அரசின் நிலை.
இரண்டில் எது உண்மை ?
அணை பலவீனமாகிவிட்டது என்று 1979ல் கேரள அரசு சொல்ல ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்த பிரச்சினை வளர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்காக வைக்கப்பட்டது. நிபுணர் குழுவை அமைத்து பிரச்சினையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அணை பலவீனமாக இல்லை என்றும் தற்காலிகமாக குறைத்துத் தேக்கிய நீரின் அளவை பழையபடி அதிகரிக்கலாமென்றும் 2006ல் தீர்ப்பு வழங்கியது. இந்த்த் தீர்ப்பை எதிர்த்து கேரளத்திலிருந்து தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
அப்படியானால் விஷயம் ஏற்கனவே முடிந்து போய்விட்டதே? ஏன் மறுபடியும் பிரச்சினை ?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு எதிர்த்து தோல்வியடைந்தபின், அணைகள் பாதுகாப்புக்கென்று ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படவிடாமல் தடுத்தது. காவிரி நீர் பிரச்சினையிலும் இதே போல உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகம் சட்டம் கொண்டு வந்தபோது அந்த சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டி கேரள அரசின் சட்டமும் செல்லாது என்று தமிழக அரசு போட்ட வழக்கில் தொடர்ந்து இன்னும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை வருவதற்கு சற்று முன்னதாக கேரளத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்ட டேம் 999 படம் வெளியானது. அணை உடைந்து மாபெரும் விபத்து ஏற்படுவது பற்றிய படம் இது. கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானம் செய்யக் கூடிய இடைத் தேர்தல் நடக்கும் சமயம். எல்லாமாக சேர்ந்துகொண்டு கேரள மக்களின் பயத்தை கிளப்பிவிட்டு அரசியல் லாபமடையும் நோக்கத்தில் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது என்ற பிரசாரம் எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த அணை யாருக்கு சொந்தம் ? கேரளாவுடையதா? தமிழ்நாட்டுடையதா?
முல்லைப் பெரியாறு அணை ஒரு விசித்திரமான அணை. கட்டப்பட்ட அணை தமிழக அரசுக்கு சொந்தமானது. ஆனால் கட்டியிருக்கும் இடம் கேரளாவுடையது என்ற அடிப்படையில் தமிழக அரசுக்கு 999 வருட குத்தகையில் தரப்பட்டிருக்கிறது.
அப்படியானால் அணை கட்டப்பட்டிருக்கும் பெரியாறு ஆறு யாருக்கு சொந்தமானது ?
பெரியாறு ஆறு உற்பத்தியாவது தமிழ்நாட்டில்தான்.திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் சிவகிரி மலையில்தான் இந்த ஆறு உற்பத்தியாகி வடக்கு நோக்கி 48 கிலோமீட்டர் ஓடி கேரளாவுக்குள் நுழைந்து அங்கிருக்கும் முல்லையாற்றில் சேர்ந்து பின் கிழக்கு நோக்கிச் சென்று இன்னும் பல ஆறுகளுடன் அங்கே இணைந்து பிரும்மாண்டமாகி கடைசியில் அரபிக் கடலில் கலக்கிறது. வீணாகும் நீரை பயன்படுத்தி தமிழகத்தின் தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையையும் விவசாயப் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்யல்லாமென்பது 160 வருடம் முன்பு உதயமான திட்டம். அதை பிரிட்டிஷ் ராணுவப் பொறியாளர் மேஜர் ஜான் பென்னிகுயிக் கடும் சிரமத்துடன் நிறைவேற்றினார். பெரியாறு நீர்த்தேக்கத்தை செயற்கையாக ஏற்படுத்தி அதிலிருந்து தமிழகத்துக்கு நீர் வருவதற்காக மலையைக் குடைந்து சுரங்கக் கால்வாய் உருவாக்க வேண்டியிருந்தது. முதற்கட்டத்தில் கட்டுமானம் வெள்ளத்தில் உடைந்ததும் பிரிட்டிஷ் அரசு பணம் தர மறுத்துவிட்டது. பென்னிகுயிக் தன் சொத்தை விற்றும் அடமானம் வைத்தும் சொந்தச் செலவில் அணையை கட்டினார். அவருடைய சாதனையை நேரில் கண்டபின்னர் அரசு பணத்தை திருப்பிக் கொடுத்தது. இந்தியாவின் இரண்டு பருவ மழைகளிலிருந்தும் பயனடையக்கூடிய ஒரே மலைப்பகுதியில் இருப்பதுதான் முல்லைப் பெரியாறு அணயின் சிறப்பான தனித்தன்மை.
அணை கட்டி நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால், அது பலவீனமாகியிருக்க வாய்ப்பு உண்டுதானே ?
பராமரிப்பு இல்லையென்றால் கட்டி இரண்டே வருடத்தில் கூட ஒரு வீடு நாசமாகப் போகும். தொடர்ந்து சீரான பராமரிப்பு இருந்தால் பல நூறு வருடம் கழித்தும் ஒரு கட்டுமானம் பலமாகவே இருக்க முடியும். கரிகாலன் கட்டிய கல்லணை 1900 வருடமாகியும் பலமாகவும் பயன்பாட்டிலும் இருந்துவருகிறது. காரணம் தொடர்ந்து பழுதுபார்த்து பராமரித்துவருவ்துதான். பென்னிகுயிக் முல்லைப்பெரியாறு அனையைக் கட்டிய சமயத்தில் கவர்னராக இருந்தவர் சர் ஆர்தர் காட்டன். அவர் ஆட்சியில் முல்லைப் பெரியாறுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட, கோதாவரி, தௌலேஸ்வரம், கிருஷ்ணா அணைகள் எல்லாம் தொடர்ந்த பராமரிப்பினால் பலமாகவே இருந்துவருகின்றன. முல்லைப்பெரியாறு அணையையும் அவ்வப்போது பலப்படுத்தும் பராமரிப்பு வேலையை தமிழகப் பொறியாளர்கள் செய்துவந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு இந்த வட்டாரத்தின் நில அதிர்ச்சி தன்மை உட்பட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்தபிறகே அணைக்கு ஆபத்தில்லை என்று கூறியிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வருவதால், கேரளாவுக்கு ஏதாவது இழப்பு இருக்கிறதா?
இல்லவே இல்லை. பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மில்லியன் கன மீட்டர். இன்னும் பத்து வருடம் கழித்துப் பார்த்தாலும் கூட,2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீட்டர்தான். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். இப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நடைமுறைதான் 1979லிருந்து பின்பற்றப்படுகிறது. இதை பழையபடி 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியும் நடக்கவில்லை. அப்படி உயர்த்தினால் கூட, தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீட்டர்தான்.கேரளத்துக்கு எந்த தண்ணீர் நஷ்டமும் இல்லை. மாறாக கேரளம் ஏற்கனவே தமிழகத்தின் தண்ணீரை மறைமுகமாக அனுபவித்து வருகிறது. தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அதிகாரப்பூர்வமாக 700 டன் அரிசி அனுப்பப்படுகிறது. இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் செலவாகிறது. கேரளத்தின் இதர உணவுத்தேவைகளையும் தமிழகம்தான் வழங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கேரளாவில் எந்த ஆற்றுப்படுகையிலிருந்தும் மணல் எடுக்க அனுமதியில்லை. தமிழக ஆற்றுப்படுகைகளிலிருந்து எடுக்கப்படும் மணல்தான் கேரளாவில் கட்டட வேலைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அப்படியானால் ஏன் கேரளா முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் இப்படி பீதியை கிளப்பிவிடுகிறது ?
இந்தப் பிரச்சினையின் வேர் தொடக்கத்திலேயே இருக்கிறது. பென்னிகுயிக் அணை கட்ட திட்டம் போட்டபோது அங்கே திருவிதாங்கூர் அரசும் இங்கே பிரிட்டிஷ் அரசும் இருந்தன. அணைப் பகுதி அமையவேண்டிய தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் 90 சதவிகிதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள். ஆனால் பிரிட்டிஷ் அரசு தவறாக அந்தப் பகுதிகளை திருவிதாங்கூருக்கு சொந்தமானது என்று கருதியது. அந்த அடிப்படையில் ஒப்பந்தம் போட்டது.
ஆனால் திருவிதாங்கூர் மகாராஜா இருமுறை பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக ஆய்வாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். அணை இருக்கும் இடம் சென்னை ராஜதானிக்கு சொந்தமானது. எனவே சுற்றிலும் இருக்கும் பகுதிகலையும் சென்னையே எடுத்துக் கொண்டு தனக்கு 6 லட்ச ரூபாய் தந்தால் போதுமானது என்று மன்னர் சொல்லியிருக்கிறார். அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளை சென்னை தனக்குக் கொடுத்துவிட்டு பதிலுக்கு முல்லைப் பெரியாற்றை சுற்றியுள்ள பகுதிகளையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை பிரிட்டிஷ் அரசு பொருட்படுத்தவே இல்லை. அப்போதே அப்படி செய்திருந்தால், பின்னாளில் மொழி வாரி மாநிலம் அமைக்கும்போது 90 சதவிகித தமிழர்கள் இருக்கும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடே இருந்திருக்கும்.
தங்கள் நிலத்தில் அணையை வைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தமிழகம் கையில் அணை தொடர்பான எல்லா அதிகாரமும் இருப்பதை கேரள அரசு விரும்பவில்லை. படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமாக அது பறித்துக் கொண்டது. 1979 எம்.ஜி.ஆர்- அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு தமிழக காவல் துறையிடமிருந்து கேரல காவல் துறைக்கு பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்கு செல்ல பொறியாளர்கள் உடபட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும் ? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக் ஏன் சொல்ல வேண்டும் ?
ஒரு வாதத்துக்காக, அணை பலவீனமாகிவிட்டதாகவும் ஒரு பூகம்பத்தில் உடைந்துவிடுமென்றும் வைத்துக் கொண்டால், 30 லட்சம் கேரள மக்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படத்தானே செய்யும் ?
இல்லை. இந்தக் கருத்தே கேரளத்தில் மலையாளிகள் ஆதரவைத் திரட்ட அவர்களிடையே பீதியைக் கிளப்ப சொல்லப்படும் கருத்துதான். அணை உடைந்து எந்த மக்களாவது பாதிக்கப்பட்ட்டால், அதில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்த வட்டாரத்தில் அவர்கள்தான் இப்போதும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தவிர அனை உடைந்தால் அந்த தண்ணீர் நேராக கீழே உள்ள இடுக்கி அணைக்குத்தான் போய்ச் சேரும். இடுக்கி அணையே முல்லைப் பெரியாறிலிருந்து வரும் உபரி நீரைத் தேக்கக் கட்டப்பட்டதுதான். வழியில் இருக்கும் ஊர்கள் குமுளி, ஏலப்பாறா இரண்டு மட்டுமே. குமுளி கடல் மட்டத்திலிருந்து 3350 அடி உயரத்திலும் ஏலப்பாறாI 4850 அடி உயரத்திலும் உள்ளன. முல்லைப்பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2890 அடி உயரத்தில்தான். எனவே அதில்லிருந்து வெள்ளம் இந்த ஊர்களுக்கு மலையேறிச் செல்ல முடியாது.
இந்தப் பிரச்சினையைத் திரும்பவும் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியாதா ?
பேச்சுகளின் மூலம் தீர்க்க முடியாத நிலையில்தான் நீதிமன்றத்தை இரு தரப்புமே அணுகுகின்றன. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதுதான் முறை. ஆனால் கேரள அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறது. மேல் முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட
பின்னரும் உத்தரவை ஒப்புக் கொள்ள மறுத்து, அணைக்கு ஆபத்து என்று மக்களிடையே கலவரத்தை தூண்டிவிட்டு தான் விரும்புவதை சாதிக்க நினைக்கிறது.
அப்படியானால் என்னதான் தீர்வு ?
நிச்சயம் வன்முறை உதவாது. இங்கே நாயர் டீக்கடையையோ மேனன் நகைக்கடையையோ தாக்குவது தீர்வல்ல. பதிலுக்கு கேரளத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல் அங்கே ஆரம்பிக்கும். இதற்கு முடிவே இல்லை. கேரளத்திலேயே உண்மை நிலையை அறிந்தவர்கள் உண்டு. இலக்கியவாதி பால் சக்கரியா, மத்திய நீரியல் கழகத் தலைவர் தாமஸ் போன்றோர் உண்மை நிலையை பகிரங்கமாகப் பேசியவர்கள். ஜெயலலிதா போல மலையாளத்தில் நன்றாகப் பேசத் தெரிந்த தமிழகத் தலைவர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தேவையானால் நேரில் கேரள நகரங்களுக்கு சென்றும் மலையாளத்திலேயே பேசி மலையாளிகளிடையே தூண்டிவிடப்பட்டிருக்கும் பயத்தை நீக்க முயற்சிக்கலாம். தமிழக சினிமா கலைஞர்களுக்கு கேரளத்தில் சாதாரண மக்களிடையே பெரும் செல்வாக்கு இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் அங்கே பெரும் வசூலைக் குவிக்கின்றன. தமிழ் சினிமா பாடல்கள் இல்லாத கேரள ஊரே இல்லை. எனவே தமிழ் சினிமா பிரமுகர்கள் கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொய் பயத்துக்கெதிரான பிரசாரம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஏற்க மறுத்தால் அந்த அரசை அரசியல் சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அதைப் பயன்படுத்த முன்வரும்படி மத்திய அரசை நாம் வற்புறுத்த வேண்டும்.தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு வழங்காமல் ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும்.

Saturday, February 23, 2013

பண்டைய இந்திய வரலாறு


வேதகால இலக்கியத்தின் துவக்க காலத்திற்கு இந்தியாவின் நாகரிக உதயத்தை தொடர்புபடுத்துவது ஒரு காலப் பிழையாகும். ஏனெனில் ஹரப்பா நாகரிகம் என்றும், சிந்துவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்படும் முன்னேற்றமடைந்த பண்பாடு கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகி இருந்தது. இலக்கியச் சான்றுகள், அகழ்வாராய்ச்சிச் சான்றுகளைவிட நம்பத் தகுந்தவை என்ற நம்பிக்கையே, இக்காலப்பிழை தோன்றுவதற்கு காரணமாகும். பழமையின் பொருளாய எச்சங்களைக் கண்டுபிடித்துப் பொருள் காணும் தன்மையால் அகழ் வாராய்ச்சி இரண்டு ஆய்வுப் பகுதிகளுக்குச் சான்றுகளை அளிக்கிறது. ஒன்று தொழில் நுணுக்கம் பற்றிய ஆய்வு, எப்படிப் பண்பாடுகள் மாறுகின்றன என்பதை அறிய இவ்வாய்வு துணை புரிகிறது. மற்றொன்று சூழல் ஆய்வு என்கிற எக்காலஜி (Ecology). இவ்விரு வகை ஆய்வு களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மதிப்பிடப் பெரிதும் துணைபுரிகின்றன. இலக்கியச் சான்றுகள் முழுவதையும் நாம் சேகரித்துவிட்டபடியால் புதிய சான்றுகளை அகழ் வாராய்ச்சிதான் அளிக்க வல்லது. ஹரப்பா எழுத்துகள் இன்னும் விளக்கப்படாததால், இலக்கியச் சான்றுகளில் மிகவும் முந்தையது வேதகாலத்து இலக்கியங்களே. மேற்கூறிய காலப்பிழைக்கு மற்றோர் காரணம, வேதகால மக்களே இந்திய நாகரிகத்தை தோற்றுவித்தவர்கள் என்ற நம்பிக்கையாகும். ஒரு பண்டைக்கால மக்களின் சந்ததிகள் வாழ்கிற வரைக்கும் பழைய பண்பாடு மறைந்து போவதில்லை. இது முன்னேறிய நகர நாகரிகங் களை பொறுத்தவரை உண்மையாகும். ஏனெனில் அவை நகரங்களில் மட்டும் இன்றி, சுற்றியிருக்கும் கிராமப்புறங்களிலும், தங்கள் செல்வாக்கைப் பரப்புகின்றன. நகர நாகரிகங்கள் நிலை கொண்டிருந்த இடங்கள் அழிந்து போகலாம். ஆனால் அவ்விடங்களில் குடியேறுகிற புதியவர்களின் பண்பாட்டைப் பழைய பண்பாடு பாதிக்கிறது. அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகள், பிற்கால ஹரப்பா பண்பாட்டிற்குப் பின் பல பண்பாடுகள் தோன்றி நிலைபெற்றிருந்தன என்பதை நிரூபிக்கின்றன. இவை மேலைய இந்தியா, மாளவம், சிந்து கங்கைச் சமவெளி, சிந்து, தோ ஆப்-ஆப் முதலிலிய நிலப்பகுதிகளில் நிலைபெற்றிருந்தன. அப்பண்பாடுகள் ஹரப்பர்கள் யாராயிருந்த போதிலும், அவர்களிடமிருந்தே இந்திய நாகரிகத்தின் துவக்கத்தைக் காணவேண்டும்.

ஹரப்பா நகரங்கள் ஆரியர் படையெடுப்பால் அழிந்தன என்னும் கொள்கை இப்பொழுது சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது. மொகஞ்சதாரோ என்னும் நகரத்தில் மட்டும் வன்முறையின் சுவடுகள் தெரிகின்றன. அவை கூட வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய அனுமானங்களில் ஒன்று, சிந்துநதிப் பகுதியிலும், சிந்து கங்கைச் சம வெளியிலும், ராஜஸ்தானிலும் பாய்ந்த ஆறுகளின் நீரோட்டப் பாதைகள் மாறின. இக்காரணம் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. மொகஞ்சதாரோவில் அடிக்கடி வெள்ளத்தால் அழிவுகள் நேர்ந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஹரப்பா காலத்தில் இருந்த பாசன முறைகளால் நீரில் உப்புச் சேர்ந்திருக்கக் கூடும். இவற்றால் சூழ்நிலை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இம்மாற்றங்களால் அப்பகுதி முழுவதும் பாலைவனமாகிவிட்டது. சிந்து சமவெளியில் நகரங்கள் அழிந்து போனதைக் கொண்டு சூழ்நிலை மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை அறிய முடிகிறது. இப்பண்பாடு புதிய புவியியல் சூழ்நிலைகளில், புதிய குடியேற்றங்களின் செயல்பாட்டினால் புதிதாக உருவாகியது.

பல தொல்பொருள் வகைப் பண்பாடுகள் பலவற்றி லிலிருந்து புதிய நகர நாகரிகங்கள் தோன்றின. இவற்றைக் கூட ஆரிய நாகரிகம் என்று வகைப்படுத்திக் கூற முடியாது. வேதகால இலக்கியத்தின் காலத்தில் இந் நகரங்கள் உருவானதால் இவை ஆரியர் நாகரிக மெனக் கருதப்படுகிறது. இங்குப் பண்டையக் காலத்தில் வாழ்ந்த மக்கள் தொகுதியினரை ஆரிய இனத்தவ  ரெனக் கருத உறுதியான சான்றுகள் எவையும் இல்லை. தூய-ஆரிய இனமொன்று இந்தியாவில் வாழ்ந்திருந்த போதிலும், இன்றுவரை அவர்கள் ஓரினமாகவே எஞ்சியிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மிகையான கற்பனையின் துணையோடுதான் அவ்வாறு எதிர் பார்க்க முடியும். விஞ்ஞான உயிரியல் அத்தகைய நம்பிக்கைக்கு விரோதமானது. தூய இனம் என்று, ஒன்று நெடுநாள் கலப்புறாமல் அவ்வாறே இருக்க முடியும் என்பதை உயிரியல் விஞ்ஞானம் மறுக்கிறது. இனக் கலப்பால் உலக முழுவதும் தூய இனங்கள் சுருங்கிவரும் போக்கை உயிரியல் ஆய்வுகள் காட்டுகின்றன. ஒதுங்கிய இடங்களில் பிற மக்கள் குழுக்களிடமிருந்து தனித்து வாழ்கிற இனத்தொகுதியினர் கூட தூய இனத்தவர் என்று உறுதியாகச் சொல்லுவதற்கில்லை.

ரிக் வேதகால மக்கள் ""தாஸ்யூ' என்ற மக்களைப் பற்றி சப்பை மூக்கு உடையவர்கள் என்றும், கருப்பு நிறமுடையவர்கள் என்றும் கூறியதிலிலிருந்து, ஆரியர் வெள்ளை நிறமுடையவர், நிமிர்ந்த மூக்குடையவர்கள் என்று குறிப்பால் உணர்வதன்றி, அவர்கள் தனியான வேறு இனத்தவர்கள் என்று முடிவு கூறுவதற்கில்லை. வரலாற்று -உறுதி நோக்கில் ஆரியன் என்பது ஆரிய மொழி பேசியவர்களைக் குறிக்கிறது என்றுதான் தெரிகிறது. இக்காலத்தில் அம்மொழி சமஸ்கிருதம் என்பதில் ஐயமில்லை. (Cultural Pattern). பண்பாட்டில்-ரிக் வேத மக்கள், ஹரப்பா மக்களிடமிருந்து பெரிதும் வேறு பட்டவர்கள். ஹரப்பா மக்கள் நகரவாசிகள். செப்புக் கருவி களைப் பயன்படுத்தினர். ரிக் வேத மக்கள் மாடுகளை காக்கும் பொருளாதாரம் உடையவர்கள். நாடோடி வாழ்க்கையினர். ஆடு மாடு வளர்க்கும் தொழிலை முக்கியமானதாகக் கொண்டு, பயிர்த்தொழில் வாழ்க்கையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்கள் வழிபட்ட தெய்வங்களும், வழிபாட்டுச் சடங்கு களும் வெவ்வேறானவை.

சாம, யஜுர், அதர்வன வேதங்கள் குறிப்பிட்டுக் காட்டும் சமுதாயம், ரிக் வேத மக்களின் சமுதாயத்தினின்று வேறுபட்டதாகத் தெரிகிறது. இச்சமுதாயத்தின் பொருளாதார மையம்கூட தோ-ஆபுக்கும், நடுக் கங்கைச் சமவெளிக்கும் மாறிவிட்டது. இச்சமுதாயம் மாடுகளை காக்கும் நாடோடி வாழ்க்கையிலிலிருந்து, பயிர்த்தொழிலுக்கு  மாறி, அதன் பின்னர் நகர வாழ்க்கைக்கு முன்னேறிக் கொண்டிருந்ததாகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்களது குடியிருப்பு நிலப்பகுதிகளைப் போரில் வென்று கொண்டார்கள் என்று கருதுவதற்குச் சான்றுகள் இல்லை. எனவே பிற்கால வேத இலக்கியங்களில் இந்தோ ஆரிய மொழி பேசுவோருடைய பண்பாடும், அவர்களது வருகைக்கு முன்னர் இந்நிலப் பகுதிகளில் தங்கியிருந்த மக்களும் பண்பாடும் கலப்புற்றன என்று கொள்ளலாம். மொழியியல் சான்றுகள் இக்கொள்கையை வலுப் படுத்துகின்றன. திராவிட மொழியிலிலிருந்து பிறந்த சொற்கள் ரிக் வேதத்தில் உள்ளன. இச்சொற்கள் வேதகால சமஸ்கிருத மொழியில் நுழைந்துள்ளன. சமஸ்கிருத மொழியின் வளர்ச்சியை வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால், திராவிட மொழியிலிலிருந்து கடன் பெறப் பட்ட சொற்களில் பெரும்பான்மையானவை. கி.மு. 1000-லிலிருந்து 500 வரையிலான காலத்தில் நுழைந்தவை என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. இக்காலத்தையே பிற்கால வேத காலம் என்று குறிப்பிடுகிறார்கள். கங்கைப் பள்ளத் தாக்கிலும், வட இந்தியாவிலும் அக்காலத்தில் முன்நிலை-திராவிட மொழியை பேசிய மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். ப்ராஹ்யி, குருக், மால்டோ மொழிகள் பண்டைய மொழியின் எச்சங்களாகும் இந்தோ ஐரோப்பிய மொழிகளிலிலிருந்து பிறந்து வளர்ந்த வேறெந்த மொழியிலும் காணப்படாத ஆரியம் அல்லாத ஒலிப்பு முறைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன.

பெருங்கூட்டமாக வந்த ஆரியர் வடஇந்தியாவைப் போரில் வென்று அவர்களுக்கு முன் குடியிருந்த மக்களை அடிமைப்படுத்த அம்மக்களின் பண்பாட்டுக்கு வேறான தங்கள் மொழியையும், பண்பாட்டையும் நிறுவிக் கொண்டனர் என்ற கொள்கையை வரலாற்று ஆசிரியன் சந்தேகிக்காமல் இருக்க முடியாது. போர்களும் வெற்றிகளும், சிற்சில இருந்தனவென்றாலும், அவை தூர வடக்கில் மட்டுமேதான். ஆரியமொழி பேசும் மக்கள் வடஇந்தியாவிற்குள் குடியேறி அங்கு வாழ்ந்த மக்களோடு கலந்தனர் என்ற முடிவுக்கு வருவதே சான்றுகளுக்குப் பொருத்தமான முடிவாகும். பின்னர் உருவான பண்பாடு, இவ்விரு வகை மக்கட் குழுவினரின் கலப்பின் விளைவாகத் தோன்றியதாகும். வடஇந்தியாவின் பெரும்பகுதியில் இந்தோ ஐரோப்பிய மொழியை மக்கள் பேசத் தொடங்கினர். புதிய பண்பாட்டின் பொது இயல்பு இதுதான். இந்த நிகழ்ச்சி ஒரு சமூக சக்தியாகிவிட்டது. இதனை வரவேற்று வரலாற்று ரீதியாகக் காணவேண்டும்.

ஒரு மொழி பரவுவதற்குப் போர்- வெற்றி மட்டும் காரணமன்று. முன்னேறிய தொழில் நுணுக்கத்தோடு தொடர்புடைய ஒரு மொழி அக்காரணத்தாலேயே பரவக் கூடும் என்ற உண்மைக்கு உதாரணங்கள் பல வரலாற்றில் உள்ளன. கி.மு. இரண்டாயிரத்தில் தொடங்கு கிற காலத்தில் இந்தியாவில் இரண்டு புதுமைகள் தோன்றின. ஒன்று குதிரையைப் பரவலாக மக்கள் பயன் படுத்தத் தொடங்கியது. மற்றொன்று இரும்புத் தொழில் நுணுக்கத்தை மனிதன் அறிந்தான். இக்கூற்றை மெய்ப்பிக்கும் சான்றுகள் அகழ்வாராய்ச்சியிலிருந்து மட்டுமல்லாமல் இலக்கியத்திலிலிருந்தும் கிடைக்கின்றன. அக்கால இலக்கியங்களில் ""அஸ்வ' (குதிரை) ""கிருஷ்ண அயஸ்' (இரும்பு உலோகம்) என்ற சொற்கள் அடிக்கடி வருவதைக் காண்கிறோம். காளை இழுக்கும் வண்டியை விட சக்கரங்களையுடைய குதிரை இழுக்கும் வண்டி போக்குவரத்திற்கும் மேன்மையான தொழில் நுணுக்க முடையதாக ஆயிற்று. செம்பையும், வெண்கலத்தையும் விட இரும்பைப் பயன்படுத்தியதால் அம்மக்கள் பல புதிய தொழில் திறமைகளைப் பெற்றார்கள்.

ஆரிய மொழி பேசுவோர் வடஇந்தியாவில் பரவிய காலத்தோடு இப்புதிய தொழில் நுணுக்கம் பரவிய பொழுது அதனோடு சமஸ்கிருதம் தொடர்பு கொண்டிருந்தது. எனவே அம்மொழி பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரும்புத் தொழில்  நுணுக்கம்  ஏற்கெனவே நிலைத்திருந்த தென்னிந்திய பழைய சங்ககாலப் பண்பாட்டுப் பிரதேசங்களில் நிலைமை வேறு விதமாயிருந்தது. அங்கு திராவிடம் முக்கியமான மொழிக் குடும்பமாயிருந்தது.

ஒப்பிடக்கூடிய வரலாற்றுக் காலத்தில் ஈரானிலும், கிரேக்கத்திலும் இது போன்ற செயல்முறை நிகழ்ந்தது. சமஸ்கிருத மொழியின் விதையான இந்தோ ஐரோப்பிய மொழியே அப்பிரதேசங்களின் பண்பாடுகளின் தொடர்புப் பிணைப்பாக இருந்தது என்பது வியப்பாக இருக்கிறது. இப்பிரதேசங்களை ஆரிய இனத்தார் ஜெயித்திருந்தார்கள் என்றால் வரலாற்று வளர்ச்சிப் போக்கு ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும். ஆரிய- முற்கால நிறுவனங்கள் அழிந்துவிடாமல் நிலைத்து புதிய மொழியை ஏற்றுக் கொண்டு, ஒரு புதிய பண்பாட்டு, உயர்நிலை மக்கள்- குழுவினரிடையே உருவாக்கியது. தென்கிழக்கு ஆசியாவின் பல பிரதேசங்களின் வரலாறு, இந்தியப் பண்பாட்டின் உறவின் விளைவாக இப்போக்கிலேயே வரலாற்றின் பிற்கால கட்டங்களில் சென்றிருக்கிறது என்றே தோன்றுகிறது.

சமூக உருவங்களின் பரிமாணத்தையும், சமூகம் அமைக்கப்பட்டிருந்த விதத்தையும் மாறாமல் நிலைத்திருந்த பண்பாட்டுக் கூறுகளின் அளவையும், சமூக மாறுதல்கள் நிகழ்ந்தபோது அவற்றின் தன்மைகள் எவை என்பதையும் பகுத்து ஆராய்ந்து நாம் மறுமதிப்பீடு செய்வது அவசிய மாகும். இந்தியாவில் சமூக அமைப்பு ஜாதி அமைப்பாக உருவாயிற்று. தற்காலம் வரை அது நீடித்துள்ளது. இவ்வமைப்பின் கொள்கை ""வருணக்கொள்கை'யாகும். மூலபுருஷனைப் பலிலிகொடுத்ததன் மூலம் வருணங்கள் உண்டானதாக ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதனைக் குறிப்பிடும் சுலோகங்கள் வருமாறு:

""புருஷனைப் பிரித்தபோது எத்தனை பங்காகப் பிரித்தார்கள்? அவனது வாயையும், புஜங்களையும் எப்பெயர் சொல்லிலி அழைத்தார்கள்? தொடையையும் பாதங் களையும் எப்பெயர் சொல்லிலி அழைத்தார்கள்?''

""பிராம்மணன் அவனுடைய வாய், அவனுடைய புஜங்களிலிலிருந்து ராஜன் உண்டாக்கப் பட்டான். தொடைகள் வைசியனாயின. பாதத்திலிலிருந்து சூத்திரன் உண்டாக்கப் பட்டான்''.

ரிக் வேதத்தில் நான்கு வருணம் பற்றி மேற்குறித்த ஒரே ஒரு குறிப்புத்தான் உள்ளது. ரிக் வேதத்தின் வேறு பகுதிகள் எழுதப்பட்ட காலத்திற்குப் பிற்காலத்தில் இவை எழுதப்பட்டதென மொழியியல் ஆய்வுகள் காட்டுகின்றன. பிற்காலத்தில் இருந்த ஒரு நிலைமைக்கு முற்காலத்தில் தோற்றம் காணுகிற முயற்சியில் விளைந்த புனைகதையே (Myth)  இச்சுலோகங்கள்.

ஹரப்பா காலத்திலேயே ஜாதி அமைப்பாக வளர்ச்சி பெறக்கூடிய சமூகக் கூறுகள் இருந்தன. ஹரப்பா நகரங்களின் குடியிருப்புகளைக் கவனிக்கும்பொழுது மூன்று சமூகப் பிரிவுகள் இருந்தனவென்பது புலனா கிறது. பிற்காலத்தில் நான்காவது சேர்ந்தது அல்லது ஹரப்பா சமூக அமைப்புக்குள்ளேயே, மாறுதல் ஏற்பட்டு மூன்று பிரிவுகள், நான்கு பிரிவுகளாக ஆகியிருக்கவும் கூடும்.

ஜாதி அமைப்பின் இயல்புகள் யாவை? ஜாதி என்பது மணஉறவுகளைக் கட்டுப்படுத்தும் பரம்பரைக் குழுக்கள், தொழிலை அடிப்படையாகக் கொண்டு சாதிகள் கீழ் மேல் அடுக்குகளாக உள்ளன. இந்தக் கீழ்மேல் அடுக்கில் தமக்குரிய நிலையிலிலிருந்து ஒரு ஜாதியினர் வேறு ஜாதி யினருக்குச் செய்ய வேண்டிய தொண்டு நிர்ணயிக்கப்படும். இதனைப் பிற்கால நூல்கள் ""ஜாஜ்மானி' உறவுகள் எனக் கூறும். இவ்வுறவுகள் பொருளாதார உறவுகளுக்கு அடிப்படையாகின்றன. ஜாதி அடுக்கின் உயர்வு தாழ்வுகள் செய்கின்ற தொழிலைப் பொறுத்தது. தூய்மையான தொழில் புரோகிதருடையது. மிகவும் அசுத்தமான தொழில் தாழ்த்தப்பட்டவருடையது இவ்வேறுபாடுகள் சுலபமாகத் தெரிந்து கொள்ளக்கூடியவை. பிராம் மணருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் உள்ள வேறுபாடு மிகத் தெளிவானது. உச்சியில் இருக்கும் ஜாதிக்கும் அடியில் இருக்கும் ஜாதிக்கும் வேறுபாடு எளிதில் தெரிந்துவிட்டாலும், இடைநிலைச் சாதிகள் உயர்வு தாழ்வுகள் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகிறது.

இங்கு இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். இவ்வடிப்படையில் அமைக்கப்படும் சமுதாயம் ஜாதிகள் என்ற உருவத்தைப் பெறுகிறது. இதற்கு ஆரியர் திராவிடர் என்ற இரு இனங்கள் அவசியமில்லை. முதலாவது சமூக, பொருளாதார அந்தஸ்து, அரசியல் ஆற்றல், சுத்த அசுத்தங்கள் ஆகிய தன்மைகளுக்கும் இவ்வமைப்பிற்கும் தொடர்புகள் இருக்கின்றன.

இரண்டாவது: ஜாதியின் செயல்பாட்டு அம்சம் வருணமன்று: ஜாதிதான் வருணம் என்பது சமூகக் குழுக்களது அடுக்கின் கொள்கை மாத்திரமாகும். அதனைக் "குழு' (Tribe) என்று மொழி பெயர்க்கலாம். ஜாதி உறவுகள் சமூகம் செயல்படும் உண்மையான வழிமுறைகளைக் காட்டுகின்றன. வருணம் என்பது சடங்கு ஆசாரத்தில் அந்தஸ்தாகும். ஜாதி என்பது உண்மையான சமூக அந்தஸ்தாகும். வருணத்தைக் குறிப்பிடும் பொழுது தரும சாஸ்திரங்கள் ஜாதிக் கொள்கைகள் குறிப்பிடப்பட்டன. ஒவ்வொரு ஜாதியின் சமூக பொருளாதார நிலையை அவை குறிப்பிடவில்லை. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு சடங்காச்சார அந்தஸ்தை அளிக்க தரும சாஸ்திரங்கள் முயன்றன. தரும சாஸ்திரங் களின் வருண அமைப்பு மாறாமல் இருப்பதாக கூறப் படுவதால், சமூகம் மாறாமல் இறுக்கமாக இருப்பதென்று கொள்வதற்கில்லை. ஆனால் வருண அமைப்பு பற்றிய கொள்கை மாறாமல் இருந்தது என்பதே அதன் பொருளாகும். தரும சாஸ்திரங்கள் சமூக சட்ட அமைப்பை வரையறுத்துக் கூறும் ஆவணங்கள். இந்திய அரசியல் அமைப்பு விதிகளுக்கு அவற்றை அந்த அம்சத்தில் ஒப்பிடலாம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இன்றைய இந்திய சமூகத்தின் கொள்கைப்பூர்வமான அடிப்படைகளைக் கூறுகிறது. ஆனால் அது உண்மையான நிலைமைகளின் முழுமையான வருணனையன்று. கொள்கையையும் நடைமுறையையும் பிரித்து அறிவது ஆய்வுமுறையில் வழக்கமானதே. கொள்கை, நடைமுறையைவிட மேன்மையானதாக இருப்பினும் சரி, கொள்கை சற்றேறக் குறைய மாறாமலேயிருக்கிறது.

வருண அமைப்பில் அடங்கிய பல குழுக்களைப் பற்றி ஆராய்ந்தால் அகன்ற வரலாற்று மாறுதல்களுக்கும் பொருத்தமாக அவை அந்தஸ்தில் மாறுவதைக் காணலாம். வேத பிராம்மணன் சமயச் சடங்காச்சாரங் களுக்குத் தலைமை தாங்குவதோடு, அரசியல் ஆற்றல் உடையவனாகவும் காணப்படுகிறான். எல்லாப் பிராம்மணர்களும் ஒரே விதமான அந்தஸ்து உடையவர் களல்லர். குருபாஞ்சால பிராம்மணர்கள் மகதப் பிராம்மணர்களை இழிவானவர்கள் என்று கருதினார்கள். அவர்களைப் ""பிராம்மணரென்று அழைக்கப்படுவோர்' எனறு குரு பாஞ்சாலப் பிராம்மணர்கள் குறிப்பிட்டார்கள். சில அரசர்களின் புரோகிதர்களாக, மகதப் பிராம்மணர்கள் ஆன பின்னரே அவர்கள் குருபாஞ்சால பிராம்மணர்களாக மதிக்கப்பட்டனர். ஆடீராப் பிராம்மணர்கள் என்போர் மிலேச்சர்கள் (ஆரியரல்லாதோர்) என்று குறிப்பிடப் பட்டனர். அவர்கள் பிராம்மண சாதியினரும், ஆம்பஸ்த சாதியினரும் கலந்தபோது தோன்றியவர்கள் என்று கருதப்பட்டனர். தென்னிந்தியக் கல்வெட்டு ஒன்று போயா பிராம்மணர்களைச் சூத்திர ஜாதியென்று குறிப்பிடுகிறது. சமஸ்கிருத மரபோடு நெருங்கிய தொடர்பு இல்லாத புரோகிதர்களும், ஜாதி அமைப்பில் புதிதாக இணைக்கப் பட்ட இனக்குழுக்களும், பிராம்மண அந்தஸ்து அளிக்கப்பட்டு, ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு வருண அமைப்பில் தாழ்ந்த அந்தஸ்தே இருந்தது. பண்டைய  அரசாங்கங்களில் பிராம்மணர்களுக்கு உயர்ந்த இடமும் மதிப்பும் இருந்தன. ஆனால் பண்டையக் குடியரசுகளில் அவர்களுக்கு  நிரந்தரமான  உயர்ந்த நிலை இருக்க வில்லை. செல்வர்களான நில உடைமையாளர், வணிகர்கள் ஆதரவை நாடி அவர்கள் பௌத்த பிக்கு களுடன் போட்டியிட்டார்கள் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. இலக்கியச் சான்றுகளை ஐயமின்றி ஏற்றுக் கொள்வதற்கில்லை. அவற்றைப் பிற சான்றுகளோடு ஒப்பிட்டுச் செய்திகளை அறிந்து, ஆராய்ந்து மதிப்பிட வேண்டும். பிராம்மணர்கள் புரோகிதப் பணியை மட்டும் செய்து வந்தார்கள் என்று கொள்வதற்கில்லை. தச்சு வேலை முதலிலிய தொழில்களைக் கூட பிராம்மணர்களில் ஏழ்மையானவர்கள் செய்து வந்தார்கள். பிராம்மணர்களில் செல்வர்கள், நிர்வாகப் பதவிகளையும், அமைச்சர் பதவியையும், புரோகிதப் பணியோடு சேர்த்து வகித்து வந்தனர். இதற்குக் காரணம் அவர்களுக்கு கல்வியறிவு இருந்ததுதான். இதே காரணத்தால் தான் பிற்காலத்தில் சமண வணிகர்கள் ராஜபுத்திர அரசுகளில், உயர்ந்த அரசாங்கப் பதவிகளையும், தளபதிப் பதவிகளையும் வகித்தனர் என்பது இலக்கியச் சான்றுகளால் புலனாகிறது.

குப்தர் ஆட்சிக்குப் பிற்காலத்தில் பிராம்மணர் நிலை மேன்மையடைந்தது. அக்காலத்தில் பௌத்தம் செல்வாக்கிழந்தது. பொருளாதார அடிப்படையும் அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்ள பிராம்மணரது கல்வியின் இன்றியமையாமையும் பிராம்மணரின் சமய ஆதிக்கத்திற்கு வழிவகுத்தன. இக்காலத்தில் பிராம்மணருக்கு நிலங்களும், நில வருவாயும் தானமாக அளிப்பது அதிகரித்தது. அரசனது அதிகாரியாகப் பதவி வகிப்பதற்காகவோ, அரசருக்கு ஊழியம் புரிந்ததற்காகவோ சம்பளத்திற்குப் பதில் பிராம்மணருக்கு நிலம் அளிக்கப் பட்டது. இவை தவிர "அக்ரஹாரம்' என்றும் "பிரம்மதேயம்' என்றும் நிலங்களும், கிராமங்களும் பரம்பரை உரிமையோடு பிராம்மணர்களுக்குத் தானமாக வழங்கப் பட்டன. கல்வியை மதித்தோ, சமயப் பணிகள் செய்வதற்கு ஊதியமாகவோ, அரசப் பரம்பரையின் கொடி வழிப் பட்டியலை எழுதுவதற்காகவோ, இத்தானங்கள் அளிக்கப் பட்டன. இவற்றால் பிராம்மணருடைய வருமானமும், சமூக நிலையும் உயர்ந்தன. நிலத்தோடு எண்ணற்ற உரிமைகளும் அவர்களுக்கு கிடைத்தன. உதாரணமாக எட்டாவது நூற்றாண்டில் ஒரு பல்லவ மன்னரால் விடுவிக்கப்பட்ட சாசனத்தின் வாசகம் வருமாறு:

""22-வது ஆட்சியாண்டில் மன்னர் பிறப்பித்த ஆணையாவது''.... பிரம்மயுவராஜன் விண்ணப் பித்ததற்கு இணங்க கோரஷர்மானனை ஆணத்தியாக வைத்து, கொடுக்கள்ளி கிராமத்தைக் குடி நீக்கி, பிரமதேயமாக்கி, பாரத்வாஜ கோத்திரத்து, சந்தோக்கிய சூத்திரத்து, புணிவாசியான செட்டிரங்க சோமயாஜிக்கு நீரோடட்டிக் கொடுக்க, ஊரோம் கரணத்தான் எல்லை காட்ட, பிடி சூழ்ந்து, கள்ளி நாட்டி கல்லும் நாட்டிக் கொடுத்தோம்.'' (எல்லையைப் குறிப்பிடுவதற்காக) இவ்வாறு தானம் பெற்றவர் எக்கடமைகள், வரிகளிலிருந்து விலக்குப் பெறுகிறார் என்பதைச் சாசனம் கூறுகிறது.

""இந்நான் கெல்லைக்குட்பட்ட நஞ்சை புஞ்சை நிலங்களை இத்தானம் பெற்றவர் உழுவித்துண்பா ராகவும், நீரை வழிப்படுத்தக் கால்வாய்கள் வெட்டிக் கொள்வா ராகவும், இதனைப் பெற்றவர், இவ்வூரில் நிலமுடையவர்கள் இருக்க வேண்டிய கடமைகளும், இறைகளும் பாட்டங் களும் இருக்க வேண்டியதில்லை. அவையாவன: செக்குப் பாட்டம், தறிப்பாட்டம், கிணறு தோண்டக்கூலி, கரணத்தான் பங்கு, குயப்பாட்டம், நெய்விலை, அணிவிலை, வேடர், தூதர், கணிகையர், இவர்களுடைய பங்கு, நற்புல், நல்வேறு... - ஊரார், சபையார், அதிகாரிகள் முன்னிலை யில் இத்தானம் அளிக்கப்பட்டது''.

இச்சாசனம் செம்பில் வெட்டப்பட்டு இப்பிராம்மணர் குடும்பத்தில் ஒரு சட்டபூர்வமான ஆவணமாக இருந்தது. இதைப் போலவே அதிகாரிகளுக்கும் அரசர்கள் தானமளித்துள்ளார்கள்.

கோயில், பிராம்மணருடைய சக்தியை அதிகமாக்கம் நிறுவனமாகிவிட்டது. பழங்காலக் கோயில்கள் மிகச் சிறியனவாயிருந்தன. சில நூற்றாண்டுகளில், கி.பி. 500-க்கு பின்னர், அவை மிகவும் பெரியனவாயின. பெரிய கட்டிடங்கள் எழுந்தன. நிலங்களும், கிராமங்களும் கோயில்களின் உடைமைகளாயின. ஏராளமான நிலவருவாயும், காணிக்கை வருவாயும் அவற்றிற்குக் கிடைத்தன. கோயில் நிதியை நிர்வகிக்கும் பதவிகள், அரசரது ஆதரவைப் பெற்றவர்களுக்கே கிடைக்கும். கோயில்கள் கல்வி நிறுவனங்களாகி, பிராம்மணீயக் கல்விக்கு நிறுவன அடிப்படையை அமைத்தன. மடங்கள், கோயில்களின் மூலம் பிராம்மணீயக் கருத்துகள் திட்ட மிட்ட வகையில் பரவ வழி பிறந்தது. குப்த முற்காலத்தில் பௌத்தப் பள்ளிகள் சமூகத்தற்குச் செய்து வந்த பணியை, இக்காலத்தில் கோயில்கள் செய்தன. படிப்பையே நோக்கமாகக் கொண்ட சிலருக்கு இலவச மாகக் கற்றுக் கொள்வதற்கு, கோயில்கள், பள்ளிகளின் செல்வச் செழிப்பு இடமளித்தது. பல தர்க்க விவாதங்கள் நடைபெற இத்தலங்கள் வசதியளித்தன.

சத்திரியர்கள் பிராம்மணர்களோடு ஒத்துப்போவது ஒரு பிரச்சனையாகிவிட்டது. இப்பிரச்சினைக்கு அடையாளபூர்வமான புனைகதைதான் பரசுராமன் கதை யாகும். பௌத்த நூல்கள் சத்திரியனுக்கு நிலவுடைமை யாளன், குழுத் தலைவன் என்ற நிலைகளில் முக்கியத்துவம் அளிக்கிறது. கொள்கையளவில் அரசர்கள் சத்திரியர் களாக இருத்தல் வேண்டும். ஆனால் குப்தர் காலத்திற்கு முன்னர் சத்திரிய அரசு பரம்பரைகள் அபூர்வமாகவே காணப்படுகின்றன. நந்தர்கள், சூத்திரர்கள், மௌரியர்கள், ஆகியோரை தாழ்ந்த குலத்தவர் என பிராம்மண நூல்கள் கூறுகின்றன. சுங்கர்கள், சேதியர், சோழர், பாண்டியர், சேரர், ஆந்திரர் ஆகியவர்கள் சத்திரியர்கள் அல்ல. அவ்வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள வில்லை. அந்நியக் கொடிவழியுடைய இந்தோ- கிரேக்கர், சகர், குஷாணர் முதலிலியோருக்கு சத்திரியரில் தாழ்ந்த குலமெனக் கருதப்படும் "விராட்டியர்' என்ற அந்தஸ்தை, பிராம்மணர், அரைகுறை மனத்தோடு அளித்தனர். ஆயினும் பாணினியும், மனுவும் இவர்களைச் சூத்திரராகவே கருதினர். சில அரச மரபுகள், சூத்திரர் வழித் தோன்றல்கள் என்பதை மறைக்க எவ்வித முயற்சியும் புராணக் கதைகள் எழுதப்படும் பொழுது மேற் கொள்ளப்படவில்லை. செயல்முறை அரசியலில் ஓர் அரச மரபின் ஜாதி பரம்பரை, அதனை ஆளத் தகுதியில்லாததாக ஆக்கிவிடுவதில்லை.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் புதிய நிர்வாக மாற்றங்களும், நில அமைப்பு மாற்றங்களும் ஏற்பட்டு ஒரு புதிய சமூக அமைப்பு தோன்றியது. கீழ் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள், அயல்நாட்டவர், இன்ன  ஜாதியென்று சொல்ல முடியாதவர்கள் மிகப்பலர் அரசியல் ஆதிக்கம் பெற்று சிறு சிறு சுதந்திர நாடுகளை ஆளத் தொடங்கினர். அவர்கள் தமது முன்னோர் வரலாற்றை அதீதக் கற்பனை கலந்து எழுதச் செய்தனர். தங்களது குலத்தோற்றத்தின் உண்மையை மறைக்கவே அவர்கள் இவ்வாறு செய்தனர்.

இவ்வாறு, மவோரில் வாழ்ந்த குஹில்லர்கள், பில்லர்களோடும், சண்டெல்லர்கள், கோண்டர்களோடும் தொடர்புடையவர்களாகக் கூறப்படுகின்றனர். ராஜபுத்திர அந்தஸ்திற்கு உரிமை கொண்டாடிய இவர்களெல்லாம் ஆளத்தொடங்கிய காலத்தில் ஆரியப் பண்பாட்டை அறிந்தவர்களாகத் தோன்றவில்லை. இவர்களது  முன்னோர்கள் ஆரியமல்லாத மொழிகளைப் பேசியதாகவும் அவர்களது, பழக்க வழக்கங்களும், சமூக அமைப்பும், இனக்குழு அமைப்பிற்குரியனவாகத் தோன்றுகின்றனவேயன்றி, ஜாதி அமைப்பிற்குரியனவாகத் தோன்றவில்லை. இவ்வரசர்களெல்லாம் ஆதிக்கம் பெற்ற பின்னர் போலியாக சத்திரிய அந்தஸ்தை விரும்பினர். பிராம்மணர்களைக் கொண்டு தங்கள் முன்னோர் மரபை எழுதச் செய்தனர். புராணங்களிலுள்ள சூரியவம்சம், சந்திரவம்சம் இவையிரண்டோடும் இவ்வரசர்களைப் பிணைத்து அவர்களது மரபு வழியை பிராம்மணர்கள் எழுதி வைத்தார்கள். இவ்வாறு அவர்கள் சத்திரிய அந்தஸ்து தங்களுக்கு உண்டு என்று உரிமை கோருவதற்கு பிராம்மணர் சான்றுகளைப் படைத்துக் கொடுத்தார்கள். இன்னும் அரசியல் ஆதிக்கம் சமூகத்தின் உயர்நிலையில் இருந்தவர்கள் கையில் அகப்படும் நிலையில்தான் இருந்தது. ஆனால் அவர்கள் வர்ண அந்தஸ்தை தேடிப்பிடித்துக் கொள்வது அவசியம் என்ற நிலைமை இருந்தது. சமஸ்கிருதப் பண்பாடு பரவியதும் அப் பண்பாட்டின் தலைவர்கள் பிராம்மணர்களாக இருந்ததும் தான் இந்நிலைமைக்குக் காரணங்களாகும். இப்புதிய  அரசுகள், பிராம்மணரால் தோற்றுவிக்கப்பட்டவை என்றும் அல்லது நிலங்களைத் தானமாகப் பெற்று, உயர் பதவிகளையடைந்தவர்களால் நிறுவப்பெற்றவையென்றும் கதைகள் புனையப்பட்டன. உதாரணமாக பண்டல்கண்டில் ஆண்ட பரிவிராஜகர் என்ற அரச மரபினர் தங்களைப் பிராம்மண வம்சம் என்று அழைத்துக் கொண்டனர். மைத்ராக குலத்தைச் சேர்ந்த பத்ராகன் என்ற குப்த தளபதி சௌராஷ்டிரத்தின் மண்டலாதிபனாக (ஆளுநன்) நியமனம் பெற்றான். அவனது மகன் சேனாதிபதி என்ற பட்டத்தைப் புனைந்து கொண்டு அரசாண்டான். அவனுடைய பெயரனும், அப்பெயரனுக்குப் பின் ஆண்ட அவனுடைய பரம்பரையினரும் மகாராஜா என்ற பட்டத்தை எளிதில் சூட்டிக் கொண்டு மன்னர்களாகிவிட்டனர்.  ஆறாவது நூற்றாண்டில் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த மைத்ராக வம்சத்தினர் சுதந்திர மன்னர்களாகப் பல தானங்கள் அளித்துக் கல்வெட்டுகளை வெளியிட்டுள்ளார்கள். அதிகாரிகளாயிருந்து, சிற்றரசர் களாகி பின் அரசியல் சூழ்ச்சிகளால் அவர்கள் சுதந்திர அரசர்களானார்கள். இவ்வாறு கலகங்களும், குழப்பங்களும், போர்களும் நிலவிய காலங்களில் சில பகுதிகளில் செல்வாக்குப் பெற்றிருந்த அதிகாரிகளும், தலைவர்களும், அரசர்களான செய்திகள், பல இலக்கியச் சான்றுகளின் மூலம் வெளியாகின்றன. இவர்களுக்கு மேன்மையான அங்கீகாரம் இருக்கவில்லை.

இந்நிலைமை அண்மைக்காலம் வரை இந்தியாவின் பல பகுதிகளில் காணப்பட்டது. அரசியல் ஆதிக்கம் பெற்றபின், சரியான சாதியிலும், வருணத்திலும் அவர் களை அமர்த்த வேண்டிய பிரச்சினை பிராம்மணர்களை எதிர்நோக்கியது. இக்காலத்தில் அரச பதவி பெற்ற பல தலைவர்களுக்குப் பிராம்மணர்கள் சத்திரிய பதவியையும் அளித்தார்கள். இதனால்தான் இக்காலத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான சத்திரிய வம்சங்கள் முளைத்தன. பிற்காலத்தில் இந்நடைமுறை காணப்படுகிறது. 15-ஆம் நூற்றாண்டில் அரசாண்ட மஹமத்பெகாரா சுல்தானைப் புகழ்ந்து உதயராஜா என்ற ஒரு சமஸ்கிருத புலவன் நூல் இயற்றினான். புதிதாக இஸ்லாமியனாகி மதவெறியோடு இந்துக்களை தாக்கிய அவ்வரசனை உதயராஜா தனது காவியத்தில் சத்திரியன் என்றும் ""இந்து தர்ம பரிபாலகன்' என்றும் வானளாவப் புகழ்ந்துள்ளான்.

அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற மேற்கூறிய வழிமுறைகளை தவிர, அரசனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுகிற மிகப்பழமையான வழியையும், அரச பதவியை விரும்பியவர்கள் பின்பற்றினர். கடைசி மன்னன் தனது படைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, அவனது பிராம்மண படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கன் அவனைக் கொன்றுவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இம்முறையில் ஆட்சியைக் கைப்பற்றியவர்களில் புஷ்யமித்திரன்தான் கடைசியானவன் என்பதில்லை. வைசியர்களின் சமூக நிலை பற்றி, பழங்காலச் சான்றுகளிலிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிய வில்லை. பிராம்மண-நூல்களில் அவர்கள் முக்கியமான சமூகப் பகுதியினராகக் கூறப்படவில்லை. பௌத்த நூல்கள் அவர்களைச் செல்வர்களான வணிகர்களென்று (செட்டி, கிரகபதி) குறிப்பிடுகின்றன. வைசியர் என்ற சொல்லிலின் பொருளையுடையதாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்குச் சமூகத்தில் முக்கியமான பாத்திரம் இருந்தது. இவர்கள் நகரப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் பெற்றிருந்ததோடு, பௌத்த சமயத்தின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர். கைத்தொழில்களும் வணிகக் குழுக்களும் தோன்றிய காலத்தில் வணிகர்களின் சமூகப் பாத்திரம் முக்கியத்துவம் அடைந்தது.

வருண விதிகளுக்கு மாறாகச் சமூகப் பிரிவு களுக்குள்ளே உறவுகள் தோன்றின என்பதை வெளிப் படுத்தும் சான்று ஒன்றை ஐந்தாம் நூற்றாண்டு சாசனம் ஒன்று தருகிறது. பட்டு நெசவாளர்களின் வணிகக் குழுவின் செலவில் சூரியனுக்குக் கோயில் கட்டப்பட்டதைப் பற்றி அச்சாசனம் கூறுகிறது. இக் குழுவினர் லாட தேசத்திலிலிருந்து மேல மாளவத்தில் இருந்த தாசபுரம் என்ற நகருக்கு வந்து, வாணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டி, அவ்வூரில் ஒரு கோயில் கட்டுவதற்குப் பணம் அளித்தனர். அக்குழுவில் சிலர் பட்டுநூல் நெசவுத் தொழில் செய்தனர். வேறுபலர், பல்வேறு தொழில்களைக் செய்து வந்தனர்.

அச்சாசனம் கூறுவதாவது:

""அவர்களில் சிலர் வில் வித்தையில் சிறந்து விளங்கினர். சிலர் அற்புதமான கதைகளைக் கூறினர். மெய்ச் சமயத்தின் விதிகளைச் சிலர் போதித்தனர். சிலர் தங்கள் குலத்தொழிலில் திறமை பெற்றிருந்தனர். (குலத்தொழில்-பட்டு நெசவு) வேறு சிலர் உயர்ந்த லட்சியங்கள் கொண்டிருந்தனர்: சிலர் சோதிடம் கற்றிருந்தனர். சிலர் போர்த்தொழில் பயின்று, பகைவர்களை அழிக்கும் வீரமும் வலிலிமை யும் பெற்றிருந்தனர். இக்குழுவின் புகழ் எல்லாத் திசை களிலும் பரவியிருந்தது.''

நெசவுத்தொழில் செய்யும் சாதியின் உறுப்பினர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்ததை அறிய நமக்கு வியப்பு உண்டாகிறது. ஆயினும் அவர்கள் பட்டு நெசவுத் தொழில்-குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். கைத்தொழிலாளர் குழுக்களும், தொழில் வணிகக் குழுக்களும் புதிய ஜாதிகளை உருவாக்கி வந்தன. இனக் குழுக்களான பழங்குடி மக்களும், சமூகத்தில் இணைந்து புதிய ஜாதிகளை தோற்று வித்தனர். 9-வது நூற்றாண்டு முதல் இத்தகைய சமூக மாறுதல் போக்கைக் காட்டும் சான்றுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நிர்வாகப் பணிகளில் இருந்தவர்களும், வணிகர்களும் புதிய சாதிகளை அமைத்துக் கொண்ட னர். அவை ""காயஸ்தர்' ""கத்ரி' முதலிலியனவாகும். அவற்றுள் சில இன்னும் இருக்கின்றன. வரலாற்றின் இடைக்காலத்தில் காயஸ்தர்கள் ஆட்சி நிர்வாகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். நடுக்காலச் சாசனங்களில் கிராம அதிகாரிகளின் பதவிப் பெயர்களான, ""மஹத்தரா' ""பட்டாகிலா' ""கவும்ட!' என்பவை இன்று ""மேதர்', ""பட்டீல்', ""படேல்',  ""கௌடா' என்ற சாதிப் பெயர்களாக மாற்றிக் கொண்டு இன்றும் வழக்கில் உள்ளன. புதிய சாதிகள் உருவாவது சாதிகள் பெயர் மாற்றுவது நமது வரலாற்றில் தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்தப் போக்கு இந்துக் களிடம் மட்டுமல்லாமல், சீக்கியர்களிடமும், கிறிஸ்தவர் களிடமும் காணப்படுகிறது. சாதி மாற்றங்களைப் பற்றி தருமசாஸ்திரங்களிலிலிருந்து அறிகிறோம். ""அபிரர்' பிராம் மணரோடு தொடர்பு இழந்து போனதால் சூத்திரர்களா னார்கள்: சத்திரியராயிருந்த ""கிராதர்' சூத்திரரானார்கள். அதுபோலவே ""புந்தரர்', ""மாகதர்', ""ஓட்ரர்' முதலிலியோரும் சத்திரியப் பதவியிழந்து சூத்திரர் ஆனார்கள். தொழில் குழுக்கள், சாதிகளானதற்கு உதாரணமாக, அயஸ்காரர் (கொல்லர்) குலகியர் (குயவர்) ""கோப' (இடையர்) தந்துவாயர் (நெசவாளி) ""தைலிக' (வாணியன்) என்ற சாதிகளைத் தரும சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறு நமக்குக் கிடைக்கும் படிமம், இறுக்கமானதோர் சமூக அமைப்பைக் காட்டவில்லை. சமூக அமைப்பில் நெகிழ்ச்சி இருந்தது. ஆனால் அது யாரும் எந்தச் சாதியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிற  ""திறந்த சமுதாயமாகவும் இருக்கவில்லை. (ஞல்ங்ய் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) ஓர் எல்லைக் கோட்டினுள் மாறுதலுக்குட்படும் சமுதாயமாக அது இருந்தது என்று கொள்வதே சான்று களுக்குப் பொருத்தமான படிமமாகும். இந்திய சமூகத்தை இவ்வெல்லைகளுக்குள் பார்த்துத்தான் மறுமதிப்பீடு செய்தல் வேண்டும். இத்தடுப்பு எல்லைச் சுவர்களுக்குக் காரணம் மதம், சமூக வழக்கம் ஆகியவை என்று பொதுவாகச் சொல்லிலிவிட்டால் போதாது. அவை ஏன் எழுந்தன என்பதை விளக்க வேண்டியது அவசியம். இவ் வெல்லைச் சுவர்கள் சில வரலாற்று நிலைமைகளில், பூகோளவியல், மக்கள்தொகை இயல், தொழில் நுணுக்க வியல் காரணங்களால் தோன்றி மதம், சமூக வழக்கம் என்ற போர்வைகளுக்குள் ஒளிந்து கொண்டுள்ளன. இக்கூறுகளில் செயல்பாட்டினால் சமூக மாறுதல் மந்தமான வேகத்தில் நடைபெற்றது. அந்தஸ்தினால் மட்டும் சமூக- பொருளாதார பாதுகாப்பு ஏற்பட்டு விடாது. ஆயினும் உயர்நிலைச் சாதியினர் பாதுகாப்போடு வாழ்ந்தனர். ஒரு சாதிக் குழுவாக மேல்நோக்கி இயங்குவது சாத்தியமாகவே இருந்தது. தனி மனிதர்கள் கூட சாதி ஏணியில் மேல்நோக்கி ஏற முடிந்தது.                  அரசியல் ஆதிக்கத் துறையில் தவிர பிறவற்றில் இத்தகைய மாறுதல்கள் சாதாரணமாக இருக்கவில்லை. சாதி ஏணியில் கீழ்நிலைகளில் மேல் நோக்கிச் செல்வது சாத்தியமாக இருக்கவில்லை. அந்நிலைகளில் மாறுதல் நிகழ்வது அரிதாயிருந்தது. ""சண்டாளன்' என்று ஒரு சாதியை அப்பெயரால் அழைத்துவிட்டால், அது சண்டாள சாதியாகவே எப்பொழுதும் இருக்க வேண்டுமென நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளது.

பௌத்த நூல்களிலிலிருந்து சமூகப் பூசல்கள் நிகழ்ந்தனவென்பது அறியப்படுகிறது. அசோகன் சாசனங்களில் பூசல்களில்லாமல் மக்கள் இணைந்து வாழ வேண்டுமென்று அறிவுரை கூறுகின்றன.

""எப்பொழுதும் ஒரு மனிதன் மற்றொருவனது குழுவை மதிக்க வேண்டும். அதனால் இரு குழுக்களுக்கும் நன்மை உண்டாகும் ஒற்றுமையைப் போற்றுதல் வேண்டும். அயலாருடைய கொள்கை களைக் கேட்டு அவற்றை மதித்து நடக்கவேண்டும்''.

இனக்குழுக்களும். தொழில் குழுக்களும் ஜாதிகளாக மாறியபொழுது, அவற்றிற்கு வருண அந்தஸ்தும், ஜாதி அந்தஸ்தும் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு கோத்தரமும் ஒவ்வொரு குழுவிற்கும் கற்பனை செய்யப்பட்டது. பல குழுக்களுக்குச் சூத்திர சாதியின் அந்தஸ்துதான் கிடைத்தது. நடுக்காலத்தில் சூத்திர சாதிகள் மிகுதியானதற்கு இதுவே காரணம். தரும சாஸ்திரங்களையும், வேத இலக்கியங்களையும், புராணங்களையும் மட்டுமல்லாமல், சாதிப் பழக்க வழக்கங்களையும் சட்டத்தின் ஆதாரங் களாகக் கொண்டனர். உயர் சாதிகளுக்குத் தரும சாஸ்திர ஒழுக்க விதிகளே சட்டமாகக் கொள்ளப்பட்டன. கிராமப்புறங்களுக்கு ஒரேவிதமான சட்டங்கள் இல்லாமைக்கு இது ஒரு காரணமாகும்.

புதிய சாதிகள் தங்கள் மதநம்பிக்கைகளையும் சடங்காச்சாரங்களையும் சமூகத்திற்குக் கொணர்ந்தன. இவை முக்கிய மரபோடு கலந்து, அவர்கள் தழுவிக் கொண்ட மதத்தின் பகுதிகளாக ஆகிவிட்டன. விஷ்ணுவின் அவதாரக் கதைகளும் பெண் தெய்வங்களின் வழிபாட்டு முறைகளும், வேறு சடங்காச்சாரங்களும் இவ்வாறுதான் இந்து மதத்தில் படிமுறை வளர்ச்சியில், புதிய குழுக்கள், இந்து சமுதாயத்தில் நுழைந்தபோது ஏற்றுக் கொள்ளப்பட்டன. சண்டெல்லா அரசர்களின் ""மணியதேவ' வழிபாடு இந்து சமயத்தின் பழைய மரபைச் சேர்ந்ததன்று. அவர்களுடைய இனக்குழு வாழ்க்கையின் போது தோன்றிய அவ்வழிபாட்டு முறையை, அவர்கள் இந்து சமுதாயத்தில் இணைந்தபொழுது, இந்து மதத்தில் புகுத்திவிட்டனர். சாதிப் புராணங்களின் நோக்கம், சாதிகளின் பழைய மரபைப் பாதுகாத்து சாதி அடுக்கின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவற்றைப் பொருத்தி வைப்பதுதான். இந்து சமூகத்தில் புதிதாக இணைந்த குழுக்களின் புரோகிதர்களும், பூசாரிகளும், பிராம்மண அந்தஸ்து அளிக்கப்பட்டனர். பல பழைய வழக்கங்கள் நீடித்தன. நடுக்காலத்தில் சிந்து பிரதேச முஸ்லிலிம்களை, வேறு பிரதேசத்து முஸ்லிலிம்களாகவே கருதியதில்லை.

ஒவ்வொரு மதத்திற்கும் இருவித தோற்றங்கள் உண்டு. ஒவ்வொரு சமூகத்தின் மதிப்புகளையும் பாதுகாத்து நிலைக்கச் செய்யும் பாத்திரம் உண்டு.அப்பாத்திரம் நம்பிக்கைத் தொகுதிகள், சமய ஒழுக்கம், தத்துவம் ஆகியவற்றைப் பொறுத்திருக்கிறது இந்திய வரலாறு முழுவதிலும், சமயக் குழுக்களுக்கும், சாதிக் குழுக்களுக்கும் பரஸ்பரத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இவை சமயத்திற்கும், சமூக வாழ்க்கைக்கு முள்ள தொடர்பாக பிரதிபலிலித்தன.

சமய இலக்கியங்களின் மூலமாகப் புதிய ஜாதிகள் உருவாயின. வழக்கில் உள்ள சமயக் கருத்துகளை ஒதுக்கிவிட்டோ அல்லது மாற்றியோ புதுக்குழுக்கள் தோன்றியுள்ளன. இதற்கு உதாரணங்கள் சமணம், பௌத்தம், லிலிங்காயதம், சீக்கியம், கபீர் பந்திகள். இச்சமயக் குழுக்கள், அவை தோன்றிய ஆரம்பக்காலத்தில் தீவிரக் கருத்துகள் கொண்டிருந்தன. சாதி வேறுபாடு களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால் முடிவில் சாதி அமைப்பிலிருந்து இக்குழுக்கள் முற்றிலும் விடுவித்துக் கொள்ள இயலவில்லை. சமூக அமைப்பில் தீவிர மாறுதல் களை ஏற்படுத்துகிற அளவில் அக் குழுக்கள் முற்போக்கான கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை. தீவிரத் தன்மைவாய்ந்த கருத்துகள் செயல்படுத்துவதற் கேற்றவாறு சமுதாய அடிப்படையில் மாறுதல்கள் நிகழவில்லை. மிகுதியான மக்களைக் கவர்ந்த புதிய சமயங்கள், குழுவினுள் சாதிகளை ஏற்படுத்திக் கொண்டன. இச்சமய இயக்கங்கள், சமூகத்தின் மீது அதிருப்தி கொண்டவர் களையும், சாதி அடுக்கில் தங்கள் தாழ்ந்த பதவியிலிலிருந்து விலக விரும்பியவர்களையும் பெரிதும் கவர்ந்தன. ஏனெனில் அவை சொல்லளவிலாவது வேறு பாடில்லை எனப் பறைசாற்றின.  

Wednesday, February 6, 2013

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?


தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போஎன்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.
சிந்துவெளி நாகரிகம்:
சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:
1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.
2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.
3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.
5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)
9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.
10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )
11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.
12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.
சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இதுதிராவிட நாகரிகம்எனக் கூறியுள்ளனர்.
கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.
அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம்ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (ndian Express - Madras - 5 August 1994)
Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.
சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் .சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்
புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்
'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.
 
சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.
புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.
எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.
எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
நதிகள், மலைகளின் பெயர்கள்
நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான öறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.
பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரிஎன்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.
தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.
இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.
இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் .சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
2 - பூம்புகார்
அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.
''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்
1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).
19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.
ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.
மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)