இன்றைக்குஇந்தியாவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது தெலுங்கானாபோராட்டம். தனி
மாநில கோரிக்கைக்கான இப்போராட்டம் ஆந்திர சட்டமன்ற,நாடாளுமன்ற
உறுப்பினர்களின் பதவி விலகல், மாணவர்களின் போராட்டங்கள், உயிர்தியாகங்கள்
போன்றவற்றால் அம்மாநிலமே நிலை குலைந்து போயுள்ளது. கடலோரமாவட்டங்கள்,
ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பகுதிகளையும் உள்ளடங்கியதுஆந்திர மாநிலம்.
இதில் தெலுங்கானா ஒப்பிட்டு அளவில் பெரியது. வாரங்கல்,ஹைதராபாத்,
ரெங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகியமாவட்டங்கள்
தெலுங்கானா என்று அழைக்கப்படுகிறது.
Sunday, June 24, 2012
தமிழ் இலக்கிய வரலாறு
இலக்கு
+ இயம் = இலக்கியம். இலக்கினை உடையது இலக்கியம்.இலக்கியத்திற்கு "நூல்'
என்னும் மற்றொரு பெயரும் உண்டு. கட்டடம்கட்டும்பொழுது கோணல்களைக் கண்டு
ணர்ந்து சரி செய்ய "நூல்' இட்டுப்பார்ப்பது மரபு. அதுபோல் தனிமனித, சமுதாய
அளவி லுள்ள சிக்கல்களையும் காரணங்களையும் சுட்டிக் காட்டித் தீர்வுகளுக்கு
வழிவகுக்கும் புத்தகங்களே "நூல்' என்று போற்றப்படும். இத்தகைய நூல்கள் ஒரு
நாட்டின் பண்பு நலனைமதிப்பீடு செய்ய உதவும் துலாக்கோலாகச் செயல்படுகின்றது.
தமிழ் மொழியில்,மாந்தர் தம் மனக் கோட்டம் தீர்த்து குணக் குன்றில்
ஏற்றவல்ல ஏராளமானஇலக்கியங்கள் மின்னி மிளிர்கின்றன. அவற்றை ஒரு பருந்தின்
பார்வையில்காணப்புகுவோம்.
கடல் கொண்ட முச்சங்கங்கள்:
மதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் முச்சங்கங் கள் வைத்து முத்தமிழ்வளர்த்தனர் நம் முன்னோர். முரஞ்சியூர் முடி நாகராயர், தொல்காப்பியர்,நக்கீரர் முதலான புலவர்களின் நாவில் நவிலப்பட்ட நற்றமிழ் நூல்கள் ஏராளம்!ஏராளம்!!. கி.மு. 2387-இல் கற்பனைக் கும் எட்டாத "பிரளயம்' ஒன்று உலகில்நிகழ்ந்தது. சீற்றம் கொண்ட ஆழிப் பேரலைகள் முன் உலகின் மிக உயரமான இமயமலைகூடக் கண்ணுக்குப் புலனாக வில்லை. வீசி எறியப்பட்ட கடல்பொருள்களில் பலஉயரமான இமயமலையில் சிக்கி, தங்கி, உறைந்து, படிவங்களாக மாறிப் போயுள்ளன. அதன் பின்னர் கி.மு. 504 மற்றும் கி.மு. 306-இல் நிகழ்ந்த அடுத்த இருகடல்கோள்கள் என முப்பெரும் கடல்கோள்கள் தெற்கே பரந்து விரிந்திருந்ததமிழகத்தையே வழித்து வாரிக் கொண்டு போன நிலையில், எண்ணிறந்த பல தமிழ்நூல்களும் கடல்வாய்ப்பட்டு அழிந்தன. முச்சங்க நூல் களுள் சிலவாகியமுதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, மாபுராணம், பூத புராணம், இசைநுணுக்கம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை, பெருங்கலி, வெண்டாழி, வியாழமாலை, அகவல் என்னும் நூல்கள் பற்றிய குறிப்பு இறை யனார் களவியல் உரை யின்மூலம் வெளிப்படுகின்றது. கடல் கோள் களில் எஞ்சிய நூல்கள் தொல்காப்பியம்,பரி பாடல், நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு,ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகியனவே.
எட்டுத்தொகை நூல்கள்
மேற்காண் நூல்களுள் தொல்காப்பியம் நீங்கலான எட்டு நூல்களும், "எட்டுத்தொகை'நூல்கள் எனப்படும். எட்டுத் தொகையின் ஒவ்வொரு நூலும் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத் தொகையுள் "பதிற்றுப்பத்து'என்னும் பத்துச் சேர மன்னர்களைப் பத்துச்சேரநாட்டுப் புலவர்கள்பாடியது.சேரநாடுஎன்பது இன்றையகேரளா! தமிழிலிருந்து தெலுங்கு, கன்னட மொழிகளுக்குப்பிறகுகடைசியாகப் பிரிந்த தென் திராவிட மொழியான மலையாள இலக்கியத்தின் மூத்தநூலான பதிற்றுப்பத்து, தமிழ் எழுத்து வடிவத்திலேயே சங்க எட்டுத் தொகையுள் ஒன்றாக இருப்பது தமிழின் தொன்மையையும், மலையாளத்தின் "பின்மை'யையும் உணர்த்தும் ஆவணம் எனலாம்.
பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலை படுகடாம் (கூத்தராற்றுப் படை)என்னும் பத்து நூல்களும் கடல் கோள்களுக்குப் பின்னர் நிறுவப்பட்ட சங்கத்துநூல்கள். இவற்றுள் ஒவ்வொரு நூலும் ஒரு மன்னரை புலவரொருவர் பாடிய பாங்கில்அமைந்துள்ளன. "பேராசிரியர்' (கி.பி.13) என்னும் உரையாசிரியரே இப்பத்துநூல்களையும் ஒன்றாகச் சேர்த்து "பத்துப்பாட்டு' என முதன்முதலில் இனம்காட்டினார். இப்பத்து நூல்களுள் செம்பாகி ஆற்றுப் படை நூல்கள்.இவ்வாற்றுப்படை நூல்கள் இன்றைய "பயண இலக்கியத்தின் முன்னோடி'யாகத்திகழ்கிறது.
திணை இலக்கியங்களும் வீரநிலை இலக்கியங்களும்
பொதுவாக சங்க இலக்கியங்களை அக இலக்கியங் கள், புற இலக்கியங்கள் என இருவகையாகப் பகுக் கலாம். அக நூல்களில் குறிப்பிட்ட எவரின் பெயரும்குறிக்கப்படாமல் அகச்செய்திகளை மட்டும் கூறும் மாண்புகாக்கப்பட்டிருக்கும். அக இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் அடிப் படையில் பாடப்பட்டுள்ளதால்"திணை இலக்கியங்கள்' எனப் போற்றப்படுகின்றன: வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, நொச்சி, சழிஞை, தும்பை, வாகை என்னும் போர்முறை களைப் பாடுவதால்புறப்பாடல்கள் "வீரநிலை இலக்கியங்கள்' எனச் சிறப்பிக்கப்படுகின்றன.
காப்பிய நூல்கள்
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் கூறுவன பெருங்காப்பியங்கள். வீடு நீங்கலாக ஏனையவற்றைக் கூறுவன சிறுகாப்பியங்கள்.கி.பி. 2-9- இல் ஐம்பெருங்காப்பியங்களும், கி.பி. 6-16-இல்ஐஞ்சிறுங்காப்பியங்களும் தோன்றின. காப்பிய வகைக்கு வித்திட்ட இளங்கோவடிகளின் சிலம்பும், சாத்த னாரின் மேகலையும் முதல் தமிழ்க் காப்பியங்களாவதோடு பெண்ணின் பெருமை பேணும் காப்பியங்களாகவும் மிளிர்கின்றன. இவற்றோடு சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசியும் சேர்ந்து ஐந்தும் பெருங்காப்பியங்கள். நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயண குமாரகாவியம், நாககுமார காவியம் என்பன ஐஞ்சிறுகாப்பியங்கள். இவற்றுள்மேகலையும், குண்டலகேசியும் மட்டும் பௌத்த சமயத்தைப் பாட ஏனைய 8காப்பியங்களும் சமணம் போற்றுகின்றது. இது, அக்கால கட்டத்தில் சமணம் பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டுகிறது. ஐம்பெருங்காப்பியப் பட்டியலுக்குள் வராவிட்டாலும் பெருங்கதை (கி.பி. 6) பெருங்காப்பிய வரிசையுள் மூன்றாவதாக வரிசைப்படுத்தத் தக்க சிறப்புடையது. கம்பரின் கம்பராமாயணத்தை அடியொற்றிஇரகுவம்சம் (கி.பி. 15), இராமாயண நூல் களுக்கு மறுதலையாக எழுந்த புலவர் குழந்தையின் இராவண காவியம் (கி.பி. 1946) தமிழர்ப் பண்பாட்டைப் பேணுவதற்காகவே எழுந்தது. இவற்றைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் கண்ணதாசனின் இயேசு காவிய மும், சிற்பியின் "மௌன மயக்கமும்' கவிஞர்வைரமுத்துவின் "கவிராஜன் கதை'யும் குறிப்பிடத்தக்கன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
காலம் ஏறக்குறைய 4 (அ)-ஆம் நூற்றாண்டு கணக்கு = நூல். 50 முதல் 500 முடியஅதிக அடிகளைக் கொண்ட நூல் மேற்கணக்கு நூல்கள். அவற்றைவிடக் குறைந்தஅடிகளைக் கொண்டவை கீழ்க்கணக்கு நூல்கள். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது,ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலைஎன்னும் ஆறும் அகநூல்கள்: பொய்கையார் பாடிய களவிழி நாற்பது மட்டும்புறநூல்: ஏனைய நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக்கோவை, பழ மொழி, சிறுபஞ்சமூலம்,முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் 11 நூல்களும் அறநூல்கள். இவற்றுள்திருக் குறள் "உலகப் பொது மறை' என்னும் அரியணை ஏறியது.பதினொண்கீழ்க்கணக்கின் அறநூல்கள் அடியாற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள்எழுந்தன. ஔவையாரின், கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஆத்திசூடி முதலியனவையும் அறநூல்கள். ஔவையின் ஆத்தி சூடியைப் பின்பற்றி பாரதி, பாரதிதாசன் முதல் வாணிதாசன் முடிய ஒன்பதின்மர் "ஆத்திசூடி வகை' நூல்களை இயற்றியுள்ளனர். மேலும், உலகநீதி, நீதிநெறி விளக்கம், பெண் மதிமாலை முதலானவும் அறநூல்களாக அணி செய்கின்றன.
இலக்கண நூல்கள்
இலக்கணம் என்பது மொழியின் வேலி. நமக்கு முழுமையாக கிடைக்கும் முதல் இலக்கணநூல் தொல் காப்பியமே. அகத்தியரை முதன்மைப்படுத்திக் கூறும் மனப் போக்கு,அவரைத் தொல்காப்பியரின் ஆசிரி யர் எனவும், அவரது அகத்தியம்தொல்காப்பியத்தின் மூலநூல் எனவும் கூறலாயிற்று: ஆயின் "அதங் கோட்டாசான்'என்பவரே தொல்காப்பியரின் ஆசிரியர் என்பதனைத் தொல்காப்பியம் பாயிரம் பதிவுசெய்துள்ளது. கி.பி. 5-ஐச் சேர்ந்த தொல்காப்பியத்தைத் தொடர்ந்து பவணந்திமுனிவரின் "நன்னூ'லும் (கி.பி. 12) சொல்லமைப்புகளை ஆராயும் "இலக்கணக்கொத்து'ம் (கி.பி. 17) இயற்றப்பட்டன. தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் அகஒழுக்கங் களைப் பற்றிய இலக்கணங்கள் கி.பி. 8-16-இல் தோன்றின. இவற்றுள் இறையனார் அகப்பொருள் (கி.பி. 8) குறிப் பிடத்தக்கது. ஐயனாரிதனாரின் "புறப்பொருள் வெண்பாமாலை' (கி.பி. 9)-யில் தான் "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துவாளொடு, முன்தோன்றி மூத்தகுடி' என்னும் வரிகள் இழை யோடுகின்றன. செய்யுள்இயற்றுவதற் குரிய யாப்பிலக்கணங்களை அவி நயம் (அவி நயனார்), யாப்பெருங்கலம்மற்றும் யாப்பருங்கலக்காரிகை (அமித சாகரர்)யும், செய்யுள் அணிகளைக் கூறும்தண்டியலங்காரம் (கி.பி. 12) நூலும் எழுந்தன. இத்தாலி நாட்டின ரானவீரமாமுனிவரின் "தொன்னூல் விளக்கம்' ஐந்திலக்கணங்களைக் கூறுவது. தமிழின்யாப்பு வடிவங் களைப் "பாட்டியல் நூல்கள்' நவிலு கின்றன. இவை போக, சொல்லின்பொருள்களை விளக்கும் 67 நிகண்டுகள் தமிழில் உள்ளன என்பர். திவாகரர்இயற்றிய திவாகரம் "முதல் நிகண்டு' எனப் போற்றப்படுகிறது. காலப்போக்கில்நிகண்டுகள் உரைநடை வடிவில் அகராதிகளாக உருமாற்றம் பெற்றன. வீரமாமுனிவரின்"சதுர்அகராதி' புகழ் பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி"லெக்சிகன்' எனப்படுகிறது. இலக்கணக் கூறுகளை அகர வரிசையில் வை.மு.கோபாலய்யர் 25 ஆண்டு களாகப் பாடுபட்டு உருவாக்கிய 17 தொகுதிகளைக் கொண்ட"தமிழ் இலக் கணப் பேரகராதி' 2005-இல் வெளியிடப்பட்டது.
தொன்ம இலக்கியங்கள்
தொன்மை வாய்ந்த பழங்கதைகளைக் கூறும் புராணங்கள் கி.பி. 11-இல் தோன்றின.கல்லாடம் சிவ பெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் முதல் புராணநூல்,தொன்மங்களில் பெரியபுராணமும் (சேக் கிழார்), கந்தபுராணம் (கச்சியப்பமுனிவர்) புகழ் வாய்ந்தன.
சமயங்கள் வளர்த்த தமிழ்
தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஏதாவதொரு சமயப் பெருமையைப் பேச உதவும் கருவியாகவே ஆளப்பட்டு வந்திருப்பது கண்கூடு. பாரதிதாசன்தான் "அழகின்சிரிப்பு' மூலம் இம்மரபினை உடைத்தார் எனலாம். கி.மு. 5-இல் தோன்றியபௌத்தக் கருத்து களை மணிமேகலை, குண்டலகேசி, வீர சோழியம் முதலான நூல்கள்எடுத்துரைக்கின்றன. கி.பி. 3-இல் தோன்றிய சமண சமயப் பெருமையை "ஜைனஇராமாயணம்' மேரு மந்திரபுராணம்' சிலம்பு, வளையா பதி, பெருங்கதை முதலானஇலக்கியங்களும், ஐஞ்சிறு காப்பியங்களும் பேசுகின்றன. கி.பி. 7,8,9-இல்சோழர் கட்டிய சிவாலயங்கள் 63 "நாயன்மார்' மூலம் சைவத்தை வளர்த்தன. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம் முதலான "பன்னிருதிருமுறைகள்' தோற்றம் கண்டன. ஏறக்குறை இக்காலகட்டத்தில் தோன்றிய வைணவம்"பன்னிரு ஆழ்வார்கள்' மூலம் நாலாயிர திவ்விய பிரபந்தங்களைத் தந்தது.மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் மார்கழி மாதப்பாராயண நூல்களாகத் திகழ்கின்றன. வணிகப் பொருட்டு நுழைந்த மேலை நாட்டினருள்இத்தாலியைச் சேர்ந்த ஜோசப் பெஸ்கி செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்மூலம் "வீரமாமுனிவர்' எனப் போற்றப்படுகிறார். இவரது "தேம்பாவணி'யும்" பரமார்த்த குருகதை'யும் சிறப்புடையன. இன்னும் அகராதிகள், ஒப்பிலக்கணங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சுவடிப் பணிகள், கிறித்தவரின்தமிழ்ப் பணிக்குச் சான்றுகளாக நிலவுகின்றன. கி.பி. 14-இல் தமிழகத்தில்படையெடுத்த "மாலிக்காபூர்' மூலம் இஸ்லாமியத் தாக்கம் எழுந்தது. அதன் மூலம்உமறுப்புலவரின் சீறாப்புராணம் தமிழுக்குக் கிடைத்தது. சிற்றிலக்கியங்கள்,சூபி, முனா ஜத்து, நாமா இலக்கிய வகைமைகளில் பல இஸ்லாமிய நூல்கள்இயற்றப்பட்டன. நபிகள் நாயகம் வரலாற்றை அப்துல் ரஹீம் "நாயகம் காவியம்'எனவும், கவிஞர் மேத்தா "நாயகம் ஒரு காவியம்' எனவும் காப்பியங்களாக்கியுள்ளனர்.
சிற்றிலக்கியங்கள்
மாலிக்காபூரின் படையெடுப்பும், விஜய நகரப் பேரரசின் ஆட்சிமுறையும் காப்பியசருவாக்கங்களை நிறுத்தித் தனி மனிதப் போற்றலை வளர்த்தன. இதன் விளைவாக 96வகைச் சிற்றிலக்கியங்கள் தோற்றம் கண்டன. ஆற்றுப்படை, பிள்ளைத் தமிழ், உலா,தூது, கலம்பகம் முதலாயின அவற்றுள் சில.
சித்தர் இலக்கியங்கள்
அணிமா, மகிமா, கிரிமா, இலகிமா, பிராப்தி, பர காமியம், ஈசத்துவம்,வசித்துவம் என்னும் எட்டுவகைச் சித்துக்களில் வல்லவர்கள் சித்தர்கள். 18,108, 1008 என்னும் எண்சிறப்பு முறை அடிப்படையில் "பதினெண் சித்தர்கள்' எனவரையறுக்கப் படுகின்றனர். திருமூலர், சிவாக்கியர், பட்டினத்தார் முதலானோர்அவர்கள். இவர் தம் நூல்களில் மெய்யுணர்தலும், இரைத் தேடலும், மருத்துவ,பச்சிலைக் குறிப்புகளும் பொதித்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள்
மேலை நாட்டினர் தொடர்பால் இந்நூற்றாண்டில் இலக்கியங்கள் பன்முகப்பார்வையுடன் பல்வேறு வகைமைகளுக்குத் தோற்றம் தந்து ஏற்றம் கண்டு வருகின்றன. பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், சுரதா,கண்ணதாசன் முதலானோருடன் சிற்பி, வைரமுத்துவின் மரபுக் கவிதைகள் இருபதாம்நூற் றாண்டின் தொடக்க காலத்தை அணி செய்தன. வீரமா முனிவரின் (கி.பி. 18)பரமார்த்த குருகதை "தமிழ்ச் சிறு கதைகளின் முன்னோடி'யாகத் திகழ்கிறது.வ.சே.சு. ஐயரின் குளத்தங்களை அரசமரம் "முதல் தமிழ்ச் சிறு கதை' எனலாம்.புதுமைப்பித்தன், கல்கி, ஜெயகாந்தன், கு.ப.ரா. இராஜம்கிருஷ்ணன் முதலானோர்சிறுகதை உல கில் தடம் பதித்தவர்கள். பத்திரிகைகளின் வாயிலாகப் பெருகியசிறுகதைகள் "அரைப்பக்கச் சிறுகதை'களைக் கண்டு "ஒரு நிமிடச்சிறுகதை'களையும் ஈன்றெடுத் துள்ளன. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் "பிரதாபமுதலியார் சரித்திரம்' (1879) தமிழின் முதல் புதினம். இராஜம்ஐயர்,அ.மாதவையாவின் புதினங்களும் "சரித்திரங்கள்' என்றே குறிக்கப்பட்டன. ஆரணிகுப்பு சாமி, தேவன், தமிழ்வாணன் வாயிலாகத் துப்பறியும் புதினங்கள்அறிமுகமாயின. வினோ, மீண்டும் ஜினோ முதலான புதினங்களின் மூலம் சுஜாதாஅறிவியல் புதினங்களை வித்திட்டார். அகிலன், மு.வ. நா. பார்த்த சாரதிமுதலானோர் சமூகப் புதினங்களை வளர்த் தெடுத்தனர். கல்கி, சாண்டில்யன்,மு.மேத்தா, கலைஞர், பூகண்ணன் முதலானோர் வரலாற்றுப் புதினங்களைப்புனைந்தனர். இலஷ்மி, சிவசங்கரி, இராஜம் கிருஷ்ணன் முதலான பெண்எழுத்தாளர்கள் புதின உலகில் தடம் பதித்தோராவர். கள ஆய்வுப் புதினங்கள்( கூட்டுக் குஞ்சுகள்) தருவதில் இராஜம் கிருஷ்ணன் தேர்ச்சி மிக்கவராகவிளங்குகிறார்.
மரபுக் கவிதையின் யாப்புக் கட்டுக்களை உடைத்து உருவானவை புதுக்கவிதைகள்.ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, அப்துல் ரகுமான், சிற்பி, மு.மேத்தா, மின்னூர்சீனி வாசன், பொன். செல்வகணபதி, ஈரோடு தமிழன்பன் முதலானோர் புதுக்கவிதைஉலகில் குறிப்பிடத்தக்கோர். மு.மேத்தாவின் "ஆகாசத்துக்கு அடுத்த வீடு'சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது. புதுக்கவிதையின் எளிய வடிவம் ஹைக்கூ.ஜப்பானிய இறக்குமதி. அமுத பாரதி, அறிவுமதி முதலானோர் ஹைக்கூ கவிஞர்கள்.ஹைக்கூவின் இறுக்கம் குறைந்த வடிவம் சென்ரியூ. ஈரோடு தமிழன்பனின் "ஒருவண்டி சென்ரியூ' தமிழின் முதல் சென்ரியூத் தொகுப்பு நூல் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. ஹைக்கூவைத தமிழ்ப் படுத்திய வடிவம் குக்கூ. மீ.ரா-வின்"குக்கூ' என்னும் நூலே முதல் குக்கூ-வின் தொகுப்பாக உள்ளது.
அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு என மு.வ. எழுதிய கடித இலக்கியங்கள்அரசியல் சார்ந்த கடித இலக்கியங்களுக்கு வழிகோலின எனலாம். தனிநாயகஅடிகளார், மு.வ, வ.சுப. மாணிக்கம் (தமிழ்க்காதல்), க.கைலாச பதி (வீரயுகப்பாடல்) முதலானோர் ஒப் பிலக்கியங்கள் காண வழிவகுத்தனர். அயல்நாட்டு வணிகத்தொடர்பும், அரசியல், அறிவியல் கலப்பு களும் மொழிக்கலப்பை உருவாக்கியதன்மூலம் ஒப் பிலக்கணம் உருவெடுத்தது. நூல்களை மதிப்பீடு செய்யும் திறனாய்வுநூல்களும், மொழிபெயர்ப்பியதும், நாட்டுப்புறவியலும், குழந்தை இலக்கியங்களும், பயண இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்,பெண்ணிய, தலித்திய, ஊடக இலக்கியங்கள் இன்னோ ரன்னவை இருபதாம் நூற்றாண்டுஇலக்கியங்களாக இலங்குகின்றன.
எதிர்வருங்காலத்தில் சட்டத்தமிழ், கணிப்பொறித் தமிழ், அறிவியல் தமிழ்,மருத்துவத் தமிழ், பொறியியல் தமிழ் எனத் தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள்முழு வீச்சில் பன்முகப் பாங்கில் பரவலாக்கப்படல் வேண்டும். மேலும்உலகெங்களிலும் பல்வேறு பகுதிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழ் ஓலைச்சுவடிகள், கையெழுத் துப் பிரதிகள் முதலான தமிழ்க் கருவூலங்கள் தமிழகம்கொணரப்பட்டு அச்சில் ஏற்றப்படல் வேண்டும். தமிழ் நூல்கள் அனைத்தும்காக்கப்படல் வேண்டும்.

தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு
முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள்
ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல்
முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.
ஐம்பெருங் குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட
ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.
பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919Š-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .
அப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.
மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.
சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.
1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தி யாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.
1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.
இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழி லாளர்களுக்குநலன் விளைவித்தார் ராஜாஜி. அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக் கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங் கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.
அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.
மூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகிய தால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவ ரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாண வர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர்.
1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார்.
அண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற் படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனை களாகும். தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள், கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச் சின்னங்களாகும்.
தி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய் துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரண மாக இவரது பதவி பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச் சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும். பொடா சட்டத்தைப் பயன்படுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபால், அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை கைது செய்தது, அரசு ஊழியர் கள் மீதான நடவடிக்கைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ஆளுநர் மீது தாக்குதல், மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள், விவசாயிகளின் பட்டினிச் சாவு, நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம், வளர்ப்பு மகன் ஆடம்பரத் திரு மணம் ஆகியவை இவரது ஆட்சி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கின.
தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி அமைந்ததால் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ள அதே வேளையில், காவிரி பிரச் சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாற்று விவகாரம் , கச்சத்தீவு ஒப்பந்தம் என தமிழகத்தின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. ஜன நாயகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடு களுக் குத் தூண்டுகோலாக அமைவது எதிர் கட்சி களின் செயல்பாடுகளேயாகும். காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூலி உயர்வுச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம் ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களின் விளைவுகளே. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு கிடைத்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி (வன்னியர் சங்கம்) நடத்திய போராட்டங்களே அடிப்படை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமைகளைப் பெறுவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டவை தொடர்ந்து போராடி வருகின்றன. சிறு பான்மை அமைப்புகள், சமுதாய இயக்கங் கள் ஆகியவை நடத்தும் போராட்டங்களின் தாக்கம் அரசின் திட்டங்களை விரைவுபடுத்து கின்றன. எனவே, ஆட்சியில் பங்கு பெற முடியா விட்டாலும் மக்களுக்கானப் போராட்டங் களை நடத்தும் கட்சிகள் தங்கள் கொள்கை களில் வெற்றி பெறுகின்றன.
நீதிக்கட்சி-காங்கிரஸ் - தி.மு.க- அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்துள்ளன. இந்த ஆட்சிகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களினால் சமூகநீதி-சமுதாய நல்லிணக்கம்- தனிநபர் வளர்ச்சி- புதிய தொழில்நுட்பம்- ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்- புதிய முதலீடுகள்-பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் தமிழகம் இந்தி யாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி யாகத் திகழ்கிறது. பரவலான தொழில் வாய்ப்பு கள், நீராதாரங்களைப் பெருக்குதல், சிறு தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி போன்ற துறைகளில் பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது. சுயநலன், ஊழல், அரசியல் காழ்ப் புணர்ச்சி, தனிநபர் மீதான தாக்குதல் இவற் றைப் பின்தள்ளி மாநில நலனை ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனதில் கொண்டு செயல்பட்டால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும்.
By கோவி லெனின்

திராவிடர் இயக்கம் part III
மாண்டேகு-செம்ஸ்போர்டு
சீர்திருத்தத்தின் அடிப்படையில் நடந்த முதல் தேர்தலிலில் (1920) சென்னை
மாகாணத்தில் அதிக இடங்களை வென்ற நீதிக்கட்சியே ஆட்சி அமைக்கும் தகுதியைப்
பெற்றிருந்தது. அதன் தலைவர் பிட்டி. தியாகராயரை ஆட்சி அமைக்க அழைத்து
கடிதம் எழுதினார் ஆளுநர் லார்டு வெலிலிங்டன். தனது தலைமையில் ஆட்சி அமைக்க
விருப்பமில்லை என்றும் தனது கட்சியில் உள்ள தன்னைவிட பெரியவர்கள் ஆட்சி
அமைக்க அவர்களை நெறிப்படுத்துவேன் என்றும் பதில் எழுதி, அமைச்சரவையில்
இடம்பெறுபவர்கள் யார் யார் என்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்
தியாகராயர்.
நீதிக்கட்சி அமைச்சரவையில் முதல் அமைச்சராக (ச்ண்ழ்ள்ற் ம்ண்ய்ண்ள்ற்ங்ழ்) கடலூர் எ.சுப்பராயலு ரெட்டியார் பொறுப்பேற்றார். இரண்டாவது அமைச்சராக பி.இராமராய நிங்கார் எனப்படும் பனகல் அரசரும், மூன்றாவது அமைச்சராக சர்.கே.வி.ரெட்டி நாயுடுவும் பொறுப்பேற்றனர். சென்னை மாகாணத்தில் 17.12.1920 முதல் இரட்டை ஆட்சி நடை முறைக்கு வந்தது. 1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள், முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றக் கூட்டத்தைக் தொடங்கிவைத்த கன்னாட் பிரபு தனது உரையில், ""நிர்வாகத் திறனும் நல்ல பாரம்பரியமும் கொண்ட இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்புவிப்பதில் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். இது ஜனநாயக வரலாற்றின் ஆரம்பக் கட்டம் என்றாலும் முக்கியத் திருப்பத்திற்கு வழிகோலும்'' என்றார்.
1921 மார்ச் மாதம் நீதிக்கட்சி ஆட்சியின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூலையில், சுப்பராயலுவுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதால் முதல் அமைச்சர் பொறுப்பிலிலிருந்து அவர் விலகினார். டிசம்பர் மாதம் சுப்பராயலு காலமானார். அவருக்குப் பின், பனகல் அரசர் முதல் அமைச்சரானார். இரண்டாவது அமைச்சராக கே.வி.ரெட்டி நாயுடுவும், மூன்றாவது அமைச்சராக ஏ.பி.பாத்ரோவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஏ.பி.பாத்ரோ இன்றைய ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்காம்பூரைச் சேர்ந்தவர். அப்போது அப்பகுதி, சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தது.
பனகல் அரசர் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபின், 1921-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் நாள், அனைத்துச் சமூகத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிப்பதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ""உத்தியோகத் துறையில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு உத்தியோகங்களை வழங்கவேண்டும்'' என்கிற அந்த மசோதா, பலத்த எதிர்ப் பையும் மீறி நிறைவேறியது. இதன் மூலம் சென்னை மாகாணத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப் பிக்கப்பட்டது. எனினும், அதிகாரிகள் இதனை நடைமுறைப் படுத்தாமல் கிடப்பிலேயே போட்டிருந்தனர்.
அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட- பிற்படுத்தப்பட்ட-பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு ஒதுக்கீடு அளிக்கவேண்டுமென்றால், அவர்களுக்கு கல்வியிலும் உரிய வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்பதை நீதிக்கட்சி யினர் உணர்ந்திருந்தனர். இதற்காக, ஒவ்வொரு கல்லூரி யிலும் குழுக்களை அமைத்து அதன் மூலமே மாணவர் களின் சேர்க்கை நடைபெறவேண்டும். கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம்போல் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என மூன்றாவது அமைச்சரான ஏ.பி.பாத்ரோ ஓர் ஆணையைப் பிறப்பித்தார். இந்த ஆணையின் மூலமாக கல்லூரிகளில் பிராமணரல்லாத மாணவர்கள் சேர்வதற்கு வாய்ப்பு உருவானது. அதற்கு முன் கல்லூரி நிர்வாகத்தில் இருந்த பிராமணர்களே தங்கள் விருப்பம் போல தங்களுடைய சமுதாயத்து மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து வந்தனர். இன்று அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மருத்துவப்படிப்பு, பொறியியல் படிப்பு, வேளாண் அறிவியல், தகவல் தொழில் நுட்பம், நுண்ணறிவியல் போன்ற பலதுறைகளிலும் பட்டம் பெற முடிகிறதென்றால் அதற்கான அடித்தளத்தை நீதிக் கட்சி ஆட்சியே அமைத்தது எனலாம்.
தாழ்த்தப்பட்ட-பழங்குடி சமுதாயத்து மக்களை பஞ்சமர், பள்ளர், பறையர் என இழிவாக அழைக்கும் வழக்கமும், அப்படியே பதிவேடுகளில் குறிப்பிடும் வழக்கமும் இருந்து வந்தது. இந்நிலையை மாற்ற வேண்டும் என நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி. நடேசனார் தனது திராவிடர் சங்கத்தின் சார்பில் அரசாங்கத்திற்கு ஒரு மனு அனுப்பினார். இதனையடுத்து, 1922 மார்ச் 25-ஆம் நாள், தாழ்த்தப்பட்ட- பழங்குடி மக்களை இனி பஞ்சமர் உள்ளிட்ட சொற்களால் இழிவுபடுத்தக்கூடாது என்றும், ஆதிதிராவிடர் என்ற சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்றும் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களுக்கான அனுமதியை உறுதி செய்யவும், அவர் களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கட்டணத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு கல்லூரிகளிலும் உயர்நிலைப்பள்ளிகளிலும் அரைச் சம்பளம் மட்டுமே என்ற சலுகை அளிக்கப்பட்டது. கல்வி- வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, தொழிலாளர் நலனுக்கான ஆணையங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் ஆகியவை 1920 முதல் 1923 வரை யிலான நீதிக்கட்சியின் முதலாவது அமைச்சரவையில் நிறைவேறியது.
நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை
1923 நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலிலிலும் நீதிக் கட்சியே அதிக இடங்களைப் பிடித்தது. எனினும், முதல் பொதுத் தேர்தலிலில் பெற்றது போன்ற பெரும் வெற்றியை நீதிக்கட்சியினால் பெறமுடியவில்லை. நீதிக்கட்சியின் இரண் டாவது அமைச்சரவையில் முதல் அமைச்சராக பனகல் அரசர் பொறுப்பேற்றார். இரண்டாவது அமைச்சராக சர் ஏ.பி.பாத்ரோவும், மூன்றாவது அமைச்சராக டி.என்.சிவஞானம் பிள்ளையும் பொறுப்பேற்றனர்.
நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிறைவேறின. அன்றைய கால கட்டத்தில் ஒரு மாணவன் மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) படிப்பது என்றால் அவனுக்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதனால், பிராமண மாணவர்களே டாக்டராக முடியும் என்ற நிலைமை இருந்தது. இந்த நிர்பந்தத்தை பனகல் அரசர் உடைத் தெறிந்தார். தனிச்சட்டம் மூலம் மருத்துவத்துறையில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அகற்றி, மருத்துவத் துறையில் இந்தியர்களைப் பங்கு பெறச் செய்தார். ""எதிர்ப்பு எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் அது இந்த நாட்டிற்கு நன்மையை விளைவித்தால், அதை வரவேற்கத் தயாராய் இருக்கிறேன். தீமை விளைவிக்குமானால் அதை எதிர்த்து முறியடிப்பேன்'' என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் பனகல் அரசர்.
கல்வித்துறைக்குப் பொறுப்பேற்றிருந்த அமைச்சர் ஏ.பி.பாத்ரோ, சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்த ஆந்திரப் பகுதிகளுக்காக ஆந்திரப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க முன்வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாணவர்களின் நலன் கருதி தனிப்பல்கலைக்கழகம் உருவாக்கப்படவேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் அமைப் பதற்கான பணி தொடங்கப்பட்டது. (இது தனியார் பல்கலைக்கழகமாகும்)
தமிழகத்தில் கோவில்கள் அதிகம். அதற்கான சொத்து களும் மிகுதி. இவை ஒழுங்காகவோ நேர்மையாகவோ பராமரிக்கப்படவில்லை. பொறுப்பாளர்கள் தங்கள் சொந்த நலன்கருதி கோவில் சொத்துகளைப் பயன்படுத்தி வந்தனர். இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக நீதிக்கட்சி ஆட்சியில் 1925-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறநிலையப் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது. இதுவே இன்றுள்ள இந்து அறநிலையத்துறைக்கு முன்னோடியாகும். இதன் மூலமாக கோவில் சொத்துகள் தனிநபர்களின் ஆதிக்கத்தி லிலிருந்து மீட்கப்பட்டு அரசு வசமானது.
நீதிக்கட்சியின் மூன்றாவது அமைச்சரவை
1926-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் மூன்றாவது பொதுத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலிலில் நீதிக்கட்சிக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மொத்த இடங்கள் 98-இல் சுய ராஜ்ஜியக் கட்சியினர் 36 இடங்களையும் சுயேச்சைகள் 36 இடங்களையும் நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் முடிவின்படி, அதன் துணைக்கட்சியான சுயராஜ்ஜியக்கட்சி அமைச்சரவை ஏற்க வில்லை. நீதிக்கட்சியை சேர்ந்த சுப்பராயன் கட்சியிலிலிருந்து விலகினார். சுயேச்சையாக அமைச்சரவை அமைத்தார். அவருடன் இணைந்து சுயராஜ்ஜியக் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சியமைத்தனர். 1928-இல் அவருடைய ஆட்சிக்கான ஆதரவை சுயராஜ்ஜியக் கட்சி விலக்கிக் கொண்டதால், நீதிக்கட்சி மற்றும் சுயேச்சைகளின் துணை யுடன் சுப்பராயன் அமைச்சரவை மாற்றம் பெற்றது.
இந்த அமைச்சரவையில் இரண்டாவது அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலிலியார், 1921-இல் நிறைவேற்றப் பட்ட வகுப்புவாரி உரிமை ஆணையை செயல்படுத்த முன்வந்தார். புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, அரசு அலுவலகங்களில் 12 இடங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டுமென்றால், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 5 பேர், பார்ப்பனர் 2 பேர், முஸ்லிலிம்கள் 2 பேர், அய்ரோப்பியர் மற்றும் ஆங்கிலோ இந்தியக் கிறித்துவர் 2 பேர், தாழ்த்தப்பட்டவர் ஒருவர் என்ற விகிதாச்சாரத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பதே இந்த ஆணை. இதுவே, சமூகநீதியின் அடித் தளமாக அமைந்தது. இன்று தமிழகத்தில், 69% இட ஒதுக்கீடு நிலவுவதற்கு முத்தையா முதலிலியார் கொண்டு வந்த வகுப்புவாரி இடஒதுக்கீடே அடிப்படையாகும்.
மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தின் அடிப் படையிலான தேர்தலிலில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. அவர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிப்பது பற்றி மாகாண அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்பதால், தமிழக சட்டமன்றத்தில் முதல் பெண் நியமன உறுப்பினராக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பொறுப்பேற்றார். இவரே முதல் பெண் மருத்துவரும் ஆவார். இவர் 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள், தேவதாசி ஒழிப்பு மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.
கோவில்களில், குறிப்பிட்ட சமுதாயத்துப் பெண்களை கடவுள் தொண்டு என்ற பெயரில் தேவதாசிகளாக நியமித்துவிடுவார்கள். கோவிலை நிர்வகிப்பவர்களின் விருப்பத்திற்கு ஆட்படவேண்டிய அவலம் இப்பெண்களுக்கு நேர்ந்தது. பாலிலின இழிவை வெளிப்படுத்தும் இத்தகையப் பழக்கம் ஒழிக்கப்படவேண்டும் என்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும். இதனை, சத்தியமூர்த்தி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். ""சமூகத்திற்குத் தாசிகள் தேவை. ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயல்'' என்றார் சத்தியமூர்த்தி. அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், ""ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்றவேண்டுமா? உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்களுக்கு ஏன் இந்தப் பொறுப்பைத் தரக்கூடாது?'' என்று சத்தியமூர்த்தியைப் பார்த்து சூடாகக் கேட்டார். மிகுந்த எதிர்ப்புக்கு நடுவே தேவதாசி ஒழிப்பு மசோதா நிறைவேறியது.
நீதிக்கட்சியின் நான்காவது அமைச்சரவை.
1930 செப்டம்பரில் நடந்த நான்காவது தேர்தலிலில் நீதிக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. 70% வாக்காளர்கள் நீதிக் கட்சிக்கு வாக்களித்தனர். பி.முனுசாமி நாயுடு முதல் அமைச்சரானார். பி.டி.ராஜனும் குமாரசாமி ரெட்டியாரும் மற்ற இரு அமைச்சர்களாவர். இந்த அமைச்சரவை இரண் டாண்டு காலம் மட்டுமே நீடித்தது. நீதிக்கட்சியின் தலை வராக பொப்பிலிலி அரசர் எனப்படும் ரவு ஸ்வெட சல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ் தேர்ந்தெடுக்கப்பட, அவரே 5.11.1932-இல் முதல் அமைச்சரானார்.
மூன்றாண்டுகளுக்கொரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஆனால், 1934-இல் சைமன் கமிஷனின் புதிய சீர்திருத்த சட்டங்கள் நடைமுறையாவதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னை மாகாணத்திற்குத் தேர்தல் நடை பெறவில்லை. அதனால் பொப்பிலிலி அரசரின் அமைச்சரவை 7 ஆண்டுகாலம் பதவியில் நீடித்தது. இனாம்தாரி சட்டம், வேளாண்மைத் துறையில் சீர்திருத்தங்கள், கூட்டுறவுத் துறையில் சீர்திருத்தங்கள், பொது தெருக்கள்- பொதுக் கிணறுகள்- பொது இடங்களை எந்த சாதியைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தும் உரிமை ஆகியவை பொப்பிலிலி அரசர் காலத்தின் முக்கிய சாதனைகளாகும்.
1920-இல் தொடங்கி 1937 வரை சுமார் 17 ஆண்டுகள் நடைபெற்ற நீதிக்கட்சியின் ஆட்சியில் சமூகநீதிக்கான ஆணைகள், சமஸ்கிருத ஆதிக்கத் தகர்ப்பு, பெண்களுக்கான உரிமைகள்- பிரதிநிதித்துவம், கல்வித்துறையில் சீர் திருத்தங்கள் உள்ளிட்ட சமுதாய மாற்றங்களுக்கானத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளும் இவைதான். ஆங்கிலேயரின் இரட்டையாட்சி முறையில் மிகக்குறைந்த சட்ட அதிகாரங்களை வைத்துக்கொண்டு நீதிக்கட்சி தனது திட்டங்களை நிறைவேற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Ref:Nakkeeran

திராவிடர் இயக்கம் part II
திராவிடர் இயக்கம் part II நூறாண்டு
காலத்திற்கு முன் அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி கற்கக்கூடிய வாய்ப்பு
இல்லை. தகுதியான கல்வி கற்று உரிய வேலையைப் பெறவும் முடியாத நிலை இருந்தது.
சமுதாயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டு, அதன்
காரணமாக வேலை வாய்ப்பினைப் பெற முடியாத நிலை நீடித்தது.
உயர்சாதியினர் எனப்படும் பிராமண சமுதாயத்தினரே அதிகம் படித்தவர்களாகவும், அரசின் முக்கிய பதவிகளில் இடம்பிடிக்கக்கூடியவர்களாகவும் இருந்தனர். இந்நிலையில் தான், 1912-இல் சென்னையில் டாக்டர் சி.நடேசனாரும் மற்றவர்களும் தொடங்கிய தி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற அமைப்பு, 1913-இல் திராவிடர் சங்கம் என்ற பெயர் பெற்றது. பிராமணரல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிடர் இல்லம் என்ற இலவச விடுதியை அமைத்து, உணவு வசதியையும் இலவசமாக செய்து கொடுத்தார். திராவிடர் சங்கத்தின் விழாக்களில் சிந்தனையாளர் சிங்கார வேலர், தமிழ்த்தென்றல் திரு.வி.க, அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட பலரும் உரையாற்றி வந்தனர். திராவிடர்கள் பற்றிய நூல்களும் வெளியிடப்பட்டன.
அப்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி வளர்ந்து வந்தது. தமிழகத்திலும் அதன் செல்வாக்கு உயர்ந்திருந்தது. காங்கிரஸ் கட்சியில் செயலாற்றி வந்த சென்னைப் பிரமுகர் களில் டாக்டர் டி.எம்.நாயர் (தாரவாட் மாதவன் நாயர்) முக்கியமானவர் ஆவார். இவர் புகழ்பெற்ற காது-மூக்கு- தொண்டை மருத்துவர். அன்றைய சென்னை நகராட்சியின் (தற்போதைய மாநகராட்சி) உறுப்பினராக இருந்தவர். பொதுநலனில் அக்கறை கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் பிராமண சமுதாயத்து பிரமுகர்களுக்கே முக்கியத்துவமும் கட்சிப் பொறுப்புகளும் கிடைத்து வந்தன. சென்னை மாகாண சட்டமன்றத்திலிலிருந்து டெல்லிலி இம்பீரியல் சட்டமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்படும் உறுப்பினர் பதவிக்கு டி.எம்.நாயர் போட்டியிட்டார். வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட டி.எம்.நாயர் தோல்வியடைந்தார். தன்னை பிராமண சமுதாயத்து காங்கிரஸ் பிரமுகர்கள் புறக்கணிப்பதை உணர்ந்து, கட்சிப்பணிகளிலிலிருந்து ஒதுங்கியபடி இருந்தார் டி.எம்.நாயர்.
சென்னை நகரில் காங்கிரசின் மற்றொரு முக்கிய பிரமுகர் சர் பிட்டி.தியாகராயர். இவர் பெரும் செல்வந்தர். பொதுநலத்தில் அக்கறை கொண்ட வள்ளல். சென்னை நகராட்சியின் 40 ஆண்டுகால உறுப்பினர். சென்னை மாநகராட்சியின் (அதிகாரப் பற்றற்ற) முதல் தலைவர். அவர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக 5000 ரூபாய் நிதி வழங்கினார். அன்றைக்கு அது மிகப் பெரிய தொகை. குடமுழுக்கு நாளில் அவர் கோவிலுக்கு சென்றபோது அவரை கோபுரத்தின் மீது ஏற அங்கிருந்த பிராமணர்கள் அனுமதிக்கவில்லை. திருப்பணிக்காக பெருந் தொகையை நன்கொடையாகக் கொடுத்திருந்தாலும், சாதியில் பிராமணர்களுக்குக் கீழான சூத்திரர் என்பதால் அவர் மேலே ஏறக்கூடாது என அவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்த பிராமணர் ஒருவரே தியாகராயரைத் தடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சி தியாகராயருக்கு பெரும் அவமானமாகிவிட்டது. பிராமணர்களே சமுதாயத்திலும் அரசாங்கத்திலும் செல்வாக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்றும், மற்ற சாதியினருக்கு உரிய வாய்ப்புகள் அமையவில்லை என்பதை யும் உணர்ந்தார் தியாகராயர்.
திராவிடர் சங்கத்தின் செயலாளராக இருந்த
டாக்டர் சி.நடேசனார், பிராமணரல்லாத பிரமுகர்களை ஒருங் கிணைக்கும் பணிகளில்
தீவிரமாக இருந்தார். அவருடைய முயற்சியால் டாக்டர் டி.எம்.நாயரும், சர்.
பிட்டி தியாகராயரும் பிராமணரல்லாத மற்ற சமுதாயத்தினர் விழிப்புணர்வு பெறும்
வகையில் பொதுத்தொண்டாற்ற முன் வந்தனர். 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம்
நாள் பிராமணரல்லாத பிரமுகர் களின் கூட்டம் ஒன்று கூடியது. அதுவே,
நீதிக்கட்சி-ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச்
சங்கத்தின் தோற்றமாகும். இந்த இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட,
பிராமணரல்லாதார் அறிக்கையே நீதிக்கட்சியின் நோக்கத்தையும் குறிக்கோளையும்
முழுமையாக வெளிப்படுத்தியது.
பிராமணரல்லாதார் முதலில் தங்களுக்குத் தாங்களே உதவி புரிந்து கொண்டு முன்னேறி வரவேண்டியது அவசியமாகும். பரந்த நிரந்தர அடிப்படையில் அவர்கள் கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றமடைவதற்கு அவசியமான எல்லாச் செயல்களையும் மேற்கொள்ள வேண்டும்- என்பதே அந்த அறிக்கையின் சாராம்சமாகும். திராவிடர் இயக்கத்தின் முன்னோடிகளாக டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி.தியாகராயர், டாக்டர். டி.எம்.நாயர் ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏடு நடத்தப்பட்டது. அதனால் அந்த இயக்கத்தை ஜஸ்டிஸ் கட்சி என்று குறிப்பிட்டனர். அதை அப்படியே தமிழில் நீதிக்கட்சி என்று அழைக்கத் தொடங்கினர். அரசியல் நிர்வாகத்தில் பங்கேற்பதன் மூலமாக திராவிடர்களான பிராமணரல்லாத மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு- சமுதாய அந்தஸ்து ஆகியவை கிடைக்கச் செய்யவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது நீதிக்கட்சி.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் அதிகாரம் மிக்கவர்களாக ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். ஆட்சி நிர்வாகத்தில் இந்தியர்களுக்குக் குறைந்தளவே அதிகாரமும் பிரதிநிதித்துவமும் இருந்தன. 1909-ஆம் ஆண்டு, இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ஆங்கிலேயர் மிண்டோவும்- இங்கிலாந்தில் இந்தியாவின் அமைச்சராக இருந்த ஆங்கிலேயர் ஜான் மார்லிலியும் வழங்கிய அரசியல் சீர் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன்படி, இந்தியாவில் உயர் பதவிகளிலும் நீதித்துறையிலும் இந்தியர் களுக்கு பொறுப்பளிப்பது, லண்டனில் உள்ள இந்தியாவுக் கான அமைச்சரின் ஆலோசனை சபையில் இந்தியர்களுக்கு இடமளிப்பது, மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர் களுக்குத் தனித்தொகுதிகள் ஒதுக்குவது ஆகியவை இச்சீர் திருத்தத்தின் முக்கிய அம்சங்களாகும். இதன்படி செயல்பட்ட இந்தியாவின் மத்திய சட்டமன்றமும், மாநில சட்டமன்றங்களும் போதிய அளவு சட்டமியற்றும் அதிகாரங்களைப் பெற்றிருக்கவில்லை. இதனால், மிண்டோ- மார்லிலி சீர்திருத்தங் களுக்கு காங்கிரஸ் கட்சியும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதனையடுத்து, மாண்டேகு-செம்ஸ்போர்ட் வழங்கிய சீர் திருத்தங் களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. மாண்டேகு, இந்தியாவுக்கான அமைச்சராக இங்கிலாந்தில் செயல்பட்டவர். செம்ஸ்போர்ட், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.
லண்டனிலிலிருந்து மாண்டேகு இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள கட்சிகளுடன் ஆலோசனைகள் நடத்தினார். அப்போது, நீதிக்கட்சி சார்பில் அவரை சந்தித்த டாக்டர் டி.எம்.நாயர், பிராமணரல்லாதாருக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் எனும் வகுப்புவாரி உரிமைக் கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், இக்கோரிக்கையை மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு ஏற்றுக்கொள்ளவில்லை. வாக்குரிமைக் கமிட்டியிடம் வலிலியுறுத்தி, தனித் தொகுதி கோரிக்கையை வலிலியுறுத்திப் பெறவேண்டும் என நீதிக்கட்சி முடிவுசெய்தது. இதற்காகத் தன் சொந்த செலவில் லண்டன் சென்று ஆதரவைத் திரட்டினார் டி.எம்.நாயர். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் தன் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டார். கூட்டுக்குழுவிடம் சாட்சியம் சொல்வதற்கு முதல்நாளான, 1919 ஜூலை 17-ஆம் தேதி நாயரின் உயிர் பிரிந்தது. இது நீதிக்கட்சியின் கோரிக்கைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையிலான இந்தியச் சட்டத்தை 1919-ஆம் டிசம்பர் 23-ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதன்படி, இந்தியாவுக்கான மத்திய சட்டமன்றம், இரண்டு அவைகளுடன் ஏற்படுத்தப்பட்டன. சென்னை உள்பட எட்டு மாகாண சட்டமன்றங்கள் அமைந்தன. இந்த சட்டமன்றங் களில் இரட்டையாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. நிதி, நீதி உள்ளிட்டவை ஆங்கிலேய கவர்னரிடமும், கல்வி- விவசாயம்-உள்ளாட்சி போன்றவை இந்தியர்களிடமும் இருக்கும் என்பதே இரட்டையாட்சி முறை.
வகுப்புரிமை கோரிக்கையை நீதிக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலிலியுறுத்தியதால், இது பற்றி கவனிக்க லார்டு மெஸ்டன் என்பவரை பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்தது. வகுப்புவாரி உரிமை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டது. முஸ்லிலிம்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுபோல தனித் தொகுதிகள் எதுவும் பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கப்படவில்லை. ஆனால், சென்னை மாகாணத்தின் 65 பொதுத் தொகுதிகளிலேயே 28 இடங்கள் பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டன.
(அன்றைக்குத் தனித் தொகுதி என்பது ஒரு தொகுதி யிலேயே பொதுவான வாக்குரிமைக்காக ஒன்றும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கான வாக்குரிமை ஒன்றுமாக அமைந்திருந்தது)
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில், 1920-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 21 வயது நிறைந்த பிரிட்டிஷ்-இந்திய குடிமக்களில் சொத்து உள்ளவர்கள், வரிசெலுத்துவோர், எழுதப்படிக்கத் தெரிந்தோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இந்தத் தேர்தலிலில் காங்கிரஸ் கட்சி நேரடியாகப் பங்கேற்கவில்லை. அக்கட்சியைச் சேர்ந்த சிலர் சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். சென்னை மாகாணத் தேர்தலிலில் நீதிக்கட்சி போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றது. சட்டமன்றத்திற்கான மொத்த இடங்கள் 127-இல் 81 இடங்கள் நீதிக்கட்சிக்குக் கிடைத்தன.

தொடரும்
Subscribe to:
Posts (Atom)